யானைக்கும் அடி சருக்குமாம். அது மாதிரி நேத்து ஒரு யானைக்கு சருக்கிருச்சுங்க.
தேன்கூடு போன மாசம் போட்டியில ஜெயிச்சதுக்காக ஒரு சின்ன கூட்டத்துக்கு அழைத்து இருந்தார் 2ம் இடம் பெற்ற மயிலார். 3ம் இடம் பெற்ற ஓமப்பொடியும் வந்து இருந்தார். அப்பொழுது இது நம்ம ஆளு படம் பற்றி பேச ஆரம்பிக்க மயிலார்(ஜி.ரா) சொன்னாரு, அந்த படத்தை இயக்கியது பாக்கியராஜ்'ன்னு. நானும் ஆமாம் சாமி போட்டு வெச்சேன். ஏன்னா அந்த படத்துக்குதான் பாக்கியராஜ் முதல் முதலா இசை அமைச்சு பாடியும் வேற இருந்தார். அந்த நம்பிக்கையில அவர்தான் இயக்கி இருப்பாருன்னு மயிலார் ஆணித்தரமா அடிக்க, ஓமப்பொடி பந்தயம் வெக்கிற அளவுக்கு போய்ட்டார். சரின்னு படத்தை பார்த்து முடிவு பண்ணலாம் ஓட்டி பார்க்க ஆரம்பிச்சோம்.
டைட்டில்ல பார்த்தா இயக்குனர் மேற்ப்பார்வை அப்படின்னே போட்டு இருந்துச்சு. கடைசியா அந்தப் படத்தை இயக்குனது பாக்கியராஜ் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அவர் மேற்பார்வை மட்டுமே செஞ்சு இருக்கார். அதனால் இந்திரா நகர் அண்ணாச்சில ஒரு செம புடி புடிச்சோம்.
அப்போ அந்தப் படத்தை இயக்குனது யாருங்க? ஓமப் பொடி சொன்ன மாதிரி பாலகுமாரனா? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க சாமி.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...
பாலகுமாரன் இயக்கிய முதலும் கடைசியுமான படம் 'இது நம்ம ஆளு' தான்..
ReplyDeleteஓமப்பொடி எப்பவும் கரெக்ட் தான் :)
ஆமாம்பா ஆமாம்....
ReplyDeleteபடைப்பாளியாக பாக்யராஜ் தோற்ற இடம் அது :-)
பாலகுமாரனுக்கு அது ஒரு வகையில் அவமதிப்பே...
கலகம் இல்லாம உங்க பக்கம் வந்தா நல்லா இருக்குமா என்ன:-))))
ஆம்.அந்த படத்தின் இயக்குநர் பாலகுமாரன் தான்.
ReplyDeleteஅந்தப் படம் ஒரு தோல்விப்படமா?
ReplyDeleteஊரக்கூட்டி மானத்த வாங்கியாச்சா! சந்தோசமா? சாப்பிட்டதெல்லாம் செமிச்சிருக்குமே இப்போ! நல்லாயிருமய்யா! நல்லாயிரும்!
ReplyDelete// ராசா (Raasa) said...
ஓமப்பொடி எப்பவும் கரெக்ட் தான் :) //
என்ன ராசா! அப்ப ஜிரா எப்பவும் தப்பூங்குறீங்களா :-((((((((
// முத்துகுமரன் said...
ReplyDeleteஆமாம்பா ஆமாம்....
படைப்பாளியாக பாக்யராஜ் தோற்ற இடம் அது :-)
பாலகுமாரனுக்கு அது ஒரு வகையில் அவமதிப்பே...//
புரியலையேய்யா முத்துக்குமரா! படம் தோல்வியா? நான் வெற்றிப்படம்னே நெனச்சிக்கிட்டிருக்கேன். சரி. இதுல அவமதிப்பு வந்தது எப்படி? எதனால?
//. அது மாதிரி நேத்து ஒரு யானைக்கு சருக்கிருச்சுங்க.//
ReplyDeleteஅச்சிச்சோ.. யானையை நல்ல ஆஸ்பத்திரியா பார்த்து அட்மிட் பண்ணீங்களா? இப்போ எப்படி இருக்கு?!!
ஏக் காவ் மே ஏக் கிசான்..
ReplyDeleteஅதெல்லாஞ் சரி அந்த அடிவருடிகள் மேட்டரப் போடலியா?
யோவ்..ஜீரா...அடுத்து எப்ப மறுபடியும் அண்ணாச்சிக்குக் கூட்டிட்டுப் போகப் போறீரு?
சர்டிபிகேட் கொடுத்த மாப்பிள்ளை சாருக்கு ஒரு பெரிய "ஓ"
//சாப்பிட்டதெல்லாம் செமிச்சிருக்குமே இப்போ//
ReplyDeleteசாப்பாடு வாங்கிக்குடுத்துக்கு சபையிலே நன்றி சொல்லிக்கிறேன். ஆனா எண்ணைய் கொஞ்சம் அதிகம்ங்க. இனிமே அங்கே போறதைப்பத்தி யோசனைதான் பண்ணனும். இடத்தை மாத்திருவோம் அடுத்தவாரம். ஓமப்பொடி என்ன சொல்றீங்க?
//பாலகுமாரன் இயக்கிய முதலும் கடைசியுமான படம் 'இது நம்ம ஆளு' தான்..
ReplyDeleteஓமப்பொடி எப்பவும் கரெக்ட் தான் //
வாங்க புது மாப்பிள்ளை, எப்போங்க விருந்து? ஓமப்பொடி ஊருக்கு போறாரு இந்த வாரம். அதனால இந்த வாரம் வெச்சுடலாமா?
யோவ் விவ் நல்லாயியிரும்ய்யா.. ஓமப்பொடி பெட் வச்சார் செயிச்சார்.. ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டார் சரி.. ஜி.ரா தோத்தாரு வாங்கிக் கொடுத்தார்..அதுவும் சரி.. நீர் எங்கேய்யா உள்ளே வந்தீர்.. ம்ம்ம் கேப்பில்ல கிடா வெட்ட்யிருக்கீர்...
ReplyDeleteஅடுத்த கிடா வெட்டுக்கு ராசாவை ரெடி பண்ணுறீர் ஆக்கும்.. யோவ் விவ் நல்லாயியிரும்ய்யா..
//நீர் எங்கேய்யா உள்ளே வந்தீர்.. //
ReplyDeleteஅவுங்க ரெண்டு பேரும் ஜெயிச்சதுக்குதான் அந்த விருந்தே. அந்த விருந்துல பந்தயம் வெச்சு ஜெயிச்சவரு நம்ம ஓமப்பொடி. யாரு ஜெயிச்சா நமக்கு என்ன? சாப்பாடு கெடைக்கிற இடத்துல கம்னு இருக்கோனும்.
என்னது... யானைக்கு அடி சறுக்கிருச்சா?
ReplyDeleteரொம்ப ஆபத்தாச்சே....சீக்கிரம் கவனிங்கப்பா.
//அதெல்லாஞ் சரி அந்த அடிவருடிகள் மேட்டரப் போடலியா?//
ReplyDeleteஅதப்போட்டு, இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையும் புடுங்கலாம்னு எண்ணமா? எதுக்கு இந்த பிட்? ஏதோ மாசத்துக்கு ஒருதடவ பதிவ போடுறேன், அது கூட புடிக்கலையா உமக்கு? ஆனா ஆரியத்தைப் பத்தி இந்த வாரம் ஒரு பதிவு உண்டு, என்ன ஆனாலும் சரி. தலைப்பை இப்பவே சொல்லிறேன்
ஆரியமா? உவ்வ்வ்வ்வே
//ரொம்ப ஆபத்தாச்சே....சீக்கிரம் கவனிங்கப்பா.//
ReplyDeleteஅதெல்லாம் சரியா, அண்ணாச்சின்னு ஒரு கடையில செம கவனிப்பு
படம் ஹிட்தானே???
ReplyDeleteபடத்துக்கு ஏதோ ஸ்டேட் கவர்ன்மெண்ட் அவார்ட் கூட கிடைச்ச மாதிரி ஞாபகம் :-)
சரி யானைக்கு எதுவும் அடிப்படலை இல்லை :-)
ஆமாம் ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்ச எங்களுக்கு ட்ரீட் இல்லையா? இது அநியாயம்... மயிலார், ஓமப்போடி ரெண்டு பேருக்குமேதான் :-)