நன்றாக கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஒரே காட்சி, ஒரே போல கதாப்பாத்திரங்களுக்கு, அதுவும் ரஜினியின் படங்களிலேயே பயன்படுத்தியிருப்பார் கே.எஸ். ரவிக்குமார்.
இரு காட்சிகளும், சூழ்நிலைகளும், ஒன்று போலவே இருக்கும். அதுவும் ரஜினிக்கே வைத்திருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். துணிச்சல்தான். விடுங்க, விசயம் அது இல்லை இப்போ. இன்று இணையத்தில் பரவலாக ஒரு செய்தி அடிபடுகிறது. அதாவது கோச்சடையானின் கதை என்னவென்பதே அது. இது உண்மையாகக் கூட இருக்கலாம்.
கதை இதோ.
இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றாலும், கதையிலும், மற்ற தயாரிப்பு பின்னணியிலும் கே.எஸ்.ரவிக்குமாரின் முழுப் பங்கு இருக்கிறது என்பது பலரும் அறிந்த விசயம்தான். ஆனாலும், படத்தின் கதை வசீகரிக்கத்தான் செய்கிறது. அதுவும் Motion Capturing மூலம் படமாக்கப்படும் முதல் முழு நீள தமிழ்த் திரைப்படம் என்கிற போதே ஒரு ஈர்ப்பு வரத்தான் செய்கிறது. சும்மாவே ரஜினி கார்ட்டூன் அளவுக்கு படம் காட்டுவாரு, இதுல கார்ட்டூன் படமென்றால், எப்படியிருக்குமென்று யோசித்துப்பாருங்க. ரஜினி என்றாலே மேஜிக்தானே, அந்த மாதிரியான ரஜினியைப் பார்க்கத்தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். சமீபகாலமா வெளிவந்த அனைத்து ரஜினி திரைப்படங்களும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் "அந்த மேஜிக்" கொண்ட ரஜினி இல்லாமல்தான் வந்திருக்கிறது.
பல தடைகள், பல வருடங்கள், ஆனாலும் படத்திற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள், அதில் நானும் ஒருவன். ரகுமானின் இசை, வைரமுத்துவின் பாடல் வரிகள்...
கோச்சடையானே வா! வீறு கொண்டு வா! சரித்திரமே வா!
- முத்து படத்தில் ஒரு காட்சி, சொத்துக்காக அண்ணனிடமிருந்து சொத்துக்களை பறிக்க முயற்சிப்பார் தம்பி ரகுவரன். இதனையறிந்த அப்பா-ரஜினி அனைத்து சொத்துக்களையும் ரகுவரனுக்கு எழுதி வைத்துவிட்டு, சாமியாராகப் சென்றுவிடுவார்.
- சொத்துக்களைப் பிரித்துத் தரச்சொல்லி அண்ணன் சிவாஜியிடம் முறையிடுவார் தம்பி மணிவண்ணன். சொத்துக்களைப் பிரிக்க மனமில்லாத சிவாஜி, தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மணிவண்ணனுக்கே கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுவார், இது படையப்பாவில்.
இரு காட்சிகளும், சூழ்நிலைகளும், ஒன்று போலவே இருக்கும். அதுவும் ரஜினிக்கே வைத்திருப்பார் கே.எஸ்.ரவிக்குமார். துணிச்சல்தான். விடுங்க, விசயம் அது இல்லை இப்போ. இன்று இணையத்தில் பரவலாக ஒரு செய்தி அடிபடுகிறது. அதாவது கோச்சடையானின் கதை என்னவென்பதே அது. இது உண்மையாகக் கூட இருக்கலாம்.
கதை இதோ.
தந்தை ரஜினிகாந்த் ஒரு நாட்டை திறம்பட நல்லமுறையில் ஆண்டு வருகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். ஆனால், நல்ல ஆட்சியை நடக்கவிடுவார்களா துரோகிகள்? அவரது அமைச்சரவையில் இருக்கும் சிலர் அவருக்கு எதிராக சதி செய்கின்றனர். அசிங்கமான உத்திகளைக் கையாண்டு தந்தை ரஜினியின் ஆட்சியைக் கவிழ்த்து விடுகிறார்கள். அப்போதுதான் மகன் ரஜினிகாந்த் பிறக்கிறார். திறமையான தந்தையின் பயிற்சியில் திறமைசாலியாக வளர்கிறார் மகன் ரஜினிகாந்த். பிறகு காட்டில் மறைவாக தனிக்குழு ஒன்றை அமைக்கிறார். தந்தையின் ஆட்சியைக் கவிழ்த்த துரோகிகளின் கையிலிருக்கும் நாட்டைப் புரட்சி செய்து வெல்கிறார்.
இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றாலும், கதையிலும், மற்ற தயாரிப்பு பின்னணியிலும் கே.எஸ்.ரவிக்குமாரின் முழுப் பங்கு இருக்கிறது என்பது பலரும் அறிந்த விசயம்தான். ஆனாலும், படத்தின் கதை வசீகரிக்கத்தான் செய்கிறது. அதுவும் Motion Capturing மூலம் படமாக்கப்படும் முதல் முழு நீள தமிழ்த் திரைப்படம் என்கிற போதே ஒரு ஈர்ப்பு வரத்தான் செய்கிறது. சும்மாவே ரஜினி கார்ட்டூன் அளவுக்கு படம் காட்டுவாரு, இதுல கார்ட்டூன் படமென்றால், எப்படியிருக்குமென்று யோசித்துப்பாருங்க. ரஜினி என்றாலே மேஜிக்தானே, அந்த மாதிரியான ரஜினியைப் பார்க்கத்தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். சமீபகாலமா வெளிவந்த அனைத்து ரஜினி திரைப்படங்களும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் "அந்த மேஜிக்" கொண்ட ரஜினி இல்லாமல்தான் வந்திருக்கிறது.
பல தடைகள், பல வருடங்கள், ஆனாலும் படத்திற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள், அதில் நானும் ஒருவன். ரகுமானின் இசை, வைரமுத்துவின் பாடல் வரிகள்...
கோச்சடையானே வா! வீறு கொண்டு வா! சரித்திரமே வா!
No comments:
Post a Comment