சென்னை - இது தமிழ்நாட்டின் பால்கனி டிக்கெட். மீதியெல்லாம் தரை டிக்கெட் என்று வரையறுத்திருக்கிறது இந்த ஆட்சி. அதைவிடுங்க, ஈரோட்டு சூரம்பட்டிவலசு நால்ரோட்டுல நின்னு "ஏ! அமெரிக்க ஏகாதிபத்யமே" அப்படின்னு குரலுவுடற மாதிரி நானும் கொஞ்சம் ட்விட் போட்டேன். அதை அப்படியே இங்கே தொகுத்து தாரேன்
- ஈரோட்டுக்காரனுக்கு கரண்ட்டே இல்லையாம், சென்னைக்காரனுக்கு ஏசி போடமுடியலைன்னு வருத்தமாம். ஜனநாயக நாடாயிது?
- சம்சாரம் அது மின்சாரம் - சம்சாரம் என்பது கடுப்படிக்கும் அப்படின்னு விசு சரியாத்தானே சொல்லிவெச்சாரு.
- பெட்ரோமேக்ஸ் லைட்டேத்தான் வேணுமான்னு கேட்கிறவங்களுக்கு "இருட்டுலயே எம்புட்டு நேரம்தான் இருக்கிறது?" #தநா #மின்சாரம்
- கேப்டன் அப்பவே பாட்டுப் பாடி வெச்சிட்டாரு "புன்னகையில் மின்சாரம்".. நாம சிரிச்சாலும் இந்தப் பெண்கள் சிரிக்கவே மாட்டேங்குறாங்கப்பா..
[இந்தப் பாட்டுக்கு நடனம் அமைச்சு சொன்ன போது என்ன நினைச்சிருப்பாரு நம்ம கேப்டன்னு நினைச்சிப்பாருங்க. இது நடனம் அமைச்சது யாராய் இருக்கும்?]
- 2018 : மின்சாரம் - என்ற வார்த்தை கேட்டவுடன் ஷாக்கடித்துப்போனேன் நான். யாரது, பழையகாலத்தை நினைவூட்டுவது என..
- வீட்டுல மின்சார தயாரிப்பது எப்படி? தெரியவேண்டுமா? எங்களிடம் வாங்க. ரூ. 19,999ல் ஒரு வார பயிற்சின்னு இன்னுமா ஆரம்பிக்கலை?
- கருவறை இருட்டிலே உருவானோம், தமிழக இருட்டிலே வளர்ந்தோம், புதைகுழியின் இருட்டிலே அடங்குவோம். இதுக்கு நடுவுல எதுக்குடா மின்சாரம்?
- இயக்குனர்: தமிழ்நாட்டுல ஒரு ஊரு, 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கும். தயாரிப்பாளர்: செம கதை சார், மேலே சொல்லுங்க
- சென்னையிலிருக்கிறவனுக்கு மட்டும் என்ன ரெண்டாயிருக்கு? - இப்படித்தான் என் கிராமத்து நண்பன் கேட்டான் #மின்சாரம்
- ராஜீவ்மேனன் ஒரு தீர்க்கதரிசி, 1997லேயே "மின்சார கனவு" அப்படின்னு படம் எடுத்திருக்காரே..