Wednesday, August 18, 2010
ரிங்க ரிங்கா தமிழில்
அசல்(தல இல்லீங்க) பாட்டு ஆட்டத்துடன், எப்பத்தான் தமிழ்ல இதுக்கு குத்தாட்டம் போடப்போறாங்களே தெரியல
Sunday, August 15, 2010
ஐயோ ’அதைக்’ காணோமே
அந்தப் பெண்ணுக்கோ அந்தக் கடற்கரையை பார்த்தவுடனே சந்தோசம்னா சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம். ”டேய், இப்படி ஒரு இடத்தை நான் பார்த்ததே இல்லே. இயற்கைதான் எவ்வளவு அழகு. எனக்கு இயற்கை புடிக்கும்னு தெரிஞ்சே என்னை சரியான இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கேடா.நன்றிடா!” என்றபடியே அவன் நெத்தியில முத்தம் குடுத்துட்டு கடலை நோக்கிப் போனாள். வழக்கம் போல கடல்ல குளிக்கிறதும், பின்னாடி வந்து சூரிய வெளிச்சத்துல காயுறதுமாவே பகல் நேரத்தை செலவு பண்ணினாங்க, சாயங்காலம் ஆச்சு. இருட்டினா கடற்கரைய பூட்டிருவாங்க. அதனால காதலை சட்டுபுட்டுன்னு சொல்லிடலாம்னு நினைக்கும் போதே அவ எந்திரிச்சு கடற்கரையில நடக்க ஆரம்பிச்சா. இவனும் அவளுக்குத் தெரியாம மோதிரத்தை பொட்டியில இருந்து எடுத்தான். அவளுக்காகவே ஆசை ஆசையா அவனும் அவனோட அம்மாவும் கடை, கடையா ஏறி இறங்கி வாங்கின மோதிரமது. 18 கேரட் தங்கம், உச்சியில விலை உசத்தியான வைரம். சூரிய வெளிச்சத்துல பளிர்னு மின்னுச்சு. ஆமாங்க, அதனோட வெலை .... பின்குறிப்புல இருக்கும், ஹல்லோ அப்புறமா பாருங்க. மோதிரத்தை பத்திரமா கையில எடுத்துகிட்டு அவ பின்னாடியே நடந்தான், கையை இருக்கமா மூடிகிட்டான்.ஒரு ஆச்சர்யத்தை குடுக்குனமில்லை, அதான்.
ரெண்டு பேரு தோளுக்குத் தோளா கொஞ்சம் தூரம் நடந்தாங்க. சடார்னு அவளுக்கு முன்னாடி முட்டிப்போட்டு உக்காந்து ”நான் உன்னைக் காதலிக்கிறேன், என்னைக் கண்ணாலம் பண்ணிப்பியா?”ன்னு கேட்டு மோதிரத்.. ஆ மோதிரத்தைக் காணோம். அவளுக்கோ அவன் காதலைச் சொன்னவுடன் என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கிறா, ஆனா அவன் மோதிரத்தை தேடுறான். சரின்னு அவன் மோதிரத்தை தேடுறதை பார்த்துட்டு இவளும் தேட ஆரம்பிச்சா. சுமார் ரெண்டு மணி நேரமா தேடுறாங்க, கிடைக்கவே இல்லை, இதைக் கேள்விப்பட்ட மத்த மக்களும் அவங்களோட சேர்ந்து தேட ஆரம்பிச்சுட்டாங்க. அங்கே இருந்த காவலர்களும் சேர்ந்து தேட.. ஒரு கூட்டமாவே, தேடோ தேடுன்னு தேடுறாங்க. ஹ்ம்ம்ஹ்ம்ம் கிடைக்கவேயில்ல. இருட்ட ஆரம்பிச்சதும், மக்கள் மன்னிச்சுக்குங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. இருட்ட ஆரம்பிக்க, இனிமே தேடுறதுல புண்ணியமில்லைன்னு, அவனும் அவளும் கிளம்பிட்டாங்க.
பின் குறிப்பு:
1. வீட்டுக்குப் போற வழியில அவனோட காதலை ஏத்துக்கிட்டு கண்ணாலத்துக்கு சரி சொல்லிருச்சு அம்மணி
2. மோதிரத்துக்கு காப்பீடு பண்ணிருந்தாங்க அவனோட அம்மா.
3. அந்த மோதிரம் இன்னும் அந்தக் கடற்கரையில இருக்கலாம்.
4. அந்த மோதிரத்தோட விலை ரொம்ப கம்மிங்க. $9000 அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்புல 4லட்சத்துக்கு பக்கம்.
நல்லா சொல்றாங்கடா காதலை!
செய்தித்தாள்ல வந்த சேதி, நம்மளுக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கேன்.
மூலம்:http://www.thebostonchannel.com/news/24597272/detail.html
Saturday, August 14, 2010
ஆன்சைட்டும் ஆகஸ்டு 15ம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,
நண்பனை வெளிநாட்டுக்கு

வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,
நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்
டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....
சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
*அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எழுதி, பதிஞ்சதுங்க. ஒரு மீள்பதிவு
Monday, July 26, 2010
சிபஎபா July 26
அப்பா நன்றாக யோசியுங்கள் by ujiladevi
என்னான்னு சொல்றதுங்க, இதுதான் நியாயம்னு மகன்கள் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கு, ஒரு குடும்பத்தோட கெளரவம், எதிர்காலம் மருமகள் கையில்தானே இருக்கு. பசங்க பாவமில்லையா?
00000000000000000000
கணவர்களைத் திருடும் நடிகைகள்..! பாலிவுட் சர்வே..! by உண்மைத் தமிழன் (15270788164745573644)
அப்பா மலைக்க வைக்குது இந்தத் தொகுப்பு, உண்மையாவே உதா அண்ணாச்சியின் ஒரு வரி கூட விடாம படிச்ச பதிவு, இதெல்லாம் தேவையான்னு கேட்க கூடாது ஆமா..
00000000000000000000
போன வாரம் ஒரே கும்மாங்குத்து வாரம். ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க. நான் அவுங்களை குத்துவேன், இவுஙகளை குத்துவேன்னு ஒரே வன்முறை. சே ஒரு விவஸ்தை இல்லாம குத்துனாங்க, குத்து வாங்கினாங்க. பரிசல்காரன், கார்க்கி எதிர்வினையாம், அதுவும் அவருக்கு கண்ணாலம் ஆவலன்னு ஒவ்வொரு தடவையும் சொல்லும்போது, பாவம், ”கார்க்கி அம்மாகிட்ட இந்த வருத்தத்தையும் சொல்லுங்கப்பா” ,விக்னேஷ்வரி அம்மணியும் கோதாவுல இறங்கிட்டாங்க... கேபிள், நாஞ்சில், அக்பர்
வடகரை வேலன், அபிஅப்பா.
00000000000000000000
எது தந்தாய் என் வாழ்வே by செல்வநாயகி
ஜாதி, கடல்கடந்தும் ஒரு தலைமுறை கடந்தும் மறக்க முடியாம போனதுதான், இன்னொரு காத்திருப்போம், தொலயுமா இந்தச் சனி? நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடறது மாதிரிநட்டா சாதி அழிய வழி இருக்கும் போல.
00000000000000000000
வானமே எல்லை? Starjan ( ஸ்டார்ஜன் )
விவசாயம் பட்டுப்போச்சு, மழை இல்லை, வேலை இல்லை.. என்ன பண்ண? நகரமயமாக்கல்னால என்னென்ன கொடுமையோ.. இப்படி எல்லாருமே போயிட்டா கிராமமும்?சோத்துக்கு என்ன வழி?
00000000000000000000
சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை by கலையரசன்
கலையரசனின் அருமையான ஆரம்பம், வழக்கம்போல அமெரிக்க அதிகாரம்,, சிவப்பு ட்விஸ்ட்னு ஆரம்பிச்சுடாதீங்க. இப்படியே இருந்தா இது ஒரு பெரிய தொடருக்கும் வரலாற்றுப்பதிவுக்குமான விதைன்னே சொல்லலாம்.
00000000000000000000
மூளைக்கு வேலை டாப் 10+6.5 by IdlyVadai
மூளையை கழட்டுவாங்களாம், ஸ்கேன் பண்ணுவாங்களாம், என்ன முடிவுன்னு பார்ப்பாங்களாம், இந்த வாரத்து சிறந்த நகைச்சுவைப் பதிவு இதுதானுங்க.
00000000000000000000
செழியனின் விகடன் சிறுகதை by சுரேஷ் கண்ணன்
ஆனந்தவிகடனில் இந்தக் கதையப் படித்த பின் ஒரு 4 மணிநேரம் எதுவுமே செய்யவோ, பேசவோ தோணவில்லை. காரணம் இந்த மார்க் மாதிரி ஒரு 100 பேரை பார்த்திருப்பேன், அவர்களோடு வாழ்ந்திருப்பேன். அவர்களின் கஷ்டமும், அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் .. சொல்லி மாளாது. சுரேஸ்கண்ணன்- இது இரண்டாவது முறையாக நான்நினைத்த கருத்தைச் சொல்லியிருக்கிறார். என்னமோ இதைப் படிச்ச பின்னாடி இன்னமும் மனசு கனத்துப் போவுது.
சிபஎபா’ன்னா?
இந்த வாரம் சங்கமம்- அழியாத கோலங்கள்ல இருந்து ஒரு பதிவு-
காசி- வலையுரையாடல் மறைந்த அண்ணல் சிந்தாநதி எழுதியது
Monday, July 19, 2010
சிபஎபா Jul-19-201
இதுவும் ஒரு மாதிரியான போலி பிரச்சினைதான், ஆனால் நல்லதுக்காக. போபால் பிரச்சினைக்காக செஞ்ச தில்லாங்கடிதான், செம கலக்கல் பதிவு.
கமலா தாஸின் கவிதை by Deepa
நல்லதொரு பிரதி. ஒரு பெண்ணின் சுதந்திரத்தை சொல்லும் இதுவும் ஒரு முறை. அழகு!
தவளைக்கல் by விக்னேஷ்வரி
எப்பவாவது இந்த மாதிரி உணர்வுபூர்வமான கதை படிக்கிறதுண்டு. ஆச்சர்யமான விசயம், விக்னேஷ்வரிக்கு இது முதல் கதையாம். நம்பவே முடியல, கதையப் படிச்ச பின்னாடி மனசு மேல ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டு அமுக்கிற மாதிரி உணர்வு. போனவராம் அம்மணி பொஸ்தகத்துல வேற வந்திருக்காங்க.
யூஸ் அண்ட் த்ரோ by ஈரோடு கதிர்
வாழ்க்கையே குப்பைமேடாகிட்டு இருக்கு, இதைச் சொன்னவரு அமெரிக்காகாரரு. ஈரோட்டுல இருந்து இது வேற பார்வை. உண்மையாவே மனுச ஜென்மங்கள் எல்லாம் உருப்படாமதான் போறோமா? அதனாலதான் முதியோர் இல்லங்கள் நம்மூர்ல பெருகுதா?
சின்னதா கருத்து/சமூக பார்வை, அசத்தலான நடை.புதுசா வந்தாலும் புல்லட் மாதிரி பாயுராரப்பா!(lateஆ வந்தாலும் latest -பழசு ஆயிருச்சு)
சகா’வரம் தோழி அப்டேட்ஸ் -- கார்க்கி-
கோவிகண்ணன் சாட்டையடிப் பதிவு, வழக்கம்போலதான்னாலும் பிடிச்சது, வழவழன்னு எழுதாம 140 எழுத்துக்குள்ள சுருக்கி அடிங்க கோவி..
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! by கானா பிரபா.
ஆடி1 அன்னிக்குனாலே நம்ம ஊர்ல எப்படியாப்பட்ட விசேசம் இருக்கும் தெரியுங்களா, தேங்காய் சுடறது என்ன? பக்கத்து வீட்டு அக்கா அவுங்க அம்மா வீட்டுக்கு போறதென்ன, மாமா அப்படியே சோகமாகுறது என்ன? பொண்டாட்டி ஊருக்குபோயிட்டான்னு எல்லாம் யாரும் கத்தறது இல்லே, ஆனா கண்டிப்பா ராத்திரியில மாமா வீட்டுக்குள்ளேயே தகிரியமா சரக்கடிச்சுட்டு இருப்பார், நாம போன சில்லி சிக்கனும், சோடாவும் உண்டு.
----------------------------------------
சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு by மருதன்
மருதனின் வரலாற்று பதிவுகள் எல்லாமே சுடும், இது வேற மாதிரி சுட்டிருக்கு. போனவாரம் சாருவுக்கு நேரம் சரியில்லை போல, ஏதோ வாசகர் ஆதங்கத்துல ஏதோ கேட்க போய் அவரைத் “தெருநாய்” ஆக்கிட்டார், ஆ.விகடன் மனம் கொத்திப்பறவையில் 'Nude' நந்துவை சுந்தர ராமசாமியின் பேரன்னு சொன்னாரு, அதுவும் உண்மையில்லை.கொஞ்சமாவது விசாரிக்க மாட்டாரா?
இந்த வாரம் முதல் சங்கமம்- அழியாத கோலங்கள்ல இருந்து ஒரு பதிவு-கொசுறுன்னு வெச்சுக்குங்களேன், இந்த வாரம் வாத்தி இளவஞ்சி எழுதிய வென்றுவாடி என் மகளே
Thursday, July 15, 2010
மீட்டரு பீட்டரு
---------------------------------------------
பீட்டரு: எகொஇச, இங்கே கலவரம் பண்ணினாவே போலீஸ் வராது, சில சமயம் காவல்துறையே கலவரம் பண்ணுவாங்க. எங்களைப் பொறுத்தவரையில் எதிர்கட்சி பண்ணினாத்தான் கலவரம். நாங்களே பண்ணினால் அது சட்டம் கடைமையைச் செய்யுதுன்னு சொல்லுவோம். அது நடுராத்திரியிலும் நடக்கலாம், கஞ்சாவை போலீஸே விளையவெக்கும்.
மீட்டரு: பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் அகில பாரத இந்து மகா சபை சார்பாக நித்தியானந்தா படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் கர்நாடக மாநிலத் தலைவர் வாசுதேவராவ் கஷ்யப்பா, ''நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தரைவிட வயதில் மூத்தவர். அவங்க ரெண்டு பேருக்கும் இருப்பது, அம்மாவுக்கும் மகனுக்கும் இருக்கும் தாய்-பிள்ளை(!) உறவு. இந்துக்களுக்கு எதிராக சதி செய்யும் விதமாகத்தான் காங்கிரஸ் இப்படிப்பட்ட கட்டுக் கதைகளைப் பரப்புகிறது!''
Monday, July 12, 2010
சிபஎபா Jul 12
குடும்பஸ்தினிக்குத்தான்(குடும்பஸ்தன் இருக்கும் போது குடும்பஸ்த்தினி இருக்கக்கூடாதா?) இந்த மாதிரி அடுத்த பக்கம் தெரியுது. பெற்றோர்களுக்கு நாம் கொடுக்கும் சிரமங்கள் தெரிவதில்லை. அவர்களும் கண்டுகொள்வதில்லை என்றுதான் நினைத்திருந்தேன். நானும் இது மாதிரி சில விசயங்கள் செய்திருக்கிறேன். ஆனால் வருடம் ஒரு முறை என்பதாலோ என்னவோ என் பெற்றோர் அதை விரும்புகிறார்கள். எல்லா வாரமும் இது மாதிரின்னா? அவங்க இன்னும் பெற்றோரா மாறலைன்னுதானே அர்த்தம்.
நாங்களும் மீன்களும்! by சந்தனமுல்லை
மீன் புத்தகம், மீன் படம், மீன் குழம்பு.. எப்படி யெல்லாம் தொடர்பு’படுத்தறாங்க’. அம்மாக்களின் வலைப்பூ காத்து வாங்குது அம்மாக்களே, அவுங்க அவுங்க பதிவுகள்ல பட்டைய கிளப்புறாங்க. இதுவரைக்கு தீஷு அம்மான்னா இப்போ இவுங்களும். ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க. நல்லதுதானே
திருந்தாத ஜென்மங்கள் (சிறுகதை) by KANA VARO
நல்லதொரு சிறுகதை, தேர்ந்த நடை. சஞ்சிகையில் வர வேண்டிய ஒன்று. கொஞ்சம் காலம் தாழ்த்திதான் படிக்க கிடைத்தது.
நோய்க்கூறு மனநிலை பத்ரி சேஷாத்ரி
இதை வேண்டுமென்றே போனவாரம் தவிர்த்தேன் காரணம், தமிழர்களின் நிலையைச் சொன்னால் கோவம்தான் வருது, ஏன்னா நாம அப்படித்தானே!
ரிக்சா..!!! by கார்த்திகைப் பாண்டியன்
அத்தனை ஆர்டர்களும் உனக்குத்தான்!” by Badri
அண்ணாச்சி! பழைய பாஃர்முக்கு வந்துட்டார் போல. நல்லதொரு பதிவை தந்திருக்காரு. நீங்க எப்ப இப்படி ஆர்டர் எடுப்பீங்க பத்ரி?
மோகம் 30 நாள் by ஆதிமூலகிருஷ்ணன்
என்ன செய்யலாம்? by யுவகிருஷ்ணா
பிச்சைக்காரர்களுக்கு’னு, தட்டவே ஒரு மாதிரியா இருக்கும் போது அவுங்க வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு நாளைக்கு அவுங்களை மாதிரி வாழ்ந்து பார்னு யாரோ சொன்னாங்க. அவுஙகளை வாழ வைக்க வேண்டியது சமூகத்தோட கடமையாச்சே. அதுக்கு ஒரு திட்டம் கொண்டுவந்தா நொல்ல சொல்லைன்னு சொல்லிகிட்டு. லக்கிகிட்ட இருந்து இப்படி ஒரு ஆழ்ந்த பதிவு படிச்சு பல வருசம் ஆச்சு. நல்ல பதிவு, சவுக்கடி மாதிரி. பாப் மார்லி மாதிரி இன்னொரு பதிவு வருமா பாஸ்?
நிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர் by Cable Sankar
கேபில், கலக்குறீங்க. அப்படின்னு சொல்லலாம்னா அது பதிவுக்கு மட்டும்தான். வெளிச்சம் போடப்படும் விசயங்கள் நிறைய இருக்கு. ப்ச்
இதன் பெயர் தனிமை by Vidhoosh(விதூஷ்)
ஜோசப் பால்ராஜ் – பேட்டி by பரிசல்காரன்
ஒரு புத்தகம், ஒரு போட்டி by என். சொக்கன்
Saturday, July 10, 2010
First Tamil blogpost - iphone
Tuesday, July 6, 2010
சிபஎபா- Jul-05-2010
- பெண்களூரு
கேட்கப்படாது, அப்போ வவாச இருந்துச்சு).இந்தப் பதிவு படிச்சதுக்கப்புறம், கொஞ்சமாச்சும் சிரிக்க முடிஞ்சது :)
வைங்கள். யாராவது எழுதி என்னத்த **ங்குன அப்படின்னு கேட்டா இதைப் படிக்கச் சொல்லுங்க.Hats Off Jackie!
//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... -->காதலிலும் , கவிதையிலும் எதார்த்தங்கல்தான் எப்பொழுதும் தலைமை தாங்குகின்றன . அதுபோல் உங்களின் கவிதையும்
அருமை //
சின்ன கவிதைதான், ஆனா என்னென்னமோ யோசனை பண்ண வெக்குது.
பல விசயங்களை உள்ளடக்கிய கதை. நான் வெளிநாட்டில் இருப்பதனால் என்னென்னமோ தோன்றியது. அருமையான சிறுகதை, தவற விடாதீர்கள்.
அபிஅப்பா.. என்ன சொல்றதுன்னு தெரியல. கண்ணீர் மல்கதான் இதை தட்டச்சுறேன். யாரோ ஒருத்தர்தான், ஆசிப் அண்ணாச்சிக்கு நடந்தபோது இதே உணர்வு வந்தது, மறுபடியும் இப்போ.
- ஏன் இந்தப் பதிவு : சிபஎபா’ன்னா?
- பழைய சிபஎபா’க்கள்
Sunday, July 4, 2010
குறள்-66-குழல் இனிது
ஆயிற்று எனக்கு ஒரு ஆண் வாரிசு பிறந்தும் அவன் தவழ ஆரம்பித்தும் ஒரு மாதம் ஆயிற்று. இன்று அனைத்தும் கூடி வர இல்ல திரையரங்கம் வாங்கிவிட்டு, கடையில் பணம் கட்ட வரிசையில் நிற்கிறேன். "மாப்ளே, மோனோ, ஸ்டிரியோ எல்லாம் சத்தம் தாண்டா போடும், இல்ல திரையரங்கம் மட்டும் தாண்டா இசையை சொல்லும்" 10வருடத்துக்கு முன் கல்லூரி நண்பன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
"சார், நீங்க வாங்கியிருக்கிற Home Theatre உலகத்துல சிறந்த மாடல்ல ஒன்னு" வீட்டில் Home Theatreஐ அந்தந்த இடத்தில பொருத்தி சரிபார்த்துவிட்டு போகும்போது பொறியாளர் சொல்லிவிட்டு சென்றார்.
மனதில் இறுமாப்பும், பெருமையுடன் இளையராஜாவின் திருவாசக வட்டை உள் செலுத்தி கேட்க ஆரம்பித்தேன். என் தந்தையும் என் கூட அமர்ந்து அமைதியானார். அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து வட்டையும் கேட்க ஆரம்பித்தோம். கல்லூரி நண்பன் சொன்ன மாதிரியே இதுதான் இசை, மத்ததெல்லாம் சத்தம்தான். அவன் வார்த்தைகள் ஒரு ஞானியின் தத்துவமாய் இப்போது தோன்றியது.
"என்னங்க" சத்தமாய் மனையாள் அழைக்க ஓடினேன்.
"இங்கே பாருங்க பையன் என்ன சொல்றான்னு"
ஆச்சர்யமாய் என் வாரிசை நோக்கினேன் "ம்ம்மா, ம்ம்மா" பேச ஆரம்பித்தது என் பிஞ்சு.
மனசுக்குள் ஆயிரமாயிரம் பட்டாசுகள், பட்டாம்பூச்சிகள்,.. என்னவென்று சொல்ல வார்த்தைகளே இல்லை. வாங்கிய Home Theatre சத்தமாய் ஒரு கர்னாடக இசையை ஒலிக்க "அப்பா அந்த சத்தத்தை குறைச்சுட்டு இங்கே வாங்க உங்க பேரன் என்ன சொல்றான்னு கேளுங்க"
அந்த சத்தத்தை அணைத்துவிட்டு என் தந்தைக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்க அறைக்குள் வந்தார்.
குறள்:
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழைலைச்சொல் கேளாதவர்
அதிகாரம்:மக்கட் பேறு(குறள் 66)
தம் மக்களின் மழலைச்சொல்லக்கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்
Thursday, July 1, 2010
ஆணின் விந்து
இன்று எனக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. ’அதோ அந்தப் பெண் பாரேன், எவ்வளவு இறக்கமாய்..’ என்று மனசு சொல்லுமுன்னே அவள் முன்னாடி நின்றிருந்தேன். எங்கேயோ பார்த்தவாறே, அவளைக் குனிந்து பார்க்கையிலே, ஆஹ்ஹ். கருப்பு வளையம் தெரியுமளவுக்கு இறங்கியிருந்தது மேலாடை. என்ன நினைத்தேனோ தெரியவில்லை. அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு, ரகசியமாய் உடையைச் சரி செய்ய சொன்னேன். சிரித்தபடியே, சாவதானமாக சரி செய்தாள். இப்பொழுது கருவளையம் மறைந்தது, சரியா என்றபடி என்னைப் பார்த்தாள், அதாவது மீதமிருக்கும் அனைத்தையும் அவள் அனுமதியுடனே ஐந்து நிமிடம் ரசித்துவிட்டு, சரியென்றேன். அவளுக்கும் தெரியும் நான் ரசித்தது, எனக்கும் தெரிந்தது நான் ரசித்ததை அவள் ரசித்தது.
இப்படியாகவே ரயிலில் அவளைச் சந்திக்கும் நாட்கள் அதிகமானது, சில நேரங்களில் இன்று ’அது’ தெரியவில்லையே என்று சொல்லிவிட்டே ரசிக்க ஆரம்பித்தேன். இத்தாலியப் பெண்ணாம், தனியாய்தான் இருக்கிறாளாம். ஒரு நல்ல வெள்ளியன்று, எங்காவது வெளியே செல்லலாமா என்றாள். அரை இருட்டில் குடித்தோம், ஆடினோம்.. தடவினோம். முடிந்தவரையில் என் விரல்களால் தடவி சுகம் கண்டபோது அவள் சிரித்தபடியே வீட்டுக்குப் போலாமா என்றாள்.
அவளது வீடு சிறியதுதான், அவ்வளவுதான் கலைக்கவைத்திருக்க முடியும் என்று சொல்லுமளவுக்கு சுத்தமாய் இருந்தது. அவளுக்கு ஒரு பழக்கம், கூடலின் போது குடிப்பாளாம். வியப்பாய் இருந்தது, உணர்வில்லாதவளோ என்று கேட்ட பொழுது, ’போதையேறிக்கொண்டே சுகம் பழகிப்பார்’ என்றாள். ’சுகம் நீ குடுக்கும்பொழுது போதேயேற்றிக்கொள்கிறேன்’ என்றேன்.
உடலிறவில் எனக்கு முதல் முறை இது என்று சொன்னபோதுதான் என்னை நம்ப மறுத்தாள். பதினைந்து நிமிட வாக்குவாதத்தில் என்னை இறுதியாக நம்பினாள். கூடலில் மதுவின் முதல் விழுங்கை ஆரம்பித்தாள் நான் முடித்திருந்தேன், மேலும் வற்றியிருந்தேன். உதட்டின் ஓரம் ஒரு சிரிப்பை போதையோட சிதறவிட்டு இரண்டாம் விழுங்கிற்கு ஆயத்தமானாள். அவளது ஐந்தாம் விழுங்கில் நான் இரண்டாம் சுற்றிற்கு ஆயத்தமானேன். இப்பொழுது அவள் அதிகம் விழுங்கிருந்தாள், பிறகு விழுங்குவதை நிறுத்துவிட்டு என்னோடு பயணித்தாள்.
இப்படியாக வார இறுதியல்லாமல், பல நாட்கள் அவள் மது விழுங்கினாள். பல நாட்கள் அவள் மதுக்கிண்ணம் தீர்ந்த பிறகும் நான் அயராது இருந்திருந்தேன். நாட்கள் நகர்ந்தது....
இன்றும் எனக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. இத்தாலியப் பெண் தூரமாய் அமர்ந்திருந்தாள், கையசைத்து சிநேகமாக சிரித்தாள். அவளுக்கு எதிர் திசையில் நகர்ந்தேன். ’அதோ அந்தப் பெண் பாரேன், எவ்வளவு இறக்கமாய்..’ என்று மனசு சொல்லுமுன்னே அவள் முன்னாடி நின்றிருந்தேன்.அவள் லத்தீனோப் பெண்ணாம். எங்கேயோ பார்த்தவாறே, அவளைக் குனிந்துப் பார்த்தேன்....
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
-
'சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது...' & பிரமிளின் புகழ்பெற...
