Tuesday, December 23, 2008

இஞ்சினியர் மாமா

ஏழாவது படிக்கும் போது, எதிர்காலத்துல பொறியியல் படிக்கிறதுதான் என்னோட டார்கெட். அந்தச் சமயத்துல எங்க ஊர்ல பொறியியல் படிச்சவங்க 3 இல்லைன்னா 4 பேர்தான் இருப்பாங்க. மீதி எல்லாம் Diploma இல்லாட்டி Bsc/Msc தாங்க. பொறியியல் படிச்சவங்கள்ல மூத்தவரு எங்க இஞ்சினியர் மாமா. அரசு வேலை, கார், புல்லட்ன்னு இருக்கிறவரைப் பார்த்தா எல்லாருக்கும் அப்படி இருக்கனும்னுதான் தோணும். அப்படியே எனக்கு தோணிப்போச்சு.

அவுங்க வீட்டுல நாங்க ரெண்டு வருசம் வாடகைக்கு குடியிருந்தோம். அதாவது 9,10 படிக்கிற நேரத்துல. அந்த காலகட்டம் எல்லாருக்குமே வாழ்க்கையின் படிக்கட்டு. அந்தச் சமயத்துல அவுங்க வீட்டில இருந்ததுதான் என்னோட மொத படிக்கட்டா ஆனது. மாமாவும் அத்தையும் படின்னு சொல்றது ஒன்னும் புதிசா இல்லை. ஏன்னா எல்லாரும் சொல்றதுதானே. ஆனா, அந்த ரெண்டு வருசத்துல அவுங்க சொல்லிக்குடுத்தது வாழ்க்கையின் பாடத்தைப் பத்தி. மரியாதை, குடும்ப சூழல்க்கு தகுந்தபடி வாழ்றது, வாழ்க்கைய எப்படி அமைச்சிக்கிறது இதெல்லாம்தான். எங்க வீட்டுல இதை எல்லாம் சொல்லி இருந்தா கண்டுக்காம விட்டிருப்பேன். ஆனா அவுங்க ரெண்டு பேரும் சொன்ன விதம், பசுமரத்தாணியாட்டம் நின்னுருச்சு.

வாழ்கையின் சக்கரத்துல எல்லாரும் சிதறித்தான் போனோம். மாமா வீட்டுக்கும் எங்களுக்குமான தொடர்புக்கான தொலைவு அதிகமாச்சு. ஆனாலும் மாமா பையன் கூட கடைசி வரைக்கும் அதே பாசம் இருந்துச்சு, மூத்தவர்னாலும் ஒரே செட்டாகிட்டோம். மாமாவுக்கு செல்வாக்கு ரொம்ப அதிகம், பணமும் கைநிறைய, அதனால மாமா பையன் தொழில்ல இறங்கினது ஒன்னும் பெருசாத் தெரியல.

போன மாசம் ஒரு நாள் அம்மாகிட்ட ஒரு போன், "இஞ்சினியர் மாமா இறந்துட்டாருடா, மாரடைப்பாம்". அதுக்குமேல எனக்கு பேச ஒன்னுமேஇல்லை. சிலரோட இழப்புக்கு யார் தோள் மேலயாவது சாய்ஞ்சு அழுனும் தோணும், சிலரோடதுக்கு கதறி அழனும்னு தோணும். ஆனா, மாமாவோட இழப்புக்கு எனக்கும் எதுவுமே பேசத்தோணலை. ஒரு நாள் முழுக்க பிரமை பிடிச்ச மாதிரியே அலுவலகத்துல இருந்தேன். எந்த வேலையும் பார்க்கலை. ஏன், அத்தை வீட்டுக்கு பேசனும்னு கூடத் தோணலை. ஒரு வாரம் இப்படியே விரக்தியாவே கடந்தது.

ஐயோ, அத்தையின் அந்த கம்பீரம் தொலைச்ச முகத்தையும், தகப்பனை இழந்த மாமா பையனின் சோக முகத்தையும் எப்படி பார்ப்பேன்? அவுங்க வீட்டுக்கு போனா "மாப்ளே"ன்னு சொல்ற சிம்மாசனக் குரல், இதெல்லாம் இனிமே கிடைக்குமா?.. என்ன செய்ய முடியும்? மாமவோட கால புடிச்சி அழ வேண்டிய நேரத்துல எங்கோ ஒரு தேசத்துல இருந்துகிட்டு இப்படி வேதனைப் படுறது எவ்வளவு பெரிய சோகம், சாபம்? இந்த மாதிரி சமயங்கள்லதான் அயல்நாட்டு வாழ்க்கை மேல ஒரு வெறுப்பு வருது.

மாமாவின் ஞாபகங்கள் நிறைய நினைச்சுப் பார்க்கிறேன், அவர் சொன்ன விசயங்கள், வாழ்க்கையில அந்த காலத்துல படிச்சு முன்னேறுன வைராக்கியம், சாதாரண நிலைமையில இருந்து இன்னிக்கு ஊருல ஒரு பெரிய நிலைமைக்கு வர காரணமா இருந்த அவரோட உழைப்பு, எதையுமே சாதாரணமா நினைக்கிற குணம் இதெல்லாம் யாருக்கு வரும். எங்களை எல்லாம் விட்டு போக வேண்டிய வயசா இது? இந்தப் பதிவு போடும் போது மட்டுமே ரெண்டு முறை அழுதிருக்கேன். சில பிரிவுகளை மனசு ஏத்துக்காது, மறக்காது. அது மாதிரிதான் மாமாவின் பிரிவும். உங்க ஆத்மா சாந்தியடைட்டும் மாமா!

23 comments:

  1. ரெம்ப அழுத்தமான பதிவு, உங்க மாமா ஆத்மா சாந்தியடைய நானும் வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. உங்க மாமா ஆத்மா சாந்தியடைட்டும்

    ReplyDelete
  3. இப்படி நினைந்து உருகும் மனம் தான் கடவுள்.

    ReplyDelete
  4. உங்க மாமா ஆத்மா சாந்தியடைய நானும் வேண்டுகிறேன்

    ReplyDelete
  5. உங்க மாமா ஆத்மா சாந்தியடைட்டும்.

    ReplyDelete
  6. அன்புள்ள இளா,
    உங்கள் வருத்தத்தில் பங்கேற்கிறோம்.

    ReplyDelete
  7. //சில பிரிவுகளை மனசு ஏத்துக்காது, மறக்காது//

    இழப்பின் வலி புரிகிறது.

    மாமாவின் ஆத்ம சாந்திக்கு வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  8. இதுபோல் இழப்புகளை ஈடுகட்டுவது ரொம்ப கடினம், இளா :(

    வருந்துகிறேன் :(

    அவரைப்பற்றி ரொம்ப நினைத்து, அவரைப்பற்றி பேசிப்பேசிதான் அவர் இழப்பை மறக்க முடியும் அல்லது ஏற்றுக்கொள்ள முடியும்.

    ReplyDelete
  9. வெளிநாட்டில் வேலைபார்பதான் சோகத்தின் நேகிழ்சி

    ReplyDelete
  10. உங்கள் வருத்தத்தில் பங்கேற்கிறோம்.

    ReplyDelete
  11. அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. உங்க மாமா ஆத்மா சாந்தியடைய நானும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. நல்ல நினைவுகூரல்..அஞ்சலிகள்!

    ReplyDelete
  14. இளா, உங்களின் இழப்பிற்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாகப் புரிகிறது.

    ReplyDelete
  15. //அவர் சொன்ன விசயங்கள், வாழ்க்கையில அந்த காலத்துல படிச்சு முன்னேறுன வைராக்கியம், சாதாரண நிலைமையில இருந்து இன்னிக்கு ஊருல ஒரு பெரிய நிலைமைக்கு வர காரணமா இருந்த அவரோட உழைப்பு, எதையுமே சாதாரணமா நினைக்கிற குணம் இதெல்லாம் யாருக்கு வரும்.//

    இந்த மாதிரி நம்மை மற்றவர் சொல்லும்படி வாழ்வதுதான் ,அவருக்கு செய்யும் சரியான அஞ்சலியாக இருக்கும்

    ReplyDelete
  16. ஆழ்ந்த அனுதாபங்கள் இளா

    ReplyDelete
  17. TVRK-ஐயா, பதிவுக்கு ஒவ்வாத பின்னூட்டங்கிறதால நீக்கி இருக்கேன். மன்னிக்கவும், ப்ளீஸ்

    ReplyDelete
  18. :((

    //எங்கோ ஒரு தேசத்துல இருந்துகிட்டு இப்படி வேதனைப் படுறது எவ்வளவு பெரிய சோகம், சாபம்? இந்த மாதிரி சமயங்கள்லதான் அயல்நாட்டு வாழ்க்கை மேல ஒரு வெறுப்பு வருது.//

    நேற்று இரவு போனின்ல் வந்த நண்பனின் இறப்பு செய்தியை கேட்டு எனக்கு தோன்றிய அதே வார்த்தைகள், இரவு முழுவதும் ஒரு குற்ற உணர்ச்சி மேலோங்கி இருந்தது.

    ReplyDelete
  19. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை. வருந்துகிறேன் Friend.

    ReplyDelete
  20. நீங்கள் எழுதியதை படித்த பொழுது மனசு வலித்தது உண்மையாக

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)