அவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் எல்லாம் வழக்கம் போலதாங்க இருந்துச்சு. ஒரு சார்பில்லாம, மொக்கைகளும், கும்மியும் கொண்டாட்டமுமா. நட்சத்திர வாரத்துக்கு அவர் எழுதுன கதை, அவரோட பதிவுகள்ல சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன். தன்னோட எழுத்துக்கள்ல பெரிசாவோ, சிறிசாவோ, ஏன் அழுத்தமோ இல்லாம இருந்தப் பதிவுகள் U டர்ன் அடிச்சது 2008 பிப்ரவரிலதான்.
அதாவது கருத்துக்களை 'காலங்கள்'ல அள்ளி வீசிட்டு இருந்தவருக்கு அது சோதனை காலம். கருத்து கந்தசாமின்னு பேர் வந்ததும் அப்போதான்.
போலியின் ஒரு அங்கமாவே எண்ணி, கோவிய
வாரணம் ஆயிரம்ல அப்பா சூர்யா சொல்லுவாரே, எட்ஜ் வாங்கினேன்னு சொல்லி கடுப்பாயி 6 விக்கெட் எடுத்த கதை. அந்தக் காட்சி பார்க்கும் போது கோவிதான் மனசுல வந்தாரு. இது எனக்கும் ஒரு படிப்பினையா எடுத்துக்கிட்டேன். கருத்துக்களை வீச ஆரம்பிச்சப்போ நான் தனி மடல்ல பதிவுகளின் தாக்கம் குறையுதுன்னு சொன்னேன். அப்புறம் அவர் பதிவுகளை படிப்பதை நிறுத்திக்கிட்டேன். மே மாதத்துல இருந்துதான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சேன். ஆனா பின்னூட்டினதே இல்லே. ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. கருத்துகள் மட்டும் வந்துட்டுதான் இருக்கு. நடுநடுவே பதிவர் சந்திப்புகளும். கருத்து ஆரம்பிக்கும் வேகம் குறைஞ்சு கடேசியா உங்க இஷ்டம்னு முடிக்கிற அவர் தோரணை எனக்குப் பிடிக்கலை.
'என் வீட்டு பூசையறையில பெரியாரில்லை, பிள்ளையார்தான்'னு எதுக்கோ சொன்ன வார்த்தை இன்னும் மனசுல இருக்கு.
"வெளுத்ததெல்லாம் பால்னு நம்புறாரு, அதான் அவருக்கு ஒரு சோதனையை குடுத்துச்சு"
இப்போ அவர் பதிவுகள் சூடாகாம இருந்ததே இல்லே. தூள் கிளப்பிட்டு இருக்காரு, எந்த அளவுக்குத் தெரியுங்களா?? தமிழ்ப்பதிவுலகுல சிங்கைன்னா கோவிங்கிற அளவுக்கு.
Update: மக்களே மன்னிக்கவும், போலி மற்றும் அதன் சம்பந்தப்பட்ட அனைத்து பின்னூட்டங்களையும் அழிக்க வேண்டிய கட்டாயம். போலி பத்தின உங்க கருத்துக்களை சொல்ல வேணாமே.
அடுத்த BlogOgraphy: LuckyLook
நல்லாருக்கு!
ReplyDeleteநாந்தான் படிக்காமையே பின்னூட்டம் போடுவேன்னு நினைச்சுட்டு இருந்தேன், நீங்களுமா??
ReplyDeleteநல்லா இருக்கு,குறிச்சு வச்சுகிறேன்
ReplyDeleteசூப்பர்...
ReplyDeleteநல்லா இருக்கு Ila
ReplyDelete//கோவிய ஒரு கும்பல் தாக்கு தாக்குன்னு தாக்க, கோவி ஓடியோ ஒழியவோ இல்லே.//
ReplyDelete(முன்னாள்) நண்பர்களை கும்பல்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.
அந்த சுட்டிக்கெல்லாம் இணைப்புக் கொடுத்ததற்கு நன்றி !
மிகவும் நல்லாருக்கு! :)
ReplyDelete(சத்தியமாப் படிச்சிட்டுத் தான் பின்னூட்டினேன் இளா :)
//(முன்னாள்) நண்பர்களை கும்பல்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.//
ReplyDeleteஅவுங்க எல்லாம் இன்னும் எனக்கு நண்பர்கள் கோவி.:) சரி,லைட்டா மாத்திக்கிறேன்.
நகுதற் பொருட்டு அன்று நட்டல்! மிகுதிக் கண்
ReplyDeleteமேற்சென்று இடித்தற் பொருட்டு!
-என்ற குறள், எனக்கு இப்போ ஏன் ஞாபகம் வந்துச்சி-ன்னு தான் தெரியலை! :)
இளா! நல்லா இருக்கு, பதிவு படிச்சிட்டேன், ஆனா லிங்கு படிக்கலை
ReplyDelete//அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!//
ReplyDeleteநின்னுட்டேன்!
அமர்க-ன்னு சொல்லவேயில்ல! எம்புட்டு நேரம்யா நிக்குறது? :)
இளா, "நிற்க"-ன்னு போட்டு எழுதறதை எல்லாம் பாத்தா அவர் கொஞ்சம் கொஞ்சமா "மூத்த" பதிவர் ஆயிட்டு வராரோ?
//ரெண்டே பதிவுதான், சட்டுன்னு ஃபினிக்ஸ் மாதிரி வந்தாரு//
ReplyDeleteபதிவில் இந்த வரிகளை மட்டும் எந்த சார்பு உள்ளவரும் மறுக்க முடியாது!
//ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. கருத்துகள் மட்டும் வந்துட்டுதான் இருக்கு//
இது முழுக்க முழுக்க உண்மை இல்லை இளா!
கருத்தின் தாக்கமோ, இல்லை அதில் அவர் உறுதியாக, ஒரே நிலையில் இல்லாமல், குழப்பமாகப் பேசுவதாலோ வேணுமானால் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம்!
ஆனால் versatility இல்லை என்பது NOT 100% TRUE!
பார்வையின் வேறுபாடாகக் கூட இருக்கலாம்!
இதற்கு கோவி அண்ணாவோ, இல்லை மற்ற பதிவர்களோ என்ன சொல்கின்றார்கள் என்று பார்க்கலாம்!
துறை சார்ந்த பதிவுகளில் வெர்சடாலிட்டி பாக்க முடியுமா என்பது தனி விவாதம்!
(கோவி அண்ணே! - "துறை சார்ந்த"-ன்னு சொல்லிக் காமெடி எல்லாம் சத்தியமா பண்ணலீங்கோ! :))
நல்லாருக்கு!
ReplyDelete/kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ரெண்டே பதிவுதான், சட்டுன்னு ஃபினிக்ஸ் மாதிரி வந்தாரு//
பதிவில் இந்த வரிகளை மட்டும் எந்த சார்பு உள்ளவரும் மறுக்க முடியாது!
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!//
நின்னுட்டேன்!
அமர்க-ன்னு சொல்லவேயில்ல! எம்புட்டு நேரம்யா நிக்குறது? :)
இளா, "நிற்க"-ன்னு போட்டு எழுதறதை எல்லாம் பாத்தா அவர் கொஞ்சம் கொஞ்சமா "மூத்த" பதிவர் ஆயிட்டு வராரோ?
///
அண்ணாச்சி என்னாது ? கொஞ்சம் கொஞ்சமாவா ????
அதெல்லாம் எப்பவோ ஆயாச்சு!
(அது சரி இன்னுமா நீங்க ”நிற்க”றீங்க சரி உக்காருங்க உக்காருங்க! :))))
//ILA said...
ReplyDelete//(முன்னாள்) நண்பர்களை கும்பல்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை.//
அவுங்க எல்லாம் இன்னும் எனக்கு நண்பர்கள் கோவி.:) சரி,லைட்டா மாத்திக்கிறேன்.
//
மாற்றியதற்கு நன்றி.
முன்னாள் நண்பர்கள் என்று குறிப்பிட்டது எனக்குத்தான். உங்களுக்கு அல்ல.
அந்த நேரத்தில் ஒருவர் என்னிடம் "இதுல இறங்கிட்டா நான் அறிஞ்சவன், தெரிஞ்சவன், நண்பனெல்லாம் பாக்கமாட்டேன்" என்று எனக்கு தனிப்பட்ட எச்சரிக்கை கொடுத்துவிட்டுதான் என்மீது கனைகளைத் தொடுத்தார்.
மற்றொரு விளம்பர பிரியர் சுய விளம்பரத்துகாக என்னைத் தூற்றினார். அவதூறு ஆறுமுகம் பற்றிச் சொல்லவே வேண்டாம். இவருடைய அவதூறினால் வசந்தம் ரவி என்ற பெயரில் எழுதிய ஒருபதிவர் (அவர் இன்னும் வேறொரு பெயரில் எழுதுவதாக நண்பர் ஒருவர் சொன்னார்) பதிவை மூடிவிட்டார். கவிதா திரும்ப எழுத வந்திருக்காங்க. யார் மீது வேண்டுமானாலும் அவதூறு சொல்லும் உரிமையை பதிவர்கள் இவருக்கு கொடுத்து இருப்பதால், அவதூறு ஆறுமுகம் பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை.
திரு.கோவி கண்ணன் அவர்களை பிரித்து மேய்ந்திருக்கும் பதிவு.
ReplyDeleteகோவி கண்ணன்:பிளாக் ஓ கிராபி(கோவி கண்ணன்:வலைப்பூ ஓ சரியுதே)க்கு ஓர் "ஓ" போட்டுக் கொள்கிறேன்.
// ஒரு versatility இல்லாம பதிவுகள் போறதாதான் எனக்கு இன்னும் தோணுது. //
ReplyDeleteகோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்கும் பெரிய இயக்குனர் படங்களே மக்கள் ரசனை முன் ஊற்றிக்கொள்கிறது. நாமெல்லாம் சாரி நானெல்லாம் கிடைக்கிற கேப்பை பயன்படுத்திக் கொள்ள எழுதுகிறேன். அனைத்தும் தரமானது கருத்து செறிவுடன் எழுதவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு எழுத்து என்னுடைய வாழ்க்கையை தீர்மாணிப்பாதாக அமையவில்லை என்பதும் காரணம் தான், அதை நான் விரும்பவும் இல்லை. நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.
எழுத்தினால் கிடைத்த நன்மையாக நான் கருதுவது நல்ல நண்பர்கள், சிலர் அண்ணன் என்று அன்புடன் அழைக்கிறார்கள். பதிவுகளை எழுதி குவிக்காவிட்டால் இவ்வளவு பேரின் அறிமுகம் கிடைத்திருக்குமா என்பது ஐயமே. அந்த வகையில் எனது பதிவுகளை படித்து பாராட்டிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ள்ளேன்.
இந்த இடுகை பாசிட்டீவாக இருப்பதால் இதுபற்றி என்ன கருத்து சொல்வது என்று தெரியவில்லை. ஓரளவு சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறேன் என்பது அல்ல, ஆனால் ஒருவரையும் எதிரியாக நினைப்பது இல்லை. எழுத்துச் சிந்தனைகளும் ஒருவரது தனிப்பட்ட பழக்கவழக்கமும் ஒன்றல்ல என்றே நினைக்கிறேன். கதையில் கொலையோ, பாலியல் பலாத்காரமோ வைத்து எழுதுவர்களையும், நீலப்படம் பார்பவர்களையும் வக்கிரமானாவர்கள் என்று சொல்ல முடியாது இல்லையா ? ஒருவருடைய கொள்கைகளையும் அவரது தனிப்பட்ட குணங்களையும் ஒன்றாக நினைப்பது இல்லை. எல்லோரும் அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள். கூடவே நேரம், காலம் அவர்களை ஆட்டி வைக்கிறது என்கிற புரிந்துணர்வு இருக்கிறது.
சொல்ல மறந்த கேள்விப்பட்ட விசயம். கோவி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரஜினி ரசிகராமே. உண்மைங்களா கோவி?
ReplyDelete//இல்லேன்னும், சும்மானாச்சு படத்தை அனுப்பினேன்னாரும். அப்போதான் இந்த மனுசனோட குசும்பு தெரிஞ்சுதுங்க.//
ReplyDeleteபாத்துகுங்களேன்...
///ரெண்டு பேரும் இப்போ டேப்பரா நம்மளை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க///
ReplyDeleteடேப்பரான்னா என்ன அர்த்தம்?
'முகத்திலிருந்து முழங்கால் வரை'?
//ILA said...
ReplyDeleteசொல்ல மறந்த கேள்விப்பட்ட விசயம். கோவி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரஜினி ரசிகராமே. உண்மைங்களா கோவி?
//
அது என்னுடைய பதிவுலகம் சாரா நண்பர்கள் அறிந்த தகவல்.
ரஜினி படம் எப்போதும் பிடிக்கும். ரஜினியின் தெளிவற்ற பேச்சுகள் ஒரு 5 ஆண்டுகளாகவே பிடிக்காமல் போச்சு. வெறும் நடிகனாகவே மட்டும் இருந்தால் நான் ரஜினி எனக்கு பிடிக்கும்.
//டேப்பரான்னா என்ன அர்த்தம்? //
ReplyDeleteஅதெல்லாம் டேப்பராதான் இருக்கும். அஜக்குன்னா அஜக்குதான்,குமுக்குன்னா குமுக்குதான்’ங்கிற மாதிரி. எங்கூரு பாசைங்க மோகன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபக்கா :)
ReplyDeleteகோவி.கண்ணன் பதிவு லிங்க் 1 & 4 ஒரே பதிவுக்குப் போகுது...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇளா,
ReplyDeleteஇங்கே எனக்கு விழுந்திருக்கிற 'ரொம்ப நல்லவர்' பின்னூட்டங்களைப் பார்த்து சிங்கைப் பதிவர்கள்,
"அண்ணே, நீங்க ரொம்ப நல்லவராமே, 100, 200 இல்லாட்டி 500 வெள்ளி கைமாத்தாக குடுங்கண்ணே" ன்னு கேட்கிறாங்க.
வம்புல மாட்டிவிட்டுட்டிங்களே.
:))))))
பல விசயங்கள்/உண்மைகள் திரிக்கப்பட்டிருக்குன்னு நண்பர்கள் கோவப்படுறாங்க. மக்களே, எனக்குத் தெரிஞ்சவரைக்கும்தான் எழுதமுடியும். பின்னூட்டப்பொட்டி தொறந்துதான் இருக்கு,உங்களுக்குத் தெரிஞ்சதை எழுதிட்டுப்போங்க. என் மேல கோவப்படாதீங்க, அப்படியே பட்டாலும், உங்களுக்குள்ள இருக்கிற மேட்டர் எனக்கு எப்படித் தெரியும்? போலிய அவர் ஆதாரிச்சாரா, இல்லைய்யான்னு நான் "ரொம்ப நல்லவங்க" கேட்டகரியில இருந்துக்கிறேன்.
ReplyDelete//பொறம்போக்கு கும்பலில் //
ReplyDeleteநீங்க சொல்ற பொறம்போக்கு கும்பல்னாலாதான் இன்னிக்கு நான் எல்லாம் கொஞ்சமாச்சும் சுதந்திரமா பொட்டிய தொறந்து வெச்சிருக்கேங்கிறேன். அவ்வளவு நன்றி எல்லாம் நான் மறக்கலைங்க குழலி, எனக்கு எட்டிய விசயம் இவ்ளோதான். வேற ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete/*//அங்கே ஆரம்பிச்சது பழக்கம். நிற்க!//
ReplyDeleteநின்னுட்டேன்!
அமர்க-ன்னு சொல்லவேயில்ல! எம்புட்டு நேரம்யா நிக்குறது? :)
இளா, "நிற்க"-ன்னு போட்டு எழுதறதை எல்லாம் பாத்தா அவர் கொஞ்சம் கொஞ்சமா "மூத்த" பதிவர் ஆயிட்டு வராரோ?
*/
மூத்த பழுத்த பதிவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது
//நிற்க//
ReplyDeleteSV Sekar நாடகம் பார்த்து வந்ததுதான் 'நிற்க', அப்போ சேகரரென்ன மூத்தப் பதிவரா??
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎன்ன கொடுமைடா இது? ஒருத்தனுக்கு தெரிஞ்சதை மட்டும் எழுதினாத் தப்பா??
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete(எல்லாருக்குமே..பதிவ சாராதவங்களுக்கும்)
ReplyDeleteஐயா, மக்களே. கொஞ்சம் பார்த்து சூதானமா பேசுங்கய்யா..
இளா..
ReplyDeleteசந்தோஷமாய்யா இப்போ?
அடுத்தது லக்கியா...
ம்ம்.. நடக்கட்டும்..நடக்கட்டும்...
இளா....
ReplyDeleteஇந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...
:((
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்லாயில்லை!
ReplyDeleteநல்ல வரலாற்றைத் திரும்பத் திரும்ப எழுதலாம், படிக்கலாம். நம்மை மெருகூட்டும்!
ReplyDeleteஆனால்...! இதுபோன்ற மறக்கப்பட வேண்டிய விடயங்கள்...! பதிவர்களுக்குள் குழப்பத்தையும் பகைமையையும் ஏற்படுத்திவிடக் கூடும். நன்றி!
போன பதிவுல ரவிய பத்தி எழுதும் போது எனக்கு புடிச்ச புடிக்காத விசயத்தையும் எழுதி இருந்தேன். அதுல ரவியின் அதிருப்தி தெரிஞ்சது. அதனாலயே கோவியபத்தி தப்பாச் சொல்லலை. ஆனாலும் போலிய சம்பந்தப்படுத்திவந்த பின்னூட்டங்களை தவிர்த்த வேண்டியது என்னுடைய பொறுப்பு. மட்டுறத்தல் இல்லாததாலயும், நான் புதரக நேரத்துல காலையில எழுந்திருச்சு பார்த்தா பதிலும் வந்திருச்சு,அதுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கிறேன் மக்களே. நடுநிலைவியாதியா இருக்கிறத விட்டுறலாமோன்னு தோணுது. நேர்ல ஒரு மாதிரி பொடனி பக்கம் வேற மாதிரியும் மக்கள் இங்கேயும் இருக்காங்க.
ReplyDelete//அதனாலயே கோவியபத்தி தப்பாச் சொல்லலை. //
ReplyDeleteவேறு எதாவது தப்பாக சொல்லி இருந்தாலும் அதை விமர்சனமாக நான் கருதி இருப்பேன். "மூர்த்தி மற்றும் மும்மூர்த்திகள்" எனக்கு அருள்பாலித்ததை நான் மறந்து பலமாதங்கள் ஆகிவிட்டன. அவற்றை நீங்கள் பதிவில் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கலாம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமூட நம்பிக்கைகளை எதிர்க்கிற நாத்திகத்தை தவறா புரிஞ்சிகிட்டவங்களுக்கு கோவி சரியான சவுக்கடி கொடுப்பார்
ReplyDeleteகோவிஜியோட பயோகிராபியை(அவர் மத்தவங்களுக்கு கொடுக்குரது) உங்களது நல்லா டீப்பா இருக்குது
ReplyDeleteநான் தான் 50 தான்னு தெரியனும் எப்போ வருவிங்க
ReplyDelete//இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...//
ReplyDeleteஇல்லீங்க, சில பின்னூட்டங்களை தவிர்த்திருக்கலாம். நான் சொல்லாத விஷயங்களை அவுங்க அவுங்க பதிவுல விருப்பம் போல சொல்லி இருக்கலாம். அதான் பிரச்சினையே. அதே மாதிரி சிலர் ட்விட்டுகளையும் தவிர்த்திருக்கலாம். ஒரு பக்கவியாதிகளும் இருக்காங்கன்னு இப்போதான் தெரியுது.
அசத்தல்.. நிஜமா முழுசா படிச்சேன்.. நல்லா எழுதி இருக்கிங்க.. போலி விஷயம்னு சொன்னதான அந்த லின்க்ஸ் மட்டும் போக விருப்பம் இல்லை.. நல்லவை மட்டும் தெரிஞ்சிப்போம்.. :)
ReplyDeleteChella, thairiyam ellaam ithula venaanga. BLOGs thairiyam waste, ithu oru prechanaiya vara vendamnu sonnathalathaan comments ellaathaiyum delete panninein.
ReplyDelete// நல்லவை மட்டும் தெரிஞ்சிப்போம்.. //
I agree with Sanjai.