அது ஒரு மழைக்காலம். உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவருக்கு நண்பனிடமிருந்து அழைப்பு. நண்பன் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளன். அழைத்த நண்பன் கூறினான் “மாப்ளே, இன்னிக்கே கிளம்பி வா, இந்தப் படத்துக்கு நீ ஒளிப்பதிவாளர் ஆக ஒரு வாய்ப்பு இருக்கு”. அடித்துப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தார். படப்பிடிப்பு அடுத்த நாள், நண்பன் இயக்குனரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியாவது அவரை இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக்கிவிடவேண்டும் என்ற வேகம். இயக்குனரின் மனதில் PC ஸ்ரீராம் இருக்க, ”நான் இந்தப் படம் பண்ணத்தான், வந்தேன், படம் பண்ணியேத்தீருவேன்” என்று சொல்ல இயக்குனருக்கு அவரைப்பிடித்துப்போனது. அவர் மனோஜ் பரமஹம்சா.
தரையில் தண்ணீரை ஊற்றுகிறார்கள் பிறகு துடைக்கிறார்கள், இப்படியே ஆறு நாட்கள் ஓட, கடுப்பானது தயாரிப்பு நிர்வாகம். படத்தின் ஒட்டுமொத்த செலவும் இரட்டிப்பாக, நிர்வாகம் கோபத்தின் உச்சிக்கே சென்றது, திரையில் பார்த்தவுடன் தயாரிப்பாளர் சொன்னார் ”செலவு பண்ணினது வீண் போகலை, பேர் சொல்லிக்கிற மாதிரி ஒரு படம்”. இயக்குனரும், ஒளிப்பதிவாரும் நண்பர்களாக இருந்தால், இயக்குனர் நினைத்தது திரையில் வரும். அது ஈரம்.
இதுவரையில் பெளர்ணமி இரவை இவ்வளவு வெளிச்சமாய் காட்டியது இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா’யில் இன்னொரு தூண் என வர்ணிக்கப்பட்டவர். இன்றைய சினிமாவில் The Hot Cameraman என்றழைக்கப்படுபவர். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவிடம் விண்ணைத்தாண்டி வருவாயா பற்றி உங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேளுங்கள். பதில்களை அளிக்க காத்திருக்கிறார். பதில்கள் அடுத்தவாரம் வெளியிடப்படும்.
கேள்விகளை பின்னூட்டமாக இடுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
vinnaiththaandi varuvaaya padam ennai migavum kavarnthullathu .............. mukkiyamaaga cameraa ,,,,
ReplyDeletefive times paarthutaen ..... innum paarpaen ...
intha padaththai patri niraya article eluthiullaen ...
neram kidaiththaal padithuvittu pinnootamidungal ....
www.rockfortraago.blogspot.com
கேள்வி இல்லை!
ReplyDeleteஜஸ்ட் பாராட்டுக்கள் மட்டும்!
படம் ஆரம்பிக்கும்போது டைட்டில் வாவ்னு சொல்ல வைத்தது!
தண்ணீருக்கு மேல எழுத்து! அந்த பிட்சரைசேஷனுக்காகவே ஆயிரம் கிளாப்ஸ் என்னிடமிருந்து!
மற்றபடி படம் முழுவதுமே ஃபோட்டோகிராஃபி இனிமை!
http://pithatralgal.blogspot.com/2010/03/blog-post_10.html
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!
ஈரம் படத்தை ஈரமாகவே காட்டினார் கேமரா மேன் மனோஜ்.இதில் நிறைய பொறுப்பு அவருக்கு.
ReplyDeleteவி.தா.வ நல்லா இருந்தது ஆனால் ஈரம் போல் இதில் அவ்வளவு scope இல்லை.
கேள்வி:(இவருக்கு சம்பந்தம் உண்டா தெரியவில்லை)
1.சில(வி.தா.வ)காட்சிகளில் சிம்பு அண்ட் த்ரிஷா முகங்களில் பவுடர் அப்பி இருப்பது அப்பட்டமாக தெரிகிறதே?
1)தமிழ்ப் படங்களின் நிறங்களையும் வெளிப்படங்களின் நிறத்தை வைத்துப் பார்த்தாலே தெரியும், தமிழ்ப் படங்களின் நிறம் மொக்கையாக இருப்பது. ஆலிவூட், ஏன் பாலிவூட்டின் சில படங்களில் கூட அசத்தலான நிறம் தெரிகிறது. கண்ணில் வைத்து ஒற்றி எடுக்கக் கூடிய ஒரு டோனில் படமாக்குகிறார்கள், தமிழில் இன்னும் அந்த முயற்சி ஏன் பரவலாகவில்லை?
ReplyDelete2) வித்தியாசமான நிறம், ஓடிக் கெண்டே இருக்கும் காட்சிகள், ஒரு பொருளை மாறுபாடான கோணத்தில் காட்டல், ஒளி விழுதல் போன்ற காட்சிகளுடன் நானும் உள்ளேன் ஐயா என்று படத்தில் காட்டி பாயாசத்து முந்திரிப் பருப்பாக உள்ள ஒளிப்பதிவாளரின் பெயரே தமிழ்த்திரை வட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் வெளிவந்து புகழடைகிறது. இயல்பான, ஆரவாரமில்லா, கதையுடன் போகும், இயக்குனரின் காட்சிகளுடன் பயணிக்கும் தன்னை முன் நிறுத்தா ஒளிப்பதிவு என்று தமிழ் சினிமாவில் உள்ளதா..?
அப்படி பட்டது எடுபடுமா?
3)மிக இயல்பான வெளிச்சத்தில் CamCorder மூலம் படமாக்கப் பட்ட முயற்சிகள் வெளிநாடுகளில் உண்டு. செல்வராகவன் ஆ.ஒ.வில் ஒரு காட்சியில் அந்த effect மட்டும் கொடுத்திருப்பார். தங்களுக்கு அது போன்று படமெடுக்க ஆர்வம் உண்டா?
4)தமிழ் சினிமா இன்னும் பெட்டராக என்ன பண்ணலாம் ?
5)தமிழ் இலக்கியப் பரிச்சயம் உண்டா? இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான இடைவெளியைக் குறைக்க ஆர்வம் உண்டா (எப்படியும் எதிர்காலத்தில் இயக்குநர் ஆகிவிடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில்..)?
What was the Color theme came to your mind when GVM narrated the VTV story to you.
ReplyDelete2. As a institute student do you feel, institute learnings helps you in the industry?
Blogeswari
படம் ஒளிபதிவு அருமை அந்த இரவு காட்சி அருமை. என் நண்பர் பாத்திபன் திரைப்படக்கல்லூரியை சேர்ந்தவர் அவர் நண்பர் கோகுல்
ReplyDeleteஉங்கள் உதவி ஒளிப்பதிவாளர். அடுத்து தல படத்துக்கு பண்றீங்க போல வாழ்த்துக்கள்
Can a person easily get into cine field moving out from IT, just with passion?
ReplyDeleteWhat kind of salaries does a new cameraman get? In IT 6 - 10years exp, gets 10lakhs PA in India. About 90 K$ in USA.
Will you do short films? I have a story in my blog. Contact me.
Good job on VTV, the final output was really good.
ReplyDeleteSome of the questions comparing hollywood movies are through my reading about them in newsmagazines and I do not have first hand experience about them.
. Why many cinematographers fail miserably as directors? (a few exceptions like Santhosh Sivan do exist, Balu Mahendra merely reproduced foreign movies)
. Who (Director or Cinematorgraher) determines the shot composition and the color of the scene?
. How important is it for a Director to know the technicalities like lens type, lighting etc?
. Many hollywood cinematographers never operate the camera, is it an essential part of being a cinematographer to handle the camera?
. What is your personal preference? Do you like handling the camera or would rather let your assistants handle them?
. Give some instances when you had to disagree with the director about a shot? How did it get resolved?
. Are directors open to suggestions to change the scene depending on the limitations or do they push the envelope?
. Hollywood movies do detailed story boarding with camera angles and movement decided in pre-production, how is it done in Indian movies?
. How much of a cinematographers work is done during pre-prod (again in the context of Indian movies)?
. What do you think about digital cameras? What is your personal preference and why?
. In Tamil movie there seems to be very little done in terms of cinematography, there is not leaps in style? Do you feel there is a vacant space after Santhosh Sivan? I am asking this purely in terms of creative advancements.
. There is a wave of film makers, usually indie film makers who use DSLR for making movies, what do you think about the output and would you compare it with 35mm?
. What is the cinematographer's role in post-production? Is s/he consulted for color correction, digital enhancements etc?
. Would you feel offended when the final film is color corrected / enhanced digitally and appear different than what you had shot?
Thanks for answering these questions!
Good luck with your future endeavors.
தயாரிப்பாளர் ஷங்கரிடம் பணி புரிந்த அனுபவம் எப்படி இருந்தது. உங்களின் எதிர்கால லட்சியம் என்ன?
ReplyDeleteபடத்தினைப் பார்த்து முடித்தவுடன் மனதில் ஏற்பட்ட உணர்வு, உணர்வு என்று சொல்வதினை விடவும் அதனைவிட மிகச்சிறப்பான அதற்கு ஈடான ஒரு தமிழ்வார்த்தையை எண்ணிக்கொள்ளுங்கள்.
ReplyDeleteஆனால் அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றே தோன்றுகிறாது. அதனை விவரிக்கும் அளவிற்கு எனக்கு எழுத்திலோ தமிழிலே புலமை கிடையாது. முதல் காதலும் அதன்பின் வரும் தோல்வியும் என்றுமே மறக்கக்கூடியதல்ல என் அனுபவத்தில்.
படத்தினைப் பார்த்து முடித்தவுடன் என்னுள் நான் உணர்ந்த என்னவென்று சொல்லத்தெரியாத அந்த உணர்வு இதை எழுதும் போதும் என்னைப் போட்டுத் தாக்குகின்றது. அந்த உணர்வில் மகிழ்ச்சியும்,
சோகமும் கலந்தே இருக்கின்றது என்பதை நான் உணர்கின்றேன்.
இந்த வலி எனக்குப் பிடித்திருக்கின்றது.
நடுநிசி 2 மணி இருக்கும் நாங்கள் எங்கள் அறைக்குத்திரும்பும் போது. என் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். தூக்கம் வரவில்லை. அந்த உணர்வு என்னை எங்கெங்கோ கொண்டுசென்று கொண்டிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்துவிட்டேன். இருட்டில் என் டைரியை தேடினேன். உடன் பேனாவும் கிடைத்தது. கிறுக்கத்தொடங்கினேன். இரண்டு பக்கங்களுக்கு நீண்டது. என் நண்பன் என்னை கூப்பிடவில்லை என்றால் அது எப்பொழுது முடிந்திருக்கும் என்று தெரியாது.
வாக்மேனை எடுத்து காதில் வைத்துக்கொண்டேன். "அடடா ஆஹா என்" "விண்ணைத்தாண்டி வருவாயா" "ஹோசானா" இப்படி ஒன்றன் பின் ஒன்றாக கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். தூக்கம் எப்பொழுது வந்தது என்று தெரியவில்லை. இந்தப் பாடல்களை நான் கேட்கத்துவங்கிய நாட்களில் இருந்து என்னை தாலட்டும் பாடல்களாக மாறிவிட்டிருந்தன.
என் டைரியில் என்ன எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை. பித்துப்பிடித்தவனின் மனநிலையில் எழுதப்பட்ட ஒன்றாகவே அது இருக்கும் இந்த பதிவைப்போல்.
paneerpushpangal.blogspot.com
கெளதம் உஙக்ளிடம் ஸ்க்ரிப்ட் சொன்ன போது ஏற்பட்ட உணர்வை திரையில் கொண்டு வந்துவிட்டதாக நினைகிறீர்களா?
ReplyDeleteபடத்தில் ஒரே மலையாள வாடை(கதையும் தாண்டி..)இதில் எதுவும் கெளதமின் உள்குத்து இருக்கா?
ReplyDeleteஈரம் அருமை.VTV also good.i hv seen u at movie promo in DD.
யோவ் எங்கைய்யா பதில்கள்?
ReplyDeleteகண்டிப்பாங்க. இந்த வாரம் இல்லாட்டி அடுத்தவாரம்.
ReplyDelete