'நாகேஷுடன் நெருங்கிப் பழகியவர் நீங்கள். அவரது அன்பைப் போற்றும்விதமான நினைவைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
'' 'நல்லவன் வாழ்வான்’ படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு வந்தபோது -
அந்தக் கம்பெனி இருக்கும் இடம் தெரியாததால் நாகேஷை உடன் அழைத்துச்
சென்றேன். நாகேஷ், சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலம் அது.
'நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெளிவராத நேரம். 1960-ம் ஆண்டு. டைரக்டர் திரு.ப.நீலகண்டன் அறைக்குள் நானும் நாகேஷ§ம் நுழைந்தோம்.
'உங்கள் இருவரில் யார் வாலி?’ என்று பா.நீலகண்டன் வினவினார்.
'நான்தான்’ என்றேன்.
'உடன் வந்திருப்பது யார்?’ என்று வினவினார்.
'என் நண்பர் நாகேஷ்’ என்றேன்.
உடனே - 'தம்பி! நீ வெளியே இரு... நீயா பாட்டெழுதப்போறே?’ என்று நாகேஷை முகத்தில் அடித்தாற்போல் வெளியேறச் சொன்னார் நீலகண்டன்.
இதை மனதில் வைத்துக்கொண்டு நாகேஷ் விரும்பியிருந்தால் - பின்னாளில் 'ப.நீலகண்டன் இயக்கினால் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் ப.நீலகண்டன் அவர்களுக்குப் பல எம்.ஜி.ஆர். படங்கள் வாய்க்காமல் போயிருக்கும்.
நாகேஷ் அப்படிச் சொல்லவில்லை; THAT IS NAGESH!''
08-ஆகஸ்ட்-2012