Wednesday, October 17, 2012

33/365 "மின்"சாயம் வெளுத்துப்போச்சு

தமிழ்நாட்டுல மின்சாரம் இல்லையாம், அப்படியா?

சென்னை - இது தமிழ்நாட்டின் பால்கனி டிக்கெட். மீதியெல்லாம் தரை டிக்கெட் என்று வரையறுத்திருக்கிறது இந்த ஆட்சி. அதைவிடுங்க, ஈரோட்டு சூரம்பட்டிவலசு நால்ரோட்டுல நின்னு "ஏ! அமெரிக்க ஏகாதிபத்யமே" அப்படின்னு குரலுவுடற மாதிரி நானும் கொஞ்சம் ட்விட் போட்டேன். அதை அப்படியே இங்கே தொகுத்து தாரேன்




  • ஈரோட்டுக்காரனுக்கு கரண்ட்டே இல்லையாம், சென்னைக்காரனுக்கு ஏசி போடமுடியலைன்னு வருத்தமாம். ஜனநாயக நாடாயிது? 

  • சம்சாரம் அது மின்சாரம் - சம்சாரம் என்பது கடுப்படிக்கும் அப்படின்னு விசு சரியாத்தானே சொல்லிவெச்சாரு. 

  • பெட்ரோமேக்ஸ் லைட்டேத்தான் வேணுமான்னு கேட்கிறவங்களுக்கு "இருட்டுலயே எம்புட்டு நேரம்தான் இருக்கிறது?" #தநா #மின்சாரம் 

  • கேப்டன் அப்பவே பாட்டுப் பாடி வெச்சிட்டாரு "புன்னகையில் மின்சாரம்".. நாம சிரிச்சாலும் இந்தப் பெண்கள் சிரிக்கவே மாட்டேங்குறாங்கப்பா.. 

[இந்தப் பாட்டுக்கு நடனம் அமைச்சு சொன்ன போது என்ன நினைச்சிருப்பாரு நம்ம கேப்டன்னு நினைச்சிப்பாருங்க. இது நடனம் அமைச்சது யாராய் இருக்கும்?]

  • 2018 : மின்சாரம் - என்ற வார்த்தை கேட்டவுடன் ஷாக்கடித்துப்போனேன் நான். யாரது, பழையகாலத்தை நினைவூட்டுவது என..

  • வீட்டுல மின்சார தயாரிப்பது எப்படி? தெரியவேண்டுமா? எங்களிடம் வாங்க. ரூ. 19,999ல் ஒரு வார பயிற்சின்னு இன்னுமா ஆரம்பிக்கலை?

  • கருவறை இருட்டிலே உருவானோம், தமிழக இருட்டிலே வளர்ந்தோம், புதைகுழியின் இருட்டிலே அடங்குவோம். இதுக்கு நடுவுல எதுக்குடா மின்சாரம்?  

  • இயக்குனர்: தமிழ்நாட்டுல ஒரு ஊரு, 24 மணிநேரமும் மின்சாரம் இருக்கும். தயாரிப்பாளர்: செம கதை சார், மேலே சொல்லுங்க 

  • சென்னையிலிருக்கிறவனுக்கு மட்டும் என்ன ரெண்டாயிருக்கு? - இப்படித்தான் என் கிராமத்து நண்பன் கேட்டான் #மின்சாரம் 

  • ராஜீவ்மேனன் ஒரு தீர்க்கதரிசி, 1997லேயே "மின்சார கனவு" அப்படின்னு படம் எடுத்திருக்காரே.. 

Thursday, October 11, 2012

32/365 ராஜாவுமா காப்பியடிச்சார்?

ஒரு சமூக வலைதளத்துல இந்தப்படத்தை பகிர்ந்து "இது ரொம்ப தப்பு" , பெண் என்பவள் சிகரெட் பிடிப்பது தப்பு, கேவலம்,, அசிங்கம் அப்படின்னு எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.  உண்மைதான், புகைப்பழக்கம் என்பது தப்புதான். ஆனா அதைப்பத்தி அங்கே பேசலை.. பெண் சிகரெட் பிடிப்பதுதான் தப்பு அப்படிங்கிற மாதிரி பேச்சு இருந்துச்சு. பெண்கள் சூழ நிக்கும்போது ஆண்கள் சிகரெட் பிடிக்கிற மாதிரி  போஸ்டர் வந்தப்ப இதையே சொல்லியிருக்கலாமே?  என்ன மாதிரியான ஆணாதிக்க சமூகம் இது.

ஒவ்வொரு தெரு முக்குலையும் பொட்டி கடை வெச்சி ஆண்கள் பீடி, சிகரெட் குடிக்கலாம், ஆனா பெண்கள் குடிக்கக்கூடாது. பெண்கள் மது குடிச்சாலும் தப்பு. மதுவோ, புகையோ - எந்தப் பழக்கமிருந்தாலும் அந்தப் பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வை இருக்கே.. காமத்துலதான் முடியும். 

திருந்துங்க ஆண்களே.. கெட்ட பழக்கம், தப்புன்னு சொல்லுங்க. சரி. அது என்ன ஆண்களுக்கு மட்டும்தான் சிகரெட் பிடிக்கிறதுன்னு எழுதி வெச்சிருக்கா என்ன? தப்போ, சரியோ பெண்களை சரிசமமா நடத்துங்க..




டைம்பாஸ் விகடன்

விகடனின்  டைம்பாஸ் பற்றி சுரேஷ்கண்ணன் எழுதிய  பதிவு  பிடித்தது. அதுவும் இந்த வரிகள் நெத்தியடி


காந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'


 ராஜாவுமா? 

ராஜாவுமா? அப்படின்னு கேள்வி கேட்க வெச்சது இந்த இசை. 20ம் நூற்றாண்டுல ஸ்பானியர்  Antonio Ruiz-Pipo - Danza No1. அப்படியே சுட்டிருக்காரு போல. இணையம் இல்லாததால, அந்தக் காலத்துல தெரியலை.. இன்னுமா தெரியாம இருக்கும்?




மின்சார கனவு
தமிழ்நாட்டுல(சென்னை தமிழ்நாடு இல்லையே, எப்பவுமே மத்த மாவட்டத்தை விட்டு தணிச்சுத்தானே இருக்கு) மின்சார நிறுத்தம் தொடர்பாக துணுக்குப் படம்








31/365 பண்ணையம் அக்-11

இந்தவாரம் வெளியான இன்னொரு டீசர்.. ஆமாங்க, போடா போடி, நீர்ப்பறவை, மற்றும் துப்பாக்கி.. 3 டீசர்கள் வெளிவந்துச்சு. அதுல செல்ஃப் எடுக்காம போன டீசர் இதுதான். மீது ரெண்டு அருமை. அதுவும் துப்பாக்கி டாப்-கிளாஸ் மாஸ் டீசர்


==00oo00==
போன வாரம் Ben & Jerry Icecream தயாரிக்கிற இடத்துக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம். அங்கே ஒரு படம் சிரிக்க வெச்சது. நமக்கு சங்கி மங்கி தெரியும், இது என்னமோ புதுசா சங்க்கி மங்க்கின்னு ஒரு Icecreamமாம்



==00oo00==
நான் விரும்பிய என்னுடைய ட்விட்டுகளில் சில
  • கலைஞர் சட்டையை மாத்தினார். இணையம் முழுக்கா அதே பேச்சு. Now you know who the Trend Setter is


  • ''அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல; இருவரும் தி.மு.க-தான்!'' #இந்த வசனம், ஃபெவிக்கால் விளம்பரத்துக்கா தலைவா?

  • நானெல்லாம் எதுவும் கலக்காமலே, தண்ணியை ஒரு ஆஃப் அளவுக்கு அடிக்கிறவன் #குடிக்காதவர்களின் பஞ்ச்


  • அதிமுகவுல சேர்ந்துட்டா, ஒரு முறையாவது.. ஒரு வாரமாவது அமைச்சாராகிடலாம்


  • அரசியல் இன்னும் முழுச்சாக்கடையாகவில்லை. நல்லகண்ணு, வை.கோ மாதிரி இன்னும் நல்ல தலைவர்கள், சிலர் இருக்கிறார்கள்

  • கெளதம் ஒரு படத்தைத்தான் காப்பியடிச்சாரு. ALவிஜய் எல்லாப் படமுமே அப்படித்தான் பண்றாரு. ஆனா மதிக்கவே மாட்டேங்குறாங்க


  •  வெளியாகும் பாதி குறும்படங்களில் சரக்கடிப்பதே முக்கிய நிகழ்வாக காட்டப்படுகிறது. அப்படி மாறிப்போச்சு நம்மோட சமுதாயம்.


  • பனியன் போட்டு, சட்டையை அதுக்கு மேல போட்டு "டக் இன்" பண்ணிட்டுப் போறதுக்கு எதுக்கு 6 பேக்? #முடியாதவன்பேச்சு


  • குவாட்டருக்கும், ட்விட்டருக்கு ஒரு நெருங்கிய சம்பந்தமுண்டு. ரெண்டுலேயும் உள்ளே இறங்கிட்டா உளறல் அதிகமா இருக்கும்


  • சோகமான தருணங்களில் தேநீர் அருந்துவது, கொஞ்சம் கொஞ்சமாய் கவலைகளைப் விழுங்கிக்கொண்டிருப்பதாய் தோன்ற வைக்கிறது.


  • இப்போதெல்லாம், சன் / கே டிவிக்களில் ஒளிபரப்பாகும் படங்களை பார்க்கவைப்பதில் இளையராஜாவே முக்கிய பங்குவகிக்கிறார்.



==00oo00== 

இந்த வாரம் நான்கு படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கு

  • ஆதிபகவன் - இயக்கம் - அமீர் / இசை - யுவன் / ஜெயம் ரவி, நீத்து சந்திரா
  • துப்பாக்கி - இயக்கம் - முருகதாஸ் / இசை - ஹாரிஸ்/  விஜய், காஜல் அகர்வால்
  • நீர்ப்பறவை -  இயக்கம் - சீனு ராமசாமி - /இசை- ரகுநந்தன் / விஷ்ணு, சுனைனா
  • போடா போடி - இயக்கம் - விக்னேஷ் சிவா/இசை - தரன்/ STR, வரலட்சுமி

==00oo00==  

ம்மணிதான் தினமும் என்னை வேலையிடத்துக்கு கொண்டு வந்து விடறதும், திரும்ப கூட்டிட்டுப் போறதும்.  வழக்கமா வர்ற கேள்விதான், இன்னிக்கும் வந்துச்சு " வேலை முடிஞ்சதா? வரலாமா?"

ஆனா, வழக்கமாயில்லாம நான் சொன்ன பதில்

தலையை லைட்டா ஆட்டி "I am waiting" அப்படின்னு சொன்னேன் #துப்பாக்கி

காரணம்???



==00oo00==

இந்த வாரம் மாற்றான் வெளியாகுது, பார்ப்போம். அது Stuck On youவா இல்லையான்னு.

Tuesday, October 9, 2012

30/365 ஜோக் மாதிரி

மின்சாரத் துறையில வேலை பார்க்கிறவரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்

ஏன்?

நாம் என்ன திட்டினாலும் கண்டுக்கவே மாட்டாங்க இல்லை?

==00o-o00==


தலைவர் ஏன் கோவமா இருக்கார்?

நாட்டுல இத்தனை ஊழல் நடக்குது, அதுல ஒன்னுல கூட அவரோட பங்களிப்பு இல்லையேன்னுதான்

==00o-o00==

தலைவரை விசாரிக்க வந்த CBIக்காரங்க ஏன் இவ்ளோ கடுப்பா இருக்காங்க?
தலைவர் அவுங்ககிட்ட"கல்லைத்தான் மண்ணைத்தான்.. காய்ச்சித்தான் குடிக்கத்தான்" அப்படின்னு வசனம் பேசினாராம்

==00o-o00==

தலைவருக்கு அவர் மனைவி மேல என்ன கோவம்?
கல்'லானாலும் கணவன் அப்படின்னு சொன்னாங்களாம்.
==00o-o00==

உங்க வீட்டுக்காரர்கிட்ட என்னடி பிரச்சினை?

உண்ணாவிரதத்துக்குப் போறேன், சமைக்க வேணாம்னார். 3 மணி நேரம் கழிச்சு வந்து சோறு போடுன்னு சொன்னா கோவம் வராதா?

==00o-o00==

முதலில் ஊறல் செய்தேன், கைது பண்ணினாங்க. இப்போ ஊழல் செய்தேன், அதற்கும் கைது செய்கிறார்கள். என்ன வாழ்க்கைடா இது.

==00o-o00==

சும்மா முயற்சி பண்ணின துணுக்குகள்.. 
Pic: Source Google Search

Friday, October 5, 2012

Monday, October 1, 2012

28/365 என்ன இங்க சண்டை

கணவன் - கணிணியில் வேலையாய் இருக்க, சமயலறையில் மகள், மனைவியிடையே ஏதோ வாக்குவாதம். 


கணவன்: என்ன இங்க சண்டை உங்க ரெண்டு பேருக்குள்ளேயும்?


மனைவி : அதான் இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்தோம்ல. அதான்.

கணவன்: ஏதோ புஸ்தகம்னு காதுல விழுந்துச்சு, அதுக்கும் மேல ஒன்னும் கேட்கலயே

மனைவி :  இவ்ளோ நேரம் அதைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தோம். இப்ப வந்து என்னான்னு கேட்டா?

கணவன்: கவனிக்கலைம்மா.

மனைவி :  அதான, நாங்க பேசும் போது நீங்க எங்கே கவனிச்சிருக்கீங்க?

கணவன்: வேற வேலையா இருந்தேன்மா. அதான் கவனிக்கலை

மனைவி :  நாங்க பேசினா மட்டும் உங்களுக்கு வேற வேலை வந்திரும்ல?

கணவன்: சரி, விடு நான் கேட்கலை.

மனைவி :  அதான? வீட்டு மேல அக்கறை இருந்தா என்ன பேசியிருப்போம்னு கேட்டிருப்பீங்கள்ல?

கணவன்: அக்கறை இல்லாமத்தான் கேட்க வந்திருப்பேனா?

மனைவி :  அக்கறை இருந்திருந்தா முதல்லயே வந்திருக்கமாட்டீங்களா? அதான் இல்லைன்னு தெரியுமே.

கணவன்: ஷ்ஷ்ஷ், நான் கேட்டதுதான் குத்தமா?

மனைவி : ஓ, அப்ப நான் சண்டை போட்டதுதான் குத்தமா?

கணவன்: என்னான்னு தெரியாம நான் எப்படி குத்தம்னு சொல்லுவேன்.

மனைவி : எனக்கு வேறை வேலையில்லாம நாந்தான் உங்க ரெண்டு பேர் மேலையும் குத்தம் சொல்லிக்கிட்டிருக்கேனா?

கணவன்: சரி, விடு, எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம்  ....

[மறுபடியும் சிகப்பிலிருக்கும் வரியில இருந்து படிக்கவும்..]

Friday, September 28, 2012

27/365 உலகையே அசத்தும் சை

சை..

Psy- பேரைக் கேட்டவுடனே சைக்கோ படமோன்னு நினைச்சிடாதீங்க. இன்னிக்கு உலக மக்களை எல்லாம் கிறுக்குப் புடிக்க வெச்சிருக்கு இந்தக் காணொளி. அதுவும் இது எந்த மொழின்னே தெரியாமப் பார்த்துட்டு ஆடிட்டு இருக்காங்க மக்கள் எல்லாம். பெரும்பான்மையான எல்லா Talkshowலயும் வந்துட்டாரு சை. அதனோட காணொளி கீழே இணைச்சிருக்கேன். கொலைவெறியைவிட பெரிய வெறியா மாறியிருக்கு இந்த கக்னம் ஸ்டைல். அதிகமில்லைங்க 30 கோடி பேர் மட்டுமே(பதிவு எழுதும் போது) பார்த்திருக்காங்க.

ஒரு கிறுக்குத்தனமான ஆட்டம்தான். ஆனா ஒருத்தருக்கு புடிச்சிருச்சின்னா இன்னொருத்தருக்கும் சீக்கிரம் புடிச்சிரும்ல. அப்படித்தான் ஆகிப்போயிருச்சு..




===00oo00===


பார்த்தாச்சா, எப்படியும், நம்ம ஊர்ல Flash Mob  வந்துரும். அப்போ எப்படி ஆடுறதுன்னு யோசிக்காம, அவரே சொல்லிக்குடுக்கிறாரு, சீக்கிரம் கத்துக்கிடுங்க.




===00oo00===

ம்ம பயபுள்ளைங்க சும்மா இருப்பாங்களா? உடனே கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு. GangNam Style மாதிரியே Kingkong Styleனு ஒரு வீடியோ விட்டுட்டாங்க. அதையும் இணைச்சிருக்கேன்.

 

Tuesday, September 25, 2012

26/365 பிள்ளையாருக்கு தொப்பை ஏன்?

  • பிள்ளையார் தோப்புக்கரணம் போட்டிருந்தா வந்திருக்குமா தொப்பை?
 --00o00--
  •  ஆணித்தரமான வாதம் அப்படிங்கிறாங்களே, ஆணி தரமா இருக்கா இல்லையான்னு விவாதம் பண்றதா?
 --00o00--
  •  மம்தா பானர்ஜி மத்திய அரசிற்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டார் # Sonia: CBI எங்கே? இன்னுமா வேலையை ஆரம்பிக்காம இருக்கீங்க? 
 --00o00--
  •   தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்  
 --00o00--
  • உடல் குறைய அதிமுக’வுல சேர்ந்துடறது உத்தமம். வுழுந்து.. எந்திரிச்சு..வுழுந்து.. எந்திரிச்சு..
 --00o00--
  • பகுத்தறிவுவாதின்னா, சாமி இல்லைன்னு சொல்லனும், இந்துக்களைத்திட்டனும். மத்த மதத்தினரை பாராட்டனும்
 --00o00--
  • எனக்கென்னமோ கம்ப்யூட்டர்ல ப்ரோகிராம் எழுதி கரன்ட் கட் பண்ணுறாங்கன்னு நினைக்கிறேன் #சரியா போவுது
 --00o00--
  • அவனவனுக்கு ஆயிரம் கவலை, இதுல மட்டன் கடை பாய்'க்கு புரட்டாசி மாசம் வந்திருச்சேன்னு கவலை
 --00o00--
  • தெருவுல சாமி வந்தா கையெடுத்து கும்பிட்ட் காலம் போய், எல்லோரும் கைல செல்போன் எடுத்து படம் வீடியோன்னு எடுக்க ஆரம்பிச்சிடறாங்க
 --00o00--

  • காசு வாங்கிட்டு ஓட்டுப் போடறவனுக்கு என்னத்தை மரியாதை வேண்டிக்கிடக்கு. என்னபேசினாலும் வாங்கிட்டுத்தான் ஆவனும் #பணம் #மரம்
 --00o00--
  • One important key in the Life is வீட்டுச்சாவிதான். இல்லாட்டி தெருவுலதான் நிக்கனும்
மேலேயுள்ளவை எல்லாம் நான் இட்ட ட்விட்டுகள். அதன் தொகுப்பேயிது

Sunday, September 23, 2012

25/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -2

சி.பி.செந்தில்குமாரின் பேட்டி: பாகம் 1 
 
1) என் அனுபவத்தில், பதிவுலகத்திற்கு வந்தவர்கள் மூன்று  அல்லது நான்கு ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிவிட்டு, பிறகு பதிவுகளை (அதுவும் சொற்பமாக) படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதிலிருந்து நீங்கள் மீள முடியும் என நம்புகிறீர்கள்? வாழ்நாள் முடியும் வரையில் பதிவிடுவேன் என நீங்கள் நம்புகிறீர்களா?

    (வெகு சொற்பமான மக்களே இன்னும் 2003/4'ல் இருந்து பதிவிடுகிறார்கள்)

ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என்பது எல்லாத்துக்கும் பொருந்தும். லவ் பண்றவரை உயிரையே குடுக்கறேம்பான். அதே பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா  அதிக பட்சம் 3 வருஷம் தான்.. சலிப்பு வந்துடும், சண்டை ஆரம்பிக்கும்.. சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை அப்படித்தான்.

சினி ஃபீல்டுல கே பாக்யராஜ், டி ராஜேந்தர் நல்ல உதாரணம். 2 பேரும் டாப்ல இருந்தாங்க.. இப்போ இல்லை.எல்லாம் ஒரு சீசன் தான்./. சரக்கு குறைஞ்சுடும், அல்லது நீர்த்துடும்

Every Hero Becomes bore at a Time

இதையும் மீறி  ஆர்வமுடன், வெறியுடன் எழுதுறவங்க இருக்காங்க,  என்னை பொறுத்தவரை  பதிவுலகத்தை  என்னை ஏற்றி விடும் ஏணியாக, லட்சியக்கடலை அடைய உபயோகப்படுத்தும் பரிசலாக  நினைக்கிறேன்.

என் லட்சியம் மீடியாவில் பணி புரிவது. பேக் டூ த ஸ்க்ரீன். அதனால அந்த இடத்துக்கு போய்ட்டா பதிவு இரண்டாம் பட்சம் ஆகி விடலாம்.


===00oo00===

2) பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேண்டுமென நினைக்கிறீர்களா? அல்லது நாளேடுகள், வாரயிதழ்கள் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேணும்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் ( நன்றி - தசாவதாரம் கமல்).

பொதுவா அனுபவப் பகிர்வுகள் தான் இப்போ அதிகம் விரும்பப்படுது. பயணக்கட்டுரைகள், காலேஜ், ஸ்கூல் ஃபிளாஸ்பேக் அனுபவங்கள், இந்த மாதிரி.. இதுக்கு இலக்கிய வாசிப்பு தேவை இல்லை.. டைரி எழுதற மாதிரி நடந்ததை அப்படியே எழுத வேண்டியதுதான்.

சிறு கதை எழுதும்போது தான் சுவராஸ்யமான நடைக்காக மற்ற படைப்புகள் படிச்சா யூஸ் ஆகும்.. நடைல ஒரு ஸ்பீடு கொண்டு வர இலக்கிய வாசிப்பு தேவை.. என் சிபாரிசு . சுஜாதா , கு அழகிரி சாமி கதைகள்

இதெல்லாம் போக பரப்பரப்பான நியூஸ் அப்டேட்டிங்க் பண்ணலாம். ஆனா அது காலத்துக்கும் நிலைத்திருக்காது,. அப்போதைக்கு  படிப்பாங்க.. அவ்ளவ் தான்


===00oo00===



3) ஆரம்பத்தில் பத்திரிக்கைகள் பதிவுகளை வெகுவாக மட்டம் தட்டியே வந்தன.  சில எழுத்தாளர்களும் பதிவுகளை குற்றம் கூறினர். இப்பொழுது அது சற்றே மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பதிவுகள் கண்டிப்பாக மாற்று ஊடகமாக மாறிவிடுமா?


முன்னணி வார இதழ்கள் 4 இருக்குன்னா அதுல இருக்கற , அதுல எழுதறவங்க சராசரியா மொத்தமே 40 பேருதான் திருப்பி திருப்பி எழுதிட்டு வர்றாங்க.. காலப்போக்கில் அது போர் அடிச்சுடுச்சு.. வெரைட்டி ரைட்டிங்க் தர முடியல.. பதிவுகள் பார்த்தீங்கன்னா  ஏகப்பட்ட பேர் பட்டாசை கிளப்பறாங்க..

சூடான இடுகைகளில் வராத, சினிமா விமர்சனம் எழுதாத அதிகம் பேரால் படிக்காத பல மண்ணுக்குள் வைரங்கள் பதிவுலகில் நடமாடிட்டு இருக்காங்க..  என்னை கேட்டா வலை உலகுக்கென ஒரு வார இதழ் நடத்துனா பட்டாசா இருக்கும்.. அப்படி ஒரு முயற்சியை யாராவது எடுத்தா எந்த வித சன்மானமும் எதிர்பார்க்காம  நான் அதில் பணி புரிய தயாரா இருக்கேன். என் வேலை அதில் திற்மைசாலிகளை அடையாளங்காட்டுவதாக இருக்கும்..

எதிர் காலத்துல பத்திரிக்கை உலகுக்கு வலை உலகம் டஃப் ஃபைட் கொடுக்கும் என நம்பலாம். உதாரணமா இப்போ சினிமா விமர்சனங்கள்  வார இதழ்களில் வருவதை விட 4 மடங்கு கலக்கலா பலர் எழுதறாங்க..

செங்கோவி, உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , அதிஷா , லக்கிலுக் யுவகிருஷ்ணா,கார்க்கி, ராஜன் என இவங்க விமர்சனம் எல்லாம் படிக்கும்போது அவங்க எங்கேயோ போய்ட்டாங்க எனவும் வார இதழ் விமர்சகர்கள் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னும் தோணுது

===00oo00===

4) ட்விட்டர், ஃபேஸ் புக், பதிவுகள் - பாவிக்க, பாராட்ட, திட்டு வாங்க, எவை எவை சுலபமாக இருக்கிறது.


ட்விட்டர்  பதிவு போட்டதும் மார்க்கெட்டிங்க் யூஸ் ஆகுது.. அப்பப்ப நம்ம படைப்பின்  ரிசல்ட் தெரிஞ்சுடுது..

 ஃபேஸ் புக் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.. ஃபோட்டோ ஷேரிங்க் , க்டலை தான் அங்கே அதிகம்னு சொல்லிக்கறாங்க..  திட்டு வாங்க, அடிச்சுக்க சண்டை போட வேடிக்கை பார்க்க பதிவு தான் பெஸ்ட்..

ஆனா ஜாலியான சண்டைகள் இப்போ காணோம். பயங்கர வெட்டுக்குத்து தான் நடக்குது.. இப்போ புதுசா இந்து முஸ்லீம் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனைனு போய்ட்டு இருக்கு.. :((

==00oo00===

5) பதிவுகள் மூலம் ஒத்த அலைவரிசை கொண்டோரை அடையாளம் காண்பது எளிது. இதனால காதலிக்க ஏதுவான ஊடகமா இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ம் ம் அங்கங்கே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு.. நான் பத்திரிக்கைத்துறையில் இருந்தப்போ மு முருகேஷ் - அ வெண்ணிலா காதல் பெரிய அளவில் பேசப்பட்டுது.. அதே போல் வலை உலகில் காதல் வளரலாம்.. அங்கங்கே கள்ளக்காதலும்

==00oo00===

6) "சமூக வலைதளங்களால் பதிவுகள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை" - இதற்கு  உங்களது கருத்து?

பதிவுகள் முற்றிலும் அழியாது. ஆனா பாதிப்பு இருக்கு என்பது உண்மைதான். ஒரு வேளை பதிவு எழுதுவது குறைந்து போகலாம்.

Wednesday, September 19, 2012

24/365 துணுக்கு எழுத்தாளர் சி.பி.செந்தில்குமார் - பேட்டி -1

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, பத்திரிக்கை துணுக்குகளுக்காக  சி.பி. செந்தில்குமாரின் பெரிய ரசிகன் நான். அவரிடம் பேட்டி என்றதும், ஒற்றை வரியில் பதில் வந்தது.

அவரைப் பற்றி அறிமுகமெல்லாம் தேவையில்லையென்பதால் நேரடியாக கேள்வி - பதில்களுக்கு. 

உண்மையாகவே சி.பி.செந்தில்குமார் யார் என்று அறியாதவர்களுக்கு

இவர் சென்னிமலை சி.பி.செந்தில்குமார் என்ற பெயரில் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருபவர். அவருடைய Bio பின்னொரு பகுதியில் வரும். 2000ம் ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் சிறந்த துணுக்கு எழுத்தாளர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்.

பதிவின் முகவரி http://www.adrasaka.com




கே1: பத்திரிக்கை துணுக்குகளால் பிரபலமான நீங்கள், பதிவுலகத்துக்கு வந்ததால் அடைந்த பலன்கள் என்னென்ன?



பத்திரிக்கைகளால் 8 லட்சம் மக்களுக்கு அறிமுகம் ஆனாலும் பிளாக்கில் சினிமா விமர்சனம் மூலம் பல இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்கள் அறிமுகம், நட்பு , விரோதம் எல்லாம் கிடைத்தது.. இது எனக்கு பிற்கால திரை உலக வாழ்வுக்கு பயன் அளிக்கும் என நினைக்கிறேன் .அது போக வெளி நாட்டு வாசகர்கள் பலர் அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு நிரை குறைகளை சொல்வார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி


===00oo00===


கே2: பத்திரிக்கைகளில் எழுதும்பொழுது, பணம் மற்றும் அது சென்று சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம், பதிவில் பணம் ஈட்டுதலும் குறைவு, வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதை  நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது வித்தியாசம்.


உண்மைதான்.. பதிவில் அதிக பட்சம் 1000 பேர் மட்டுமே ரெகுலரா படிக்கறாங்க. சினிமா விமர்சனம் என்றால் மட்டும் அதை 12,000 பேர் படிக்கறாங்க.. பத்திரிக்கை என்றால் மினிமம் 5 லட்சம் பேர் படிப்பாங்க.. பண ஈட்டுதல் பிளாக்கில் குறைவுதான். ஆனாலும் இது மியூச்சுவல் ஃபண்ட் போல இன்சூரன்ஸ் போல நீண்ட கால வைப்புத்திட்டம் போல பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.. .


 ===00oo00===


கே3: பத்திரிக்கைகளுக்கு எழுதுகையில் சச்சரவுகள் குறைவாக இருக்கும். பதிவுகளில் அது அதிகம். பதிவுலக சச்சரவுகளில் சந்திக்கும் பொழுது, பத்திரிக்கைக்கே எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது உண்டா? பதிவுலம் விட்டுச் சென்றுவிடலாம் என்றும் எண்ணியது உண்டா? உண்டெனில்,. விவரிக்கவும்.


பல சமயம் தனி மனித தாக்குதலுக்கு உண்டானபோது மனம் வருத்தப்பட்டது உண்டு, ஆனால் பதிவு உலகத்தை விட்டு போக வேண்டும் என நினைத்ததில்லை.. சவாலாக எடுத்து சாதிக்க நினைக்கிறேன். உதாரணமாக நான் வந்த புதிதில் ஹிட்ஸுக்காக சி பி எழுதுகிறார் என தாக்கி பதிவு போட்டவர் சில மாதங்கள் கழித்து தன் பிளாக்கில் கட்டுரை எழுதவும், தன் தள விளம்பரத்தை தன் தளத்தில் போடவும் கேட்டுக்கொண்டார். இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி



===00oo00===


கே4 : பத்திரிக்கைகளில் நல்ல படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து படைப்புகள் வெளியிடப்படும். அந்த நேரத்தில அவர்கள் புறந்தள்ளிய படைப்புகளை பதிவுகளில் வெளியிட்டுள்ளீர்களா? அப்படி வெளியிட்ட படைப்புகள் பதிவுகில் பாராட்டப்படும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?


பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் பெரும்பாலும் சரக்கு கம்மியா இருக்கும்.. நம்மை விட ஒரு எடிட்டருக்கு  மக்களின்.. வாசகர்களின் பல்ஸ் நல்லா தெரியும்.. ஏன்னா எழுதுறவங்க ளுக்கு தன் படைப்பு எல்லாமே  பிரமாதம் என்ரே தோன்றும். எடிட்டர் தான் சுப்பீரியர். ஆனா எல்லா பத்திரிக்கை எடிட்டர்களும் ஒரே மாதிரி இல்லை. அவங்கவங்க டேஸ்ட்க்கு தக்க படி நம் படைப்பை பிரிச்சு அனுப்பனும். இதுக்கு அர்த்தம் அவங்க டேஸ்ட்க்கு தக்கபடி எழுதனும் என்று அர்த்தம் அல்ல. முதல்ல  படைப்பை எழுதிட்டு இது எந்த புக்குக்கு மேட்ச் ஆகும் என தேர்வு செய்து அனுப்பனும்..

 பத்திரிக்கையால் நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு பதிவில் நான் போட்டது - கற்புக்கரசி காஞ்சனாவுடன் ஒரு பேட்டி ( நடிகை குஷ்புவை கிண்டல் பண்ணீய நகைச்சுவை ) இது பிளாக்கில் போடப்பட்ட போது பலர் அதை ரசிக்கவில்லை

நீங்களும் சி.பி.செந்தில்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம் என்றிருந்தால் மறுமொழியிடவும்

Tuesday, September 18, 2012

23/365 சென்னையில் துணை-தூதரக ஆர்ப்பாட்டம்

அமெரிக்க குறும்படத்திற்கு(Innocence of Muslims) எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதுல கலந்துகிட்டவங்க 5000க்கும் மேலேயே இருக்குமாம். அதனையொட்டி நானிட்ட ட்விட்டுகள்


  • நேத்துதான் கடவுளே இல்லைன்னு பெரியார் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னைக்கு ஒரு இறைதூதரை கேவலப்படுத்திட்டாங்கன்னு அடிச்சிக்கிறாங்க. #நடுசென்ட்ர்ஸ் பாவமில்லையா? #ட்விட்டர் புலம்பல்
     
  • Most of them never saw the Videos Yet, but they are in Mount Road Now. [அந்தக் குறும்படத்தின் Trailerஐ பார்த்தவர்கள் எத்தனை பேரு இருக்கும்?]

  • நாம எல்லாம் தான் படிச்சவங்க #இன்னொசன்ஸ் ஆஃப்...  

  • ஒன்னு ரெண்டு விசா கிடைச்சிட்டு இருந்துச்சு. இனிமே சலிச்சி எடுப்பாங்க. ஹ்ம்ம்..  


  • சென்னை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். கண்டிப்பா அடிதடியாய் முடியப்போவுது.. வெளங்கும் #முஸ்LIM

  • நாளைக்கு விநாயகர் சதுர்த்தி வேற,. எந்த கடவுள் வந்தாவது கலவரம் இல்லாம பார்த்துக்கனும், கடவுளே!

  • தடியடியில் ஆரம்பித்து, வாகனங்களைச் சேதப்படுத்துவதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வன் ரகுவரன் மாதிரி அம்மா உட்காந்திருக்க வேண்டிய கட்டாயம்.  

  • KFC, McDonald, MNC மேலேயெல்லாம் கல்லை விட்டெறிஞ்சிருந்திருந்தா சமநிலையாய் ஆகியிருக்குமே 
  • உண்மையாகவே போராடும் குணமிருந்தால், KFC, McDonaldல் சாப்பிடுவதையும் அமெரிக்க - MNCக்களில் வேலை செய்வதையும் தவிர்க்கலாமே 
  • இப்ப உடைச்ச கண்ணாடிக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம். சாலையில பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் எல்லாம் அமெரிக்கர்களா? 
  • தமிழ்நாட்டுல இருந்து என்னை யாராவது திட்டினா, தமிழர்களை எதிர்த்து போராடனுமா இல்லை தமிழக அரசை எதிர்த்தா #கன்பீசன்
Pic Courtesy/Thanks: IBN Live

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)