Thursday, September 22, 2011

சோனா - SPB சரண்- நடந்தது என்ன? ரிப்போர்ட்

சரண் மற்றும் சோனா விவகாரம் பற்றிக்கொண்டு எரிகிறது, செய்திகளில். பல தளங்களில் சோனாவிற்கு ஏக வரவேற்பு.

’அந்தப் பொண்ணு பாவம்யா’,’ ‘கவர்ச்சி நடிகைன்னா கையப்புடிச்சி இழுத்துருவானுங்களே. வில்லன் நடிகர்களை வில்லனாய் பார்க்கிற சமூகம் ஆச்சே’, ‘அப்பன் பேரை கெடுக்க வந்த புள்ளைய்யா இது’ இப்படி.
 

சரி, விசயத்துக்கு வருவோம்...
வெங்கட் பிரபு கோவா படம் ஆரம்பித்த சமயம். மள மளவென படங்கள் ஆரம்பித்துக்கொண்டிருந்தார் சோனா. “எங்கேயிருந்துடா மாப்ளே இவ்ளோ பணம் கிடைச்சது.ஹ்ம்ம்ம்,, எல்லாம் ‘அப்படித்தாண்டா’” இப்படி சொல்லி பொருமிக்கொண்டது பொதுசாம். ஒரு படம் கூட முன்னேறவே இல்லை. சூட்டோடு சூடாக வெங்கட்பிரபுவுக்கு(இனி பிரபு) ஒரு சிறியளவில் பணம் கொடுத்து அடுத்தப்படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் சோனா(தளங்களில் வருவது போல் 75 லட்சம் அல்ல) எந்த விதமான ஒப்பந்தங்களும் போடப்படவில்லை. இதெல்லாம் நம்பிக்கையின் பேரில் திரையுலகில் நடப்பதுதான். மங்காத்தாவுக்கு ஆரம்பிப்பதற்கு முன்னே படம் ஆரம்பிக்கலாமா என பிரபு சோனாவிடம் வினவ, பணமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என சொன்னாராம் சோனா.


ரண், பிரபு பழக்கம் ஊரறிந்ததுதானே. சிறுவர்கள் முதல் இந்நாள் வரை தொடரும் பந்தம், தனிப்பட்ட முறையில அல்லாது தகப்பனார் இருவரும் “வாடா போடா” என அழைத்துக்கொள்ளுமளவிற்கு நெருக்கம். அப்படியே தொடர்ந்தது சரண்-பிரபு. சரண்/SPB தயாரிக்க, சமுத்திரக்கனி இயக்க், பிரபு நடிக்க வந்த படம் உன்னைச் சரணடைந்தேன் மிகப்பெரிய தோல்வி. அதறகு பரிகாரமாக சென்னை 600028, அதே சரண் தயாரிக்க பிரபு இயக்க(குடும்பப்படம் என சொல்லிக்கொண்டார்கள் படப்பிடிப்புத்தளங்களில்), படம் மிகப்பெரிய வெற்றி. இதனிடையில் சரண் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வி.

அதே சமயம் ஒரு கிசுகிசுவிலும் சிக்கிக்கொள்ளாதவர் சரண். அப்பா பேரை காப்பாற்றிக்கொள்ள அரும்பாடு பட்டவர், பணம்/பட விவகாரங்களிலிருந்து மட்டும் அவரால் தப்பிக்கமுடியவில்லை(நேரம் சரியில்லை)
விவரப் பட்டியல் 
  • 2003 உன்னைச்சரணடைந்தேன் - தோல்வி
  • 2005 மழை - தோல்வி- பெரும் பணம் நஷ்டம்
  • 2007 சென்னை 600028 -வெற்றி
  • 2008 குங்கும பூவும் கொஞ்சு புறாவும் - தோல்வி- பொருள் நஷ்டம்
  • 2009 நாணயம் - படத்திற்கு நல்ல பெயர் ஆனாலும் தோல்வி- நஷ்டம்
  • 2011 ஆரண்ய காண்டம் - இணையளவில்/வாயளவில் வெற்றி- பெரும் நஷ்டம்- தன்னுடைய கனவாக நினைத்த Kodhandapani studiosஐ விற்றே படத்தை வெளியிட்டார்கள். மீளமுடியாத கடன்.

ங்காத்தாவின் பெரும் வெற்றிக்குப்பிறகு, சரணுக்காக படம் செய்வதென முடிவு செய்தார் பிரபு (Friend Indeed). வழக்கம் போல், இந்த முறையும் சோனாவிடம் ஒரு வார்த்தை கேட்கலாமென பிரபு நினைத்து அழைத்தார். சோனா இந்த முறை படம் செய்யலாமென சொல்ல பிரபுவுக்கு குழப்பம். காரணம், விசாரித்த வரையில் சோனாவிடம் பணமில்லை என்றே சொன்னார்கள். அதுவுமில்லாமல் பிரபுவின் அடுத்தப் படம் பெரிய பட்ஜெட் படம். இதற்கான பணத்தை சரணால் ஏற்பாடு செய்ய முடியும்,(இன்னும் பல சொத்துக்கள் கைவசம் இருப்பதால்), சோனாவிடம் பணமில்லை என்பதை அறிந்த பிரபு,வைபவ் வீட்டிற்கு, சோனாவையும், சரணையும், மற்றும் தன்னுடைய அணி (மகத், வைபவ், பிரேம்ஜி இன்னும் வெகு சிலர், அதில் ஒரு காவல்துறை அதிகாரியும் அடக்கம்) என அனைவரையும் அழைத்தார் . பணத்தை வட்டியுடன் திருப்பி தந்துவிடலாம் என பிரபு நினைக்க சோனா அங்கே வந்தார்.

பிரபு அணி தண்ணிவண்டி அணி என எல்லாருக்கு தெரிந்த விசயம்தான். சோனாவும் மதுக்கும்பலில் கலந்து கொள்ள பேச்சு பேச்சாகவே இருந்தது. சரண் இப்போது குடிப்பதில்லை என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 3 ரவுண்டேலேயே “டேய் பிரபு , பேசி முடிச்சிடுடா” என சரண் பிரபுவிடம் சொல்ல, எல்லார் முன்னிலையிலேயும் சோனா குடுத்த பணத்திற்கு 1.5% வட்டியும் காசோலை அளிக்கப்பட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்ட சோனா அத்துடனே கிளம்பிவிட்டார்.
சோனா போகும்வழியிலேயே பிரபுவை அழைத்து “என்னை ஏமாற்றிவிட்டீங்க, படம் பண்றதுதான் பேச்சு. ஏன் மாறுனீங்க” என கேட்க பிரபு “அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே. ஏன் மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க” என கேட்டுள்ளார். இல்லை, படம் பண்ணித்தாங்க, இல்லாட்டா பிரச்சினை பண்ணுவேன் எனச் சொல்ல, பிரபு “பேப்பர்ல ஒன்னுமில்லை, வெறுங்கையில் முழம் போட முடியாது, படம் பாதியில நின்னுச்சுன்னா என் பேர் கெட்டுப்போயிரும், நீங்க சங்கத்துல சொல்லிக்குங்க” என கோபமாய் பேசி வைத்துவிட்டார் பிரபு. இதுதான் நடந்தது.

  டுத்த நாள் காலையில் சோனா புகார் குடுக்கிறார், என்னவென்று “சரண் தன்னிடம் தப்பாக நடக்க முயற்சித்தார்” என .. காவல்துறையினருக்கு தங்களுடைய துறையிலிருந்தே உண்மை தெரியவர மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரணோ, எதிர் புகார் அளிக்கப்போகிறார் என அறிந்த சோனா, நெஞ்சு வலியென மருத்துவமனையில் போய் அனுமதி வாங்கிக்கொண்டார். இது எல்லோரும் அறிந்த விசயம். பெண் எது சொன்னாலும் அம்பலம் ஏறும் என இருக்கும் சமுதாயத்தில், சில லட்சங்களை விட்டெறிந்து சோனாவின் வாயைடைத்திருக்கிறார் SPB. இனி, சோனா சில காலங்கள் அமைதியாக இருப்பார்.

33 comments:

  1. பணம் சம்பந்தப்பட்டதால் இந்த இடுகை ”கற்பனை” என்ற வகைக்குள் வருகிறது

    ReplyDelete
  2. "கற்பனை" இல்லை பெரிய "கட்டுக்கதை" மாதிரி இருக்கு இளா! :)))

    ஆமா எதுவும் லின்க் கொடுத்து இருக்கீங்களா? இல்லை இது உங்கள் சொந்தச் சரக்கா? :)

    ReplyDelete
  3. ***மங்காத்தாவின் பெரும் வெற்றிக்குப்பிறகு, சரணுக்காக படம் செய்வதென முடிவு செய்தார் பிரபு (Friend Indeed). வழக்கம் போல், இந்த முறையும் சோனாவிடம் ஒரு வார்த்தை கேட்கலாமென பிரபு நினைத்து அழைத்தார். சோனா இந்த முறை படம் செய்யலாமென சொல்ல பிரபுவுக்கு குழப்பம். காரணம், விசாரித்த வரையில் சோனாவிடம் பணமில்லை என்றே சொன்னார்கள். அதுவுமில்லாமல் பிரபுவின் அடுத்தப் படம் பெரிய பட்ஜெட் படம். இதற்கான பணத்தை சரணால் ஏற்பாடு செய்ய முடியும்,(இன்னும் பல சொத்துக்கள் கைவசம் இருப்பதால்), சோனாவிடம் பணமில்லை என்பதை அறிந்த பிரபு,வைபவ் வீட்டிற்கு, சோனாவையும், சரணையும், மற்றும் தன்னுடைய அணி (மகத், வைபவ், பிரேம்ஜி இன்னும் வெகு சிலர், அதில் ஒரு காவல்துறை அதிகாரியும் அடக்கம்) என அனைவரையும் அழைத்தார் . பணத்தை வட்டியுடன் திருப்பி தந்துவிடலாம் என பிரபு நினைக்க சோனா அங்கே வந்தார். ***

    அதாவது என்ன சொல்றீங்கனா இந்த பார்ட்டி வந்து "ஸ்ட்ரிக்ட்லி ஃபைனாண்ஸியல் டீலிங்" "பேப்பர் வொர்க்" சம்மந்தப்பட்டது!

    கைவிட்ட பிரபுவைக் கவுத்த ஏன் சரண் மேலே கம்ப்ளைன் பண்ணூறார்??? புரியலை இங்கே உங்க லாஜிக் புரியலை, இளா????

    ReplyDelete
  4. //ஆமா எதுவும் லின்க் கொடுத்து இருக்கீங்களா?//
    அது செய்தி விமர்சனம். அதை நான் செய்யறது இல்லீங்க.

    //இங்கே உங்க லாஜிக் புரியலை//
    நுகபிநி!

    என்னோட அரசியல் இது இல்லைங்க. இது சோனாவோட அரசியல். இதுக்கு நீங்க அவுங்களைத்தான் கேட்க்கனும்

    ReplyDelete
  5. //கைவிட்ட பிரபுவைக் கவுத்த ஏன் சரண் மேலே கம்ப்ளைன் பண்ணூறார்//
    நெஜமாலுமே புரியலையா? இல்லே இந்த மாதிரி தந்திரங்களுக்கு நீங்க புதுசா? பிரபு மேல கேஸ் போட்டா படம் பண்ணுவாரா? சங்கத்துல கூட்டி வெச்சி செட்டில் பண்ணிருவாங்க. சரண் மேல் கேஸ் போட்டாதான் அவர் படம் பண்ண முடியாது. கோவத்துல சட்னு யோசிக்காம எடுக்கிற முடிவுகள் இது. அதான் இப்போ அனுபவிக்கிறாங்க.

    ReplyDelete
  6. ILA: Correct me if I am wrong. She only asked for a public apology. How do you say "MONEY INVOLVED" in it. How much an apology costs??? Educate me, please!

    ReplyDelete
  7. இளா ஏன் சரண் பக்கம் நியாயம் இருப்பதாகவும், வருண் ஏன் சோனா பக்கம் நியாயம் இருப்பதாகவும் (உங்க பதிவு + பின்னூட்டம்) பிரஸ்தாபிக்க முயல்கிறீர்கள் எனப் புரியவில்லை

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  8. Check this out!

    ****அதற்கு சோனா, "இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லா விட்டால் நான் விடமாட்டேன்," என்றார்.

    "வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?" என்று கேட்டபோது, "அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்," என்றார்.***

    Tell me where she talks about the million dollar needs to pay as liability, please!

    ReplyDelete
  9. @SriRam
    //சரண் பக்கம் நியாயம் இருப்பதாகவும்//
    பதிவில் நான் நடந்ததை மட்டுமே எழுதியிருக்கேன். பின்னூட்டங்கள் அதற்கு வலு சேர்க்கிறேன். அவ்வளவே. தவறு செய்தது யாரென பதிவுல கண்டுபுடிக்க முடியலைன்னா என் எழுத்துக்கு அவ்ளோதான் சக்தின்னு புரிஞ்சிக்கிறேன்

    ReplyDelete
  10. //Tell me where she talks about the million dollar needs to pay as liability, please!//
    Varun, If you think you will get everything online/media, Sorry you gotta learn a lot Politically in the industry.

    ReplyDelete
  11. இளா, நான் பதிவு + பின்னூட்டம்னு போட்டது வருணுக்காக - அவர் சோனா சார்பில் ஒரு பதிவு போட்டார், இப்போ இங்க பின்னூட்டங்களில் சோனாவின் வக்கீலாக ஆஜராகி இருக்கிறார். ;):)

    வருண் : சிரிப்பான் போட்டிருக்கேன், பாத்துக்கோங்க

    ReplyDelete
  12. //சோனாவின் வக்கீலாக ஆஜராகி இருக்கிறார்//
    அட. ஆமாங்க. அப்படி நான் இப்போதான் தோணுது.

    வருண், நானும் சிரிப்பான் போட்டுக்கிறேன் :)

    ReplyDelete
  13. ***ILA(@)இளா said...

    @SriRam
    //சரண் பக்கம் நியாயம் இருப்பதாகவும்//
    பதிவில் நான் நடந்ததை மட்டுமே எழுதியிருக்கேன்.***

    Come on Ila! You were not in the party. You certainly heard this from a "TRUE_LIAR"! LOL But you talk as if you were in the party or not?

    ReplyDelete
  14. Sriram/Ila: I am just debating here for fun. :-)

    Let us see whether we can bring out any truth by debating about this!

    ReplyDelete
  15. //You were not in the party//
    Were you in this Party?

    ReplyDelete
  16. நீங்கதான் "நடந்ததை எழுதியிருக்கேன்"னு சொல்லியிருக்கீங்க. நானா சொன்னேன்? உங்க பின்னூட்டதை வாசிச்சுப்பாருங்க! You cant make such statements, ILA, unless you were there!

    ReplyDelete
  17. //Sriram/Ila: I am just debating here for fun. :-) // Me too

    //Let us see whether we can bring out any truth by debating about this//
    I doubt

    ReplyDelete
  18. //நடந்ததை எழுதியிருக்கேன்"னு சொல்லியிருக்கீங்க//
    This is what I heard from my Industry Friends..

    அப்படி பார்த்தா கற்பனைன்னு கூடத்தான் வகைப்படுத்தியிருக்கேன்.

    ReplyDelete
  19. Sriram: Honestly I did not know this Sona until this news came up! I know about this post only after iLa gave me the link in my post!

    ReplyDelete
  20. ***சோனா போகும்வழியிலேயே பிரபுவை அழைத்து “என்னை ஏமாற்றிவிட்டீங்க, படம் பண்றதுதான் பேச்சு. ஏன் மாறுனீங்க” என கேட்க பிரபு “அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே. ஏன் மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க” என கேட்டுள்ளார். இல்லை, படம் பண்ணித்தாங்க, இல்லாட்டா பிரச்சினை பண்ணுவேன் எனச் சொல்ல, பிரபு “பேப்பர்ல ஒன்னுமில்லை, வெறுங்கையில் முழம் போட முடியாது, படம் பாதியில நின்னுச்சுன்னா என் பேர் கெட்டுப்போயிரும், நீங்க சங்கத்துல சொல்லிக்குங்க” என கோபமாய் பேசி வைத்துவிட்டார் பிரபு. இதுதான் நடந்தது.***

    நீங்க என்ன சொல்றீங்கனா, வெங்கட் பிரபு சோனாவிடம் ஒரு தொகை வாங்கி இருந்தார்- அதாவது சோனாவுக்கு படம் பண்ணித்தருவதாக.

    சரிதானே?

    இன்னைக்கு இவரு மங்காத்தா வெற்றியடைந்தவுடன் அவரை கழட்டிவிட்டு விட்டார். ஏன்னா சோனா ஏழை. she cant afford to budget the "today bigshot" Prabha? So, he paid her advance back with 1.5% interest and settled the issue.

    சோனா என்னை ஏமாத்திட்டீங்கனு சொன்னது "பேப்பர்ல எதுவும் இல்லை" நீ ஒண்ணும் செய்ய முடியாஹ்டுனு சொல்லிப்புட்டார்.

    சரி, இப்படி கவிழ்த்திய வெங்கட் பிரபுவை பணமில்லாத ஏழை சோனா பட்ம பண்ண வைக்க, இதுப்போல் அப்பாவை சரண் மேல் பொய்குற்றச்சாட்டு போட்டு, அவர் பேரை நாசம் பண்ணி, வென்கட் பிரபுவை தன் ஏழை சோனா படம் பண்ணவைக்க இது ஒரு ப்ளாட்!!!

    இதையெல்லாம் நீங்க்ச சீரியஸாவே நம்புறீங்க??? Sounds like "ridiculous plot" to get Venkat Prabhu to direct her movie to me!

    ReplyDelete
  21. இளா / வருண்,

    உங்க உரையாடலே ஒரு மர்ம படத்துக்கு திரைக்கதை மாதிரி இருக்குது. ஒன்னுமே தெரியாம ரெண்டு பேரும் என்னா பில்டப்பு! -;

    செல்வா

    ReplyDelete
  22. //ஒரு மர்ம படத்துக்கு திரைக்கதை மாதிரி //
    அட அப்படியா? நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா

    ReplyDelete
  23. வருண்,

    //நீங்கதான் "நடந்ததை எழுதியிருக்கேன்"னு சொல்லியிருக்கீங்க. நானா சொன்னேன்?//

    உங்க பதிவுலையும் இதே தான் சொன்னேன். நீங்க ஊர்ஜிதமாகாத செய்திகளை போட்டிருக்கீங்கன்னு. அட்லீஸ்ட், இவராவது அடுத்தவர் சொன்னதை கேட்டு போட்டிருக்கார். இப்போ இவர் மேல இருக்கிற நம்பிக்கைய வெச்சு தான் நம்புவதும்/நம்பாததும்.

    //சரி, இப்படி கவிழ்த்திய வெங்கட் பிரபுவை பணமில்லாத ஏழை சோனா பட்ம பண்ண வைக்க, இதுப்போல் அப்பாவை சரண் மேல் பொய்குற்றச்சாட்டு போட்டு, அவர் பேரை நாசம் பண்ணி, வென்கட் பிரபுவை தன் ஏழை சோனா படம் பண்ணவைக்க இது ஒரு ப்ளாட்!!!//

    சோனா இனிமேலும் பிரபுவை படம் பன்ன வைக்க முயற்சி பன்னுவாருன்னு நம்பலை. அவர் பழிவாங்க கூட செய்திருக்கலாம். படம் பன்னுவது தான் முடியாம போச்சு, அட்லீஸ்ட் பழியாவது வாங்கலாம்னு பன்னியிருக்கலாம் (இதுவும் யூகம் தான்).

    ReplyDelete
  24. Very old news, sir ,,, Latest one Sona has god video evidence,,
    please try to update your article

    ReplyDelete
  25. சோனாவுக்கு வீடியோ எப்படி வந்தது? முன்னமே ஏற்பாடு செய்திருந்தாரா? இதுவும் பெட்டிசெய்தி தான்? (இன்றைய தினமலர் டவுட் தனபாலு) இதில் எவ்வளவு உண்மை?

    ReplyDelete
  26. http://thatstamil.oneindia.in/movies/gossip/2011/09/23-sona-hasn-t-given-any-video-evidence-police-aid0128.html

    ReplyDelete
  27. சீனு: நான் தெளிவா என்னுடைய யூகம்னு சொல்லியிருக்கேன். என்னையே கேள்வி கேட்டு பதி சொல்வதுபோல யூகம்னு சொல்லியிருக்கேன்.

    வீடியோ எவிடெண்ஸ்லாம் இருக்கும்னு எனக்குத்தோனலை. சோனா அந்தளவுக்கு ஸ்மார்ட் மாரி தெரியலை.

    ஆனால், இந்த பார்ட்டில வெர்பல் மற்றும் ஃபிசிகல் அப்யூஸ் இருந்து இருக்கலாம். சும்மா ஓரமா உக்காந்து இருந்த அப்பாவி சரண் மேலே இப்படி ஒரு பலி போட காரணம் எனக்குப் புரியலை. பழிக்குப் பழி??
    அப்போ சரண் என்ன செஞ்சாரு, பழி வாங்க? அதையாவது சொல்லுங்க!

    ReplyDelete
  28. ***கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

    She is a pro****ute.

    Friday, September 23, 2011 9:47:00 AM EDT***

    So what???

    All the actors are what then? They dont go sleep with several women. Why is that all men are always perfect.

    If bunch of men drink it is not a big deal if sona had a couple of drinks why the heck that is a big deal, mcps???

    ReplyDelete
  29. 10 நாள் ஆச்சு சோனா பொங்கிட்டாங்களா? (அட பொங்கலைச் சொன்னேங்க)

    ReplyDelete
  30. என்ன சொல்லிக்கிட்டு இருக்கீங்க, அதுக்கு முன்னால போய் 15 நாளைக்கு முன் ஜாமின் வாங்கிட்டாராம். அப்புறம் என்ன 10 நாள் கெடு?

    பாவம் எஸ் பி பி தான் இளையராஜாட்டப் போயி என் மகனிடம் பேசி, மன்னிப்பு கேக்கச்சொல்லுயானு கேக்கச் சொன்னாரு அப்படி இப்படினு போட்டு இருக்காங்க..

    Check this out!

    ****நீ சொன்னா கேட்பான்...
    இளையராஜாவிடம் போன எஸ்.பி.பி
    Last Updated 4:35 Hrs [IST], September 23, 2011

    சோனா விஷயத்தில், விட்டேனா பார்... என்று தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாராம் எஸ்.பி.பி.சரண். இன்றோடு நான் கொடுத்த கெடு முடிகிறது என்று பொருமிக் கொண்டிருக்கிறார் சோனாவும். கைது நடந்துவிடாதபடி நீதிமன்றத்தில் இரண்டு வார இடைக்கால தடையும் வாங்கி விட்டார் சரண்.

    இந்த இடைபட்ட நேரத்திலாவது சோனாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு பிரச்சனையை S.P.Balasubramaniam - Ilayarajaமுடித்துக் கொள்ளலாமே என்று அட்வைஸ் செய்கிறாராம் அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாவம் பெற்ற மனம் பித்தல்லவா? ஆனால் இளங்கன்று துள்ளுவதை போல நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க அமைதியா இருங்க என்கிறாராம் சரண்.

    யார் சொன்னால் மகன் கேட்பார் என்று தடுமாறிய எஸ்.பி.பி. இசைஞானி இளையராஜாவிடம் பேசியதாக கூறப்படுகிறது. இருவரும் வாடா போடா நண்பர்கள் அல்லவா? 'நீ சொன்னா அவன் கேட்பான். கொஞ்சம் பேசிப் பாரேன்' என்றாராம் இசைஞானியிடம். ***

    ReplyDelete
  31. நக்கீரன்ல ஏதோ சொல்றாங்கப்பா..

    ///தயாரிப்பாளரும், நடிகரும், பின்னணிப் பாடகருமான எஸ்.பி.பி.சரண் மீது நடிகை சோனா பாலியல் புகார் கூறிய சம்பவத்தின் பரபரப்பு இன்னும் ஓயவில்லை.

    படுக்கையறைக்கு என்னை அழைத்தார் எஸ்.பி.பி.சரண் என்று சோனா புகார் கூறினார். இல்லை என்று மறுத்தார் சரண். வீடியோ ஆதாரம் இருக்கும் என்று சொன்னார் சோனா.

    இப்போது, இதோ வீடியோ ஆதாராம் என்று லேப்டாப்புடன் சென்று போலீஸ் அதிகாரிகளிடம் போட்டுக்காட்டுகிறார் சோனா.///

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)