Tuesday, September 15, 2009

பதிவுலகின் எமன்கள்

பதிவுலகின் எமன்கள், அதாவது ஒரு வருசம் பட்டாசு கெளப்பி பதிவெழுதுவோம். திடீர்னு ஒரு நிகழ்வு, எல்லாத்தையும் மறந்துட்டு மூத்தப்பதிவராகிடுவோம். என்ன காரணம்னு யோசிச்சதனால வந்ததுதான் இந்தப் பதிவு.

கல்யாணம்/காதல்:
பட்டைய கெளப்புன பதிவர்ங்க பல பேரு கல்யாணத்துக்கு பின்னாடி எஸ்ஸாகிருவாங்க. ஆசை அறுவது நாளு, மோகம் முப்பது நாளு வந்துருவாங்கன்னு நினைச்சா .. வரவே மாட்டாங்க. எப்பவாவது எங்கேயாவது ஒத்த வரியில் பின்னூட்டம் போடுவாங்க. அப்பப் படிச்சுகிட்டுதான் இருக்காங்க. அப்ப ஏன் எழுதறது இல்லே?
உதாரணம் - மங்களூர் சிவா, கவிதாயினி காயத்ரி

வேலை:
வேலை இல்லாமதான் பதிவெழுதறத ஆரம்பிப்போம், அப்புறம் அதே ஆணி அதிகாமயிருச்சுன்னா எழுத மாட்டோம். எழுத மேட்டர் இருக்கும், நேரம் கூட இருக்கும், ஆனா டச் விட்டுப்போயிருச்சுன்னு எழுத மாட்டாங்க.
உதாரணம்- ஜி.ரா.

வேற மோகம்.
கெளம்பிடாதீங்க. இது வேற மாதிரி. ட்விட்டரு, குழுமம் மாதிரிங்க. ட்விட்டருக்குள்ள போயிட்டா பதிவெல்லாம் படிப்பாங்க. ஆனா பின்னூட்டம் எல்லாம் ட்விட்டருல விழும். எதாவது எழுதனும்னு நினைச்சா கூட அங்கேயே எழுதிருவாங்க. இங்க வரவேண்டிய அவசியமே இருக்காது.
உதா: பெரிய கும்பலே இருக்கு.

இடம்மாற்றம்.
அதே வேலை, அதே கம்பனி. ஆனா இடம் மாறிட்டா எழுத மாட்டாங்க. காரணம் புது ஊர்ல செட் ஆவாத ஃபிகருங்க செட் ஆகியிருக்கலாம், அப்பா அம்மா குடும்பம்னு ஆகியிருக்கலாம், நண்பர்கள் குழு செட் ஆகியிருக்கலாம், இப்படி.
உதாரணம்: கப்பி, கைப்பு.


இடம்மாற்றம்-2
ஆகா, இதுல பார்ட்2 வான்னு கேட்டீங்க. ஆமாம் இன்னும் கூட வரலாம். வேலை மாறி போறீங்க. ஏற்கனவே இருந்த அலுவலகத்துல எல்லாத்தையும் தொறந்து விட்டுருப்பாங்க(Internet Connectionஐ சொன்னேங்க, வீண் கற்பனை வேணாம்). புது அலுவலகத்துல புதுசா சமைஞ்ச பொண்ணு மாதிரி Internetஐபொத்தி வெச்சிருப்பாங்க. நாமளும் பொத்திகிட்டு இருக்க வேண்டியதா இருக்கும்.
உதாரணம்: இளவஞ்சி

புது உறவு
கல்யாணம் ஆனா கூட பதிவு போடுறவங்க உண்டு, குழந்தை பொறந்துட்டா பார்த்துக்க போயிருவாங்க, புதுசா வந்த நண்பர்கள் கிண்டல் அடிக்கறாங்கன்னு எழுதாம விட்டவங்களும். அவ்ளோதான். இது திரும்ப வராத கேசுங்க.
உதாரணம்- வெட்டிப் பயல்.


Special case:
போலி,புலி,காலி,டவுசர் கழட்டப்பட்டது, துண்ட உருவுனது, மூக்கச் சிந்தினது, கொட்டாயி உட்டது, உருண்டு பொரண்டது நிறைய இருக்கு, அதாவது பதிவுலகமே காரணம். இப்போதைக்கு ஒரு கோடு போட்டு உட்டுருவோம். வேணாம்.

Writer’s Block:
முன்னாடி ஒரு எழவுமே எழுதி இருக்கமாட்டாங்க, திடீர்னு ஒரு 6 மாசம் எழுதமாட்டாங்க. காரணம் ஏன்னு கேட்டா Writer’s Blockம்பாங்க. இதை எல்லாம் ஏத்துக்கவே முடியாது. எத்தனை தனிமடல் வருது அதை தமிழாக்கம் பண்ணினாவே ஒரு நாளைக்கு 2 பதிவு போட்டுறலாம். இதுவும் சோம்பேறிகளின் காரணம்.

வேற எதுனாச்சும் உங்களுக்குத் தோணினாலும் பின்னூட்டத்துல போட்டுருங்க.

34 comments:

  1. ennai madhri pala karanangal serndhu kanama ponavanga kooda unde? kalyanam + idamatram + velai + touch vittu pochu :)))

    naan thaan mudhala? vadai please!

    ReplyDelete
  2. பொற்கொடி:
    ஒரு காணாம போன வடையே
    வடை கேட்கிறதே- அடடே
    ஆச்சர்யகுறி

    இதெல்லாம் நெம்ப டூ மச். சோம்பேறித்தனம்னு சொல்லுங்க

    ReplyDelete
  3. ஹி.ஹி..ஹி..,நீங்க ஜொள்ளியிருக்கிற எல்லா காரணத்தாலயும் ஒரு ஆயிரம் நாள் காணாமப்போய் நிறைய (??!!)அனுபவங்களோடு மீண்டும் பதிவெழுத வந்த ஆளு அடியேன்... :))

    ReplyDelete
  4. அடுத்த லெவல் புத்தகம் எழுத, பெரிய பத்திரிகைகளில் எழுத போறவங்க..

    எ.கா : ராம்கி, அதிருஷ்ட பார்வை

    ReplyDelete
  5. //துபாய் ராஜா said...
    ஹி.ஹி..ஹி..,நீங்க ஜொள்ளியிருக்கிற எல்லா காரணத்தாலயும் ஒரு ஆயிரம் நாள் காணாமப்போய் நிறைய (??!!)அனுபவங்களோடு மீண்டும் பதிவெழுத வந்த ஆளு அடியேன்... :))//

    ஆனா இதுவும் இன்னும் எவ்வளவு நாள்ன்னு தெரியலை.மீண்டும் காணாம போகப் போறது உறுதி.... :))

    ReplyDelete
  6. இராம், உங்களுக்கு கண்ணாலமே ஆவலை(கவனிங்க கேர்ள்ஸ்) அப்புறம் எப்படி மூத்தப்பதிவர் ஆனீங்க? முத்தப்பதிவர் ஆகிட்டீங்களோ?

    ReplyDelete
  7. இளா! ரொம்பத்தான் குறும்பு!

    ReplyDelete
  8. மூணாவது விஷயம் கொஞ்சம் பெரிசா தெரியுதே தல..,

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. ஜி.ரா எழுதுனா ஜீரா மாதிரி இனிக்கும். வெட்டின்னு பேர் வைச்சுகிட்டு சுட்டியா எழுதுவார் வெட்டிப்பயல். (இது கூட ஜிரா ஏதோ ஒரு பின்னூட்டத்துல சொன்னது)

    ReplyDelete
  11. தொடர்ந்து இதிலேயே மூழ்கி கிடந்தா ஒருமாதிரியான போதை வந்திடாது? ;)

    ReplyDelete
  12. நான் தமிழ்மணம் குறித்து வேறு தருணத்தில் எழுதியதை இங்கே தருகிறேன். நான் ஏன் தமிழ்மணத்தை விடப்போவதில்லை என்ற வாதமாக அது இருந்தாலும் உங்கள் பதிவிற்கான பின்னூட்டமும் இதிலேயே அடங்கியுள்ளது.

    அதாவது என்னைப்போல விடாது எழுதுபவர்களின் மோட்டிவேஷன்கள் என்பததே அது.

    “அப்போதெல்லாம் ஒவ்வொரு வலைப்பூவாகத் தேடிப் போக வேண்டும். தமிழ் வலைப்பதிவர் பட்டியல் இருந்ததோ அந்த வேலை சற்று எளிமைப்படுத்தப்பட்டதோ. ஆனால் நான் உள்ளே வந்த சில நாட்களுக்குள் காசி அவர்களது தமிழ்மணம் எனது இந்த வேலையை சுலபமாக்கி விட்டது. அதன் பெருமையை நான் கூற விழைவது சொந்த சகோதரனிடம் ஒரு பெண் தன் பிறந்தகப் பெருமையைப் பேசுவதற்கு சமமாகும்.

    ஆக முக்கியமான காரணம் இதுதான். பிறகு என்னென்ன திரட்டிகள் வந்தாலும் தமிழ் மணம் ஒரு தனியிடத்தை எனது மனதில் பிடித்துள்ளது. அதுவே நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம். அதற்காக தமிழ்மணம் அப்படியே ஒரு மேம்பாடும் பெறாமல் அப்படியே நின்று விடவில்லையே. எவ்வளவு புது வசதிகள் வந்துள்ளன? தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் பதிவுகளுக்கும் இம்மாதிரி ஏற்பாடு இல்லை என்று அடித்துக் கூறுவேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் இங்கே, ஹி ஹி ஹி.

    இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.

    பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.

    ஆனால் என் வீட்டம்மா வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறார். "சண்டைக்கார பிறாம்மணா, எங்கே சண்டை, சோத்து மூட்டையை இறக்கு" என்ற சொலவடைக்கு ஏற்ப நான் செயல்படுகிறேனாம். அப்படியா இருக்கும்? சேச்சே. இருக்கவே இருக்காது. அவருக்கு என்ன தெரியும்? சமீபத்தில் 1953 முதல்தானே என்னை அவர் அறிவார்?

    ஆக, டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவது என்பது இப்போதைக்கு out of question”.
    பார்க்க: http://dondu.blogspot.com/2007/04/blog-post_17.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  13. Tamil10 இந்தப் பதிவுக்கு தேவையான பின்னூட்டமா இது? எதுக்கு இந்த வீண் விளம்பரம்?

    ReplyDelete
  14. //ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவது என்பது இப்போதைக்கு out of question/
    Tamil10க்கு சொன்ன அதே தாங்க.. எதுக்கு வீண் விளம்பரம். பதிவுக்கு சம்பந்தமா பேசுங்க். tamil10க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

    ReplyDelete
  15. \\வேற எதுனாச்சும் உங்களுக்குத் தோணினாலும் பின்னூட்டத்துல போட்டுருங்க.\\

    ம்ம்ம்...நீங்க இந்த மாதிரி பதிவு போடனும்ல்ல அதுக்கு ;))

    ReplyDelete
  16. நல்லாருக்கு உங்க அலசல்..சக்தி ட்ரான்ஸ்போர்ட்-ல்லாம் எழுதினீங்க...அது மாதிரி ஜாலியா ஒரு கதை எழுதுங்களேன்!! :))

    ReplyDelete
  17. // நாமளும் பொத்திகிட்டு இருக்க வேண்டியதா இருக்கும்.
    உதாரணம்: இளவஞ்சி//

    ஏஞ்சொல்ல மாட்டீரு?! :)

    சும்மா இருப்பதே சுகம்னு சிலகாலம் தோன்றுவதுண்டு. அப்பவெல்லாம் சும்மா இருந்த கேப்புதான் எம்படது. அதுபோக எழுதுவது என்பதற்க்கான மனநிலை இல்லையெனில் ஒரு வரிகூட இயல்பாக எழுதமுடியாது. அந்தமாதிரி நேரத்திலும் சும்மா படிக்கறதோட நிறுத்திக்கறது உண்டு. இதுபோட பதிவெழுதுவதே எண்ணங்களின் வெளிப்பாடு என்ற நிலையில் பதிவைவிட படமெடுப்பது மிக சுவாரசியமான வேலையா தோன்றுவதால் ஒரு கேப்பு விழுகறதுண்டு. இதெல்லாந்தான் எங்கேசு... வாக்குமூலம் குடுத்துட்டேன் :)

    ReplyDelete
  18. பதிவுலகின் எமன்கள் எனும் தலைப்பு இந்த இடுகைக்கு எவ்வகையில் பொருந்தும்?

    எழுதியே உயிரை எடுத்தார்கள், இப்போது காணாமல் போய்விட்டார்கள், திரும்பவும் வருவார்கள் என பல காரணங்களைக் காட்டி எழுதப்பட்டு இருக்கிறது.

    நீங்கள் குறிப்பிட்டவர்களில் ஜி.ரா எழுத்துகள் படித்ததுண்டு. அருமையான, திறமையான எழுத்தாளர்.

    மற்றவர்களைப் படித்ததில்லை.

    எழுதிக்கொண்டே இருந்தால் எழுதியவர்களை யார் படிப்பது என எழுத்துக்கு இடைவெளி விடுபவர்களும் உண்டு. :)

    ReplyDelete
  19. நல்லா இருக்குங்க காரணங்கள் கலக்கலா :))))))

    ReplyDelete
  20. //இடம்மாற்றம்.
    அதே வேலை, அதே கம்பனி. ஆனா இடம் மாறிட்டா எழுத மாட்டாங்க. காரணம் புது ஊர்ல செட் ஆவாத ஃபிகருங்க செட் ஆகியிருக்கலாம் இப்படி.
    உதாரணம்: கப்பி, .//

    அட கப்பியே நேர்ல வந்து எழுதி போட்ட வாசகமால்ல எனக்கு தோணுது :))))

    ReplyDelete
  21. தெரிஞ்சவங்களைப் பத்தி போட்டுத்தாக்க இதுதானே நேரம் ஆயில்ஸ். உங்களுக்குத் தெரிஞ்சவங்களை போட்டுத்தாக்குங்க. சென்ஷிய இழுத்திருக்கலாம், பாவம் ராக்குருவிய சீண்ட வேண்டாம்னு விட்டுட்டேன்

    ReplyDelete
  22. ஹலோ... உங்க பதிவுல பொருள் குற்றம் இருக்கு. நானு மறுக்கா எழுதறனாக்கும்.. :))

    ReplyDelete
  23. எச்சூஸ்மி.. எமன்கள் ந்றது காரணங்களா? உதாரணப் பதிவர்களா??

    ReplyDelete
  24. அண்ணா..பதிவுலகம் பத்தி ஒரு டாக்டரேட்டே முடிச்சிருப்பீங்க போலிருக்கு.

    ReplyDelete
  25. இளா உங்க பதிவை விட டோண்டு பின்னூட்டம் பெருசா இருக்கு, அதுக்கு முதலில் ஏதும் ஸ்கிரிப்ட் எழுங்க பதிவை விட பின்னூட்டம் பெருசா வந்தா தூக்கிவிடுவது போல்:)))

    அப்பாலிக்கா கவிதாயினி எழுதாதது சந்தோசமா? துக்கமா?

    திரும்ப எழுத ஆரம்பிச்சது சந்தோசமா? துக்கமா?

    ReplyDelete
  26. //எமன்கள் ந்றது காரணங்களா? உதாரணப் பதிவர்களா??//
    உங்க பதிவுகள் வேற எமன்கள் வேறையா?

    ReplyDelete
  27. // இது திரும்ப வராத கேசுங்க.
    உதாரணம்- வெட்டிப் பயல். //

    :)

    ReplyDelete
  28. //திரும்ப எழுத ஆரம்பிச்சது சந்தோசமா? துக்கமா?//
    என்னாது எழுத ஆரம்பிச்சுட்டாங்களா? :((((((

    ReplyDelete
  29. // வெட்டிப்பயல் said...

    // இது திரும்ப வராத கேசுங்க.
    உதாரணம்- வெட்டிப் பயல். //

    :)/

    மூத்தப்பதிவரின் பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  30. //Tamil10க்கு சொன்ன அதே தாங்க.. எதுக்கு வீண் விளம்பரம். பதிவுக்கு சம்பந்தமா பேசுங்க். tamil10க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?//

    ஹஹஹ.. இளா.. ஆனாலும்..

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)