Monday, July 23, 2012

இளையராஜா - வைரமுத்து - என்ன நடந்தது?

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.

உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.


கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

---
திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.
ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.
---
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.
என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.
---
அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.
ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.
என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.
நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.
வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.
நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.
நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.
உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.
அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.
---
எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.
ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.
உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.
இது இருதயத்திற்கு ஆகாதே.
---
நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.
---
நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---
நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்;
நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

---
 

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் புத்தகத்திலிருந்து:


ஆனந்த விகடனில் தாமிரா எழுதிய கதையை இங்கே நினைவு கூர்கிறேன்.  இவர்களுக்குள் எழும் தவறான புரிதல்களோ, அல்லது திரிக்கப்பட்ட பொய்களோ என்னைப் போன்ற கோடிகணக்கான இசை ரசிகர்களை அல்லவா பாதிக்கிறது. வைரமுத்து தன்னிடம் இருந்ததை கொட்டிவிட்டார். 

நன்றி வைரமுத்து ஐயா அவர்களே!


இளையராஜாவுடனிருந்து பிரிந்தவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுவது வைரமுத்து, பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், வைரமுத்து ஆகியோர். 

ஹ்ம்ம், இதுவும் கடந்து போகும், முத்துவுடன் ராஜா இசையமைக்காமலே போகலாம், ஆனால் யுவனுடன் மதன் கார்க்கி இணைந்து பணியாற்றும் காலம் வரும் என எண்ணி காத்திருக்கிறேன். 


ஆடுகள் பகை கொள்ளும்வேளையில் குட்டிகள் உறவு கொண்டாடுவதை குதூகலத்துடன் பார்த்திருக்கும் ஒரு பட்டியாளன் போல் காத்திருக்கிறேன்.

Thanks to https://www.facebook.com/pages/ILLAYARAJA-KING-OF-MUSIC/271188690679

11 comments:

  1. விடுங்க பாஸ் காலம் மாறும். இரு துருவங்களும் இணையும்

    ReplyDelete
  2. \\"இளையராஜா - வைரமுத்து - என்ன நடந்தது?"\\

    என்ன நடந்ததுன்னு இன்னமும் தெரியலையே..............

    ReplyDelete
  3. சேகர் - நம்பிக்கைதாங்க வாழ்க்கை!

    ஜெயதேவ் - நமக்கெல்லாம் தெரிவதற்கான வாய்ப்பு கம்மின்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  4. இளா: 2 திறமையுள்ளவர்களுக்கு "அகம்பாவம்" இருப்பது சகஜம்தான். ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் சகிச்சுக்கொண்டு கொஞ்ச காலத்துக்கு நட்பு பாராட்டுவதும் சகஜம்தான். ரெண்டு பேரும் ரொம்பப் பெரியாளானுதும் ஒரு நாள் பிரச்சினை வந்து பிரிவதும் சகஜம்தான். பின்னால உலகமே அவங்க பிரிவை நெனச்சு ஒப்பாரி வைக்கிறதும் சகஜம்தான். நெடுநாட்கள் பிரிந்த பிறகு ஒண்ணா இருந்து ஒருவரை ஒருவர் மெச்சி நட்பு பாராட்டியதை நெனச்சு இன்னைக்கு அதியெல்லாம் சொல்லி அழுவதும் சகஜம்தான்.

    இப்போ அவங்கள சேர்த்து வைக்கனும்னு ரசிகர்கள் நினைப்பது எதுக்குனு தெரியலை. Don't burn the bridges. But, you did since you had to, just forget it and move on! :-) Even if they work together today again, and became good friends, it is not going to be the same!

    p.s: I read about your senthazhal ravi article. Still, it is kind of puzzling what have you concluded about him? :)

    ReplyDelete
  5. இளா,

    எல்லாம் ஈகோ பிரச்சினை தான்.

    இளையராஜா பலரிடம் இருந்து பிரிந்து இருக்கிறார், இனிமே அவர்களோடு வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லிவிடுவார்.

    புது புது அர்த்தங்கள் படத்தில் பாடல்கள் மட்டும் தான்ன் ,ராஜா, பின்னணி இசை அமைக்க தாமதம் ஆச்சுன்னு ,பாலச்சந்தர் நரசிம்மனை வைத்து பின்னணி இசை அமைத்து வெளியிட்டார்னு ,அவரோடு பிரிந்தார்,

    அதே போல ஏவிஎம் கூட ஆச்சு, அப்போ தான் சந்திரபோஸ் ,மரகதமணி எல்லாம் உள்ள வந்தாங்க.

    ரஜினி ரொம்ப முயற்சி செய்து ஏவிஎம் கூட ராஜாவை சமரசம் செய்தார்னு படிச்சேன்.

    அப்போ மோகன், ராமராஜன் கூடவும் பிரச்சினை ஆச்சு. அதனால் சில படங்களுக்கு ராஜா இசை இருக்காது.

    வைரமுத்து "how do you do? என ராஜாவைப்பார்த்து பொது இடத்தில் கேட்டுட்டாராம்,அதனால் வந்த பிரச்சினைனு ,முன்னர் ஏதோ பத்திரிக்கையில் படிச்சேன். உண்மையான காரணம் வேறு ஏதேனும் இருக்கலாம்.

    இப்போ வைர முத்துவும்,சரி ராஜாவும் சரி பழைய காலி பெருங்காய டப்பா ஆகிட்டாங்க, இனிமே பெருசா வாசனை இருக்காது.

    ReplyDelete
  6. இந்த வரிசையில் தற்பொழுது பாலாவும் சேர்ந்துள்ளார்

    ReplyDelete
  7. //இனிமே பெருசா வாசனை இருக்காது//
    வவ்வால், இது உண்மைதான். ஆனா சொன்னா சண்டைக்கு வந்துருவாங்க..

    அனானி- அப்படியா?

    ReplyDelete
  8. சிறிய கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கலாம்.
    உண்மையான நண்பர்கள் (என்றால்) கண்டிப்பாக இணைவார்கள் என்று நம்புவோம்... நன்றி...

    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
  9. டைட்டில் பார்த்ததும் ஓடி வந்தேன் பாஸ்! கவிதை ஏற்கனவே வாசித்ததுதான். ஆமா என்னதான் நடந்தது? ஒன்னுமே புரியல!

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி தனபால், ஜீ

    ReplyDelete
  11. வவ்வாலு!எப்படித்தான் ஒட்டுக்கேப்பீங்களோ:)

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)