Friday, February 1, 2013

விஸ்வரூபம்: கத்தரிக்க வேண்டிய காட்சிகள் - பொது புத்தியாளன் பார்வையில்

த்தரிக்க வேண்டிய காட்சிகளை கடைசியில சொல்லியிருக்கேன், இப்போ படத்தைப் பத்தி பார்ப்போம்.  விருப்பமில்லாதவர்கள் சிகப்பு வரிக்கு நேரடியாகப் போயிடலாம்



படம் பற்றி என் எண்ணம் : 
 படம் ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடக்கிறது. தமிழ்நாட்டைப் பற்றி பேசுவது 3 வார்த்தைகள் மட்டும்தான். அதிலும் குறை எல்லாம் இல்லை. காபூல் எக்ஸ்ப்ரஸ் படத்திலும், The Siege படத்திலும் காட்டப்பட்டதை விட இந்தப் படத்தில் காட்டப்பட்டது குறைச்சலே. இதில் கமல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது.

கமல் கதாநாயகனாக உருமாறும், உருவெடுக்கும் காட்சியில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோருக்கு வைத்து வந்த Opening Sceneவிட அபாரம். அதுவும் இரண்டாம் முறை காட்டப்படும் போது  Simple Fantastic. சண்டைக்காட்சி அமைத்தவருக்கு என் பாராட்டுகள். ராகுல் போஸ், கமலுக்கு இணையான ஒரு கதாபாத்திரம், உண்மையைச் சொல்லப் போனால், சில இடங்களில் கமலை விட அதிகமாக Score செய்து விடுகிறார். படத்தில் கதாநாயகனும் இஸ்லாமியர், வில்லனும் இஸ்லாமியர்.

பூஜா குமாரும், ஆன்ட்ரியாவும் படம் நெடுக வருகிறார்கள். விசாரணைக் காட்சியில் ஆண்ட்ரியாவின் தெனாவெட்டான நடிப்பு Simply Superb. பூஜா குமாரின் கதாபாத்திரம் இப்படியுமில்லாமல் அப்படியுமில்லாமல், ம்ம்ம், கதையில வந்துட்டே இருக்காங்க.

கமலின் ஆரம்ப காட்சிகளுக்கான நடிப்பு அபாரம், அது எப்படிங்க, அவ்வை சண்முகியே பெருசா நினைச்சா இதுல இன்னொரு பரிமாணம். அவரைப் பத்தி புகழ என்ன இருக்கு, அவருக்கு நடிக்க வரும், வருது.

பிரச்சினையென இஸ்லாமியத் தலைவர் பேசிய பேச்சுக்கும் படத்துக்கும் சம்பந்தமேயில்லை. ட்விட்டரில் எழுதியதை இங்கே பகிர்கிறேன்

"பகடைக் காய்களுக்கு கடைசிவரை தாங்கள்தான் பகடைக் காய்கள் என்றே உணர்வதில்லை" 

அவர்களுக்கு ஒன்று, இது உங்களுக்கான களமில்லை, தயவுசெய்து உங்கள் மதத்தினரை களங்கப்படுத்தாதீர்கள், அவர்களுக்கு நீங்கள் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்று மறந்துவிடாதீர்கள். நீங்க சொல்லும் சொல்லை வைத்துதான் உங்களையும் உங்கள் மதத்தவரை மற்ற மதத்தினர் பார்க்கிறார்கள், அதுவும் இந்த சினிமாவை வைத்து, நீங்கள் பேசிய பேச்சுக்கு, என்னுடைய வருத்தங்களும் கண்டனங்களும்.

டம், Hollywood தரமென்றால் ஆமாம் என்று சொல்வேன். ஆனால் கமல் Hollywood தரத்தில் முந்த வேண்டுமென்றால், கமல் எடுத்துவைத்திருக்கும் முதல் படி மட்டும்தான் என்றுதான் சொல்வேன். அதற்கு பொருளாதார Constraint இருக்கும் என்று நம்பினாலும், முதல் படி எடுத்து வைத்துவிட்டார் என்றே சொல்வேன்.

இப்போ என் பார்வையில் தவிர்த்திருக்கவேண்டிய காட்சிகள்:

1. பாப்பாத்தி, இந்தா இந்த கோழியை ருசி பார் - இந்தக் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு பிராமணனையும் பாதித்திருக்கும். நானறிந்தவரையில் பிராமணர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கவில்லை.  இந்த இடத்தில் நான் சொல்லிக்கொள்வது - நான் பிராமணன் இல்லை. பொதுப் புத்தியாளன்

2. ஆங்கிலேயப் பத்திரிக்கையாளரை கழுத்தை அறுத்துக்கொள்ளும் காட்சியில் பின்னணி இசை(I see the YouTube video shows as it). இதே போல பல இடங்களில் இது மாதிரியான இசை வருகிறது. இது ஒரு சம்பவத்தைப் பொதுப்படுத்துதல், இதை எதிர்க்கிறார்கள் என்றால் தவறேயில்லை. என் கண்டனங்கள் சேர்த்துக்குங்க.

3. தாலிபான் குழந்தைகள் விளையாடுமிடத்தில் கூட விரலை துப்பாக்கியாக்கி விளையாடுவதாக காட்டியிருப்பது எனக்கு சரியாகப் படலைங்க, உண்மையாகவே இருந்தாலும் (பத்தி 2க்கான பதிலே இதிலும்,  பிற்பாதியில் அதை மீட்டெடுக்கும் காட்சிகள் வந்தாலும் கூட)

படத்தில் காட்டப்பட்ட மீதிக் காட்சிகள் எல்லாம் பல படங்களில் காட்டிய, செய்திகளில் பார்த்த, பழைய மாவையே திரும்ப அரைத்த காட்சிகள்தான்.

தமாஷ்தான் என்று கமலும், ராகுலும் பேசிக்கொள்ளும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. எல்லாத்தையும் தமாசா எடுத்துக்க முடியல.

எனது முடிவு: இதுவொரு மசாலாப் படம், குழந்தைகளுக்கானது அல்ல, ஒரு முறைக்கு இரு முறை கூட பார்க்கலாம். ஆனால் கமல் இந்த மாதிரி சர்ச்சைகளை விட்டு வெளிவரவேண்டும். நாட்டில் பல விசயங்கள் திரையில் வராமல் இருக்கின்றன, அதையும் மனதில் வெச்சிக்குங்க, இல்லை, இது அமெரிக்காவை திரும்ப பார்க்க வைக்கும் படமென்றால் இந்த மாதிரியும் படமெடுக்கலாம், ஆனால் இந்த ஒரு முறைதான் இருக்கிறதா என்றால், மன்னிக்கவும்  கமல் சார், எடுக்கவேண்டியது நிறைய இருக்கு, வெளியே வாங்க.

9 comments:

  1. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் பொறுப்போடு எழுதியிருக்கீங்கன்னு மட்டும் தெரியுது. நீங்கள் கூறியிருக்கும் பாயிண்ட்ஸ் எல்லாம் very valid.

    amas32

    ReplyDelete
  2. எனக்கு ஒரு ஐடியா. இந்தப் படத்தை ஒவ்வொரு ஊருக்கும் தகுந்த மாதிரி ஒவ்வொரு version தயார் பண்ணீட்டா என்ன? நல்லா பிசினஸ் ஆகுமே?

    ReplyDelete
  3. அந்த கதக்' பாடல் பற்றி ஒன்னுமே எழுதலயே?

    btw, உங்க ப்ளாக் பேஜ் லோட் ஆக 3 நிமிஷம் மேல ஆகுது.. :(

    ReplyDelete
  4. //இந்தக் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு பிராமணனையும் பாதித்திருக்கும்//

    நீங்க புதுசா கிளப்பிவிடற மாதிரி தெரியுது...ஏன்ன்ன்?!

    ReplyDelete
  5. எங்க வீட்டிற்கு வரும் என் மகனின் ஃப்ரெண்ட்ஸ்(பெண்கள்) சிக்கன் சமைத்திருந்தால் என் அம்மா அவர்களுக்கு சாப்பிட கொடுக்காதே அது நமக்கு பாவம் என்பார்கள்.ஆனால்,ஆண்ட்டி நாங்கள் சாப்பிடுவோம் என்று உரிமையாய் எடுத்து சாப்பிடும் போது நான் என் அம்மாவை பார்த்து சிரித்து கொள்வேன்.இப்போ நிறைய பேர் சாப்பிட ஆரம்பிச்சாச்சு என்பதை தான் கமல் அப்படி சீன் வைத்து சொல்லி இருக்கிறார் போல.
    அதே போல் அவர்களின் அம்மாக்களே ஹோட்டல்களுக்கு போய் பார்சல் செக்‌ஷனில் நிற்பதையும் நான் என் கண்ணால் பார்த்து இருக்கிறேன்.அதன் பிறகு தான் என் அம்மாவிடம் அவுங்களே வாங்கி சாப்பிடுறாங்க.ஆகவே நம் வீட்டில் சாப்பிட்டதால் நமக்கு பாவம் இல்லை என்று சொல்லி விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹீஹீ.... இங்கும் அதே கதை... அம்மா கோழி வைச்சாலும், மீனு வைச்சாலும் கார்த்தியையும், பாஸ்கரையும் தான் கேக்கும் 'ஏலே உம் பிரண்ட கூப்பிடுலே'ன்னு.. !!

      பாண்டிச்சேரியிலும் அதே கதை... பாரத்மிஸ்ரா வீட்டுக்கு போகாம ஹாஸ்டலில் மீனுக்காக தவமிருப்பான். அப்புறம் அவனோட பையனும் சேந்துகிட்டான் ..!

      சாப்பிடும் விஷயத்திலும் மதம் பார்ப்பது விஷம் .

      Delete
    2. ஹீஹீ.... இங்கும் அதே கதை... அம்மா கோழி வைச்சாலும், மீனு வைச்சாலும் கார்த்தியையும், பாஸ்கரையும் தான் கேக்கும் 'ஏலே உம் பிரண்ட கூப்பிடுலே'ன்னு.. !! பாண்டிச்சேரியிலும் அதே கதை... பாரத்மிஸ்ரா வீட்டுக்கு போகாம ஹாஸ்டலில் மீனுக்காக தவமிருப்பான். அப்புறம் அவனோட பையனும் சேந்துகிட்டான் ..! சாப்பிடும் விஷயத்திலும் மதம் பார்ப்பது விஷம் .

      Delete
  6. மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

    >>>>>> Click to Read
    விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர‌ விபசாரங்களும்.


    .

    ReplyDelete
  7. //1. பாப்பாத்தி, இந்தா இந்த கோழியை ருசி பார் -//--------இதுவும் ஒவ்வொரு முஸ்லிமையும் பாதிக்கும் காட்சிதான். இதையும்தான் முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். வெட்ட சொல்கிறார்கள். காரணம், எந்த ஒரு முஸ்லிமும் தனது பார்ப்பன சகோதரரிடம் இப்படி கூறியது இல்லை. ஒரு முஸ்லிமுக்க அவப்பெயர் தர வேண்டும் என்றே புனையப்பட்ட மற்றுமொரு அவதூறு ஆகும்.

    இன்றைக்கும் நீங்கள் எந்த ஒரு இஸ்லாமியரின் திருமண விருந்துக்கு சென்றாலும்... அங்கே வெஜிடேரியன் ஃபுள் ஸ்பெஷல் மீல்ஸ் அவ்வூரின் மிகச்சிறந்த ஹோட்டலில் இருந்து வாங்கப்பட்டு பரிமாற ரெடியாக பார்ப்பன சகோதரர்களுக்காக என்றே இருக்கும். அறியவும்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)