பொது அறிவுக்கேள்விங்களை கேட்டு வெச்சு ஒரு பதிவு போட்டுடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன். இன்னிக்குதான் அதுக்கு வேளை வந்து இருக்கு.
1. பொட்டி தட்டுற மக்கள் ஒரு நாளைக்கு ஒருதடைவையாவது பார்க்குறது கூகிள் தேடல். அதைக் கண்டுப்பிடித்தவர் யார்?
2. ரோஜா படத்துக்காக மணிரத்தினம் அரவிந்தசாமிக்கு முன் படத்தில் நடிக்க அழைத்தது யாரை?
3. இளையராஜா இசையமைத்த 500வது படம் என்ன?
4. சஞ்சய் தத் நடித்த முதல் படித்தின் பெயர் என்ன?
5. மணிரத்தினம் இயக்கிய முதல் படத்தின் பெயர் என்ன?
6. ஆஸ்திரேலியாவில் விளையாடிய இவர், வேறொரு நாட்டுக்கு தலைமை ஏற்று விளையாடியவர்? யார் அது ? எந்த நாட்டுக்கு?
7. போதை மாத்திரைப்பிரச்சினையில் சிக்கிய முதல் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் யார்? அவரது சாதனை என்ன ஆயிற்று?
8. ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்த இவர் வீட்டில் போன மாதம்தான் தொலைக்காட்சியே வாங்கினார்களாம். காரணம் இவர் விளையாடும் விளையாட்டைப்பார்க்க ஆவல். இவர் ஒரு கிரிக்கெட் வீரர்? யார் இவர்?
9. இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இவர் இயக்கிய முதல் ஹாலிவுட் படம் சரியாக போணியாகவில்லை. அப்புறம் வந்த படங்கள் எல்லாம் சரி போடு போட்டது. இந்த இயக்குனர் யார்?
10. அஸின் நடித்த முதல் விளம்பரப்படம் எது? அதை இயக்கியவர் யார்?
11 இந்தக்கேள்விகளில் ஒரு ஒற்றுமை/தொடர்பும் இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம். அது கேள்வி எண் 11