Monday, September 21, 2009

உ.போ.ஒருவன் கமல் முஸ்லிமா?

இந்துத்துவா, பூஷ்வா, கோவா, ரவான்னு நிறைய கேள்வி கேட்டுட்டாங்க. என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு **** பதில் கடைசி வரியில்..

அப்புறம் கமலுக்கு இந்துத்துவான்னு பேரு வெச்சிருக்காங்க. பிராமிணனா பொறந்ததால தமிழ்நாட்டுல குத்து குத்துனு குத்துவாங்க. முஸ்லிமா மாறினதால அமெரிக்காவுல குத்துறாங்க. பாவம்யா.. அதுக்காக விட்டுரலாமா?

இதோ கமல் எத்தனை எத்தனை **துவாக்களுக்கு ஆதரவுன்னு சொல்ல இன்னும் பல புள்ளி விவரம்.

ஆரிய அடிவருடியாக கமல்:
நடாஷா என்ற ஆரிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடனை நடிக்க வைத்திருப்பதால்.

முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எதிரியாக:
ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வதும், முஸ்லிமான கமல், நோன்பு சமயத்தில் சாப்பிடுவதும், காப்பி குடிப்பதும்.

  • கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசருக்கு இந்தப்படத்தில் வாய்ப்பளிக்காதது.
  • முஸ்லிமான மம்மூட்டியை நடிக்க அழைக்காமல் சேட்டன் மோகன்லாலை நடிக்க வைத்திருப்பது.
  • பெரியாரின் சீடரான கமல் கருப்பு வண்ணமில்லாம உடைய அணிந்து பெரியாரின் கொள்கைகளை கேள்விக்குறியாக்கிருக்கிறார்.

அன்னிய மோகம் கொண்ட கமல்:
தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? அதுவுமில்லாமல் அன்னிய மோகத்தால் சாண்ட்விட்ச் சாப்பிடுவது. ஜீன்ஸ் போட்டு மேற்கத்திய கலாச்சாரத்திற்கு ஆதரவாக இருப்பதும், இந்திய கலாச்சாரத்தினை காலால் போட்டு மிதித்திருப்பதும்.

BJPக்கு ஆதரவாளர்:
காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. பிளவு பட்டிருக்கும் கட்சிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

இந்துக்களின் அடக்குமுறைக்கு கொட்டை தாங்கி இருப்பது:

மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அதிகாரிகள் அனைவரும் அடங்கி இருப்பது. அதே போல் வெடிகுண்டு வைத்திருக்கும் பையில் மட்டும் வெங்கடா ஜலபதி படம் போட்டிருப்பது.


இந்திய இறையாண்மைக்கு எதிராக கமல்:
1. சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland'னு இருக்கு... அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா?
2. இந்தியாவில் தயாராகும் Nokiaவை உபயோகிக்காமல், Samsung கைபேசிகளை மட்டுமே உபயோகப் படுத்துவதால் கிழக்கு நாடுகளின் அடிவருடியாக தன்னை காட்டி இருக்கிறார்.

அசைவர்களுக்கு எதிரானவர் கமல்:
மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை... பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா?
அதே போல் அவர் ஏன் ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ வாங்கவில்லை.

  • போஸ்டரில் சிகப்பு வண்ணத்தில் ஒரு வட்டம் போட்டு அதற்குள் தான் இருப்பதை காட்டி கம்யூனிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார் கமல்.
  • எடுத்த துப்பாக்கியை சுடாமல் வைக்கும் கமல் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளகூட தைரியமில்லாமல். வருஙகால சந்ததியினருக்கு வீரத்தை அடியோடு கிள்ளிப்போட்டிருக்கிறார்.
  • தக்காளி மட்டுமே வாங்குமாறு காட்டி, பூசணிக்காய் பயிரிடும் விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார்.
  • பிளாஸ்கில் காப்பி குடித்து Canned foodகளுக்கு ஆதரவாய் இருப்பது, Reliance Fresh எதிராய் கொடி பிடித்திருப்பதும், அதே சமயம் reliance சிம் உபயோகப்படுத்தி airtel, hutchநிறுவனத்தை மான பங்கம் படுத்தியுள்ளார்
  • படிக்கவே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இருக்க லேப்டாப்பை தீயிட்டு கொளுத்தி அடித்தள மக்களின் வயித்தெரிச்சலைக் கிளப்பி, கமல் மேல் தட்டு மக்களின் பிரதிநிதியாக வலுப்பெற்றிருக்கிறார்.
  • கண்ணாடி அணிந்து வந்து கண்ணாடி அணியாதவர்கள் எல்லாம் பாம் வைக்காதவர்கள் என்று சொல்லி கண்ணாடி அணியாதவர்களை கோபமுறச்செய்துள்ளார்.
  • பிளாஸ்டி பை கொண்டு வந்து Anti-plastic சங்கத்தினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.
  • நடந்தே வந்து போய், மாருதி நிறுவனத்தைக் கேவலப்படுத்தியுள்ளார்.
  • லட்சியங்களுக்கு உயிரை எடுக்கவும் கொடுக்கவும் முஸ்லிம்கள் தயங்கமாட்டார்கள் என முஸ்லிம் மதத்தினரை சொல்லும் கமல், காசுக்காக இந்துக்கள் எந்தவித கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார்கள் என சந்தானபாரதி பாத்திரத்தில் காட்டியிருப்பது.
  • தானும் பாடி, தன் ஒரு பெண்ணை இசையமைக்கச் சொல்லி, இன்னொரு பெண்ணையும் பாட வைத்து, கெளதம்யியை பேச/பாட வைத்து ஒரு குடும்பத்தில் அனைவரும் இந்தப்படத்தில் பங்கேற்க வைத்து, கலைஞருக்கு ஜால்ரா தட்டி தான் ஒரு தி.மு.க என காட்டியிருப்பது..
  • போகா சேனல் காட்டாமல் வேறு ஏதோ ஒரு சேனலுக்கு போன் செய்து குழந்தைகளுக்கு எதிராக செய்திருப்பது..

இந்துத்துவா, பூஷ்வா, கோவா, ரவான்னு நிறைய கேள்வி கேட்டுட்டாங்க. என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு முஸ்லிம். படத்திலும் அவர் மனைவி முஸ்லிம் என்பது தெரிந்த விசயம். முதல் முறை அவர் மனைவியிடம் பேசுகையில் மனைவி சொல்வார் "இன்ஷாஹ் அல்லாஹ் சொன்னீங்களா” என்று. வேணுமின்னா இரா. முருகனை கேட்டுச் சொல்லலாமா?

நன்றி: Twitters

Updated: சின்ன அம்மணியின் பின்னூட்டத்திற்கு பின் :
//காமன்மேன் முஸ்லிமா இருக்கக்கூடாதா,தீவிரவாதியாத்தான் இருக்கணுமா//
முதலில் ஒரு முஸ்லிமை தீவிரவாதியாக மட்டும் பார்க்கத்தெரிந்திருக்கும் உங்கள் தட்டையான எண்ணத்தை எண்ணிப்பாருங்கள். முஸ்லிமை தீவிரவாதியாக மட்டுமே எண்ணும் உங்கள் பின்நவீனத்துவத்தை என்ன சொல்வது. படத்தில் கமல் ஒரு இடத்தில் முஸ்லிமென காட்டி இருக்கிறார், ஆனால் எந்த இடத்திலும் அவர் இந்துவாக காட்டவே இல்லை. அப்புறம் எப்படிங்க நீங்க இந்துத்துவான்னு சொல்றீங்க. காரணம் உங்களுக்கு தனிமனிதனின் ஜாதிதான் தெரியும். இதுக்கு பேருதான் பகுத்தறிவா? திடீரென கமல் ஒரு பேட்டியில் அந்த வேடம் ஒரு முஸ்லிம் என்பதை தெளிவு படுத்திவிட்டால், உங்கள் குறுகிய மனதை/எழுத்தை எங்கே போய் வெச்சுப்பீங்க? உங்களுக்கு மட்டும் அவர் ஜாதி தெரிகிறது.. எங்களுக்கு படம்தான் தெரிகிறது. கெளம்புங்க காத்து வரட்டும்.

கடைசியாக விவசாயி டச், பொண்டாட்டி கையால் புருசன்மார்கள் அடிவாங்குவது சகஜம். அதைப் புகாராய் கொடுத்தால் எந்தக் காவலரும் மதிப்பதில்லை. இப்படி கல்யாணமான ஆண் சமுதாயத்தின் மானத்தை பொதுவில் வைத்து கப்பலேத்தி, திருமணமான ஆண்களின் ரகசியத்தை உடைத்ததை நான் கன்னா பின்னாவென்று கண்டிக்கிறேன். இது ஆண்சமுதாயத்துக்கு கமல் செய்த துரோகம்.

50 comments:

  1. சீரியஸனா படத்துக்கு, நல்லா காமெடியா விமர்சனம் எழுதுறாங்க.

    ReplyDelete
  2. இப்படித்தாங்க இந்த அறிவுஜீவிகளோட தொல்லை தாங்க முடியலை. படம் அருமை. கடைசி வரைக்கும் கட்டிப்போட்டமாதிரி தியேட்டர் உக்காரமுடிஞ்சது. அதுவே படத்துக்கு பெரிய வெற்றி.

    ReplyDelete
  3. //என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு முஸ்லிம்.//

    எனக்கும் அப்படித்தான் தோணிச்சு. காமன்மேன் முஸ்லிமா இருக்கக்கூடாதா,தீவிரவாதியாத்தான் இருக்கணுமா!!! எப்பவுமே காமன்மேனை இந்துவாவே கற்பனை பண்ணிக்கறாங்க பலர். இதுக்கு பல பதிவர்களும் விதிவிலக்கு இல்லை.
    ஒரு முஸ்லிம்க்கு இந்த மாதிரி நம்ம நாட்டுல பொது மக்கள் பாதிக்கப்படறாங்கன்னு தோணக்கூடாதா. சில விமரிசனங்கள் கேலிக்கூத்து.

    ReplyDelete
  4. இதற்கு நீங்கள் "ரஜினி வாழ்க" என்று எழுதி இருக்கலாம்.

    இவ்வாறாக நீங்கள் ரஜினிக்கு கூஜா தூக்குவது எதிர்ப்பார்த்ததே.

    :)- இது எப்படி ?

    ReplyDelete
  5. //இதற்கு நீங்கள் "ரஜினி வாழ்க" என்று எழுதி இருக்கலாம்/

    அட ஆமாம். அப்படியும் எழுதி இருக்கலாமே.

    **இந்தப் படத்தில் ரஜினிய நடிக்க வெக்காத கமல், ரஜினி ரசிகர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்

    ReplyDelete
  6. அந்த பொண்ணு சிகரெட் புடிக்கரா மாதிரி காட்டி இருப்பாங்களே ! அதை விட்டுடீங்க. அதுக்கு என்ன குறியீடு ?

    ReplyDelete
  7. //ரஜினிக்கு கூஜா//
    ரஜினி கூஜா வெச்சி என்ன பண்ணுவாரு? கமண்டலம்தான் செட் ஆவும்

    ReplyDelete
  8. //அதுக்கு என்ன குறியீடு //
    ராமதாசுக்கு எதிராகன்னு எழுதிக்கலாம்

    ReplyDelete
  9. உங்களுக்கு ராமதாசுக்கு எதிராக இருக்கும் அரிப்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். கமல் கிறிஸ்தவ பெண்ணை சிகரெட் குடிப்பதாக சித்தரத்திற்க்கும் கர்நாடகாவில் சர்ச் எரிந்ததற்கும் சம்பந்தம் இல்லையா ? ஏனய்யா இப்படி ?

    ReplyDelete
  10. மீ கோயிங் டு ஸ்லீப்.
    மீ த எஸ்கேப்,.

    ReplyDelete
  11. //ராமதாசுக்கு எதிராக இருக்கும் அரிப்பை //
    :)

    உங்க நாகரிகம் /நேர்மை புடிச்சிருக்கு.

    ReplyDelete
  12. அரிப்பு - சின்ன ர வருமா இல்லாட்டி பெரிய ற வருமா ?

    ReplyDelete
  13. //eppudi ippudi????????? //
    எல்லாம் உங்ககிட்ட இருந்துதான்

    ReplyDelete
  14. //என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு முஸ்லிம். படத்திலும் அவர் மனைவி முஸ்லிம் என்பது தெரிந்த விசயம். முதல் முறை அவர் மனைவியிடம் பேசுகையில் மனைவி சொல்வார் "இன்ஷாஹ் அல்லாஹ் சொன்னீங்களா” //

    அப்படின்னா மார்கெட்டுல தக்காளிக்கு பதில் ஒரு கிலோ மட்டன் பீஸ் தான் வாங்கி இருக்கனும். எனக்கும் படத்துல கமல் முஸ்லிமான்னு டவுட்டாக இருக்கு

    ReplyDelete
  15. விவாஜி,

    நொம்ப நேரம் விட்டத்தை பார்த்துட்டே ஒக்காரதீங்க... :) இப்பிடிதான் ஏடாகூடமா யோசிக்க சொல்லும்... :)

    ReplyDelete
  16. //அதே போல் வெடிகுண்டு வைத்திருக்கும் பையில் மட்டும் வெங்கடா ஜலபதி படம் போட்டிருப்பது//

    அது லட்டு பையா இருக்கப் போவுது!
    குண்டா இருந்தா வெடி குண்டா? :))

    //என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு முஸ்லிம். படத்திலும் அவர் மனைவி முஸ்லிம் என்பது தெரிந்த விசயம்.//

    முஸ்லிம் = தேச பக்தி = உன்னைப் போல் (அவனும்) ஒருவன்!
    அஷ்டே! அதே கமல் சொல்லிருக்காரு!

    அதப் புரிஞ்சிக்காத இந்த வெவசாயி, "ரஜினி வாழ்க", "ராமதாஸ் வாழ்க"-ன்னு சொல்ல இம்புட்டு கஷ்டப்பட்டு பதிவு எழுதியிருக்க வேணாம்! :))

    //நன்றி: Twitters//

    ட்விட்டருக்கு எதிரா கமல் ஒன்னுமே சொல்லலீயா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க! :)

    ReplyDelete
  17. கமல் படத்தில் சாண்ட்விட்ச் சாப்பிடுகிறார் .. அதன் மூலம் அரிசி சாப்பிடுபவனுக்கு குண்டு வைக்க தில் இல்லை என்று சொல்கிறார் ..

    ReplyDelete
  18. //என்னோட பதில் உன்னைப் போல் ஒருவனில் கமல் ஒரு முஸ்லிம். படத்திலும் அவர் மனைவி முஸ்லிம் என்பது தெரிந்த விசயம்.//

    நோ நோ ஒப்புக் கொள்ள மாட்டேன்.

    கமல் நெற்றியில் ப்ரேயர் மார்க்கிங் இல்லை

    :)

    ReplyDelete
  19. // மணிகண்டன் said...
    அரிப்பு - சின்ன ர வருமா இல்லாட்டி பெரிய ற வருமா ? //

    தெரிஞ்ச காமெடிதான்னாலும் சொல்லாம இருக்க முடியல ...
    சின்ன அரிப்பா இருந்த சின்ன ர ... பெரிய அரிப்பா இருந்த பெரிய ற ... :) :)

    ReplyDelete
  20. // கமல் நெற்றியில் ப்ரேயர் மார்க்கிங் இல்லை //

    ஆரிப் நெற்றியில் கூடத்தான் ப்ரேயர் மார்க்கிங் இல்லை .. அதனால் அவர் ஒரு இந்து (அ) கிறிஸ்டின் .... கமல் படம் பாக்க வர்றவங்கள இதுல கூட ஏமாத்தி இருக்கார் .. :) :) :)

    ReplyDelete
  21. //பெரிய அரிப்பா இருந்த பெரிய ற //
    தாங்க முடியலப்பா.. சிரிச்சி சிரிச்சி வாயெல்லாம் வலிக்குதுங்க..

    ReplyDelete
  22. சின்ன அம்மணியின் பின்னூட்டத்திற்கு பின் ://காமன்மேன் முஸ்லிமா இருக்கக்கூடாதா,தீவிரவாதியாத்தான் இருக்கணுமா//
    முதலில் ஒரு முஸ்லிமை தீவிரவாதியாக மட்டும் பார்க்கத் தெரிந்திருக்கும் உங்கள் குறுகிய புத்திய எண்ணிப்பாருங்கள். முஸ்லிமை தீவிரவாதியாக மட்டுமே எண்ணும் உங்கள் பின்நவீனத்துவத்தை எதால் அடிக்கிறது? திடீரென கமல் ஒரு பேட்டியில் அந்த வேடம் ஒரு முஸ்லிம் என்பதை தெளிவு படுத்திவிட்டால், உங்கள் குறுகிய மனதை/எழுத்தை எங்கே போய் வெச்சுப்பீங்க? உங்களுக்கு மட்டும் அவர் ஜாதி தெரிகிறது.. எங்களுக்கு படம்தான் தெரிகிறது. கெளம்புங்க காத்து வரட்டும்.

    ReplyDelete
  23. எங்கயோ போய்ட்டிங்களே இளா.. ;))

    ReplyDelete
  24. திராவிடக் குஞ்சுகளின் நெஞ்சிலடிக்க கமல் என்னும் பார்ப்பனனிடம் எம்புட்டு வாங்குனீங்க? :))

    ReplyDelete
  25. படித்ததில், சூப்பரு விமர்சனம் இதுதான்.

    நெத்தியடி.

    :)

    ReplyDelete
  26. கோபால்சாமி பதவிக்காலம் முடியும் வரை பொறுத்திருந்து இப்போது வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததை குத்திக் காட்டி தான் ஒரு தீவிர இந்துத்துவவாதி என்பதை நிரூபித்திருக்கிறார்.

    ReplyDelete
  27. ரொம்ப ரசிச்சேன் சாமியோவ். சிப்பு சிப்பாவும் நெம்ப வந்துச்சு.
    :))

    ReplyDelete
  28. \\\ கைப்புள்ள said...
    ரொம்ப ரசிச்சேன் சாமியோவ். சிப்பு சிப்பாவும் நெம்ப வந்துச்சு\\

    ரீப்பிட்டேய் ;)))

    ReplyDelete
  29. இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.. ROTFL..

    நன்றி.!

    ReplyDelete
  30. இது சதா பார்வையில்லை!

    கொலை வெறிப்பார்வை!

    ReplyDelete
  31. //திராவிடக் குஞ்சுகளின் நெஞ்சிலடிக்க கமல் என்னும் பார்ப்பனனிடம் எம்புட்டு வாங்குனீங்க? :/

    கமல் அடுத்தப் படத்துக்கு வசனம் எழுதக் கூப்புட்டிருக்காரு. அதான்.

    ReplyDelete
  32. :)

    கமல் எப்பிடித்தான் இப்பிடி பல பேருக்கு/குரூப்புக்கு எதிரியா ஒரே படத்துல நடிக்கிறாரோ? பெரிய சாதனைதான். வேல மெனக்கெட்டு இம்பூட்டு புள்ளிவெவரம் குடுத்ததுக்கு கேப்டன் ஒண்ணும் சொல்லலையா? அப்போ நீங்க கேப்டனுக்கு போட்டியா/எதிரியா? :))

    ReplyDelete
  33. நல்ல விமர்சனம்.
    ஆழ்ந்த தொலை நோக்கான பார்வை.
    இப்படி அனேகம் உள்ளது உங்க பதிவில்.
    ஏன் யாரும் இப்படி ஆரோக்யமாக பதிவை எடுத்துக்கொள்ளாமல் கொலைவெறியோடு அலைகிறார்கள் என (எனக்கு மட்டும்) புரியவில்லை.

    ReplyDelete
  34. ஹஹஹ.. இளா.. என்ன சொல்றதுன்னு தெரியலை..

    கமல் இதுல தன்னை ஒரு சாதியை சேர்ந்தவர் அப்படின்னு நான் சொன்னது தப்பா இருக்கலாம் ஆனா மத்த விஷயங்களை உன்னைய மாதிரி அப்படியே விட முடியலை இளா..

    ReplyDelete
  35. அடடா... நான் இதெல்லாம் நோட் பண்ணலயே :(
    கிட்டத்தட்ட இதே மாதிரி நானும்...ஹி ஹி... http://thuklak.blogspot.com/2009/09/blog-post_22.html

    ReplyDelete
  36. விமர்சனம் அருமை.
    படத்த பாருங்கடானா அவனவன் எடுத்தவன் குலம் கோத்ரத்த பொரட்டி கிட்டு இருக்கான்.

    ReplyDelete
  37. இளா!

    முருகனிடம் கேட்டே சொல்லுங்கள்.

    கமல் வேடம் முஸ்லீம்னு சொல்லிட்டா வசனங்களில் விரவிக்கிடக்கும் இந்துத்துவத்தை ஒதுக்கி விடலாம். சூப்பர் லாஜிக். அந்த ஒரு வார்த்தைக்காக அவர் ஒரு முஸ்லீம்னா சீனிவாச ராமனுஜம் யாருங்கண்ணா. வெட்னஸ்டேயின் தழுவல் என்பதால் காட்சிகளில் அதிக மாற்றம் இல்லை. ஆனால் வசனத்தில்தான் சித்து விளையாட்டு.

    கமலின் மனைவி சொல்லுவது இன்ஷா அல்லா சொன்னீங்களா என்பதல்ல இன்ஷா அல்லாவா. பொதுவாக மாற்று மதத்தவர்கள் வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்களுடனான பழக்கத்தினால் பயன்படுத்தும் வார்த்தை அது. முஸ்லீம்களிடம் அந்த வார்த்தை தன்னியல்பாக வரும். வலியத்திணிப்பதாக இருக்காது. குஜாராத் இன அழிப்பு எல்லாம் தீவிரவாதியின் மூன்றாவது பொண்டாட்டியின் யோனிக்குள் ஒளித்து வைப்பது. ஆனா தன்னிலை விளக்கத்துக்கு இன்னொரு யோனிக்கிழிப்பும் கருவறுத்தலும் வேண்டும். இந்த குயக்திக்கு பேர்தான் இந்துத்துவா, இந்துத்துவா குசும்பு... பாத்து அப்பப்போ எட்டிப்பாக்கும் பூனைக்குட்டியை மொத்தமா வெளிய விட்டுடாதீங்க

    ReplyDelete
  38. Super Thalaiva...!

    Great review and Kalakkal Comedy!

    "KUTRAM PAARKIL (SUTRAM) THIRAIPPADAM ILLAI"

    ithai arputhamaa solli irukkeenga!!

    :))

    BEST POST OF THIS SEASON...!

    ReplyDelete
  39. /பாத்து அப்பப்போ எட்டிப்பாக்கும் பூனைக்குட்டியை மொத்தமா வெளிய விட்டுடாதீங்க//
    சரீங்கண்ணா. நீங்க சொன்னதுக்கு அப்புறம் நாங்க அப்படி இருக்க முடியுமாங்கண்ணா. நீங்க சொன்னபடியே இருக்கோம்ணா.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)