1994/95 ஆக இருக்கும், என்னுடைய கல்லூரியில் சிந்தனை மன்றம் என்று ஒன்றுண்டு. அதாவது இலக்கியம், கலை சம்பந்தப்பட்ட ஒரு மன்றம். பெரிய கல்லூரி என்பதால் சிந்தனை மன்றத்துக்கு பெரிய ஆட்களை அழைப்பது வழக்கம். பெரிய கூட்டமென்று இருக்காது. 30-40 பேர் இருப்பார்கள். அனைவரும் இலக்கியம் /தமிழ் மீது பற்று கொண்டவர்கள்.
அந்த வருடத்திற்கு பாலு மகேந்திரா, எடிட்டர் லெனின், மற்றும் நாடகச் சக்ரவர்த்தி எஸ்.வி.சேகர் ஆகியோரை அழைத்திருந்தனர். நான் வரவேற்புரை ஆற்றினேன். மற்றும் சில பொறுப்புகளை ஏற்றிருந்தேன்.
ஒரு பயிற்சி வகுப்பு போல நடந்தது. லெனின் அவர்களது குறும்படம் காட்டப்பட்டது. பாலு மகேந்திராவின் பாட்டி - வடை சுட்ட கதை சொல்லப்பட்டது. எஸ்.வி சேகரின் அரசியல் சார்ந்த ஒரு பேச்சும் இடம்பெற்றது.
இதன் முடிவில் அனைவரும் சிறப்பு விருந்தினர் அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தனர். முடியும் தருவாயில் மைக் மேடையில் நின்றிருந்த என்னிடம் பாலு மகேந்திரா வந்தார், “நானும் இது மாதிரி பலருக்கும் கையெத்து போடனும் சார், அதுக்கு என்ன சார் பண்ணனும் என்று கேட்டேன். இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்த்திருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் அதே அமைதியான குரலில் ”அதுக்கு நீ நிறைய கத்துக்கனும், படிக்கனும், காத்திருக்கனுமே” என்றார்
“கற்றுக்கொள்வேன், காத்திருப்பேன்” என்றேன்.
ஆனால், காலம் கடந்துவிட்டது. பாலு மகேந்திரா என்னும் திரைத்துறையின் பிதாமகன் காலமாகிவிட்டார். ஒரு லாயக்கியுமில்லாத/விசயமும் அறியாத என்னிடம் அவர் மேலும் நிறைய பேசிக்கொண்டிருந்தார். நான் முதலில் வெகு நேரம் உரையாடிய பிரபலம் அவர்தான். என்னை மதித்து பேச வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஆனாலும் பேசியிருந்தார். சினிமாவில் ஏதாவது சாதித்த பிறகே இந்த சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் காலன் வென்றுவிட்டான்.
நான் இன்னும் காத்திருக்கிறேன். கற்றுக்கொண்டுவிட்டேனா என்று தெரியவில்லை.
உங்க ஆன்மா சாந்தியடைட்டும் சார்.

This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகாலன் வென்றுவிட்டான் என்பதை ஒரு கணம் மறந்தே விட்டேன்.அத்தவறால் போட்ட பின்னூட்டங்களுக்கு ஒரு ஸாரி!
ReplyDeleteஇன்னும் நம்பமுடியவில்லை :(
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete