ஒவ்வொரு உலகப் படம் பார்த்து முடிச்சதும் மனசு கனமா இருக்கும் (பின்னே ரஜினி படமா சந்தோசமா இருக்க), அப்படியொரு சூழலுல் அன்னிக்கும் நடந்துச்சு. Turtles Can fly பார்த்து முடிச்சதும், பால்கனியில் உக்காந்து காத்து வாங்கிட்டிருக்கும்போது தோணின கதைதான் கீழே இருப்பது. இது நடந்து 6-7 மாசம் இருக்கும்.
அமெரிக்காவுக்கு தன் பேரனைப் பார்க்க இந்தியாவிலிருக்கும் கிராமத்திலிருந்து வருகிறார் தாத்தா. அவன் பிறந்ததிலிருந்து அவனை நேரில் பார்க்காமல் கணிணி மூலமாகவே பார்த்து பார்த்து ஏங்கியவருக்கு நேரில் பார்க்கும் ஆவல் எழ, உடனே கிளம்பிவிட்டார். பேரனுக்கு இப்போது 9 வயது. ஊரிலிருந்து வரும் தாத்தாவைப் பார்க்க மிகுந்த ஆவலோடு இருக்கிறான் பேரன். தாத்தாவுக்கும் கொள்ள ஆசை. வந்திறங்கியவுடன், தாத்தா பேசுவது பேரனுக்குப் புரியவில்லை. பேரன் பேசுவது தாத்தாவுக்குப் புரியவில்லை. பேரனை பள்ளிக்கூடம் நடந்தே கூட்டிப் போவது, கால்பந்தாட்டம் என அனைத்தும் பேரனைச் சுற்றியே வருகிறார் தாத்தா. ஆனாலும் இருவரும் பேசிக்கொள்வது புரியாமல். இருவருக்குமான பாசம் மிகவும் அதிகரிக்கிறது, தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என அறிந்த பேரன் அப்பா அம்மா ஊருக்குப் போனாலும் சரியாக கவனித்துக்கொள்கிறான். தன் நண்பர்களுக்கு தாத்தாவை அறிமுகம் செய்கிறான். பெருமை கொள்கிறான். தாத்தா சொல்லிக்குடுக்கும் செஸ் விளையாட்டை மிக சிரத்தையாக கற்று, பள்ளியில் நடக்கும் போட்டியில் வெல்கிறான். இதற்கு காரணம் தாத்தாதான் எனச்சொல்லி மேடையில் சொல்கையில் தாத்தாவுக்குப் மொழி புரியவில்லை. ஆனால் அவன் சொல்ல வந்தது புரிகிறது. தாத்தா ஊருக்குப் போகும் போது அவர் மொழியில் சொல்கிறார் நம் இருவருக்குமான பாலம் பாசம்தான், மொழியிருந்திருந்தால் நன்றாக இருக்கும் எனச் சொல்லிவிட்டுச் செல்கிறார். அப்பா மூலம் இதை மொழிபெயர்த்து அறிந்து கொண்ட பேரன் தாத்தா மொழி கற்ற பின் தான் தாத்தாவை (ஸ்கைப்பில்)_ பார்ப்பேன் எனச் சொல்லிவிடுகிறான். நன்றாக பேச ஆரம்பித்து தாத்தாவுக்கு ஸ்கைப்பின் மூலம் அழைக்கிறான். தாத்தா பேசினாரா, எவ்வாறு அவருடன் பேசினார், மகிழ்ந்தாரா என்பதுதான் இறுதிக்காட்சி.
புலம் பெயர்ந்தவுடன், எவ்வாறு நமது கலாச்சாரம் மற்றும் மொழி எப்படியெல்லாம் மாறிப்போகிறது என்பதுதான் அடிநாதம்.

உங்கள் அருமையான இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/12/blog-post_26.html
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரிhttp://blogintamil.blogspot.com/2013/12/blog-post_26.html?showComment=1388023369804#c6732373831674887856
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய தலைமுறையை நிதர்சனமாக எடுத்துரைத்த அழகான பதிவு..பாராட்டுக்கள்..
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..!