காட்சி-1சூர்யா:
கலெக்டர் சார், நீங்க ஒரு கோர்ட் வெச்சி, இது சரி, இது தப்பு, இது பண்ணாத அப்படின்னு சொன்னா சரி, நாங்க சொன்னா தப்பா? ஏன்னா உங்க கிட்ட அதிகாரம். நாங்க படிக்காதவங்க. (படம் தளபதி)
மக்களிடமிருந்து விசில் பறக்கிறது. இது சினிமா.காட்சி-2(உண்மைச் சம்பவம்)இடம் : மருதமலை மேல் ஒரு parking.
கல்லூரி பெண்கள்(போலிருக்கும் ஒரு 5/6 பேர்) ஜீப்பின் பின்னாடி கண்ணீருடன் அமர்ந்திருக்க, ஆண்கள் எல்லாம் காவல்துறை அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
காரணம்-
”அவுங்க எல்லாம் எதுக்கு சார் மருதமலைக்கு வராங்க? மலையில இருக்கிற ம்ரத்துக்கு கீழ ஒதுங்கி......... க்காகதான். அவுங்க அப்பா அம்மாகிட்ட சொன்னாதான் திருந்துவாங்க. படிக்கிற வயசுல என்ன அ**ப்பு வேண்டிக்கிடக்கு?”விசாரித்துக் கொண்டிருந்த நான் ”பாவம் சார், விட்டுருங்க தெரியாம செஞ்சிட்டாங்க” பரிதாபத்துடன் நான் வேண்டிகொண்டேன்காட்சி-3மெரினா கடற்கறை(ரை) சென்னை, மற்றும் பூங்காகளில் ‘சேரும்’ ஜோடிகளைப் பிரிக்க அரசு வாய்மொழி உத்தரவு.
காவல்துறை: ..........தா, இதுக்குதான் நாங்க போலீஸ் ஆனோமா?
மக்கள்: இப்படித்தான் செய்யனும், அங்கே என்ன லவ்வு வேண்டிக்கிடக்கு?காட்சி -4செய்தி: மங்களூரில் இராம சேனா பப்’ல் அடிதடி. ஆண் பெண் பாராமல் தாக்கினார்கள்.
மக்கள்: இவன் யாரு பபுக்குள்ள போயி அடிக்க?என்ன கொடுமை இது சரவணண் - மறுபடியும் மொதோ காட்சிய படிச்சுப்பாருங்க.