விஜய்க்கு 50 வது படம், ரொம்ம்ப்ப்ப எதிர்பார்ப்பு இருக்கு. ஆனா ஏன் இப்ப கூட தெலுங்குல இருந்து அப்படியே பாட்டுக்களை இறக்கியிருக்காங்கன்னு தெரியல. 50வதுபடம்னா தனியா தெரிய வேணாமா? சரி, வியாபாரம் ஒன்னு இருக்கே, அதுல வரலாறு புவியியல் எல்லாமா பார்க்க முடியும்? விஜய் சார், ரிஸ்க் எடுங்க சார். நேத்து வந்த பொடிப்பசங்க எல்லாம் பின்னி பெடல் எடுக்குறாங்க எவ்ளோ நாளைக்குதான் நீங்க இப்படி பயந்து பயந்து காப்பி அடிப்பிங்க. அங்கே வெற்றியடைஞ்சா இங்கேயுமா ஆவும்? உங்க வரலாறு உங்களுக்குத் தெரியாதா? மக்களே தெலுங்கு பதிப்பின் காணொளியை இணைச்சிருக்கேன், பார்த்துக்குங்க. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் பாட்டுக்கள் வேட்டைக்காரனைவிட பரவாயில்லை.
விஜய்க்கு
நான் நடந்தால் அதிரடி
Singer: Naveen, Shoba Chandrasekar, Janani Madhan
Lyricist: Kabilan
பில்லாவுக்குப் பின்னாடி Heavy Rock கிதாருல போட்டாவே அது அஜித் கோட் ஒன்ன மாட்டிகிட்டு நடந்து போற மாதிரிதான் மனசுல வருது. இந்தப் பாட்டோட ஆரம்பமும் அப்படித்தான் இருக்கு.”நான் நடந்தால் அதிரடி”, என்ன கொடுமைசார் இது.. இது அஜித் பாட்டா? விஜய் பாட்டா? என்ன பண்ண தெலுங்கு பில்லாவுல மை நேம் இஸ் பில்லா பாட்டு ஆச்சுங்களே. என்ன ஒரு சேலஞ்ச்னா, இதுல விஜய் நடந்ந்ந்ந்ந்ந்தே போவாரா இல்லாட்டி ஆட்டம்போடுவாரான்னு தெரியல. விஜய் கொஞ்சம் கவனிச்சிருக்க வேண்டிய பாட்டு இது. யாரு ஜால்ரா அடிச்சாலும் அதை சமாளிச்சு தன்னோட சபையடைக்கத்தை பார்த்துக்கனும். ”நான் ஜொலிக்கும் நட்சத்திரம்” இந்த வரிய நீக்கியிருக்கலாம். ஏற்கனவே இருக்கிற பேருக்கு இப்படி ஒரு வரி தேவையா? கபிலன் சார், தலைக்கனம் ஏறாத விஜய்க்கு இப்படி ஒரு வரியா? என் கண்டங்கள்.
பொம்மாயி
Singers: Hemachandra and Saindhavi
Lyricist: Na. Muthukumar
கபிலன் பல பாட்டுக்களை எழுதியிருந்தாலும், ஒரே பாட்டுல சிக்ஸர் அடிச்சுட்டு போயிட்டாரு நா.முத்துகுமார். அதுதான் நா.மு. இந்தப் பாட்ட வேட்டைக்காரன்ல அனுஷ்காவுக்கு போட்டிருந்தா செமையா செட் ஆகியிருக்கும். எனக்குப் பிடிச்ச பாட்டும் இதுதான். இதுவரைக்கும் ஒரு 20 முறை கேட்டிருப்பேன். இது டிபிக்கல் விஜய் பாட்டு, இதுதான் விஜய்க்குத் தேவையான பாட்டு. செம, செம, செம, சூப்பர் பேக்கேஜ். சைந்தவிக்கு எப்படித்தான் இப்படியாப்பட்ட நல்ல பாட்டுங்க மாட்டுதோ தெரியல. ஹேமசந்திராவின் குரல் இனிமை. விஜய் இந்தப் பாட்டுக்கு எப்படி ஆடியிருப்பாருன்னு பார்க்க இப்பவே ஆவலா இருக்கேன். துள்ளலான காதல்
வெற்றி கொடியேத்து
Singers: Ranjith and Mukesh
Lyricist: Vaali, S.P. Raajakumar
ஓபனிங் பாட்டு போல, மணி சர்மா, மின்சார கண்ணா பாட்டு பார்த்துட்டு தெலுங்குல போட்டிருப்பாரு போல, அப்படியே தமிழுக்கும் வந்திருச்சுங்க. “இருந்தாக்கா தென்றல் காற்றுதான், எழுந்தாக்கா சூறைக் காற்றுதான். அட போங்கப்பா.
தமிழன் வீரத்தமிழன்
Singer: Rahul Nambiar
Lyricist: Kabilan
கேண்டீன் ஸ்பெசல் பாட்டுங்க. சொல்லிக்கிற மாதிரி இல்லே, என்னமோ பாட்டு வருது போவுது. சிசுவேசன் பாட்டு போல. கண்டிப்பா பாட்டு முடியறதுக்குள்ள கோடீஸ்வரனா ஆகிருவாரு இல்லாட்டி பெரிய போராட்டமோ பண்ணி ஜெயிப்பார் போல. படத்துல இந்தப் பாட்டு வரும் போது தம்மும் டீயும் நல்லா வியாபாரம் ஆவும்ங்கிறது நிச்சயம்.
சிறகடிக்கும் நிலவு
Singers: Karthik and Reeta
Lyrics: Snehan
ஹ்ம்ம், இந்தப் பாட்டை படத்துல பார்த்தாங்க தெரியும். ஆஹா ஓஹோ ந்னு சொல்ற மாதிரி இல்லாத மெட்டு. வர பீட்டும் பழசும், வயலினும், மொட்டை காலத்து ஸ்டைலு. ஆனா என்ன கேட்குற மாதிரி இருக்கு. பல முறை கேட்டாலும் சலிக்கலை. மணிசர்மாவுக்கு சில Template இருக்கு, அதுல இருந்து ஒரு நோட் கூட மாறலை. புதிய ஒயின், பழைய ஜாடியில, ஆனா கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. புரியாத புதிர்.
வங்க கடல் எல்லை
Singers: Naveen and Maladhi Lakshmanan
Lyricist: Kabilan
குத்து குத்து குத்து, கும்மாங் குத்து. அப்படி இப்படி இல்லே, கொக்கரக்கோ கும்மாங்குத்து. மாலதி பேரைப் பார்த்தவுடனே நினைச்சேன். கபிலன் விஜய்க்கு குத்துப்பாட்டுக்கு நல்லா பொருந்தி வர்றாரு. விஜயோட சிறப்பான இந்தப் பாட்டுலயும் இருந்தா தியேட்டருல ஆட்டம் பின்னும். ரொம்ப நாளைக்கப்புறம், தவில் வெச்சு செம குத்து. கொக்கரக்கோ கும்மாங்குத்து
அண்ணே, நமக்கு (எனக்கு?) தெரியாத ஆங்கில ஆல்பங்களை சுட்டு போட்டுக்கிறத விட இது பரவாயில்லை தானே?
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு.. தமிழ வீரத் தமிழன் தனிப்பாடல் இல்லையாம்.. சும்மா நடு நடுவே சில வரிகள் அவ்ரும் அவ்ளோதானாம்..
அதைத் தவிரித்து பார்த்தால், எல்லாப் பாடலுமே கேட்ட மாத்திரத்தில் ஓக்கே சொல்ல வைக்கின்ரன..அதை ஒத்துக்கிறீங்களா?
என்னைப் பொறுத்தவரை, தெலுங்கு பாடல்கள் என்ர குறையைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது... கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.. பொம்மாயி தான் இனி தமிழக கடவுள் வாழ்த்து :)
last song also n telugu va
ReplyDeletevideo miss aaguthu
nice post
\\அதைத் தவிரித்து பார்த்தால், எல்லாப் பாடலுமே கேட்ட மாத்திரத்தில் ஓக்கே சொல்ல வைக்கின்ரன..அதை ஒத்துக்கிறீங்களா?\\
ReplyDeleteகிடையவே கிடையாது...! எதுவுமே விஜய் பாட்டு மாதிரியே இல்ல. எப்பவும் பாட்டுகளுக்கு முக்க்யத்துவம் தர்ற,
தளபதி எப்பிடிதான் இந்த மாதிரி பாட்டுக்கெல்லாம் ஒத்துக்கிட்டாரோ..!
ஆச்சர்யம்மா இருக்கு.
சன்மீயூஸிக்கே சரணம்!!
raju,
ReplyDeleteasal songs ellaam mokkainu sonnapa, naanthaan 2 paattu theurmnu sonnen.. antah 2 thaan ippo oodittu irukku.. karunai kattuppaa :)))
/ஆங்கில ஆல்பங்களை சுட்டு போட்டுக்கிறத//
ReplyDeleteஇந்தக் கதைதானே வேணாங்கிறது. ரஜினி, கமலின் இப்படித்தான் பண்ணினாங்களா? 50vaது படத்திலும் காப்பி அடிக்கத்தான் வேணுமா? அது ஆங்கிலமோ , உருதோ...
விஜய் பாட்டு மாதிரி இல்லை விஜய் படம் மாதிரி இல்லை என்னும் உங்களை போல சிலர்தானே சில நாட்களுக்கு முன் விஜய் மாறவே இல்லை தன பாட்டுக்கு ஒரே பாணி என்றீர்கள். நீங்கள் சொன்னது போல இவை வழக்கமான விஜய் பாட்டு இல்லை. ஆனால் எனக்கு பிடித்திருக்கு....தஞ்சாவூர் தான் எனக்கும் பெஸ்ட்....நன்றாக இருக்கின்றன எனவே வரவேற்போம் சிலவேளை இதற்க்கு வரவேற்பு கிடைத்தல் நாளை தளபதி தன படங்களிலும் மாற்றம் செய்யலாம்....
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
//நாளை தளபதி தன படங்களிலும் மாற்றம் செய்யலாம்.//
ReplyDeleteபாட்டு நல்லா இருந்துச்சுங்க, ஆனா படம் பப்படம் மாதிரியாம்.. என்ன பண்ணலாம்?