- தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்கிடலாம் என்பதுதான் ஆண்களின் உயர்ந்தபட்ச முட்டாள்தனம்.
- போலி கெளரவம் பத்தி பேசுற விஜய் டிவி கோபிநாத் முதல்ல தன்னோட கோட்டை கழட்டிட்டு பேசவும்
- அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துப்பார்த்தால் நான் சுத்த சைவம்
- என்னதான் பவர்ஃபுல்லான புல்லட், யமாஹா, பல்சர்னு வாங்கினாலும் அது ஸ்கூட்டிக்குப் பின்னாடிதான் போகும்.
- "நான் அழகாய் இருக்கேனா?" என பெண்கள் கேட்பது போல ஆண்கள் யாரும் "நான் அழகாய் இருக்கேனா?" எனக் கேட்பது கிடையாது #அவதானிப்பு
பெண்கள் அழகாயிருக்காங்கன்னு கேட்கிறதுல பல விசயங்கள் அடங்கியிருக்கு. கல்யாணம் ஆன முதல் ரெண்டு வருசம் அழகாயிருக்குன்னு கணவன் சொன்னா அதுல உண்மையிருக்கும். அப்புறமா மனைவி கேட்டு கணவன் அழகாயிருக்காங்கன்னு சொன்னா அதுல 50% பொய் கண்டிப்பா இருக்கும். மனைவி அழகாயிருந்தா கணவன் சொல்ல மாட்டான், வேற விதமா ஏதாவது செயல்ல காட்டுவான். அதாவது முகத்துல ஒரு பிரகாசம் தெரியும்னு சொல்ல வந்தேன்.
- நாம கும்புடுற சாமியவே உண்டியலைத் தாண்டினபின்தான் பார்க்க முடியுதாம்
- எத்தனாயிரம் உயரத்திலிருந்து குதித்தாலும், வலி என்பது கடைசியில் தரையில் மோதும்போதுதான் தெரிகிறது. அதுபோலதான் அப்ரைசலும் #சே
- ”என்ன சமைக்கிறதுன்னு தெரியலை” என்று மனைவி சொல்வதில் ஆரம்பித்து “மெனு கார்ட் ப்ளீஸ்” என்று கணவர் சர்வரிடம் கேட்பதில் முடிகிறது.
- பெண் விபச்சாரிகள் எண்ணிக்கை இருக்குமளவுக்கு ஆண் விபச்சாரிகள் இல்லை #அப்புறம் என்ன எழவுக்குடா சம உரிமைப் பத்தி பேசறீங்க?
- SJசூர்யாவின் அடுத்தப் படம் இசை. அவரே இசையமைக்கிறாராம். ஒரு வார்த்தை விமர்சனம் தயாராகிடுச்சு #இம்சை
- கள்ளத் தொடர்பு வைத்தால் மாரடைப்பு வரும்: ஆய்வு #எயிட்ஸ் வருதுன்னே சொல்லியாச்சு, எவன் கேட்கிறான்?
- இனிமே பெட்ரோல் பங்க் ஓனர் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போறவன்தான் புத்திசாலி இளைஞன்
- வேலையைவிட்டுப் போற நாள் தெரிஞ்சிட்டா வேலை செய்யுற நாள் நரகமாகிடும் #நான் எழுதினதுதான், அனுபவிச்சுட்டு இருக்கேன் (சிவாஜி ட்ரையிலர் வந்த போது நான் பதிவுல போட்டதுதான் இது- அதனால, இது பழைய மேட்டர்தான்)
- ”உங்களை மாதிரி நல்ல மேனேஜரை இதுவரைக்கும் பார்த்ததேயில்லை” அப்படின்னு ஒவ்வொரு முறையும் வேலை மாறும்போது சொல்லவேண்டியதா இருக்கு
- பெண்கள் நாய்களை நேசிக்கிறார்கள், ஆண்கள் அதே நாய்களை கல்லெடுத்து அடிக்கிறார்கள். அப்புறம் எப்படிடா உங்களுக்கு லவ் செட் ஆவும்? #யோசிங்க
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க. இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்
Pic Thanks : Cityofoviedo.net