சனி உன்னை பிடிச்சிருக்குன்னு,
தெரு முக்கு ஆசாரி சொன்னாரு!
கேட்க மறுத்தது என்னோட பகுத்தறிவு
அன்னிக்குதான்டா உன்னைப் பார்த்தேன்.
நீ எங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்
என்னோட அட்டையாட்டம் ஒட்டிகிட்டே!
என்னோட கடங்கார அட்டையெல்லாம்
என் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டே!
பாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நீயே குடிக்கிறதால
எப்பவுமே எனக்கு மண்டை காயுது.
டீ கடைக்கு நான் போறத
யார் சொல்லாமலும் உனக்கு எப்படி தெரியுது?
காசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி
எஸ்கேப் ஆகுறேன்னு எவனுக்கும் தெரியாது.
சம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ
ஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பே!
மாசக் கடைசி ஆகி உன்னைத் தேடினா
யார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பே!
சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
உன்னைமட்டும் எப்படிடா விட்டு வெச்சது?
கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா
உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே சூனியம்டா.
உன் நட்பு வேணுமின்னு யாருடா கேட்டா?
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!
நீ வருவேன்னு தெரிஞசதுன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!
சாகும்போது மறக்காம சொல்லி அனுப்புடா
வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!
இது எல்லாம் பல தடவை யோசிச்சு... பல பெயர்க்கிட்ட சொன்னது தான்...
ReplyDeleteஅதிலும் இந்த சுனாமி அடிக்கடி சொல்லப்படுவது....
//சனி உன்னை பிடிச்சிருக்குன்னு,
ReplyDeleteதெரு முக்கு ஆசாரி சொன்னாரு!//
எனக்கு ஜோசியன் சொன்னான்...
நம்பல நானும்.. உங்க கூட எல்லாம் பழகுவேன் என்று அப்ப எனக்கு எப்படி தெரியும்....
//கேட்க மறுத்தது என்னோட பகுத்தறிவு//
ReplyDeleteஎதை கேட்டு இருக்குகோம், இதை மட்டும் கேட்க.. வீதி யாரை விடுது...
//அன்னிக்குதான்டா உன்னைப் பார்த்தேன்.//
நான் கொஞ்சம் லேட்டா, இந்த வருடம் ஜனவரி மாசம் 11 ஆம் தேதி பார்த்தேன்.. தேதி சரி தானே ;)
ஹச்சூ! ஹச்சூ!
ReplyDelete/./சுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு
ReplyDeleteஉன்னைமட்டும் எப்படிடா விட்டு வெச்சது//
கடல் இல்லாத ஊரா பாத்து போய் இருந்துட்டீங்க...
சுனாமி தவிர்த்து வேற ஏதும் வராமலா போயிட போகுது... சத்தியம் ஜெயிக்காமலா போயிட போகுது...
//கழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா//
ReplyDeleteசே... அந்த நாதாறி பசங்க சொல்லிட்டு போயிடுறாங்க.. அத நம்பி நாங்க பெங்களுர் வரைக்கும் வந்து பாக்குறோம்...(பாத்தோம்)
//உன்னைய பார்த்தா என் வாழ்க்கையே சூனியம்டா.//
அதுவும் சொந்த செலவுல சூன்யம்....
//நீ வருவேன்னு தெரிஞ்துன்னா போடுவேன் எங்க வீட்டுக்கு பெரிய "Gate"டா!//
ReplyDeleteநீங்க இருக்கீங்க என்று தெரிஞ்சு ரொம்ப பெரிய கேட் டா தான் போட்டு இருந்தாங்க.. அப்படியும் மீறி வந்தேனே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//வெக்கிறேன் ஊருக்கெல்லாம் பெரிய ட்ரீட்டா!//
ReplyDeleteஆயில் போஸ்டர் இந்தியா முழுவதும்....
கவிதைகளுக்கெல்லாம் சிறந்த கவிதையாக
ReplyDeleteஉங்கள் கவிதை உருவாக விதையாக
இருந்த ஒரு நண்பனை
நீங்கள் இப்படித் திட்டியிருக்கின்றீர்கள்.
பாராட்டுகள்.
ஒங்களுக்கு எதிர்கவுஜை ஒன்னு போட்டாச்சு
ReplyDeleteஒங்க கவுஜைக்கும் ராயலார் கவுஜைக்கும் எதிர்க்கவுஜ இங்க
ReplyDeletehttp://gragavan.blogspot.com/2007/10/blog-post.html
சூப்பர்!
ReplyDeleteசூப்பர்!
சூப்பர்!
பட்டையை கிளப்பி, முடிச்ச்சும் போடவும்...
ReplyDeleteஉண்மையான எதிர் கவுஜ. சூப்பர். ;-)
ReplyDeletesuper kavithai anna..ungaluku yaaru annupina.ungalai pathi correct ah solli irrukangale
ReplyDelete:)))
ReplyDeleteKavidhi-ya madras baashai-la padikka solla romba super-a kkeedhu.... neenga kooda konjam read panni paakkradhana.....
ReplyDeleteஅருமை
ReplyDeleteநகைச்சுவையாக உன்மைகளை
பதித்திருக்கின்றீர்
வாழ்த்துக்கள்.
//
ReplyDeleteபாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்
உனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது!
இருக்கிறத எல்லாம் நீயே குடிக்கிறதால
எப்பவுமே எனக்கு மண்டை காயு//
அய்யோ ப்ப்ப்ப்பாவ்வ்வ்வம்...