
ஆப்தமித்ரா, தமிழில் அது சந்திரமுகியா வந்து சக்கை போடுபோட்ட கதை எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அதுக்குக் காரணம் கதையா? ரஜினியா?.அது எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா தமிழ் சினிமாவுல தோல்விப்படங்களே வராம போயிருக்குமே.
இந்த வாரம் கோலிவுட்டுல, பாலிவுட்டுல பேசிக்கிற பெரிய சமாச்சாரமே 'ராமாயன்'தான். சுமார் 100 கோடி ரூபாயில ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்துல வளரப்போகிற இந்த படத்துல நம்ம ரஜினி ஏத்துக்கப்போற வேஷம் ராவணன். இதெல்லாம் புரளியாக்கூட இருக்கலாம்னு தோணுது. அப்படியே இருந்துரட்டுமே, தனக்குன்னு இமேஜ் வந்த பிறகு ரஜினி பிறன் மனை நோக்காமையை தன்னோட படங்களில் கடைபிடிச்சுகிட்டு வந்துகிட்டு இருக்காரு. அந்த இமேஜ் நல்லா இருக்கும் போது வேணாமே ரஜினிசார் இந்த ராவணன் வேஷம்.
இளா,
ReplyDeleteஒரு ரஜினி ரசிகனாக எனக்கு மீண்டும் பரட்டையை பார்க்க ஆசையே.
ரஜினி 'இராவணன்' பாத்திரம் ஏற்று நடித்தால் நிச்சயமாக வரவேண்டிய விடயம்.
//ரஜினி 'இராவணன்' பாத்திரம் ஏற்று நடித்தால் நிச்சயமாக வரவேண்டிய விடயம். //
ReplyDeleteஆஹா எதிர் பாட்டா?
//அப்படியே இருந்துரட்டுமே, தனக்குன்னு இமேஜ் வந்த பிறகு ரஜினி பிறன் மனை நோக்காமையை தன்னோட படங்களில் கடைபிடிச்சுகிட்டு வந்துகிட்டு இருக்காரு. அந்த இமேஜ் நல்லா இருக்கும் போது வேணாமே ரஜினிசார் இந்த ராவணன் வேஷம்.
ReplyDelete//
அடப்பாவிகளா? இதுவேறவா? :-)
எனக்கென்னமோ ரஜினி நடிக்க ஒத்துப்பார்னுதான் தோணுது.
ReplyDeleteஇந்திப்படங்களில் எப்போதுமே அவர் இமேஜோ, கேரக்டரின் அளவோ பார்த்ததில்லை!
//இந்த வாரம் கோலிவுட்டுல, பாலிவுட்டுல பேசிக்கிற பெரிய சமாச்சாரமே 'ராமாயன்'தான். சுமார் 100 கோடி ரூபாயில ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்துல வளரப்போகிற இந்த படத்துல நம்ம ரஜினி ஏத்துக்கப்போற வேஷம் ராவணன். //
ReplyDeleteஎனக்கென்னவோ உங்களை மாதிரியே இந்த நியூசும் டுபாக்கூர்னு தோணுது. உண்மைன்னு ஃபர்ஸ்ட் ப்ரூவ் பண்ணுங்க...
செய்தி உண்மையாயிருந்தாலும் என்ன தவறு. நல்ல நடிகன் எந்த வேடமும் செய்ய வேண்டும். சிறந்த கதாநாயகனாக இருந்த பொழுதில்தான் நடிகர் திலகம் அந்த நாள் படத்தில் வில்லனாக நடித்தார் என்பதையும் நினைக்க வேண்டும். புகழொடு இருந்த பொழுதே அவரால் அப்படி முடியுமானால்....ரஜினி ஏன் நடிக்கக் கூடாது?
ReplyDeletehttp://www.indiaglitz.com/channels/tamil/article/14490.html
ReplyDeletehttp://bowenpally.blogspot.com/2006/11/rajini-to-play-ravana-in-santoshis.html
For Your Kind Information Mr.Kaippu.
டுபாக்கூரா? உங்ககிட்ட இனிமே டியூசனுக்கு வந்து அதைப்பத்தி தெரிஞ்சிகிட்டா போச்சு..
//செய்தி உண்மையாயிருந்தாலும் என்ன தவறு. நல்ல நடிகன் எந்த வேடமும் செய்ய வேண்டும்//
ReplyDeleteநல்லா சொன்னீங்க ஜி.ரா, ஆனா ரஜினி ரிஸ்க் எடுப்பாரா? ஹிந்திக்கு வேணுமின்னா இது வேஷம் சரிபட்டு வரலாம், நம்ம ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?
யப்பா நடிர்களை நடிகர்களா பாருங்கப்பா இமெஜ் எல்லாம் வெச்சி அவரை ஒரு கட்டத்துல அடக்காதிங்கப்பா.
ReplyDelete//ரஜினி பிறன் மனை நோக்காமையை தன்னோட படங்களில் கடைபிடிச்சுகிட்டு வந்துகிட்டு இருக்காரு//
அவரோட வாழ்க்கை வரலாறு நமக்கு தெரியாதது இல்ல :))..
என்னமோ போங்க :-)
ReplyDelete//அவரோட வாழ்க்கை வரலாறு நமக்கு தெரியாதது இல்ல //
ReplyDeleteபடங்களைப் பத்தி மட்டும் பேசுவோமே
வாழ்க்கை வரலாறு எல்லாம் பத்தி பேச வேண்டாம். அது பத்தி இந்த வார ஸ்டார் தெக்கி போட்டு இருக்கிற பதிவை பாருங்க.
ReplyDeleteஆனா இளா, இவரு நடிக்கணும். கொஞ்சம் ஹீரோயிசம் இல்லாம ஒரு ரோலில் தலைவரை பார்க்க ஆசையாத்தான் இருக்கு.