இது ரொம்ப வருசத்துக்கு முன்னாடி பண்ணிட்டு இருந்தேங்க. இப்போ திரும்பவும். ஏதாவது சேதி படிச்சோம்னா நமக்கு சட்னு ஒன்னும் தோணும்பாருங்க அதுதான் மீட்டரு பீட்டரு. இதுல மீட்டருங்கிறது செய்தி. எங்கேயாவது படிச்சிருப்போம், பீட்டரு? அது நாம விடறதுதானுங்க.
---------------------------------------------
---------------------------------------------
மீட்டரு: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உழவன் சேர்ந்தான், உழைப்பாளி சேர்ந்தான், அன்னத் தாய் சேர்ந்தாள், பொன்னுத்தாய் சேர்ந் தாள். இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த்தாய்!" - வைரமுத்து
பீட்டரு: இப்படியே பேசிட்டு இருந்தா அவுங்களும் இன்னும் கொஞ்ச நாள்ல காப்பீடு வாங்க வந்துர மாட்டாங்க?
-----------------------------
மீட்டரு: தனிநபர் அந்தரங்கத்தை காக்கும் வகையில் புதிய சட்டம்: குழு அமைத்தது மத்திய அரசு
பீட்டரு: இப்பவாவது தெரிஞ்சிக்கோங்க, எங்க நித்தியோட பவர் என்னான்னு.
------------------------------
மீட்டரு: கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான விஜயசாந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பீட்டரு: எகொஇச, இங்கே கலவரம் பண்ணினாவே போலீஸ் வராது, சில சமயம் காவல்துறையே கலவரம் பண்ணுவாங்க. எங்களைப் பொறுத்தவரையில் எதிர்கட்சி பண்ணினாத்தான் கலவரம். நாங்களே பண்ணினால் அது சட்டம் கடைமையைச் செய்யுதுன்னு சொல்லுவோம். அது நடுராத்திரியிலும் நடக்கலாம், கஞ்சாவை போலீஸே விளையவெக்கும்.
-----------------------
மீட்டரு: ரூ.5,000 வரை சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு இலவசம்.
பீட்டரு: 5000க்கு சொத்து கிடைக்குதா என்ன?
--------------------------------------
மீட்டரு: கருணாநிதியின் மனப்பான்மையை காங்., புரிந்து கொள்ள வேண்டும்'- ஜெ
பீட்டரு: மொதல்ல, உங்க கட்சி மனப்பான்மைய புரிஞ்சுங்க, இல்லாட்டி ஒரு நாள் நீங்களே மறந்தாப்ல திமுகவுல சேர்ந்துரப் போறீங்க.
-------------------------------
மீட்டரு: தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு
பீட்டரு:நீங்க எங்களுக்கு இலவசம்னு ஒரு பண்பாட்டை கற்றுக்கொடுத்திருக்கீங்க.
----------------------------------------
மீட்டரு: பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் அகில பாரத இந்து மகா சபை சார்பாக நித்தியானந்தா படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் கர்நாடக மாநிலத் தலைவர் வாசுதேவராவ் கஷ்யப்பா, ''நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தரைவிட வயதில் மூத்தவர். அவங்க ரெண்டு பேருக்கும் இருப்பது, அம்மாவுக்கும் மகனுக்கும் இருக்கும் தாய்-பிள்ளை(!) உறவு. இந்துக்களுக்கு எதிராக சதி செய்யும் விதமாகத்தான் காங்கிரஸ் இப்படிப்பட்ட கட்டுக் கதைகளைப் பரப்புகிறது!''
பீட்டரு: ங்கொய்யால சுனாமி பெங்களூருக்கு வராதுன்னா என்ன வேணுமின்னாலும் பேசலாமா?
---------------------------------
மீட்டரு: கேட்கக் கூடாததை கேட்டு சிக்கல் ஏற்படுத்தக்கூடாது : முதல்வர் அறிவுரை
பீட்டரு: ச்சும்மா இருங்கப்பா, அவரு குடும்ப பிரச்சினையைப் பத்தி பேசிட்டிருக்காரு
---------------------------
nalla irukkunga Ila..
ReplyDeleteநன்றிங்க இனியா
ReplyDeleteRocking
ReplyDeleteRocking
ReplyDeleteமீட்டரு பீட்டரு - வெகு ஜோரு..
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
(இனிமே உங்க பதிவுல மட்டும் ஒங்க ஊர்க்காரன் ஸ்ரீராம்னு போடலாம்னு இருக்கேன்)
Rocking//
ReplyDeleteஅட இன்னும் இருக்கீங்களா?
தெய்வமே எங்கயையோ போய்ட்டேங்க
ReplyDeleteசான்சேஇல்ல...super...எப்படி இப்படிலாம் யோசிகரிங்க...எல்லாம் தனாவரதுதான் ல ?? கலக்கலா இருக்கு...
ReplyDeleteடைம் இருகர்த்தே என் வளய்பதிவு பக்கம் வாங்க...தப்பி தவறி வந்த எத்தன எழுதிட்டு போங்க...( என்ன செய்யறது நாமளே தன நம்ம புகழ ?!# பரப்ப வேண்டி இருக்கு..)
ஹா ஹா..
ஒரு சிறிய வேண்டுகோள் : இதே மாதிரியான பதிவுகளை தொடரவும் அருமை...
நல்லா இருக்கு...இரசிச்சோம்ல...
ReplyDelete