Tuesday, April 25, 2006
இந்தியா ஒளிர்கிறது
பெயர்- கெளரவ் அகர்வால்
படிப்பு- எம்.பி.ஏ(ஐ.ஐ.எம்)
சம்பளம்- சுமார் 93 லட்சம் (வருடத்திற்க்கு)
வேலை-பார்க்லேய்ஸ் கேப்பிடல், இங்கிலாந்து
பெயர்- சின்னான்
படிப்பு- 3வது (கொழிஞ்சி காட்டூர்)
சம்பளம்- 23 ஆயிரம் (வருடத்திற்க்கு)
வேலை-தோட்ட வேலை , பண்ணையாள்
எதிர்பார்ப்பு- கலர் டிவி, 2 ரூபாய்க்கு அரிசி
ஏழை மேலும் ஏழையாக, பணக்காரன் மேலும் பணக்காரனாக இந்தியா ஒளிர்கிறது
கலக்கப் போவது யாரு?
எங்க வீட்டுல வெள்ளிக்கிழமை ஆனாக்கா, ராவு 10 மணிக்கு விஜய் டிவி-தவிர வேற எதுவும் ஓடாது. அவ்வளவு பேரும் ஒண்ணா "கலக்கப் போவது யாரு?"க்கு ரசிகரா மாறிட்டோம். ஒரு பந்தயம் முடிஞ்சு போச்சுன்னாலும் இப்ப ஜெயிச்சவங்களே கலக்கிட்டு இருக்காங்க. போன போட்டியில ஜெயிச்சது கோவை குணா, 2வது பரிசு முத்து, 3வது டேவிட்(கைபுள்ளயோட ஜெராக்ஸ்).
2வது வந்தாலும் முத்துதாங்க நமக்கு புடிச்ச ஆளு. அவரு ஜோக்கு சொல்ற முறைதான் சூப்பர், முகத்துல ஒரு சலசலப்பும் இல்லாம புதுசு புதுசா நிறைய ஜோக்கு சொல்லிக்கிட்டே இருக்கார்(இன்னும்). அவருக்கு முதல் இடம் கிடைக்கலைங்கிற போது கொஞ்சம் வருத்தமாதான் இருந்துச்சு. சின்னி ஜெயந்த், மதன் பாப், உம்ம்ம்ம்ம்மா சாரி உமா எல்லாரும் கலக்கல் தான். இது மேட்டர்.
இது மீட்டரு: கட்டதுரைக்கும் கைபுள்ளைக்கும் ஆவாதுன்னு எல்லருக்க்மே தெரியும்.லல்லுவோட நாற்காலி ஆட்டம் கண்டப்ப அவுங்க மனைவி ஆட்சி பொறுப்ப ஏத்துகிட்டாங்க. லல்லு விட்ட பொறுப்பை ரப்ரிதேவி தொடர்ந்து செய்யுற மாதிரி உமாவும் டேவிட்டுக்கு 3வது இடம் கிடைக்க வெச்சுட்டாங்க. பின்னே கட்டதுரையோட (ரியாஸ்கான்) மனைவிதானே உமா. அங்க நடக்கிறத்துக்கு இங்கே பழி வாங்கிட்டாங்க. இருக்கட்டும் பின்னாடி பார்த்துக்குவார்(?!) கைப்பு.
Tuesday, April 18, 2006
சந்தனக்கட்டை
நமக்கு சந்தனம் வைக்கிற பழக்கம் ரொம்ப நாளா இருக்குங்க. வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே இது இருக்கு. காலேஜ்ல புள்ளைங்க கிண்டல் பண்ணினபோதும் சரி, "நிங்கள் மலையாளியோ"ன்னு ஒரு குட்டி கேட்ட போதும் சரி சந்தனம் வெக்கறத மட்டும் விடவே இல்லை. சில பேர் திருநீறு வைப்பாங்க, சில பேர் குங்குமம் வைப்பாங்க, சில பேர் இதெல்லாம் பட்டிக்காட்டுதனம்னு சொல்லவும் செய்வாங்க. அதெல்லாம் அவுங்க அவுங்க மனச பொறுத்தது. அம்மா தலை சீவி விடுற வரைக்கும், திருநீறுதான் வெச்சு விட்டாங்க, அப்புறமா தலை சீவுற பொறுப்பு நம்ம கைக்கு வர அம்மா சீவிவிட்ட மாதிரி இல்லாம எண்ணை வைக்காம வேற மாதிரி சீவ ஆரம்பிச்சப்போதான் சந்தனம் வெக்கற பழக்கம் வந்துச்சு.
வாரிசு வந்ததுக்கு அப்புறம், வீட்டுல வாரிசுக்கும் சந்தனம் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. பையன பார்க்க வந்த ஒரு பெரியம்மா சந்தனக்கட்டி கரைச்சு வைக்க வேணாம் சந்தனக் கட்டைய உரசி வைங்க அதான் நல்லதுன்னு சொல்லி, ஈரோட்டுல- சங்கீதாவுல் சந்தக்கட்டை கெடைக்குது வாங்கிகோங்கன்னு அம்மணி கிட்ட கொளுத்திப் போட அம்மணி அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரின்னு நானும் போன வாரம் ஒரு நாள் மொட்ட வெயில்ல கிளம்பிட்டோம். கொளுத்துற வெயிலுல மண்டை காய்ஞ்சு 3 ஜூஸ், 2 கறும்பு சாறு, சிந்தாமணியில ஒரு ஆப்பிள் ஜூஸ் குடிச்சதுதான் மிச்சம். சங்கீதா, கண்ணன் ஏன் நாட்டு மருந்து விக்கறவன்கிட்ட கூட விசாரிச்சு பார்த்ததுல ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுது.
அது "ஈரோட்டுல சந்தனக்கட்டை கடையில கிடைக்காது".
வாரிசு வந்ததுக்கு அப்புறம், வீட்டுல வாரிசுக்கும் சந்தனம் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. பையன பார்க்க வந்த ஒரு பெரியம்மா சந்தனக்கட்டி கரைச்சு வைக்க வேணாம் சந்தனக் கட்டைய உரசி வைங்க அதான் நல்லதுன்னு சொல்லி, ஈரோட்டுல- சங்கீதாவுல் சந்தக்கட்டை கெடைக்குது வாங்கிகோங்கன்னு அம்மணி கிட்ட கொளுத்திப் போட அம்மணி அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரின்னு நானும் போன வாரம் ஒரு நாள் மொட்ட வெயில்ல கிளம்பிட்டோம். கொளுத்துற வெயிலுல மண்டை காய்ஞ்சு 3 ஜூஸ், 2 கறும்பு சாறு, சிந்தாமணியில ஒரு ஆப்பிள் ஜூஸ் குடிச்சதுதான் மிச்சம். சங்கீதா, கண்ணன் ஏன் நாட்டு மருந்து விக்கறவன்கிட்ட கூட விசாரிச்சு பார்த்ததுல ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுது.
அது "ஈரோட்டுல சந்தனக்கட்டை கடையில கிடைக்காது".
Friday, April 7, 2006
ஒரு ப்பயம்...
Thursday, April 6, 2006
வரி கட்டலையோ வரி
"சார்! பெரிய வீடு, புது கார், புது நெக்லெஸ். நல்லா இருக்குங்க. இது வருமான வரி மக்களுக்கும் தெரியும், அதனால வரி மார்ச்- 31 க்குள் கட்டிருங்க"ன்னு கூவி கூவி டிவில ரேடியோல எல்லாம் சொன்னாங்க. நம்ம ஊர்லயும் வரி உண்டுங்க. கோவிலுக்குன்னு சொல்லி வருஷா வருஷம் வாங்குவோம். அது எவ்வளவு பெரிய மிராசா இருந்தாலும் ஏமாத்த முடியாது, எல்லாருக்கும் ஒரே வரி தான். இந்த வருஷம் 1000 ரூபா வாங்கினோம். வீடு வீடா போய்தான் வரி வசூல் செய்றது எங்க வழக்கம்.இப்படிதாங்க எங்க ஊர்ல எல்லாம் வரி வாங்க வருவோம்.
இன்னொரு முறை படத்த பாருங்க.
அட, இன்னொரு முறைதான் படத்த பாருங்க. அந்த படத்துல நான் இருக்கேன், முடிஞ்சா என்னை கண்டுபுடிங்க. கண்டுபுடிச்சுட்டா அடுத்த வருஷம் உங்களுக்கு இளாவோட செல்வாக்குல எங்க ஊர்ல வரி விலக்கு அளிக்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி
தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை காசி எழுதியது தமிழோவியத்துக்காக பாஸ்டன் பாலாஜி க...
Labels
18+
(1)
365-12
(33)
Adverstisement
(1)
aggregator
(1)
BlogOgraphy
(2)
book review
(1)
Buzz
(1)
cinema
(6)
Comedy
(6)
Computing
(1)
Controversial
(1)
cooking
(1)
Copy-Paste
(10)
corruption
(1)
cricket
(1)
Doctor
(1)
Drama
(1)
experience
(4)
GVM
(1)
Indli
(1)
Information
(3)
Interview
(2)
IR
(1)
Job Interview
(1)
Jokes
(1)
KB
(3)
kerala
(2)
kids
(1)
Language
(1)
manoj paramahamsa
(2)
Movie Review
(15)
Movies
(39)
music
(6)
Music Review
(1)
News
(8)
NJ
(2)
nri
(1)
NYC
(2)
Oscars
(1)
Personal
(31)
Photo
(5)
Photos
(4)
Politics
(7)
Quiz
(10)
rumour
(1)
Sevai Magik
(1)
Short Film
(8)
Social
(46)
song
(4)
Songs review
(2)
songs.
(1)
Story in blogging world.
(3)
sujatha
(1)
tamil
(2)
Tamil Blog awards
(1)
Tamil Kid
(2)
TamilmaNam Star
(16)
TeaKadaiBench
(13)
technology
(5)
train
(2)
twitter
(28)
USA
(13)
Video Post
(11)
Vivaji Updates
(9)
webs
(4)
Wish
(1)
WorldFilm
(1)
Xmas
(1)
அப்பா
(1)
அப்பாட்டக்கர்
(1)
அரசியல்
(6)
அலுவலகம்
(2)
அனுபவம்
(11)
இசை
(2)
இயற்கை
(3)
இளையராஜா
(4)
ஈழம்
(9)
எதிர்கவிதை
(1)
ஏரும் ஊரும்
(8)
கடிஜோக்ஸ்
(1)
கதை
(9)
கலவரம்
(1)
கலைஞர்
(1)
கவிதை
(42)
கற்பனை
(4)
காதல்
(15)
கிராமம்
(20)
குத்துப் பாட்டு
(1)
குறள்
(1)
சங்கிலி
(5)
சமுதாயம்
(12)
சமூகம்
(21)
சிபஎபா
(11)
சிறுகதை
(7)
சினிமா
(1)
சுட்டது
(1)
சுயம்
(1)
தமிழ்
(4)
திரைத்துறை
(1)
திரைப்படம்
(2)
துணுக்ஸ்
(17)
தொடர்கதை
(6)
நகைச்சுவை
(7)
நட்பு
(1)
நாகேஷ்
(1)
நிகழ்வுகள்
(12)
நினைவுகள்
(4)
படிச்சது
(1)
பண்ணையம்
(7)
பதிவர் வட்டம்
(35)
பதிவுலகம்
(11)
பத்திரிக்கைகள்
(2)
பயணம்
(1)
பாரதி
(1)
புலம்பல்
(10)
புனைவு
(8)
பெற்றோர்
(5)
பொங்கல்
(2)
மீட்டரு/பீட்டரு
(1)
மீள்பதிவு
(8)
மொக்கை
(2)
ரஜினி
(3)
வாலி
(1)
விமானம்
(1)
வியாபாரம்
(3)
விவசாயம்
(4)
விவாஜியிஸம்
(1)
ஜல்லி
(8)
-
சூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...
-
கலிஃபோர்னியாவிலிருந்து வந்த ஒரு வட இந்தியரை இன்று சந்தித்தேன். இன்னிக்கு பாஸ்டனில் செம குளிர். அவரோ மெலிசா ஒரு Jacket அணிந்து குளிரில் நடு...