Tuesday, October 16, 2007

கற்றது கணக்கு- Bsc(Maths)

"அப்பா, எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்தான்பா படிக்கனும். அதுதான்பா என்னோட விருப்பமே. வாசவியோ, ஈரோடு ஆர்ட்ஸோ சேர்த்து விட்டுருங்கப்பா."

"ராஜா. கணக்கு படிச்சா உடனடியா அரசு வேலை கிடைக்கும். UPSC, TNPSC எல்லாம் எழுத வசதியா இருக்கும். நான் சொல்றேன் நீ, கோயமுத்தூர்ல தான் படிக்கிறே, அதுவும் ஹாஸ்டல்லதான் BSC Maths படிக்கப்போறே. சொல்லிட்டேன். வேற எதுவும் பேச வேண்டாம்"

அப்பா பேச்சு தட்ட முடியாமல் கோவையில் உள்ள பிரபல கலைக் கல்லூரியில் கணக்கு படிக்க ஆரம்பிச்சான் ராஜா. படிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல், அவனுக்கு விருப்பமான விஷயங்களில் கவனத்தைத் திருப்பினான். வேலையத்த வேளையில செய்யுற ஓவியமும், ஷட்டில் பேட்மிண்டனும் அவனுக்கு விருப்பமா இருந்து இருக்கு. அந்தக் கல்லூரியில் இரண்டுக்கும் சொற்பமான மக்களே இருந்தார்கள், இதையெல்லாம் பண்ணினா சோத்துக்கு என்ன பண்றதுன்னு எவனும் சீண்டாத ஏரியா இது. அப்படியே ஓவிய கமிட்டி சேர்மன், பேட்மிண்டனுல பல்கலைகழக்த்துல ஒரு நல்ல இடமுன்னு வாங்கி காலேஜுக்கு போவாம ஓபி அடிச்சுகிட்டே இருந்துட்டான்.

இப்படியே 2 வருஷத்தையும் ஓட்டிட்டான். அதே சமயம் ஏனோ தானோன்னு 40% வாங்கி எல்லா பாடத்திலேயும் பாஸும் ஆகிட்டானுங்க ராஜா. ஆனா இந்தச் சனி இருக்கு பாருங்க, அது மனுசன் கழுத்துல கட்டி நுனிக்கயித்த கையில வெச்சுக்கும், "மவனே ஓடுடா. கடேசியா உனக்கு வெக்கிறேன்"னு வெக்கும் ஆப்பு.

அப்படித்தான் இவனுக்கு கடேசி வருஷம் 5th Sem, 6th Sem எல்லாத்துலேயும் கப்பு. வேற வழியே இல்லே. ஊருக்கு டிகிரி வாங்காம வந்தா மானம் போயிருமேன்னு "என்ன கருமத்தையோ படி, ஊரு பக்கம் மட்டும் டிகிரி வாங்காம வந்துராத"ன்னு இருக்கிற நகையெல்லாத்தையும் அடமானம் வெச்சு 20ஆயிரத்தை ராஜா கையில குடுத்துட்டாங்க.

என்ன பண்ணுவாங்க அவுங்க மட்டும். இவனும் ஏதாவது டிகிரி வாங்கி குரூப் பரீட்சை எழுதி முன்னேறிடுவான்னு கற்பனை அவுங்களுக்கு. "ஆசை இருக்காம் தாசில்தார் ஆவ, யோகம் இருக்காம் கழுதை மேய்க்க".

ராஜாவோட கூட்டாளி ஒன்னு சொன்னான் "மாப்ளே! ஒரு கோர்ஸ் இருக்காடா. இண்டெர்நெட்ல பரீட்சையாம். உடனே ரிசல்டாம். பாஸானா உடனே வேலையாம்டா. "

"என்னடா ஒளற்ர, எப்படிடா உடனே திருத்தி குடுப்பாங்க?"
"இல்லே மாப்ளே. வெட்டியாத்தானே இருக்கோம். வா, ஆப்டெக் வரைக்கும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்"னான்.

காந்திபுரம் பேர்ந்து நிலையத்துக்கு எதிர்த்தாப்ல இருக்கிற RRT(RajaRajeshwari Towers) ல 5 வது மாடியில இருக்கு ஆப்டெக். செமத்தியான ஃபிகருங்க,. ஜொள்ளிக்கிட்டே கவுன்சலரை பார்க்க போனான் ராஜா. கோர்ஸ் என்னான்னே தெரியாம "Internet Exam, result "ன்னு உளற ஆரம்பிச்சான். இவன் என்ன சொல்ல வரான்னு அவங்களுக்கு சுத்தமா புரியலே. அந்த கவுன்சலரு நல்ல ஃபிகரு. இவன் சொல்றதை எல்லாம் அமைதியா கேட்டுகிட்டு ஒரு Broucherஐ எடுத்து முன்னாடி வெச்சு ஆரம்பிச்சது, அதனோட உளர்றலை. இப்போ இவனுக்கு ஒன்னும் புரியல. அப்படியே அவனை கூட்டிக்கிட்டு போயி லேப், கிளாஸ் ரூம் எல்லாம் காட்டுச்சு. அடடா, அடடா, எத்தனை பொண்ணுங்க, எப்படி பசங்களோட சோடி போட்டு படிக்குதுங்க., நேர்த்தியா டிரஸு, ரூமு, பிகரு, "ராஜா, கலக்குறே"ன்னு மனசுக்குள்ள 100 வயலினை வாசிச்சுகிட்டே சொல்லிட்டு போனாங்க தேவதைங்க.

ஆனாலும் "Internet Exam, result " அப்படியெல்லாம் இந்த ஃபிகரு சொல்லவே இல்லியே, மறுபடியும் இவன் உளரலை ஆரம்பிச்சான். அப்போதான் அந்த ஃபிகருக்கு புரியவே ஆரம்பிச்சது. "இவனுக்கு Softwareக்கும், Hardwareக்குமே வித்தியாசம் தெரியல. எவனோ சொன்னான்னு நம்ம தாலிய அறுக்கிறான்" அப்படின்னு மனசுக்குள்ள நினனச்சிக்கிட்டு. "ஓஹ், நீங்க எதிர்த்தா மாதிரி இருக்கிற கவுன்சிலர்கிட்டே பேசியிருக்கனும் ராஜா. வாங்க அந்த டிபார்ண்மெண்ட்க்கு கூட்டிட்டு போறேன்னு எதிர்த்தா மாதிரி இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே "தூ, இதெல்லாம் ஒரு இடமா? எங்கே பார்த்தாலும் ஓட்ட ஒடசல் கம்ப்யூட்டருங்க. ஒரு பொட்டிக்கும் டப்பா இல்லே. எல்லாம் தொறந்தே கிடக்கு. அதுக்கு மேல ஒரு ஃபிகர் கூட இல்லே. அட ஃபிகர் இல்லாட்டி விடுங்கப்பா. ஒரு பொண்ணுங்க கூட இல்லே" என்ன தலை விதிடா. சரி, இங்கே படிக்க அங்கே சைட் அடிக்கன்னு ஆரம்பிச்சான் அந்த கோர்ஸை.

3 மாசம் முடிஞ்சவுடனே placement. சம்பளம் அதிகமில்லை ஆனாலும் நாய் பொழப்பா இருந்துச்சு. ஆனாலும் ஒரு சந்தோசம், ஒரு software மக்களுக்கு வேலை கிடைக்கிலே. இவனுக்கு சோத்துக்கு பஞ்சமில்லாம ஆச்சு. அடிச்சு புடிச்சு 8 வருஷத்துல டாக்டர் படிப்பை விட பெருசா டிகிரி முடிச்சான். அப்படியே படிப்படியா Network Engineer, System Admin அப்படின்னு graphல ஒரே ஏறுமுகம்தான். Bsc Maths படிச்சுட்டு Engineerன்னு விஸிட்டிங்க கார்டு வாங்கின ஒரே ஆள் இந்த ராஜா. அவுங்க அம்மாவுக்கு பெரிய சந்தோசம் வேற. பின்னே மவன் கணக்கு படிச்சாலும் ஒரு பெரிய இஞ்சினியர் ஆகிட்டான்ல.

Sep-11 கூட இவன் வேலைக்கு ஒரு தொந்தரவும் பண்ணல. பிறகாலத்தில் பெரிய புராஜக்ட் மேனஜரா ஆவனும்னு பிலாகுல பதிவு எல்லாம் போடுறான்னா பார்த்துக்குங்களேன். அதானால Bsc Maths படிச்சா இஞ்சினியர் ஆவலாம். அதுவும் கம்பியூட்டர் இஞ்சினியரு.

37 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......... சேம் பின்ச்.....

    எனக்கெல்லாம் 8 அரியர்ஸ்.... அதுவும் அந்த Real & Complex Analysis'ன்னு நம்மளை தாலியறுத்த சனியனுக கடைசி வரைக்கும் கஷ்டப்படுத்திருச்சுக.... :(

    அப்புறம் அந்த Modern Algebra'ன்னு ஒரு இம்சை.... :((

    அந்தா இந்தா'ன்னு அதையும் படிச்சி முடிச்சி ஆறு வருசமா நாங்கெல்லும் கம்ப்யூட்டர் இஞ்சினியர்'ஆ இருக்கோம்'லே.... :))

    ReplyDelete
  2. அபி அப்பா கூட சேராதேன்னு சொன்னேன் கேட்டியா.. என்ன மொக்கை இது?

    ReplyDelete
  3. தப்பா புரிஞ்சிக்கிறதே உங்க வேலையாய் போயிருச்சு. கணக்கு 8 வருஷம் படிச்சாலும் கம்பியூட்டர் உத்தியோகம் நல்ல சம்பளமும், கெளரவத்தையும் தருதே, தமிழ் படிச்சா மட்டும் ஏன் இவ்வளவு மோசம் ஒரு கேள்வி கேட்ட விஷயம் உங்களுக்கு புரியலைங்களா கொத்ஸ்.

    அபிஅப்பா கூட சேர மாட்டேன்.

    ReplyDelete
  4. கற்றது தமிழ் அப்படின்னு சொல்லும் பொழுது அது வேலைக்காவறதில்லை என்பதை நீர் சொல்ல நாந்தான் அகப்பட்டேனாக்கும். நல்லா இருங்கவே!!

    //அபிஅப்பா கூட சேர மாட்டேன்.//

    இது!

    ReplyDelete
  5. :)

    புரியுது இளா.

    தமிழ் படிச்சா தமிழ் வாத்தியாராகலாம். எழுத்தாளர் ஆகலாம். மேடைப்பேச்சாளர் ஆகலாம். ஆன்மீகப் பேச்சாளர் ஆகலாம். ஆனா யாரும் கூப்புட்டு வேலை குடுக்க மாட்டாங்க.

    ஒரு மொழியை மட்டும் படிச்சா என்ன வேலை செய்ய முடியும்? மொழி பெயர்ப்பாளர் ஆகலாம். ஆனா அதுக்கும் ரெண்டு மொழி தெரிஞ்சிருக்கனும்.

    மொதல்ல தமிழைப் படிக்கிறதுங்குறது என்னது? தமிழ்ல பட்டம் வாங்குறதா? அதெல்லாம் வாங்காமலேயே வலைப்பூக்கள்ள செய்யுள்களப் பல பேரு பிரிச்சி மேயுறாங்களே...அவங்களை என்ன செய்றது?

    தமிழ்ங்குறது நம்ம மொழிய்யா...அத எல்லாரும் படிக்கனும். கண்டிப்பா படிக்கனும். அதோட வாழ்றதுக்கும் வேற ஒன்னையும் கூடப் படிக்கனும். இது ரெண்டுல ஒன்னு மட்டுந்தான் படிப்பேன்னு சொல்றதுதான் முட்டாள்தனம். தமிழை ஆழமாப் படிச்சித் தெரிஞ்சவரு சொன்னது என்ன தெரியுமா? "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள். கவலை உனக்கிலை ஒத்துக்கொள்"

    அத விட்டுட்டு..தமிழ் படிச்சேன் வேலை இல்லைன்னு சொல்லக் கூடாது. வேலைக்கு இல்லைன்னாலும் தமிழ் படிக்கனும். வேலைக்குத் தேவைன்னா வேற ஒன்னையும் படிக்கனும்.

    உங்களுடைய உழைப்பிற்கும் உயர்விற்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. என் நண்பர் ஒருவர் இளம் அறிவியல் - உயிரியல், முது கலை - சமூகப்பணி படித்து வங்கியில் எழுத்தராகக் சேர்ந்து மாலை நேரக்கல்லூரியில் சட்டம் முடித்து அதிகாரியாக சில உயர்பதவிகள் பெற்று இப்போது தனியார் கணிணித் துறையில் மென்பொருள் பிரிவில் மேலாண்மைப் பதவி வகிக்கிறார். படிப்பு வேறு, வாழ்க்கை வேறு என்று எடுத்துக்கொள்ளலாமா ?

    ReplyDelete
  7. கோபி,
    உங்க பின்னூட்டம் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதால் delete செய்துவிட்டேன்.

    ReplyDelete
  8. இளா, எங்க அப்பா கதை தலைகீழ், அப்பா மெட்ராஸ் லா காலேஜ்ல லா படிச்சுட்டு வெல்ஃபேர் ஆபிஸரா பரமக்குடில இருந்தாரு. மில் ஓனர் தொல்லை தாங்க முடியாம தமிழ் படிச்சு தமிழ் வாத்தியாரா ஆனாரு. இது எப்படி இருக்கு

    ReplyDelete
  9. Chemistry (1-cup) then tried NIIT (Gandhipuram) same like you. Friend studied (actually Paid 40,000, so they kept him for while) and after that worked on same NIIT as faculty. He asked me to meet those girls....Their communication (loose motion for me) and asked 40,000 to me. Either I have to ask my father to sell my house or VRS. I didnot do both.

    All no success made me a good record in computer courses. Lot of my friends helped me. Got job on a manufacturing company as IT officer (Indian Goundamani Style) in CBE.

    Now I own a company in USA.

    ReplyDelete
  10. அட . இது நம்ம Department.

    எப்படியோ ஒரு வழியா டிகிரி வாங்கியாச்சு. இந்த கணக்கு subject எல்லாமே Dry subject. அதுவும் Real Analysis and Complex Analysis ஒன்னும் புரியாது. (படிச்சாலும் புரியாதுங்குறது வேற விஷயம்). :)

    //3 மாசம் முடிஞ்சவுடனே placement. சம்பளம் அதிகமில்லை ஆனாலும் நாய் பொழப்பா இருந்துச்சு//

    இது. ஆனால் இது யாருக்கும் தெரியமாட்னெகுது.

    ReplyDelete
  11. வணக்கம் இளா..
    இந்த பதிவோட லிங்க்கை என்னோட
    பதிவுல உபயோகபடுத்திருக்கேன்..
    ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்..
    நன்றி!

    ReplyDelete
  12. இராம் உனக்கு எட்டு அரியர்.

    நான் டிஸ்க்ரீட் மேத்ஸஸ எட்டுமுறை எழுதிய சாதனையாளன்....

    ReplyDelete
  13. //தமிழ் படிச்சா தமிழ் வாத்தியாராகலாம். எழுத்தாளர் ஆகலாம். மேடைப்பேச்சாளர் ஆகலாம். ஆன்மீகப் பேச்சாளர் ஆகலாம். ஆனா யாரும் கூப்புட்டு வேலை குடுக்க மாட்டாங்க.//
    ஜி.ரா, அந்த வகையில பார்த்தா தமிழ் (பட்டப்படிப்பு) படிக்கவே வேணாங்கிறீங்க. அப்போ அந்த படிப்பை யெல்லாம் பல்கலைக் கழக்த்துல இருந்து எடுத்துடனுமா?

    ReplyDelete
  14. தமிழ் வருஷம் ஒரு நூறு பேருக்கு மட்டும்தான் சோறு போடமுடியும். மத்தவங்க வேலைக்குத் தகுந்ததைப் படிக்கறதில ஒரு தப்பும் இருக்கறதாத் தெரியல. கணக்காயிருந்தாலும் சரி, நட் போல்ட் படிப்பாயிருந்தாலும் சரி :-)

    ReplyDelete
  15. // ILA(a)இளா said...
    //தமிழ் படிச்சா தமிழ் வாத்தியாராகலாம். எழுத்தாளர் ஆகலாம். மேடைப்பேச்சாளர் ஆகலாம். ஆன்மீகப் பேச்சாளர் ஆகலாம். ஆனா யாரும் கூப்புட்டு வேலை குடுக்க மாட்டாங்க.//
    ஜி.ரா, அந்த வகையில பார்த்தா தமிழ் (பட்டப்படிப்பு) படிக்கவே வேணாங்கிறீங்க. அப்போ அந்த படிப்பை யெல்லாம் பல்கலைக் கழக்த்துல இருந்து எடுத்துடனுமா? //

    அப்படியில்லை இளா. அவைகளும் இருக்கட்டும். ஆனால் தமிழை மட்டும் படிப்பேன்னு சொல்றது சரியில்லைன்னு தோணுது. இப்பக் கம்ப்யூட்டர் படிக்கிறாங்கள்ள.....எல்லாரும் கம்ப்யூட்டர் படிச்சா வேலை கெடைக்குமா? கெடைக்காதுல்ல. ஏன்னா...வேலைகளும் பலவிதம். தேவைகளும் பலவிதம்.

    ஆகையால பல தொழில்கள் இருக்கு. அதுல ஒன்னோ ரெண்டோ படிச்சிக்கலாம். அதுனாலதான் சொல்றேன்....அதுவுமில்லாம தமிழ் என்ன பிழைக்க உதவும் கருவியா? அதெல்லாம் அரசியல்வாதிகளுக்குதான்.

    ReplyDelete
  16. தமிழ் பட்டம் படிக்கவே வேணாம்னு சொல்றது ஏதோ நெருடலா இருக்குங்களே ஜி.ரா. அப்படியே படிச்சாலும் வேற வேலைக்காக விண்ணப்பிக்க இன்னொன்னும் படிக்கனும். அப்போ தமிழ் பட்டங்கள் படிக்கவே வேணாமே.

    //தமிழ் என்ன பிழைக்க உதவும் கருவியா? //
    உண்மைதான், ஆனால் தமிழ் சொல்லித்தருபவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைச்சாதானே நல்லது? இப்படியே போனால் ஒரு கட்டத்தில் தமிழை சொல்லித் தரதுக்கு ஆளே இருக்க மாட்டாங்களே? அப்போ மட்டும் தமிழுக்கு பிரச்சினை இல்லையா?

    ReplyDelete
  17. //உண்மைதான், ஆனால் தமிழ் சொல்லித்தருபவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைச்சாதானே நல்லது?// தமிழை திறமையா படிங்க. ஆராய்ச்சி செய்யுங்க.. வேணும்னா வெளிநாட்டு பல்கலைகழகத்துல தமிழ்துறையில கண்ணி படிச்சவன் மாதிரி 'நல்ல காசு'க்கு வேலைக்கு போங்க.. ச்சும்மா வீதிமுக்குல MS office படிச்சுட்டு நானும் கம்ப்யூட்டர் படிச்சேன் அவன் மட்டும் 50/60 ஆயிரம் வாங்கிறான், நான் இங்க DTPல ரெண்டாயிரத்துக்கு குப்பை கொட்டுறேன்னு புலம்புனா எப்படி.. :)

    காசு தான் வேணும்னா காசு குடுக்கறத படிங்க..
    தமிழ் மட்டுமா.. BA History / economics படிச்சவங்களுக்கும் கூட அதே நிலமை தான்.. அவுங்கள பூராவும் கூப்ப்புட்டு ப்ராஜக்ட் மேனஜரா ஆக்கறாங்க..
    அதுனால இளா.. நம்ம அடுத்த படம் 'வரலாறு MA, அல்லது கற்றது வரலாறு :) எப்படி..?? அப்புறம் அப்படியே கற்றது DCA, கற்றது ITI, கற்றது +2 வரிசையா எடுத்து தள்ளுவோம்.. எல்லாத்தலயும் ஹீரோ தாடிவச்சுகிட்டு வரிசையா கொலை செய்யறாரு.. அடுத்தவன் போட்டிருக்கிற க்ரோக்கடைல் ஜட்டிய தன்னோட ரோட்டுகடையில வாங்கின 'ஈகிள்' ஜட்டிக்கு exchange செய்ய சொல்லி அடிக்கறாரு.. எப்படி ஐடியா, ஈரோட்டு பக்கம் நிலத்துக்கு நல்ல விலையாம்.. குடுத்துட்டு ஒரு மஞ்சபையில கட்டி எடுத்துட்டு வாங்க.. தமிழ் சினிமாவையே கலக்கறோம் :)

    ReplyDelete
  18. @ ரவி!
    நீங்க எட்டு தடவை எழுதி முடிச்சுட்டிங்க... நாங்க இன்னும் தொடர்ந்துக்கிட்டு இருக்கோம் :)

    @ இளா

    B.Sc., Electronics படிச்சி கூட இன்சினியர் ஆகலாம்... ஆகி இருக்கோம்ல ;) அதுவும் சீனியர்... ;)

    @ ஜி.ரா...

    தமிழ் துறை விரும்பி எடுத்து படித்து நல்ல நிலையில் இருக்கும் ஆட்கள் அனேகம். ஐ.டி. தொழிலில் இருப்பவர்களை விட அதிகம் சம்பாத்தியம் கூட....

    விரும்பி படிப்பை நாம் தேர்ந்து எடுத்து விட்டு அடுத்த துறையில் உள்ளவனின் மேல் கோவம் கொள்வது எந்த வகையில் நியாயம் ஆகும்.

    ReplyDelete
  19. இப்ப இது சூப்பர்...

    நன்றி அண்ணாத்த.....

    எம்மாம் ஸ்பிடா இருக்கு இது... :)

    ReplyDelete
  20. //தப்பா புரிஞ்சிக்கிறதே உங்க வேலையாய் போயிருச்சு. கணக்கு 8 வருஷம் படிச்சாலும் கம்பியூட்டர் உத்தியோகம் நல்ல சம்பளமும், கெளரவத்தையும் தருதே, தமிழ் படிச்சா மட்டும் ஏன் இவ்வளவு மோசம் ஒரு கேள்வி கேட்ட விஷயம் உங்களுக்கு புரியலைங்களா கொத்ஸ். //

    அத சுழுவா சொல்லாம்... 2 பக்கம் இழுத்துல சொல்லுறீங்க.... :)

    ReplyDelete
  21. //அந்தா இந்தா'ன்னு அதையும் படிச்சி முடிச்சி ஆறு வருசமா நாங்கெல்லும் கம்ப்யூட்டர் இஞ்சினியர்'ஆ இருக்கோம்'லே.... :))//

    ராம்.. சரியா சொல்லு.. படிச்சி முடிச்சா.. இல்ல பணம் கொடுத்து துரத்தி அதான்வே சேஸ் பண்ணி முடிச்சா....

    எல்லா சேதியும் நம்ம விவாஜிக்கு தெரியும்டி... அவரும் அப்படி தான்...

    ReplyDelete
  22. //எல்லா சேதியும் நம்ம விவாஜிக்கு தெரியும்டி... அவரும் அப்படி தான்...//
    எலேய் போற போக்குல அவனையும் இழுத்து போடு கெணத்துக்குளேங்கிற கதையா இல்லே இருக்கு. நான் படிச்சு, எழுதிதான் பாஸ் பண்ணினேன்னு சொல்ல மாட்டேன். போய்த்தொலயுதுன்னு பாஸ் பண்ணி விட்டுருப்பாங்க.

    ReplyDelete
  23. அடங்கொய்யால! என்னய வச்சுதான் விளையாட்டா! நல்லா இருங்கடே! நான் அதே BSc ல ராம் பஷ்ட கஷ்டம் படலை ஆனா MScla 11 கப் வாங்கி சாதனை படச்சிட்டேன்ல்ல:-)

    ஆனா இதவிட கொடுமை நான் இப்போ சிவில் இஞ்சியருங்கோவ்வ்வ்வ்வ்:-)))))

    ReplyDelete
  24. 2000 வருடம் பழமையான தமிழ் படிச்சா 2000 ரூபாய் சம்பளம், 25 வருடத்திற்கு முன் வந்த கம்பியூட்டர் படிச்சா 2லட்சரூபாய் சம்பளம்.. இது என்ன நியாயம்னு கேட்பதும்... நம்பியாம்பாளையத்துல நாலு ஏக்கர் நிலம் 40ஆயிரம்..... ஆர்.எஸ் புரத்தில் நாலு செண்ட் 40 லட்சம்.. இது என்ன நியாயம்னு கேட்பதும் ஒன்றுதான். Doesn't make any sense.

    ReplyDelete
  25. திடீரென ஒரு 6 அல்லது 7 ஆண்டுகளாக கணிணித்துறையில் உள்ளவர்களுக்கு ( எல்லொருக்கும் இல்லை - பெரும்பாலானவர்களுக்கு) அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது. காரணம் அவர்களின் உழைப்பு அயல் நாடுகளில் விற்கப்படுகிறது. நாணய மாற்று விகிதத்தில் அதிகம் கிடைப்பதால் இவர்களின் ஊதியம் கூட்டப்படுகிறது. இந்த வசதி மற்ற துறைகளில் இல்லை. எல்லோருக்கும் ஒரே வேலை ஒரே ஊதியம் என்பதெல்லம் நம் நாட்டில் நடக்காது. கணிப்பொறியை ஆள்பவர்களெல்லாம் பணத்தின் மதிப்பு தெரியாமல் சென்னையில், மதுரையில், கோவையில், என்று வீட்டு வாடகை, வீட்டு விலை, காலி விவசாய நிலங்களின் விலை அனைத்தையும் அதிக விலை ஏற்றி விற்பதற்கு காரணமாகி விட்டார்கள்.

    பொறியியல் படித்து முடித்த உடனே ( படிக்கும் போதெ) வயதுக்கு 1000 என்று ஊதியம் பெறுகிறார்கள். என்ன செய்வது.

    நம்மாலோ அரசாலோ ஒன்றும் செய்ய முடியாது.

    செவி வழிச் செய்தி ஒன்று. பல ஏக்கர் விவசாயம் செய்து வந்த விவசாயி ( லட்சங்களைக் காணாதவர்) தன் விவசாய நிலங்கள் அனைத்தையும் சில கோடிகளுக்கு விற்று விட்டார். அவ்வளவு பணத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல் திணருகிறார். ஆக்க பூர்வமாக எதுவும் செய்யத் தெரியாமல் முழிக்கிறார். காரணம் TITAL PARK வரப் போகிறதாம் அங்கு.

    மதுரையில் 25 லட்சம் விலையுள்ள அடுக்கு மனைக் கட்டடங்கள் கேள்விப் பட்டதே இல்லை. சென்ற வருடம் 16 லட்சமாக இருந்தது இந்த வருடல் 25 லட்சம். ஒரு வருடத்தில் 9 லட்சம் உயர்வு.

    நாடு என்ன செய்யப் போகிறது ?

    ReplyDelete
  26. தமிழ் படிப்பது கட்டாயமாக்கப் படவேண்டும். தமிழ் படிப்பதற்கும், சம்பாதிப்பதற்கும் சம்பந்தம் இல்லை!

    நானும், B.Sc Computer Science 6 வருசம் படிச்சுட்டு இப்போ 'இன்ஜினியரா' இருக்கேனாக்கும்! நம்மூர் கல்லூரியில படிக்கிறதுக்கும், இப்போ நாம வேலை செய்யுறதுக்கும் சம்பந்தம் இல்லங்க இளா..

    ReplyDelete
  27. நல்லா இருக்கு உங்க புலம்பல். :-)))

    ReplyDelete
  28. //அட நீங்க ஈரோடா?//
    பதிவுலகுக்கு நீங்க புதுசா? நம்ம கதைதான் ஊர் அறிஞ்சதாச்சேன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஈரோட்டுக்கு பக்கம்- பவானிக்கு பக்கம்-குமாரபாளையம்-க்கு பக்கம் செ. முனியப்பன் கோவில். :)

    ReplyDelete
  29. ஏன் இந்த அப்பாக்கள்லாம் ஒரே மாதிரி இருக்காங்க?

    இராம்/Raam
    "Real & Complex Analysis'ன்னு நம்மளை தாலியறுத்த சனியனுக கடைசி வரைக்கும் கஷ்டப்படுத்திருச்சுக.... :(
    "

    தங்கமணியும் இதயத்தான் சொன்னாங்க! அவங்க MSc Maths! அவங்க அப்பாவும், இவங்க படிக்க விருப்பப்பட்டத படிக்கவிடல!

    ReplyDelete
  30. Actually I did DEEE. then BCA then Msc.IT.
    Intermittently I was working in different areas.
    Now working as sql dev.
    S/w Er.
    samayathula kanakku tution ellam eduthu irukkiren.

    anyway thanks

    ReplyDelete
  31. இங்க பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் டிகிரி ஹோல்டர்ஸ்ஸா??

    டிகிரி இல்லைனா கமெண்ட்ட இளா டெலிட் பன்னிடுவாரா?

    ஒரு அப்பாவி டிப்ளமா ஹோல்டர்
    (கம்ப்யூட்டர் இன்சினியர்)

    ReplyDelete
  32. Many of you think that having studied MSc/BSc/... without concentrating on the subject (just pass marks) able to get a job that fetches more money. It is true but you have to understand that the knowledge that you gained in your degree courses is no way useful for your work that you are doing currently. A BSc/MSc degree holder is no way required for writing code/debugging ... that is happening in Indian IT Industry as it is more service oriented. Your Maths knowledge and other comouter science subject knowledge is required only for product development. Not even 1% of company in India have developed any product. We claim ourself as number 1 in IT without any product development.
    Our software companies are employing over qualified graduates for their (house keeping in IT) work. Hence you do not realize the importance of fundamental subjects like Maths ...
    Many feel that our parents do not allow us to study what we want. It is true but it is because of their fear that my child should be succesful. Now every body is forced to study CS. Next generation may complain about this.
    In my opinion BA students can also become good programmers. Because programming is an art. I have seen many such programmers in Mumbai and Bangalore.
    Even some drives (degree holders) in my area became Java programmers by studying a course in APTEC ... and went to US and they are also earning money. Earning money is not a difficult task ...

    ReplyDelete
  33. wow gold!All wow gold US Server 24.99$/1000G on sell! Cheap wow gold,wow gold,wow gold,Buy Cheapest/Safe/Fast WoW US EUwow gold Power leveling wow gold from the time you World of Warcraft gold ordered!fanfan980110

    wow power leveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power levelingcheap wow power leveling wow power leveling buy wow power leveling wow power leveling buy power leveling wow power leveling cheap power leveling wow power leveling wow power leveling wow power leveling wow powerleveling wow power leveling power leveling wow power leveling wow powerleveling wow power leveling buy rolex cheap rolex wow gold wow gold wow gold wow goldfanfan980110
    dsfsdf

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)