அந்த பெண்ணிற்கு சுமாராக 42-45 வயதிற்குள் இருக்கலாம்.. அந்தக் கால பெண்கள், 40 வயதுகளில் மகளிர் சபாக்களுக்குப் போவார்கள். வீட்டுக்காரரும் வேலைக்குப் போய்விட, பசங்களும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போய்விட நேரத்தை தள்ள முடியாமல் கிளப்பு கடைக்குள் தஞ்சம் புகுவார்கள். அதுவரைக்கு வராத பெண்ணியம் வரும், கை வைக்காத ஜாக்கெட்டும், பொருத்தமே இல்லாத உதட்டுச்சாயமும், நுனிநாக்கு ஆங்கிலமும் வரும். இதுவெல்லாம் 80களின் சினிமாவில் நடப்பதாக எண்ணிக்கொள்ளவும்.
சரி, நடந்த விசயத்திற்கு வருகிறேன். புது வேலையிடம், அறிமுகங்கள் ஆகும் நேரம் இது. என் தலை ஒரு ஆள் சொல்லி சந்திக்கச் சொல்லியிருந்தார். அது நம்மூர் வடக்கத்து அம்மணி என்று பேரைப் பார்த்தவுடனே தெரிந்தது. சில பல ஈமெயில்களுக்குப் பிறகு அம்மணி என்ன சந்திக்க வருவதாகச் சொன்னார். சொன்ன மாதிரியே அம்மணி நேராக என் இடத்திற்கே வந்தார், என் பெயரைச் சொல்லி நாந்தானா என உறுதி செய்துகொண்டார். பிறகு ஆரம்பித்தார், சரியா 10-12 நிமிடங்களுக்கு இடைவிடாத பேச்சு அதுவும் பூராவும் ஹிந்தியில், வேலை பற்றி சொல்ல ஆரம்பித்தார். இடை இடையே ஆங்காங்கே சிரிப்புகள் வேற. கண்ணை உருட்டி உருட்டி வேறு பேசிக்கொண்டே இருந்தார். எதுக்கும்மா இந்த ஜோதிகாத்தனம் என்று கூட கேட்க நினைத்தேன். நினைத்ததோடு சரி.. பேசி முடித்து ஒரு பெரிய மூச்சை வாங்கிவிட்டு சரியா என்று ஆங்கிலத்தில் கேட்டார். நானோ, சொல்வதற்கு 2 இருக்கிறது என்றேன்.
அவை 1. யார் பேசினாலும் அவரை இடை மறித்துப் பேசும் பழக்கம் எனக்கில்லை, அவர் பேசி முடிக்கும் வரை காத்திருப்பேன்.
2. எனக்கு ஹிந்தி தெரியாது என்று சொன்னேன்.
எங்கேயோ பல்பு உடைந்த சப்தம் கேட்டது, மனதிற்கு ஒரு இனம் புரியாத வன்மம்.
பாவம் நேத்து போன அம்மணிதான், நான் போட்ட ஈ-மெயிலுக்கு கூட இன்னும் பதில் போடவே இல்லை.