Thursday, November 23, 2006

வெங்காயம் உரிச்சா ஏன் கண்ணீர் வருது?

விக்கிப்பசங்களுக்கு போட்டியா நாமும் ஏதாவது பண்ணுவோம்னு யோசிச்சு, How it Works website'க்கு எல்லாம் போயி ஒன்னும் புரியாம இருக்கும் போதுதான் இப்படி ஒரு பதிவு போட பளங்குன்னு மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சது(அது என்னா புதுசா ஒரு ஐடியா வந்தாமட்டும் பல்பு போட்டு காட்டுறது? இதுக்கு விக்கிப்பசங்க விளக்கம் தருவாங்களா?)

இப்போ கதைக்கு வருவோம்.

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.

ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.

தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.

வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.

உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி "ஐஸ் கிரீம் செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா"ன்னு கேட்டுச்சாம்..

அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!

அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி வருதுன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்குமே?

நன்றி - பதிவு போடவே சோம்பேறித்தனமா இருக்கும் போது இப்படி ஒரு மயிலு அனுப்பிய மனதின் ஓசைக்கு.

18 comments:

 1. ஆண்டவனின் கருணையே கருணை. வெங்காய்த்திற்கும் அருள் செய்த வெங்காயத்தாண்டவருக்கு ஒவ்வொரு திங்கக் கிழமையும் வெங்காய வடையைப் படைத்துத் திங்கக் கொள்வோம். வெங்காயத்தாண்டவர் புகழை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் மார்க்கெட்டில் சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.

  ReplyDelete
 2. கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...???!

  ReplyDelete
 3. --- வெங்காயத்தாண்டவர் புகழை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் மார்க்கெட்டில் சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். ---

  இது மட்டும் சுஷ்மா ஸ்வராஜூக்குத் தெரிஞ்சிருந்தா,இன்னேரம் ஏன் அவங்க பெல்லாரி,டில்லின்னு லோல் பட்டுட்டு இருக்கோணும்???

  ஓய்,கிஸான்..என்ன மேடம் ஊரில இல்லைன்ன உடனே வெங்காயம் வெட்டி சமைக்க ஆரம்பிச்சாச்சா?

  ReplyDelete
 4. படமும் அருமை! பதிவும் அருமை!

  தொடரட்டும்.

  ReplyDelete
 5. கவர்மண்டையே கவுக்கும் சக்திவாய்ந்த வெங்காயத்துக்கு இது ஒரு அஞ்சலி பதிவுபோல இருக்குமோய்..

  ReplyDelete
 6. //சின்ன வெங்காயமும் பல்லாரி வெங்காயமும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்//
  பல்லாரி பேர் மாற வாய்ப்பு அதிகம் இருக்கும் போல தெரியுதே. பேர் மாத்துறதைத்தானே கெளடா குடும்பம் முதல் வேளையா செய்யறாங்க. அப்படி பெல்லார் பேர் மாத்துனா என்ன பேர் வெப்பாங்க?

  ReplyDelete
 7. //கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...???! //
  அப்படியா? இது தெரியாமதான் ரொம்ப நாளா அழுதுட்டு இருக்காங்களா மக்கள்?
  தண்ணியில போட்டுட்டா ருசி போயிருந்துங்களே,, என்ன பண்ண(சொந்த ஆராய்ச்சியில கண்டுபிடிச்சது)

  ReplyDelete
 8. //வெங்காயம் வெட்டி சமைக்க ஆரம்பிச்சாச்சா//
  சே சே, மீசையில் மண் ஒட்டுறது இல்லியே. நாம சமைக்கிறது இல்லீங்க சாமி, அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க.

  //அடப்பாவி..... //
  எழுத்துப்பிழை இருக்கிறது மனதின் ஓசை. அப்பாவி என்று இருந்து இருக்க வேண்டும்

  ReplyDelete
 9. //படமும் அருமை! பதிவும் அருமை!//
  நன்றிங்க கார்மேகத்தாரே.

  //கவர்மண்டையே கவுக்கும் சக்திவாய்ந்த வெங்காயத்துக்கு//
  அட அரசியல்ல பூந்து விளையாடுறீங்களே ரவி

  ReplyDelete
 10. ஓ அதான் பெரியார் ஆண்டவனை திட்டுவதற்கு பதிலாக அவனிடம் அருள்பெற்ற வெங்காயத்தின் பெயரைச் சொல்லி மற்றவர்களை திட்டினாரோ?
  ('மந்திரி சொன்னாங்கோ' என ஆரம்பிப்பார் அந்த மந்திரி மேடையில் இருக்கும் போதே .மந்திரி சொன்னா என்ன எந்த வெங்காயம் சொன்ன என்ன' என்பார்)

  ReplyDelete
 11. ஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்
  காயம் இருக்கின்ற காரணத்தால் - மாயமில்லை
  தீங்கில்லாப் போதும்தன் தோல்குறைந்தால் வெங்காயம்
  தாங்காமல் கண்ணீர் தரும்.

  ReplyDelete
 12. சே நானும் கண்ணீர் வருவது எப்படின்னு பதிவு போட்டு இருக்கலாம், செம timingஆ இருந்து இருக்கும். அறிந்து கொண்ட பாடம்: தமிழ்மணத்தை அடிக்கடி படிக்கனும்

  ReplyDelete
 13. //
  கொஞ்ச நேரம் சுடுதண்ணியில் போட்டு உரிச்சா இந்த வரம் செல்லுபடியாகாதாமே...???!
  //

  சட்டுனு யாராவது 'கண்ணீர் வராம வெங்காயம் உரிக்கிறது எப்படி'னு ஒரு பதிவு ரெடி பண்ணுங்கப்பா... :-))

  //ஆயம் வெளிப்பட்டால் ஊனது புண்பட்டால்
  காயம் இருக்கின்ற காரணத்தால் - மாயமில்லை
  தீங்கில்லாப் போதும்தன் தோல்குறைந்தால் வெங்காயம்
  தாங்காமல் கண்ணீர் தரும்.

  //

  Floraipuyal - இது உங்க வெண்பாவா... நல்லா இருக்கு. அப்படியே எங்களை மாதிரியான அரைவேக்காட்டுக்களுக்கு கொஞ்சம் பொழிப்புரையும் சேர்த்துப் போடுங்களேன்.

  ReplyDelete
 14. அட்ரா அட்ரா அட்ராசக்கை... :-)

  ReplyDelete
 15. கிஸான்கி நேத்தாஜி க்கு ஜே (இந்த ஜே க்கும் நம்ம புரட்சி தலைவிக்கும் சம்பந்தம் இல்லீங்கோ) :-)

  ReplyDelete
 16. //கிஸான்கி நேத்தாஜி க்கு ஜே//
  என்னமோ ஒன்னுமே புரியல

  ReplyDelete

WhatsApp DP - சிறுகதை

கா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)