இணைய மொண்ணைகள் :
எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு ஒன்று வாசக வட்டத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மைதான். அதற்கான விளக்கத்தையும், சரியாகவே சொல்லியிருக்கிறார். ஆமாம் இணையத்தில் பெரும்பான்மையினர் மொண்ணைகள்தான். நுனிப்புல் மேய்தல் கூட்டம்தான் அதிகம், ஒரு எழுத்தாளனின் உண்மையான கருத்தை படித்து அறிவதற்கு கூட ஆர்வம் காட்டுவதில்லை. இவர்களை எல்லாம அவர் மொண்ணைகள் என்று சொன்னதில் தவறேதுமில்லை. #iSupportJemo [1] [2]
IPL-6
இறுதி ஆட்டத்தில் சென்னையும் மும்பையும் மோதும், அதில் மும்பை வெற்றி பெரும் என்று நான் கொஞ்சம் நாளுக்கு முன்னமேயே கணித்து ட்விட்டரில் சொல்லியிருந்தேன். அதுபோலவே நடந்தது. விசயம் அதிலில்லை, சச்சின் ஆட்டதின் போது கண்ட பேட்டியும், ஒரு குழந்தையைப் போல் அவர் குதூகலித்தையும் மறக்கவே முடியவில்லை, எத்தனாயிரம் ஆட்டங்கள் பார்த்திருப்பார், ஆனாலும் புதிதாக ஆடவருபவனின் உணர்ச்சியைப்போலவே இருந்த அந்த மனிதனின் குணம்தான் இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
தோனி - கடைசிவரைக்கும் தன்னாலானதை இறுதி ஆட்டத்தில் செய்தார். கடைசி பந்தில் 29 ஓட்டங்கள் தேவை, இது சாத்தியமே இல்லை என்றாலும், பெளலிங்கில் வைட் போட்டது, ஃபீல்டிங்கை மாற்றியது என மும்பை செய்தது எல்லாம் தோனி என்கிற பயமே காரணம். வெற்றியோ தோல்வியோ, விசில் போடுறதை மட்டும் நிறுத்தப் போவதில்லை நாங்கள். மும்பை அணியினருக்கு வாழ்த்துகள் #விசில் போடேய்
போன வாரம் ஒரு கடற்கரைக்குப் போனோம். அப்ப இந்தப் பெயர்ப்பலகை கண்ல பட்டுச்சு. அப்ப சுட்டது இது.
(சுட்டது-Shoot புகைப்படம் சுட்டேன், சரியா வராது இல்லே?)
சினிமாப் படமோ, குறும்படமோ : எதை எடுத்தாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாய்ல் 15 விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். சினிமாப் பிரியர்கள் படிக்க வேண்டிய உபயோகமான 15 குறிப்புகள், http://www.moviemaker.com/articles-directing/danny-boyle-15-golden-rules-filmmaking/
இன்னிக்கு காலையில கனவுல வந்தது, தாவரங்கள் இல்லைன்னா உலகம் பொய்த்துப்போகும் அப்படின்னு என்னமோ ஒரு கனவு, அதுல வந்த ஒரு வார்த்தையை படமா போட்டுப் பார்த்தேன். கனவுல கூட நமக்கு உலகத்தைக் காக்கிற சிந்தனைதான் வருதுன்னா பாருங்களேன்.
TMS
தமிழ் சினிமாவுலகுக்கு மாபெரும் இழப்பு. இப்ப எல்லாம் சில பாடல்களைக் கேட்டா சில சம்பவங்கள் நினைவுக்கு வரும்,. சில பாடல்களை கேட்டவுடனே உடனடியா, ரொம்ப நாளா கூப்பிடாத கல்லூரி/பள்ளித் தோழனையோ தோழியையோ கூப்பிட்டு அந்தப் பாட்டை கேட்டதையும், அதுக்கு சம்பந்தமான சம்பவத்தை நினைச்சி சிலாகிச்சி பேசிக்குவோம். அப்படித்தான் ஒரு தலைமுறையே இந்த மாதிரி சம்பவங்களுக்கான ஞாபகத்தை வரவழைக்கக் கூடியவர் TMS. எத்தனாயிரம் பாடல்கள் பாவனைகள்? எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் , சிவாஜிக்கு ஒரு மாதிரியும், முடியுமா? ஒரு தலைமுறையையே தன் குரலால அடிமைப் படுத்தி வெச்சிருந்தவரு. இன்னிக்கு காலையில முருகன் பாட்டுக்களை கேட்டுக்கொண்டிருக்கும் போது இந்தப் பாட்டும் வந்துச்சு. "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" பாட்டை இறைஞ்சி பாடியிருக்காரு. நாமளே முருகன் கிட்டே நேரடியா கேட்கிறமாதிரி நமக்குத் தோணும். உங்களுக்கு ஏது ஐயா சாவு. எங்க மனசுல எப்பவுமே இருப்பே ராசா..
எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு ஒன்று வாசக வட்டத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மைதான். அதற்கான விளக்கத்தையும், சரியாகவே சொல்லியிருக்கிறார். ஆமாம் இணையத்தில் பெரும்பான்மையினர் மொண்ணைகள்தான். நுனிப்புல் மேய்தல் கூட்டம்தான் அதிகம், ஒரு எழுத்தாளனின் உண்மையான கருத்தை படித்து அறிவதற்கு கூட ஆர்வம் காட்டுவதில்லை. இவர்களை எல்லாம அவர் மொண்ணைகள் என்று சொன்னதில் தவறேதுமில்லை. #iSupportJemo [1] [2]
=======================================