- நல்ல காலங்களில் கவனிப்பாரற்று கிடக்கும், கஷ்டம் காலம் வந்தவுடனே தூசி தட்டி எடுத்துவிடுகிறோம் - ஜாதங்களை
- நீங்க பிடிக்கும் சிகரெட், உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு #சுட்டது
- Twitterல எப்பவுமே இருக்கிறவங்க ரொம்ப நேரமா இல்லைன்னா, காரணம் 1) Chat 2) Phone 3) DM 4) பூரிக்கட்டையால் அடி வாங்கியிருப்பாங்க
- விலையில்லா’வுக்கும், இலவசத்துக்கு என்ன வித்தியாசம் தெரியுமா? ஆட்சிதான்
அடுத்தவர்களின் உணர்வுகளை எப்படி விற்பதென நன்றாக அறிந்து வைத்திருக்கிறது விஜய் டிவி, ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக.
- நித்தியானந்தாவின் ஆண்டு சம்பாத்தியம் ரூ.90 கோடி #நான் அப்பவே சொன்னேன், எங்கப்பாதான் கேட்காம எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு
- என்ன விலையேத்தினாலும் போராடத் திராணியில்லாத ஒரே கூட்டம், குடிகார கூட்டம்தான் #பீர் விலை சுமார் பத்து ரூபாய் வரை உயர்வு
- மன்மதன் கடவுளாக போற்றப்படவேயில்லை. அதனால அவர் விட்ட சாபம்தாண்டா நீங்க எல்லாம் இப்படி அலையறீங்க.
- பெண்களைப் போல, ஆண்களால் காதலிக்க முடியாது. அதே போல ஆண்களைப் போல, பெண்களால் நட்பு பாராட்டமுடியாது
- புகையை விடமாட்டேன் என பிடிவா- ’தம்’ பிடிக்காதீர்கள் - இரண்டு வாக்கியங்கள் - ஒரே அர்த்தம்
- காதல், கல்யாணத்துக்கு முன் அது கவிதை, பிறகு கட்டுரை. சிலருக்கோ, முடிவுரை.
- தன் தந்தையை, கணவனிடம் எதிர்பார்ப்பது அறிவிலி மனைவிகள் செய்யும் முதல் வேலை
100வது முறையாக காதலி சொல்லும் சம்பவத்தை, முதன்முறை கேட்பது போல் ஆச்சர்யத்துடன் கண்களின் விரித்து கேட்பவனே நிஜக்காதலன்
[தலைப்புக்கு வந்துட்டோமா?]
- Cinema இண்டஸ்ரியில் “சார்” என்று அழைக்கும் மரபு மாறி வருகிறது. இப்பவெல்லாம் ”Bro” :)
- கோழி என்னதான் பெரிய படிப்பாளியாய் இருந்தாலும், முட்டைதான் போடும். (100/100) எல்லாம் போடாது
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க, இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்
இளா ,
ReplyDeleteதுவித்தர்ல இவ்ளவு தானா போடுறிங்க? ஏகப்பட்டது போட்டு இருப்பிங்க? கொஞ்சம் பரவயில்லைனு நீங்க நினைக்கிறது மட்டும் இங்கே ?
ஆனாலும் இதுவே ரொம்ப கொடுரமாவே இருக்கு :-))
காரணம் நாட்டு நடப்பே தெரியாம துவித்துறிங்க,
//என்ன விலையேத்தினாலும் போராடத் திராணியில்லாத ஒரே கூட்டம், குடிகார கூட்டம்தான் #பீர் விலை சுமார் பத்து ரூபாய் வரை உயர்வு //
பெட்ரோல் விலை ஏத்தினதுக்கு எவன் போராடினான்? இன்னும் கொஞ்சம் லேட் ஆஹ் போனால் பெட்ரோல் கிடைக்காதுன்னு ஓடி போய் இல்லை வாங்கினான், அதுவும் கியூ ல நின்னு :-))
//பெண்களைப் போல, ஆண்களால் காதலிக்க முடியாது. அதே போல ஆண்களைப் போல, பெண்களால் நட்பு பாராட்டமுடியாது//
இது எப்படி உங்களுக்கு நிச்சயமா தெரியும்? பெண்கள் தான் முதலில் காதலனை கழட்டி விடுவாங்க அப்படி இருக்கும் போது எப்படி?
வெறும் 50 ரூ கணக்குல சண்டை போட்டு மண்டை உடைச்ச ஆண் நண்பர்களும் இருக்காங்க :-))
//100வது முறையாக காதலி சொல்லும் சம்பவத்தை, முதன்முறை கேட்பது போல் ஆச்சர்யத்துடன் கண்களின் விரித்து கேட்பவனே நிஜக்காதலன்//
ஓய் நிஜ காதலன் யாரு தெரியுமா , இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் சரிப்பட்டு வராது ,நான் எங்க வீட்டுல பார்க்கிற மாப்பிள்ளையை கட்டிக்க போறேன்னு சொல்லும் போதும் எங்கிருந்தாலும் வாழ்க சொல்றானே அவன் தான் ஓய், கல்யாணப்பரிசெல்லாம் பார்க்கலையோ?
சினிமா துறையில ஆண்டாண்டு காலமாக "ஜி" என்பதே கோலோச்சி வருகிறது எப்போ சார் வந்துச்சு? அது ரொம்ப அஃபிசியலா சொல்றது, இல்லைனா பாஸ் என்பார்கள். மேல் விவரங்களுக்கு கேபிள் சங்கர் போன்றவர்களை அணுகவும்!
வழக்கமாக புழங்குவது ஜி, பாஸ், தலைவரே, ஸ்வாமி ஆர் சாமி ,நண்பா , என்பது போன்றவையே, சார் எல்லாம் ரொம்ப அன்னியமா சொல்றது.