Friday, September 18, 2009

Unnai Pol Oruvan Review

ஒரு பெரிய படம் குடுத்தா அடுத்ததா ஒரு நகைச்சுவைப்படம் தருவது கமலின் வாடிக்கை. இந்த முறை வித்தியாசம். தசாவதாரத்திற்குப் பின் மீண்டும் ஒரு பெரிய படம். ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதைய தன் பக்கத்துக்கு இழுத்து வந்திருக்கிறார் கமல். படத்தில் மொத்தமே 5 கதாப்பாத்திரங்கள். காவல்துறை என்கவுண்டர் காலத்தில் வந்திருக்கும் ஒரு தீவிரவாத என்கவுண்டர்.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் முறியடிக்கப்படவேண்டும் என்பதைச் சொல்லும் படம். தீர்ப்புகளும் நொடிப்பொழுதில் கிடைக்க வேண்டுமென நினைக்கும் ஒரு சாதாரண பிரஜை ஆசையின் பிரதி.

கதை, Speed 1 கதைதான். காலை 9 மணி ஆரம்பித்து மாலை 6.10 முடியும் படம். நாட்டில் நடந்த பெரிய வன்முறைத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட 4 தீவிரவாதிகளுக்காக, நகரத்தில் பல குண்டு வைத்து மிரட்டி நால்வரையும் மீட்கும் கதைதான். உச்சமே அந்த நாலவரின் கதி என்னவாகிறது என்பது. ஒரு வரி கதை. கமல், 5 நாட்களில் நடித்து முடித்ததாக சொல்லப்படுகிறது, இருக்கலாம். கமல், மோகன்லால், இரு அசத்தும் காவல்துறையினர், லஷ்மி, ஒரு நிருபர் பல கணினிகள்/கைபேசிகள்.படமே ஒரு தெரு, ஒரு அறை, ஒரு மொட்டை மாடி என முடிந்துவிடுகிறது.

கமலுக்கு ஏற்ற வேடம், நம்மவரில் பார்ததது போலவே. சண்டை இல்லை, குத்து வசனம், பாடல்கள் இல்லை. ஒரு மொட்டை மாடியில் நின்று கொண்டு காபி குடித்துக்கொண்டு கைபேசியில் பேசும் வேடம். சின்ன கதாபாத்திரம். மோகன்லாலுக்கு கைபேசியில் பேசுவது மட்டுமே வேடம். மோகலால குடுத்த வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார். உங்களுக்கு இராணுவ பதவி தப்பே இல்லை. இறுதிவரை அசத்துவது இரண்டு காவல்துறை அதிகாரிகள். கமலுக்கு மட்டும் எங்கே இருந்து இப்படி கிடைக்கிறார்களோ? தமிழுக்கு இரண்டு கதாநாயகர்கள் தயார்.

படத்தில் லஷ்மிக்கு அடுத்தப்படியாக ஒரு நிருபர், படத்தில் ஒருவர் மட்டுமே புகைப்பிடிக்கிறார். அதுவும் இந்தப் பெண் நிருபரே. Basis Instict ல் பார்த்த அதே ‘தம்’ சீன். சந்தான பாரதிக்கு அதே மை.ம.காம.ராஜன்’ல இருந்தே வேடம். ”மைக்கேலு, போலிஸுல சரண்டர் ஆகிரலாம்பா” .. அதே டெம்போ. ஒன்னும் வித்தியாசம் இல்லை.

மற்ற படங்களின் டைட்டில் போட்டு முடிக்கும் வேகத்தில் முடிந்துவிடுகிறது முதல் பாதி. என்ன வேகம்? என்ன வேகம். வெகுநாட்களுக்குப்பிறகு தமிழில் இப்படி ஒரு திரைக்கதை. அசத்தல் வேகம். ஆரிஃப் கானாக வரும் காவலரின் ஒரு விசாரணை, அடிக்காமல், வசனம் அதிகம் பேசாமல், தன் கம்பீரத்தைக் காட்டியே உண்மை வாங்கும் பாங்கு அருமையோ அருமை. வசனகர்த்தாவுக்கு இந்த இடத்தில் ஷொட்டு. வசனகர்த்தா பொட்டி தட்டுறவர், இரா.முருகன். தேவையான இடத்திற்கு தேவையான வசனம்.”எனக்கும் இடது, வலது இரு கையில் எழுதும் பழக்கம் உண்டு. இடதும் பிடிக்கும், வலதும் பிடிக்கும். இது எழுதுவதில் மட்டும்தான்” ”a stupid common man from republic" இப்படி பல இடங்களில் மிளிர்கிறார் இராமுருகன். பளிச். இயக்குனரும் பொட்டிதட்டுறவர் போல. அதென்னமோ மென்பொருள்ல இருக்கிறவங்கன்னா கண்ணாடி போட்டுத்தான் ஆவனுமா?

ஒரு தலைமை செயலர் எப்படி இருப்பார் என்பதற்கு லஷ்மி கதாப்பாத்திரம் ஒரு சான்று, முதல்வராக கலைஞர் குரல்(போல்). த. செயலர்னா இப்படித்தான் பொறுப்பு இருந்தும் எடுத்துக்கொள்ள முடியாத நிலைமை. எடுத்துக்காட்டிய விதம் அருமை. படித்த ஜாலராக்கள்.

இசை, ஆரம்பம் மும்பை படத்தில் ARR செய்த வேலை, கடைசிவரை இசை இருக்கிறதா என்பதே தெரியாத அளவுக்கு நேர்த்தியான இசை. தந்தைக்கு தப்பாமல் பிறந்திருக்கு பெண். படத்தின் இன்னொரு பலம் ஒளிப்பதிவு, அசத்தல், அருமை, பலே, பேஷ். அட்டகாசம்.. இன்னபிற.. எடிட்டிங்- என்ன சொல்ல.. படத்தில் சொல்லாமல் சொல்லும் விசயங்கள பல, பாமரனுக்குப் புரியுமா எனபதுதான் கேள்வியே. உதாரணம் கமல் வைத்திருக்கும் துப்பாக்கி, எந்தவிதமான வசனமும் இல்லாமல்,தான் சாகத்தயார் என்பதைச் சொல்லுவது, கடைசியில் அதே துப்பாக்கி்யை உறையில் வைப்பதும்- இப்படி பல விசயங்கள் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் விறுவிறுப்பு இறுதி வரை குறையவில்லை. அதாவது இறுதியில் குறைந்திருக்கிறது. தெரிந்த அதே கோத்ரா, best backery, குஜராத் உள்விவகாரம், இப்படி தெரிந்த விசயங்களை நியாயப்படுத்துவது, கமலை காப்பாற்றும் “எங்கேயோ போயிட்டிங்க” சிவாஜியும், Ethical Hackreஆக வரும் ஆனந்த் (சதிலீலாவதியில் கமலுக்கு மகனாக நடித்த சிறுவன், இப்போ வாலிபர் )கதாபாத்திரம்அடிக்கும் பல்டியும் படத்தின் சறுக்கல். ஒரு சோப்ளாங்கி இளைஞன் பெரிய Hackerஆக காட்டுவது தமிழுக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம். The Core, Fast And furious படங்களில் பார்தததுதானே. கதாபாத்திரத்தில் இந்த வேடம் மட்டுமே நெருடல். அவ்வளவுப் பெரிய கட்டிடத்திற்கு ஒரு காவலர் கூட இல்லாதததும், இரண்டு பேர் த. செயலர் முன்னாடியே அடிக்கும் பல்டி, இப்படி சில நெருடல்கள் இருந்தாலும், மற்ற காட்சிகளுக்காக மன்னிக்கலாம்.கடைசிவரை கமலின் பெயரையும்,மதத்தையும் சொல்லாமல் சொல்லியிருப்பதும் புதுமை.


ஒரு நல்ல படத்திற்கு தேவை நல்ல திரைக்கதை, அதற்கான பாத்திரங்கள். இரண்டுமே இந்தப்படத்தில் சரிவர அமைந்திருக்கிறது. நல்ல கதாப்பாத்திரங்களும், அதற்கான நடிகர்களின் தேர்வும், அசத்தலோ அசத்தல். எங்கு பார்த்தாலும் அழகு. எல்லை தாண்டாத நடிப்பு, நேர்த்தியான வடிவமைப்பு, ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை, நறுக்வசனம், இரைச்சலில்லாத இசை இறுதி வரை ஆயிரம் குதிரை வேகத்தில் செல்லும் காட்சிகள் கொண்ட'A" Class படம் உன்னைப்போல் ஒருவன்.

27 comments:

  1. நான் புதன்கிழமை 3 முறை பாத்துட்டேன். நாளைக்கு போகட்டுமா?

    ReplyDelete
  2. விமர்சனத்துக்கு நன்றி!

    ReplyDelete
  3. எங்க ஊர்ல இன்னும் மூணு மணி நேரத்தில படம் போடப்போறாங்க. நாளைக்கும் ரெண்டு ஷோ இருக்கு. போகணும்.

    ReplyDelete
  4. /மொத்த கட்டிடத்தையும் தேடிவிட்டு மொட்டைமாடியை மட்டும் தேடாமல் விட்டுபோகும் /

    காவலர் தேடுவது வேறு கட்டிடம். காமன் மேன் டெலெஸ்கோப் வழியாக அந்த வேறுகட்டடத்தை பார்க்கிறான்.

    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  5. //நாளைக்கு போகட்டுமா?/
    நான் புதன் கிழமை பார்க்கலீங்க. ஆனா, படம் கண்டிப்பா பார்கலாம் ரகம். கடைசி வரியில சொல்லியிருக்கேன் பாருங்க. புரியுதா?

    ReplyDelete
  6. ஆழ்ந்ததொரு விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  7. ஜோ- வாங்க
    சி.அம்மணி- போய்ட்டு வந்து சொல்லுங்க

    ReplyDelete
  8. good one.

    நாளைக்கு பாக்கறேன். ரெவ்யூ எழுதரதுக்காகவாவது ;)

    ReplyDelete
  9. நான் இன்னிக்கு கிளம்புரேன் அண்ணே...விமர்சனத்துக்கு நன்றி ;)

    ReplyDelete
  10. Idealy it should have been much more success and popular. because both of them (kamal and Monhalal) are great actors.

    But in Tamilnadu the response is not that great, may be (I hope/wish) it will pick late.

    ReplyDelete
  11. Ramji, திரையரங்கத்துல மொத்தமே 7 பேர்தான். அப்படி ஒரு ஓபனிங் இந்தப் படத்துக்கு.

    ReplyDelete
  12. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  13. Thanks for the review, today we planned to watch.

    ReplyDelete
  14. இளா படத்தை போலவே உங்கள் விமர்சனமும் அழகு!

    ReplyDelete
  15. adada.. naan varappai follow pannitu irundha neenga vivasayathula surusuruppa irukinga :)

    nalla vimarsanam! rendu periya actors irundhuma kootam illa??! :O

    ReplyDelete
  16. Rendu policekarar la oruthar ganesh venkatraman - abhiyum naanum la mapillaiya varuvare! I think, indha moviela "Arif Khan" irupar nu.. (naan padam paakala)

    Yarum thitradhuku munnadi, sorry for the thanglish, oppicela font ellam irakka porumai illai! Maappu!

    ReplyDelete
  17. விமர்சனம் அருமை

    very low budget படம் ..........

    ( 3 terrorist ஓட Jeep வெடிக்கும் காட்சிக்கு தான் அதிகப்படியான செலவுன்னு நினைக்கிறேன் )

    ReplyDelete
  18. விமர்சனம் நன்றாக உள்ளது.

    "Wednesday" மிகச் சிறந்த படம். அதனை தமிழாக்க முயன்றதற்கு கமலுக்கு ஒரு பாராட்டு. அதே சமயம், நசருதின் ஷாவுக்கு அந்த வேடம் மிக யதார்த்தமாக பொருந்தியது. அவர் நல்லவரா அல்லது தீவிரவாதி கும்பலை சேர்ந்தவரா என்றே யாருக்கும் (படம் பார்ப்பவர்கள் உட்பட) தெரியாமல் படம் ஒரு ஜெட் வேகத்தில் சென்றது. ஆனால், ஹீரோ அதுவும் பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ள கமல் நடித்துள்ள இந்த தமிழ் படத்தில் அந்த சஸ்பென்ஸ் (படத்தின் மையம் இதுதான்)கிடைக்குமா என்று தெரிய வில்லை.

    நன்றி இளா!

    ReplyDelete
  19. விமர்சனம் நன்றாக உள்ளது.

    "Wednesday" மிகச் சிறந்த படம். அதனை தமிழாக்க முயன்றதற்கு கமலுக்கு ஒரு பாராட்டு. அதே சமயம், நசருதின் ஷாவுக்கு அந்த வேடம் மிக யதார்த்தமாக பொருந்தியது. அவர் நல்லவரா அல்லது தீவிரவாதி கும்பலை சேர்ந்தவரா என்றே யாருக்கும் (படம் பார்ப்பவர்கள் உட்பட) தெரியாமல் படம் ஒரு ஜெட் வேகத்தில் சென்றது. ஆனால், ஹீரோ அதுவும் பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ள கமல் நடித்துள்ள இந்த தமிழ் படத்தில் அந்த சஸ்பென்ஸ் (படத்தின் மையம் இதுதான்)கிடைக்குமா என்று தெரிய வில்லை.

    நன்றி இளா!

    ReplyDelete
  20. நல்ல படம். கமல் அனைத்து நடிகருக்கும் வாய்ப்பளித்திருக்கிறார்.

    ReplyDelete
  21. உங்கள் விமர்சனம் படித்தேன்.
    நானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)