சினிமாத்துறையில இருக்கிறவங்க எல்லாம் படிக்காதவங்கன்னு நமக்கு எல்லாம் இளக்காரம் இருக்கத்தான் செய்யுது. அதை பொய்யாக்கவே இந்த குயிஜு. முடிஞ்சா பதில் சொல்லுங்க இல்லாட்டின்னா இருந்தே இருக்கு கூகிலாண்டவர். சிலதுக்கு விடை கிடைக்கலாம். ரெடி ஸ்டார்ட் மீஸிக்.
1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?
2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?
3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.
4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?
5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?
6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.
7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.
8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?
9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?
10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?
11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?
12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
1. NAMITHA
ReplyDelete2. NAMITHA
3. NAMITHA
நானா இருப்பேனா..?
ReplyDeleteஎனக்கே டவுட்டு:)
"3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்."
ReplyDeleteதங்கவேட்டையில் வருமே கனிகா அந்த நடிகை!!!
"4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?"///////
ReplyDeleteமை பிரண்ட் சைட் சித்தார்த்
இளா,
ReplyDelete1) அமிஷா படேல்
2)
3)கனிகா
4)சித்தார்த்
5)மணிரத்னம்
6)
7)மாதவன்
8)சுஜாதா
9)அரவிந்த சாமி
10)
11)ரஜினி காந்த்.
12)பருத்தி வீரன் கார்த்தி!
கொஞ்சம் முயற்சி செய்தால் மற்றவையும் சொல்லிவிடலாம் , உடனே நினைவில் வந்தவை இவைதான்!
"12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?"
ReplyDeleteமாதவன் அல்லது அரவிந்சாமி
சிவா/ சும்மா அதிருதுல்ல- thanks for the comments.
ReplyDeleteகுசும்பன் - 3,4-சரி.
12-தவறு
வவ்வாலு-->? என்னா மண்டைசாமி.
1,3,4,5,7,8,11-சரியான விடை
9,12-தவறுங்க
8-அரவிந்சாமி
ReplyDelete9.ரங்கராஜன்
11.நாசர்
5.மணிரதனம்
சரிதானே இளா
அன்புடன்
அரவிந்தன்
முடியலை....
ReplyDeleteஅரவிந்தன் - 5 சரிங்க.
ReplyDelete8 & 9 மாத்தி சொல்லி இருக்கீங்கன்னு நினைக்கிறேன். இல்லைன்னா ரெண்டுமே தவறு.
1. கரினா கபூர்
ReplyDelete2.
3. கனிஹா
4. சித்தார்த்
5. தரணி
3. Kaniga
ReplyDelete4. Sidharth
5. Manirathnam
8. Sujatha
9. Abhishek Bachan?
11. One and only Super Star
10. Jeevan
ReplyDeleteRaam-3 & 4 -Correct
ReplyDeleteVetti-
..Amazing Answers..
3,4,5,8,9,11-Correct
10-X
[[OUT OF BOX]]
1. Amisha patel
ReplyDeleteEsha Deol
ReplyDelete8. சுஜாதா
ReplyDelete11. ரஜினிகாந்த்
ithai eppadi miss pannenu theriyalai :-(
ReplyDelete7. Maddy
Vetti-1,2,7-Correct
ReplyDelete10 மட்டும் புடிங்க..
ராம்-8,11-சரியான விடை...
6. Vidhya Balan
ReplyDeletevetti-6-right-:)
ReplyDelete10.மாதவன்???
ReplyDelete10-Just Miss Raam
ReplyDelete10. விவேக் ஒபராய்
ReplyDelete12. மகேஷ் பாபு
அடடே ராம். கலக்கிட்டீங்க. 10 க்கு சரியான விடை. 12க்கு டிரை பண்ணுங்க.
ReplyDelete12. Victory Venkatesh
ReplyDelete12th'க்கு எதாவது க்ளூ கொடுங்க விவாஜி... :)
ReplyDeleteநீங்க சொல்லாம இருந்தாதான் தப்புங்க வெட்டி- 12க்கும் சரியான விடை.
ReplyDelete12. வெங்கடேஷ்...??
ReplyDeleteராம்- இத்தனை க்ளூ குடுத்ததுக்கு அப்புறம பதில் சொல்லிட்டீங்க பாருங்க. அங்கே இருக்கு உங்க சாமர்த்தியம்
ReplyDelete//ராம்- இத்தனை க்ளூ குடுத்ததுக்கு அப்புறம பதில் சொல்லிட்டீங்க பாருங்க. அங்கே இருக்கு உங்க சாமர்த்தியம//
ReplyDeleteபரிட்சை'யே பக்கத்திலே இருக்கிறவனை பார்க்கமே எழுதுறது இல்ல....
இதிலே குயூஜு'ன்னா க்ளூ இல்லாமே என்னத்த கண்டுபிடிக்க??? :))
அண்ணா, இந்தத் துறை நாம சாய்ஸில் விட்டது. ஆனா ரொம்ப இண்டரெஸ்டிங் கேள்விகள். பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteவிவசாயி,
ReplyDeleteசினிமா குவிஸ்னு உள்ளே வந்தா , எல்லாம் படிப்பு பத்தி தான இருக்கு.
ஒரு கேள்வி கூட ஈஸியா இல்லை. எல்லாம் கடினமான கேள்வி.
நீங்க நம்ம லெவெலக்கு ஏர் ,கலப்பை , மாடு பத்தி குவிஸ் போடனும். அதுவும் ராமராஜன் பதில் இருக்குற மாதிரி கேள்வி இருக்கனும்.
சரி பதிலை சொல்றேன்.
1) Amisha patel
2) Esha deol
3) Kanika - Five star heroine
4) Siddharth - Boys hero
5) mani rathnam
6) Devayani
7) Madhavan
8)Sujatha aka Rangarajan
9)Abhishek Bachan
10)
11) Namma superstar - Rajini kant
12) Venkatesh - telugu actor
Anandha Loganathan:
ReplyDelete6-தப்புங்க. மீதி எல்லாம் செம கலக்கலான சரியான் விடை. எதிர்பார்க்கவே இல்லே.
10-கஷடமான கேள்வின்னு யாருமே பதில் சொல்லலை. ஆனா புத்திசாலி ராம் அதுக்கு மட்டும் சரியா பதில் சொல்லிட்டாரு. எப்படி???
//ஆனா புத்திசாலி ராம் அதுக்கு மட்டும் சரியா பதில் சொல்லிட்டாரு. எப்படி???//
ReplyDeleteஏன்னா அவர் புத்திசாலி...
இதெல்லாம் ஒரு கேள்வியா? மருதைல சின்ன கொழந்தய கேட்டாக்கூட சொல்லும் ;)
6) Vidya Balan
ReplyDelete10) No idea about answer.
Anandha Loganathan:
ReplyDelete6-correct.
10???
//மருதைல சின்ன கொழந்தய கேட்டாக்கூட சொல்லும் //
அப்போ ராம் என்ன சின்ன கொயந்தையா?
with the help of friends
ReplyDelete10 )Vivek Oberoi.
Anandha Loganathan:
ReplyDeleteSimply Superb. நீங்க தான் எல்லாக் கேள்விக்கும் சரியான பதிலை சொல்லி இருக்கீங்க. Hats Off
இளா விட்டுப்போன சில கேள்விகளுக்கான பதில்,
ReplyDelete2)ஈஷா தியோல்
6)வித்யாபாலன்
9)அபிஷேக் பச்சன்
10) ஜீவன்(இங்கேயே விடை போட்டுட்டிங்க)
12) தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
எல்லாம் சரியா என்று சொல்லவும், mba படிச்ச ஆட்கள் நிறைய படவுலகில் இருக்காங்க!
வவ்வாலு,
ReplyDeleteசொன்ன விடைகள் எல்லாம் சரிங்க. ஆனா 10க்கு ஜீவன் அப்படிங்கிறது மட்டும்தான் தப்பு. 10க்கு சரியா விடை சொன்னவரு நம்ம ராயல் ராம் மட்டுமே
//வவ்வாலு,
ReplyDeleteசொன்ன விடைகள் எல்லாம் சரிங்க. ஆனா 10க்கு ஜீவன் அப்படிங்கிறது மட்டும்தான் தப்பு. 10க்கு சரியா விடை சொன்னவரு நம்ம ராயல் ராம் மட்டுமே
//
என்னை விட்டுடிஙளே. நாங்களும் பிட்டு அடிச்சு சொன்னொம்ல்ல.
ஆமாங்க ஆனந்து. கொஞ்சம் மிஸ்ஸாகிருச்சு.,அவருதான் முதல்ல சொன்னாருன்னு சொல்ல வந்தது வீட்டுக்கு போற அவசரத்துல அப்படியாகிபோயிருச்சு.,
ReplyDeleteகண்ணை மூடிக்கிட்டே சொல்வேன். நாலாவது கேள்விக்கு பதில் என்னோட சித்துதான். :-))))
ReplyDeleteமத்த கேள்விகளுக்கு பதில் தெரியாததால் இனி மேல்தான் கூகிளில் தேட வேண்டும். ;-)
இவ்ளோ படிச்சுடுட்டுமா மறுபடியும் சினிமா துறைக்கு வர்றாங்க ம்ஹும் ரொம்ப கஷ்டம் தான்
ReplyDelete///8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?//
ReplyDeleteசுஜாதா...
ஏதோ ஒரு கேள்விக்கு நமீதா...அப்புறம் பிரியா மணி...அப்புறம் மீனா..
விடைகள்
ReplyDelete1. பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதார பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்ற நடிகை யார்?
Ans: Amisha Patel
2. கணிணியில் இளங்கலையும், Media Arts பாடப்பிரிவில் OXFORDல் முதுகலை பட்டம் பெற்ற நடிகை யார்?
Ans: Easha Deolஹேமாமாலினியின் மூத்த மகள்)
3. BITS Pilani ல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த நடிகையின் இயற் பெயர் வித்யா சுப்ரமணியன்.
Ans: கனிகா(5 ஸ்டார் கதாநாயகி)
4. SP Jain கல்லூரியில் MBA பட்டம் படித்த இந்த நடிகர் ஆரம்பத்தில் இயக்குனராக விருப்பம் கொண்டு 2 வருடம் தொடர்ந்து போராடி மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். யார் இவர்?
Ans: சித்தார்த்
5. சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகம் இளங்கலையும், பஜாஜ் மேலாண்மை கல்வி நிறுவனத்தில MBAவும் பெற்ற இயக்குனர் யார்?
Ans: மணிரத்னம்
6. மும்பை பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் பட்டம் பெற்ற நடிகை யார்? இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி சேனலின் Vice President.
Ans: வித்யா பாலன்(தந்தை ETC channelன் VP)
7.NCC ல் இந்தியாவின் சார்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரில் இவரும் ஒருவர். இவர் படித்த கல்லூரியின் மூலம் இந்தியாவின் கலைக்குழு சார்பாக கனடாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர். Royal Army, Navy and the Air Force ஆகிய மூன்றிலும் பயிற்சி பெற்றவர்.
Ans: மாதவன்
8.St.Joseph's Collegeல் கலாம் கூட படித்தவர். MITயில் முதுகலை(electronics) பெற்ற இந்த எழுத்தாளர் யார்?
Ans: சுஜாதா
9.Aiglon-ஸ்விஸ்ல் இளங்கலை முடித்தபின், பாஸ்டன் சென்று தன் தந்தையின் நலனுக்காக முதுகலை பட்டம் பெறாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நடிகர் யார்?
Ans: அபிஷேக் பச்சன்
10.சென்னையில் பிறந்த இந்த நடிகர் ஒரு செமினாருக்காக லண்டனுக்குச் சென்றபோது, நியூயார்க்கில் வசிக்கும் இயக்குனர் ஒருவருக்கு இவரது திறமை பிடித்துபோக அவரே இவருக்கு NYC Universityல் முதுகலை-நடிப்பு Sponsor செய்தார். இவரும் திறம்பட படித்து பட்டம் பெற்றார். யார் இவர்?
Ans: விவேக் ஓபராய்
11.சென்னை திரைப்பட கல்லூரியில் Basic acting course படித்த புகழ் பெற்ற நடிகர் யார்?
Ans: சூப்பர் ஸ்டார்
12. Monterey Institute of International Studiesல் முதுகலை-MBA படித்த நடிகர் யார்?
Ans: வெங்கடேஷ்
சரியான விடைகளை (கிட்டத்தட்ட) சொன்னவர்கள்.
1. வவ்வால்
2. வெட்டி
3. ஆனந்த லோகநாதன்
ராம்க்கு சிறப்பு ஆறுதல் பரிசு.
இளா,
ReplyDeleteநல்லக்கேள்விகள் , பதில்கள்!
கேள்வி என் 10க்கு விடை தெரியாமல் கொஞ்சம் அலையவிட்டது, அப்போது விவேக் ஓபராய் பெயரும் எனக்கு தோன்றியது ஆனால் சென்னையில் பிறந்தவர் என்று குறிப்பிட்டதால் அவராக இருக்காது என நினைத்தேன். கடைசியில் அவரே தான்!
அவர் கோவையில் பிறந்தவர் என நினைத்தேன், சத்யராஜ்க்கு கூட உறவினர் தான்.