Friday, May 25, 2007

தமிழ்மணம்-கேள்விகள் பதில்கள்

இதுக்கு முன்னாடியே PKP இப்படி பதிவு போட்டு இருக்காரு. அவருக்கு ஒரு சலாம் போட்டுக்கிறேன். அதை நமக்கு பின்னூட்டம் மூலம் சொன்ன ஸ்ரீதர் வெங்கட்டுக்கு இன்னொரு நன்றி


1. Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வெச்சது யாரு?

காசி என்று நினைக்கிறேன். தமிழ்மணத்துல கிடைக்கும் Templateகளில் பின்னூட்டம்னே வர அதையே மக்கள் தொடர ஆரம்பிச்சுட்டாங்க.

(அண்ணா உங்களை இந்தத் தமிழ்மணம் என்னைக்குமே மறக்காது)


2. தமிழ்ப்பதிவுலகின் முதல் பதிவு எது? கண்டிப்பாக லின்க் தந்தே ஆகனும்.

1.முதல் பதிவர் நவன் . Jan-16-2003
2. முதல் பதிவர் கார்த்திக் ராம்ஸ்- Jan-01-2003. ஆனால் அவர் கில்லியில் எழுதியது கொஞ்சம் நம்மையும் சேர்த்து குழப்புதுங்க.

(சிந்தாநதியும் ஒரு பதிவு போட்டாரு, அப்பவுமே குழப்பம்தான்)


3. தமிழ் பதிவுலகத்துல உருவான முதல் குழுமம் எது?

ஆரம்பத்தில் இருந்த கொஞ்சப் பேர்களுக்குள் அந்தமாதிரிஒன்றும் உருவாகவில்லை. கூட்டுப்பதிவுகள் உருவாகின. முதல் கூட்டுப்பதிவுபெண்கள் குறைவாக இருந்தபடியால் அவர்களை உள்ளே கொண்டு வருவதற்காககூட்டுப்பதிவாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் தனித்தனிப்பதிவுகளாகத்தொடங்கி அல்லல் படத் தேவையில்லையென்று. இப்போது தமிழில் எழுதும் பலபெண்கள் அதில்தான் முதலில் எழுதத் தொடங்கினார்கள். தோழியர் - womankind -http://womankind.yarl.net அடுத்தது அறிவியலுக்காக யாழ்.நெட் தந்த இலவசமூவபிள் டைப் செயலியில் உருவாக்கப்பட்டது. அதுக்கப்புறம் மேல்கைண்ட்'னு ஒரு கூட்டுப்பதிவு.

நன்றி-மதி

4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?

அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு வ.வா.ச'வில் இலவச கொத்தனார் எழுதியது. 641 பின்னூட்டம் வாங்கு வாங்குன்னு வாங்கியது.



5. தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?

ராம்கி, டோண்டு, துளசி, பாஸ்டன் பாலா

6. இதுவரைக்கும் அதிகமான பதிவுகள் எழுதியது யாரு?


அதிகமான பதிவுகள் எழுதி இருப்பது பாஸ்டன் பாலா, ஒரு 7 ஆயிரம்னு சொல்றார்.
(அடேங்கப்பா)

7. Hit Counter படி அதிகம் ஹிட் வாங்கிய வலைப்பதிவு எது?

இது நம்ம வலையுலக "துக்ளக்" இட்லிவடைதான். 3 லட்சம் தாண்டியும் ஊசாமல் ஓடிட்டு இருக்கு. (3,76,321 Hits, as of May25-2007)

(எல்லாருமே படிக்கிறாங்க, அப்புறம் ஏன் பின்னூட்டம் அதிகம் வர மாட்டேங்குது)

8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?

சிறில், ராசா, பெனாத்தலார் மற்றும் நான்.

(ஒரு விளம்பரம் தான்)

9. பதிவுலகின் முதல் பெண் பதிவாளர் யாரு?

மதி கந்தசாமி.

( முதல் ஆண் பதிவாளர் யார்ன்னு 2வது கேள்வியிலேயே கேட்டாச்சு. அதனால பெண்'ஈயம்', ஆண் பித்தளைன்னு சண்டைக்கு வர வேணாம்.

மக்களே, இந்தத் தகவல் தப்புன்னா சொல்லுங்க மாத்திரலாம்.

Sunday, May 20, 2007

திராவிடம்'ன்னா என்னங்க?

மக்களே,

எனக்கு ஒரு சந்தேகம்ங்க. திராவிடம்ன்னா என்னங்க? திராவிடர்ன்னா யாரு?ஒரு ஜாதி சார்ந்த மக்கள் மட்டுமே திராவிடர்களா? ஏன் திட்டிக்கிறீங்க? எங்களுக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. இரு சாராருக்கும் என்ன பிரச்சினைன்னு எனக்கு புரியர மாதிரி சொல்லுங்க.

டிஸ்கி எல்லாம் இந்தப் பதிவுக்கு இல்லீங்க. எனக்கு சரியாத்தெரியாத விஷயம் இது, கேட்டு தெரிஞ்சுக்கிறதுல தப்பு ஒன்னும் இல்லை. மரியாதை, ஒருமையின்மை இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். உங்க பின்னூட்டம் வராட்டி நீங்களே புரிஞ்சிக்குங்க. பதில் தெரியாதவங்க பதில் சொல்லத்தேவை இல்லை.

Thursday, May 17, 2007

தமிழ் பதிவுலகம் பத்தின கேள்விகள்

எந்தத் திரட்டியில பதிவு புதுசா வந்தாலும் ஓடி போய் படிக்கிறோம். நமக்கு புடிச்ச மக்கள் பதிவு போட்டு இருந்தா அது மொக்கையாவே இருந்தாலும், நாந்தான் முதல், ஒரு ஸ்மைலி அப்படின்னு வெக்கமில்லாம ஒரு பின்னூட்டம் போட்டுட்டு எஸ்கேப் ஆகிறோம். புடிச்சு இருந்தா ஏதாவது எழுதிட்டு அவுங்க எப்படா அத பப்ளிஷ் பண்ணுவாங்கன்னு காத்து, ஒரு பத்து முறை அந்த பதிவை திரும்ப திரும்ப பார்த்து ஹிட் கணக்கை ஏத்தி விடறோம். கெட்ட வார்த்தையிலோ, பிடிக்காம இருந்தாலோ எஸ்கேப் ஆகிடறோம். சரி, இது தினம் நடக்கிற கூத்து. இது பீட்டரு.


இனி மேட்டரு. பதிவுலகமே கதின்னு கிடக்குற மக்களே! உங்க பதிவுலக அறிவை சோதிச்சா என்னான்னு ஒரு ஞானம்.பதிவுலகத்தைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரிஞ்சிருக்குன்னு தெரிய வேணாம்? அதான் இந்த குயிஜூ.


1. Comments அப்படிங்கிறதுக்கு பின்னூட்டம்னு பேர் வெச்சது யாரு?

2. தமிழ்ப்பதிவுலகின் முதல் பதிவு எது? கண்டிப்பாக லின்க் தந்தே ஆகனும்.

3. தமிழ் பதிவுலகத்துல உருவான முதல் குழுமம் எது?

4. அதிகம் பின்னூட்டம் வாங்கிய பதிவு எது?

5. தமிழ்மணத்துல ஒரு முறைக்கும் மேல் நட்சத்திரம் ஆனவங்க எத்தனை பேரு? அவுங்க பேரு?

6. இதுவரைக்கும் அதிகமான பதிவுகள் எழுதியது யாரு?

7. Hit Counter படி அதிகம் ஹிட் வாங்கிய வலைப்பதிவு எது?

8. தேன்கூடு போட்டியில் ஒரு முறைக்கும் மேல முதல் 4 இடத்துல வந்தவங்க யாரு?

9. பதிவுலகின் முதல் பெண் பதிவாளர் யாரு?

Disc: இதுல ஒரு கேள்விக்கூட பதில் தெரியலைன்னா அறவழியில தமிழ்ப் பதிவுலகத்தை விட்டே போயிடலாம்

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)