Monday, September 20, 2010

சிபஎபா -Sept 20 2010

பாகிஸ்தானில் இயற்கைப் பேரழிவுfrom எண்ணங்கள் by Badri

இந்தியா கைவிட்டது ரெண்டை, அதனாலதான் நாம இப்ப நல்லா இருக்கோம், ஒன்னும் கம்யூனிசம், இன்னொன்னு மதச்சார்பு- அப்படிங்கிறார் அண்ணாச்சி, சரிதானே?


----00oo00----

இரண்டு சின்ன நிகழ்வுகள், எழுத்துல கொண்டு வந்த விதம் அருமை.நிறைய எழுது நண்பா, இப்பவெல்லாம் அதிகமா எழுத மாட்டேங்கிற நீ.
----00oo00----


ஒரு ராத்தல் இறைச்சி by நகுலன்

உலகத்துல பதில் கிடைக்காத இன்னொரு கேள்வி நாய் சகவாசம் சரியா இல்லையாங்கிறதுதான். கேள்விக்கு துணையா இந்தப் பதிவு
----00oo00----

ச்சும்மா ஒரு த்ரில்லர் அனுபவம் :)
----00oo00----

நச்’னு ஒரு கவிதை.

----00oo00----

/இயலுமானால் தங்களின் வணிகத் தந்திரங்களின் மூலம் மலத்தைக் கூட அழகான பாக்கிங்கில் இட்டு அதற்கு ஒரு நடிகரை விளம்பரத் தூதுவராக நியமித்து தொடர்ந்த விளம்பரங்களின் மூலம் மூளைச்சலவை செய்து அதை சாப்பிட்டால் தாதுவிருத்தி பெருகும் என்றோ தொப்பை கரையும் என்றோ சிவப்பழகு கூடும் என்றோ கூட நம்பச் செய்து விடுவார்கள்//ஷ்ஷ் என்னா கோவம், ஆனா கோவம் நியாயமானது தானுங்களே
----00oo00----

//உன் முனைவின் எல்லா முடிவிலும்கால் முறித்துக்கொண்டன வார்த்தைகள் /ரசிச்சு படிச்சா நல்லா இருக்கும், கவுஜ புடிக்காதவங்க எஸ்ஸாகிருங்க மக்கா
----00oo00----
யாழ் பற்றிய இசைக்கருவிக்கான ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக இணையத்தில் மேய்ந்த போது நண்பன் கானா பிரபாவின் கட்டுரை கிடைத்தது. எவ்வளவு அருமையான கட்டுரைடா நண்பா, இவ்வளவு நாள் படிக்காமல் விட்டுவிட்டேனே என்ற வருத்தம்தான் தோன்றியது. எனக்கும் கானாபிரபாவுக்கும் இசையில் ஒரே ரசனை என்பதுதான் கானாவை நண்பனாக காட்டியது என்பது இந்த்பபதிவுக்கு சம்பந்தமில்லாத விசயம். சரி இந்தப் பதிவில் சுவாரஸ்யமா எதுவுமில்லைன்னாலும் தெரிஞ்சுக்குங்க மக்களே. மேலும் விபுலாநந்தா அவர்களைப் பற்றி மேல் விவரத்திற்கு பிபிசி- தமிழ் வலைமனை
----00oo00----
என்னடா கதை வழவழன்னு போவுதேன்னு பார்த்தா, 3 வரியில எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிடுச்சு உச்சகட்டம். ஜாக்கி, கலக்கல் சிறுகதை
----00oo00----

இன்னுமா வெளிநாட்டு மோகம்!
கொஞ்சம் பெரிய பதிவுதான், ஆனால் சாராம்சம்தான் அருமை. இப்படியும் வெளிநாட்டுல இருந்து வருவாங்களான்னு நினைக்காதீங்க. இப்படிதான் எல்லா செலவும் பண்ணி அனுப்பின ஒரு மாசத்துக்குள்ளேயே இந்தியா வர்றேன்னு சொல்லி திரும்பி வர்ற் மக்கள் அதிகம், PMக்கு விழும்பாருங்க.. ஹ்ம்ம். எல்லாம் அனுபவம்தான். இதுக்கு Onsiteவேணுமின்னு ஒரு வருசமா ஒத்த கால்ல நின்னிருப்பான் அந்த ஆளு.

----00oo00----

பிறன்மனை நோக்கா - தமிழோவியம் by வினையூக்கி செல்வா
அடிச்சு ஆடறதுன்ன செல்வா செம குஷியாகிடுறான்பா. சரியான கதை. நிகழ்வுகள் எல்லாம் கண்ணு முன்னாடியே நிக்குது
----00oo00----

சங்கமம்- அழியாத கோலைங்களில் இருந்து இந்த வார சிறப்பு இடுகை
>புணரபி மரணம் by கோவி.கண்ணன்
அண்ணாச்சி நட்சத்திரமா இருந்தப் போது எழுதனது. கோவி எழுதனதுலேயே மிகச் சிறந்த கதையா நான் நினைக்கிறது இதுதாங்க.

மனோஜ் பரமஹம்சா - பேட்டி

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவிடம் பதிவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்:

1)தமிழ்ப் படங்களின் நிறங்களையும் வெளிப்படங்களின் நிறத்தை வைத்துப் பார்த்தாலே தெரியும், தமிழ்ப் படங்களின் நிறம் மொக்கையாக இருப்பது. ஆலிவூட், ஏன் பாலிவூட்டின் சில படங்களில் கூட அசத்தலான நிறம் தெரிகிறது. கண்ணில் வைத்து ஒற்றி எடுக்கக் கூடிய ஒரு டோனில் படமாக்குகிறார்கள், தமிழில் இன்னும் அந்த முயற்சி ஏன் பரவலாகவில்லை?
அப்படி எனக்குத் தெரியலைங்க, எல்லாவிதமான முயற்சிகளும் தமிழ் படங்களில் உண்டு,. சில படங்களை வெச்சு மட்டுமே முடிவு எடுக்க முடியாது.

2) வித்தியாசமான நிறம், ஓடிக் கெண்டே இருக்கும் காட்சிகள், ஒரு பொருளை மாறுபாடான கோணத்தில் காட்டல், ஒளி விழுதல் போன்ற காட்சிகளுடன் நானும் உள்ளேன் ஐயா என்று படத்தில் காட்டி பாயாசத்து முந்திரிப் பருப்பாக உள்ள ஒளிப்பதிவாளரின் பெயரே தமிழ்த்திரை வட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் வெளிவந்து புகழடைகிறது. இயல்பான, ஆரவாரமில்லா, கதையுடன் போகும், இயக்குனரின் காட்சிகளுடன் பயணிக்கும் தன்னை முன் நிறுத்தா ஒளிப்பதிவு என்று தமிழ் சினிமாவில் உள்ளதா..? அப்படி பட்டது எடுபடுமா?

கண்டிப்பா எடுபடும், புகழடைந்த ஒளிப்பதிவாளர்களின் படங்களைப் பார்த்தாலே தெரியுமே. நிறைய எடுத்துக்காட்டும் சொல்லலாம். காட்சிகள் பெரும்பாலும் இயக்குனரின் எண்ணத்துக்கு ஏத்த மாதிரிதான் நான் எடுக்கிறேன், இதுல நான் Compromise பண்ணிக்கிறது இல்லை.

3)மிக இயல்பான வெளிச்சத்தில் CamCorder மூலம் படமாக்கப் பட்ட முயற்சிகள் வெளிநாடுகளில் உண்டு. செல்வராகவன் ஆ.ஒ.வில் ஒரு காட்சியில் அந்த effect மட்டும் கொடுத்திருப்பார். தங்களுக்கு அது போன்று படமெடுக்க ஆர்வம் உண்டா?
உண்டு, வெகு சில படங்கள் மட்டுமே எல்லா மட்ட ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனாலயே camcorder வைத்து படம் செவது என்பது கடினமே. LSD சில பிரதிகள் மட்டுமே போடப் பட்டது, ஆதலால் வியாபார ரீதியாக வெற்றியும் நம் நாட்டில் குறைவே. காசுக்கேத்த தோசைதாங்க கிடைக்கும்.

4)தமிழ் சினிமா இன்னும் பெட்டராக என்ன பண்ணலாம் ?
:) நல்ல படங்களைச் செய்யலாம்.

5)தமிழ் இலக்கியப் பரிச்சயம் உண்டா? இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான இடைவெளியைக் குறைக்க ஆர்வம் உண்டா (எப்படியும் எதிர்காலத்தில் இயக்குநர் ஆகிவிடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில்..)?
சினிமாவிற்கு மொழியே இல்லை என்பேன், இல்லையெனில், சினிமாவே தனி மொழி என்பது என் கருத்து. கண்டிப்பாக எதிர்காலத்தில் பார்க்கலாம். Lets do it :)


6. As a institute student do you feel, institute learnings helps you in the industry?
கண்டிப்பாக. காரணம் பலர் சொல்லியிருப்பாங்க, என்னோட எண்ணம் வேற மாதிரி. நீங்க Instituteல படிக்காம நேரா ஒரு உதவி இயக்குனராவோ, உதவி ஒளிப்பதிவாளராகவோ சேர்ந்திருந்தா, அந்தத் துறையில மட்டும்தான் உங்க அனுபவமும், திறைமையும் கொண்டு வர முடியும். ஆனா Instituteல படிக்கும் போது அனைத்துத் துறைப் பத்தின ஒரு broad idea கிடைச்சுரும். அதனால, உங்க துறை மாத்திரம் இல்லாம, மத்த துறையிலும் கொஞ்சம் அனுபவமும் சேர்ந்திரும், இது ஒரு adavantageதானே. அதனால கண்டிப்பா Instituteல படிச்சது ஒரு நல்ல விசயமே. அதுவுமில்லாம Instituteல theoryங்கிற விசயமே கம்மின்னு சொல்லலாம். அதனால, முக்கால்வாசி தயாரா வெளியே வருவீங்க, அதுல ஒரு தன்னம்பிக்கையும் வருமே.


7. Why many cinematographers fail miserably as directors? (a few exceptions like Santhosh Sivan do exist, Balu Mahendra merely reproduced foreign movies)
இதுல எனக்கு உடன்பாடு இல்லீங்க. இதுக்கு ஒளிப்பதிவாளர்னு முத்திரை குத்த வேண்டியது இல்லை. போன வருசம் வசூல் அயனே அதுக்கு சாட்சி. எல்லாரும்தானே தோல்வி அடையறாங்க.

8. Who (Director or Cinematorgraher) determines the shot composition and the color of the scene?
ரெண்டு பேரும் சேர்ந்துதான், சில நேரங்களில் மேகங்கள் கூட முடிவு பண்ணுமே.

9. How important is it for a Director to know the technicalities like lens type, lighting etc?
தெரிஞ்சிக்கிறது நல்லது, தெரியாம இருந்துட்டா ஒளிப்பதிவாளர் சொல்றது நடக்கும், ஆனா அது இயக்குனரோட காட்சியமைக்கு(கற்பனைக்கு) ஏத்தமாதிரி இருக்குமாங்கிறது சந்தேகம்தான். அதனாலயே அந்தக் காட்சியோ feel குறைய வாய்ப்பு அதிகம்.

10. Many hollywood cinematographers never operate the camera, is it an essential part of being a cinematographer to handle the camera? What is your personal preference? Do you like handling the camera or would rather let your assistants handle them?
தேவை இல்லைங்கிறது என்னோட எண்ணம். நான் கையாளனுங்கிறது என்னோட விருப்பம் கூட, நாமே ஒரு விசயத்தை நம்மாள செஞ்சா சந்தோசம்தானுங்களே.அதே சமயம், ஒரே காமெரா மட்டும் வைத்து படமாக்கும்போது ஒளிப்பதிவாளர்களே monitor செய்துகொள்கிறார்கள். அதே மாதிரி பல காமெரா வெச்சு படம் பண்ணும்போது உதவியாளர்கள்தான் செய்கிறார்கள்.
.
11. Give some instances when you had to disagree with the director about a shot? How did it get resolved?
இது வரைக்கும் வந்ததில்லை, நல்ல பிள்ளையாவே இருந்துட்டேன். ஈரம் படத்துல இயக்குனர் அறிவு என்னோட நண்பங்கிறதாலயும், GVM எனக்கு சுதந்திரம் குடுத்ததினாலையும் வரலை :) விதவ’வில் GVM பல காட்சிகளை விவரிச்சுட்டு போயிருவார். நானே முடிவு செய்து காட்சிகளை கொண்டு வரனும், அதுதான் இயக்குனருக்கும் வெற்றி, ஒளிப்பதிவாளரின் வெற்றியும் கூட. இதனாலயே கெளதம்சாரின் படங்கள் ஒளிப்பதிவு பேசப்படுகிறது.

12. Are directors open to suggestions to change the scene depending on the limitations or do they push the envelope?
இல்லை, எனக்கு இதுவரைக்கும் இப்படி அனுபவம் ஏற்பட்டது இல்லை.

13. Hollywood movies do detailed story boarding with camera angles and movement decided in pre-production, how is it done in Indian movies?
கண்டிப்பா, நாங்களே விதவ, க்கு நிறைய முன் தயாரிப்பு செய்தோம், எந்தளவுக்கு preproductionல கவனமா செய்யறோமோ அந்தளவுக்கு Post prodution வேலை கம்மியாகிடும், அதுவுமில்லாம படமும் நாம நினைச்ச படி வரும். விதவவுல நாங்க 60% சதவீதம் PreProduction ல முடிவு பண்ணிட்டோம், Outdoor locationதெரியாத நேரத்துல முதல் நாளே அந்த இடத்துக்கு போய் பார்த்துட்டு முடிவு செய்தோம்.

14. How much of a cinematographers work is done during pre-prod (again in the context of Indian movies)?
May be 30%-50%, பெரும்பாலும் இப்போ செய்ய ஆரம்பிச்சுட்டாங்க, காரணம் செலவும் குறையும் தரமும் அதிகமாகும்.

15. What do you think about digital cameras? What is your personal preference and why? Do you think red-one is going(or digital) will help in future in tamil industry.
பட்ஜெட்டுக்கும் உபயோகமா இருக்கோ ஒழிய தொழில்நுட்பத்தில் இன்னும் குறைவான தரமே கிடைக்கிறது.filmல் எடுக்கும் போது chemicals, grains இப்படி பல விசயங்கள் பிற்சேர்க்கையில் நீக்க வேண்டி இருக்கு. அதை Digital சுலபமா பண்ணிடலாம். அதே சமயம், Processor speed போல Digital cameraவில் இன்னும் பல விசயங்கள் குறைகளாகவே இருக்கு. காலம் போகப் போக எல்லாமே digital ஆகத்தான் மாறிடப்போகுது. அந்த சமயத்துல இன்னும் சுலபமா பல விசயங்கள் செஞ்சுக்க முடியும். ஆனால் காத்திருக்கனும்.

16. There is a wave of film makers, usually indie film makers who use DSLR for making movies, what do you think about the output and would you compare it with 35mm?
இன்னும் செய்து பார்க்கவில்லை, வாய்ப்பு கிடைச்சால் செய்யலாம், ஆனால் படம் முழுக்க செய்வது என்பது கஷ்டமே, ஏற்கனவே சொன்ன மாதிரிதாங்க, காசுக்கேத்த தோசைதான்.

17. தயாரிப்பாளர் ஷங்கரிடம் பணி புரிந்த அனுபவம் எப்படி இருந்தது... உங்களின் எதிர்கால லட்சியம் என்ன..
ஷங்கர் சார், நாம சினிமாவுல பார்க்கிற மாதிரி இல்லை. பிருமாண்டமா பண்றவர், ஆனால் நேரில் ரொம்ப எளிமையானவர். எதிர்கால லட்சியம்.. தெரியலைங்க :) . அடுத்த படம் அவரோடதானே.. :)

18.கெளதம் உஙக்ளிடம் ஸ்க்ரிப்ட் சொன்ன போது ஏற்பட்ட உணர்வை திரையில் கொண்டு வந்துவிட்டதாக நினைகிறீர்களா?
கண்டிப்பா இல்லை, அதாவது அதுக்குமேலையே வந்திருக்கு. நாங்க எதிர்பார்த்ததைவிட நல்லாவே வந்துருச்சு. இப்போ படம் வெற்றி அடைஞ்ச பிறகு இதைச் சொல்ல என்ன இருக்கு?

19. What was the Color theme came to your mind when GVM narrated the VTV story to you.
அவரே வண்ணத்தையும் சொல்லிட்டாரு, அதாவது வெள்ளைன்னு. போன படத்துல கூட அறிவழகன் கூட கிரே வண்ணம்னு சொல்லிட்டாரு. வெள்ளைன்னு சொன்னதாலேயே முடிஞ்சளவுக்கு வெளிச்சம் படும் படியே எடுத்தோம். சின்ன ஒரு காட்சி கூட ஜன்னலில் வெளிச்சம் படுற மாதிரி பார்த்துக்கிட்டோம்.

பின் குறிப்பு: மக்களே மன்னிக்கவும், ஏற்கனவே சொன்ன மாதிரி நானும் மனோஜும் அலைபேசியிலதான் பேசி இந்த செவ்விய முடிச்சோம். அதை தட்டச்சவே பல நாள் ஆகிருச்சு, அப்படியே அந்தச் செவ்வியையும் ஒலி வடிவத்துல தர்றதுலயும் சிக்கல் வேற. இந்தப் பதிவை எழுதினது ஆகஸ்டு மாதம், draftல போட்டு வெளியிட தேதி வெச்சப்புறம் வெளியாகலே. காரணம் தெரியலன்னாலும் தப்பு என்னோடதுதான். மன்னிச்சுகுங்க.

Thursday, September 9, 2010

ட்விட்டர் நிச்சயம் NOபால்தான்

என் பர்ஸ் கர்நாடகா காவிரி போல என்றாள் தோழி. எப்பவாவது தான் திறக்கும் அதுலயும் ஒன்னும் வராதே என்ற அர்த்ததில்.

----OOOO----

வாரம் ஒரு முறைதான் குளிப்பியா என்றேன் தோழியிடம். ஆம் என்கிறாள். இப்படித்தான் சனிக்கிழமை என்ற பெயர் வந்திருக்குமோ?


----OOOO----



என்னை தொழிலதிபரே என்று கிண்டல் செய்வது தோழியின் வழக்கம். அவள் விட்ட மிஸ்ட் காலுக்கெல்லாம் நான் திருப்பி அழைக்க, நானெப்படி தொழிலதிபர் ஆவது, ஏர்டெல் முதலாளிதான் தொழிலதிபர் ஆகியிருக்காரு.

----OOOO----



வீட்டுக்கு வந்த தோழியிடம் ”இவன் எதுவுமே வச்சிக்க மாட்டான்” என்றார் அம்மா. “இல்லை. ஆண்ட்டி.அவன் மாறிட்டான்” என்ற தோழி காதில் சொன்னாள் ”அதான் கடன் நிறைய வெச்சிருக்கியே, காச எட்றா பேமானி”


----OOOO----


தோழியின் அப்பா உஷாரானவர். வீட்டு ஹாலில் “இங்கே நிறைய செலவு வெக்கப்படும் இதுக்கு இந்த வீட்டு நிர்வாகம் பொறுப்பேற்காது” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறார்.


----OOOO----


ட்விட்டர் நிச்சயம் நோபால்தான். இல்லையென்றால் ஒரு டிவிட் தப்பா போட்டாலே ஒரு நாடே செவுலு மேலவுட்டு கும்முறாங்களே. உண்மைதானோ???


----OOOO----



ஒரு நல்ல பழமொழி சொல்லுடா என்றாள் தோழி. “அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு” என்றேன். நீ தின்னே என் சொத்து அழியுது, இதுல உன் வீட்டாரும் சேர்ந்து இல்லே அழிக்கிறாங்க.


----OOOO----



ஒன்றே குளம். அதுல நீ எப்ப விழுவே

காதலும் கடனும் பிறர் தர வாரா

----OOOO----



டுவிஸ்கி: இந்தப் பதிவு கார்க்கி பதிவுக்கு எதிர்வினை இல்லீன்னு சொன்னா நம்பவா போறீங்க. இனிமே தோழி பதிவுக்கு எல்லாம் எதிராளி பதிவு வரும்னு எச்சரிக்கிறேன்.

Tuesday, September 7, 2010

சிபஎபா - Sept-07-2010

பாணா காத்தாடியும் ஒரு காதலும் by இரும்புத்திரை
பாணா காத்தாடிக்கு விமர்சனம் எழுதுவார்னு பார்த்தா இப்படி ஒரு கனமான(எத்தனை கிலோ) அனுபவத்தை சொல்லிட்டுப் போயிட்டாரு. 12பியும், 12 சியும் 3 வருசம் நம்ம வாழ்க்கையிலும் வந்திட்டுவேற போயிருச்சா, பச்சக்குன்னு பதிவு மனசுல பதிஞ்சிருச்சு. அப்படியே அழியாத கோலங்களிலும் சேர்த்துட்டேன்.

----00oo00----
1970 -மெட்ராஸ்-காதல் கம் சஸ்பென்ஸ் கதை by கே.ரவிஷங்கர்
கருப்பு வெள்ளைப் படங்களை பார்த்திருக்கீங்களா? அதுவும் சமீபத்துல. எப்படியும் நமக்கு கதை தெரிஞ்சிருக்கும், அடுத்த காட்சி கூட என்னன்னு சொல்ல முடியும்(விஜய் படங்கள் மாதிரி). இதுவும் அதுமாதிரி, சரியான முயற்சி. ரொம்ப நாளைக்கப்புறம் ஆச்சர்யப்படுத்தின பதிவுங்க இது. அதுக்கான சேர்த்த படங்களும் ஆஹா..ஒரு சின்ன ரிவர்ஸ் கியர் போட்ட மாதிரி இருக்கு.
----00oo00----
பாகிஸ்தான் வெள்ளத்தில் மிதக்கிறது இந்திய நாட்டின் அமைதி! by Thekkikattanதெகா
தெக்கி அண்ணாச்சியின் பதிவு, ஒன்னு பாகிஸ்தான் மக்கள் முட்டாளாக்க அரசியல்வாதிங்க படும்பாடு, அதுவும் எத்தனை பொய் சொல்லி தங்களை காப்பாத்திக்கிறாங்க. அதுக்கு பகடைக்காய் இந்தியாவும், அமெரிக்காவும்தான்.. எப்பவுமே. இதுக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் வெள்ள நிவாரண நிதி கோடிக்கணக்குல குடுத்து வேற வெச்சிருக்காங்க. தேவையா நமக்கு? பதிவு கொஞ்சம் விளக்கமாவும் இருக்கு, ஆயிரந்தான் இருந்தாலும் பங்காளிக்கு பிரச்சினைன்னா நாம கொஞ்சமாவது பரிதாபபட வேண்டாமா?

----00oo00----

அய்யோ ப்ராம்பூஊஊஊஊஊஊஊ!! by அபி அப்பா

யாரோ ஆடு அறுக்குறாங்கன்னு நினைச்சு வந்தேன்’ இந்த வரியப் படிச்சப்ப கனமாவே சிரிச்சுபுட்டேங்க (எத்தனை கிலோ)..

----00oo00----
அம்மா சொல் : சிறுகதை - அபர்ணா பாஸ்கர் YouthFulVikatan Post
சிலகதைகளைப் படிச்சப்புறம், அதை நோக்கியோ, இல்லாட்டி வேற நினைப்பு எதுவும் வராத மாதிரியோ இருக்கும். அப்படியாப்பட்ட கதை இது. செழியனின் மார்க், கதைகள் மாதிரி.
----00oo00----
மூன்றுவரித் திரைப்படங்கள் by சுரேகா..

விடுகதைமாதிரியான பதிவு. I enjoyed it. ஆனா மூணாம்பு பசங்க கூட கண்டுபுடிச்சிருவாங்க, அப்படி ஒரு தொகுப்பு. நாங்க எல்லாம் காம்ப்ளான் ரொம்ப நாளுக்கு முன்னாடியே குடிச்சிட்டோம். அடுத்த முறை கண்டிப்பா கஷ்டமா வைங்க சுரேகா. கொசுறு: சினிமாவுக்கு பாட்டெழுதறாருங்க சுரேகா.

----00oo00----
அமெரிக்கத் தலைநகரில் இருந்து அரசி நகருக்கு.. by பழமைபேசி

Kasi Said- பதிவு எழுதுவதால் எது வருதோ இல்லையோ பொது சுவாதீனம் கொஞ்சம் கூடுதலாகவே வந்துவிடுவது நான் உணர்ந்த ஒன்று. பழமையார் சும்மாவே பொதுநலமி. அப்றம் என்ன!

----00oo00----
டூவர்ட் டிட்டிலும் சுபாவும் (400வது பதிவு) by ஆதிமூலகிருஷ்ணன்
குழந்தைங்க பதிவு எத்தனை போட்டாலும் படிக்கலாம்யா. ஒன்னொன்னும் புதுசு, ஒவ்வொரு தினுசு. ஆண்டவன் படைப்பை பார்த்தீங்களா, குழந்தைங்க எல்லாம் வெவ்வேறு எண்ணத்தோட பிறக்குது, நாமதான் இஞ்சினியர்க்கு படி, டாக்டருக்கு படின்னு அவிய்ங்க எண்ணத்தை சுருக்கிடறோம். ஒழிக பெருசுகள்.

----00oo00----
பூனைகளின் வீடு by தமிழ்நதி

செல்லப் பிராணிகளை வளர்த்து,. தாரை வார்க்கும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும்பாங்க. நான் முதலில் ஒரு நாயை பேருந்துக்கு பலி கொடுத்தப்பிறகு அடுத்த நாய் வேண்டவே வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் அடுத்த மாதமே இன்னொரு நாய்குட்டி என்னை மயக்கிருச்சு. பூனைப் பத்தின இந்தப் பதிவு அருமை.

Wednesday, August 25, 2010

பதிவுலகில் நான் : 6 ம் ஆண்டு

என்னாத்துக்கு இந்தப் பதிவு போடறேன்னு கேட்காதீங்க. இந்தத் தொடர்ல என்னை யாருமே எழுத கூப்பிடலை அப்படின்னு ஒரு பெரிய வருத்தம் எனக்கு. (நீயெல்லாம் பதிவு எழுதறேங்கிறதே நீ சொல்லித்தானேடா தெரியும் வெண்ணை’ன்னு யார்பா கொரலு உடறது). கூப்பிடலைன்னா விட்டுருவோமா? நாங்க எல்லாம் ரெளடின்னு சொல்லிகிட்டே ஜீப்புல ஏறுன ஆளுங்க ஆச்சே. ஏன்னா??? அதுக்கான பதில் கடைசி பாராவுல..

000000000000000000000000000000000
இந்தப் பதிவுலகத்துல என்னாத்த கண்ட?

ஒன்னுமே இல்லீங்க. வேலை வெட்டி இல்லாம நெறைய நேரம் இருக்கோம், எத்தையாவது படிக்கலைன்னா மண்டை வெடிச்சுரும் அப்படிங்கிற ஆளு நான். அதான் எழுதறது, எப்பவாவது.

000000000000000000000000000000000

கிடைத்தது:
நண்பர்கள்: நெறைய. நெறையன்னா நெறயவேதான். இப்போ இருக்கிற எடத்துல இருக்கிற எல்லாம் நண்பர்களுமே(90%) பதிவு/ட்விட்டர்கள் வட்டம் சேர்ந்தவங்கதான். ஒலகத்துல கால எங்கே வெச்சாலும் முதல்ல அந்த ஊர் பதிவர்ங்கதான் ஞாபகத்துக்கு வருவாங்கன்னா பார்த்துக்குங்களேன்.
000000000000000000000000000000000

எந்த அளவுக்கு இந்த நட்புகளை நம்பறீங்க?
எல்லாருமே நண்பர்கள்தான். ஆனா என்னோட நெருங்கிய வட்டத்துக்குள்ள வந்தவங்க ரொம்பச் சிலரே, மத்தவங்க எல்லாம் மூக்கு வரைக்கும்தான். சுருங்கச் சொல்லனும்னா நேருல பார்க்கிற வரைக்கும் யாரையுமே நான் நம்பறது இல்லே. பதிவுகள்ல நான் பின்னூட்டம் போடறதை விட அலைபேசியில பேசினது நிறைய இருக்கும். அதனாலயே பதிவுக்கு அப்பால அந்தப் பதிவர்களின் நெருக்கம் ரொம்ப ஆகிருச்சு. இதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா நம்ம ’கருப்புத் தளபதி’ நசரேயனைச் சொல்லலாம், அப்புறமா ட்விட்டர் வகிமாவைச் சொல்லலாம். அட சொல்ல மறந்துட்டேன், இப்போ நான் வேலையே பதிவுலகத்தால கிடைச்சதுதான். அப்புறம் நட்புகளைத் தாண்டி சங்கம் மக்கள், அதெல்லாம் நெருக்கம், நெருக்கம் ரொம்ப, குடும்ப பிரச்சினைகூட பேசுற அளவுக்கு. சங்கம் மக்கள் நட்பு வளையத்துல வர மாட்டாங்க, அவுங்க அதுக்கு மேல.

இந்தியா/சிங்கை சிலர்கிட்ட நல்ல நண்பனா இருக்கேன், சிலர் எனக்கு நல்ல நண்பர்களா இருக்காங்க. அதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா மாம்ஸ் பாலபாரதி, ’தடாலடி’கெளதம், எம் எம் அப்துல்லா, ’பொதிகைச் சாரல்’ ஜே கே, தேவ், கைப்பு, சிபி, கப்பி, தஞ்சாவூரான், கார்க்கி, ஜிரா, இளவஞ்சி, கொங்கு ராசா, சந்தோஷ், நந்து அப்பா(இந்த மனுசன் இந்த லிஸ்டலையே வரக்கூடாது, இருந்தாலும் 4 பதிவு போட்டிருக்காரேன்னு சேர்த்திருக்கேன்),வால்பையன்,T.V.ராதாகிருஷ்ணன் ஐயா, கோவி, குழலி, செல்லா, செந்தழல் ரவி(இவன்(ர்) எந்த ஊர்ல இருக்கா(ர்)ன்னே தெரியல, அப்படி பறக்கிறான்(ர்)), ஜீவ்ஸ், ஜி,RaamCM

ஐரோப்பாவுல ’ஓமப்பொடி’சுதர்சன், டுபுக்கு, வினையூக்கி
அமீரகத்துல ஆயில்யன், பினாத்தல், புலி(சூடான்),அபி அப்பா,சென்ஷி.
புதரகத்துல பாஸ்டன் ஸ்ரீராம்/பாலா,வகிமா கேங்(வட கிழக்கு மாஃபியா), KRS, வெட்டிப்பயல், என்னைக்குமே மதிக்கும் சத்யராஜ்குமார், பழமைப்பேசி, வழிப்போக்கன் - யோகேஷ், நசரேயன், மருதநாயகம், ச்சின்னப்பையன், சீமாச்சு, மோகன் கந்தசாமி, சங்கரபாண்டி, தமிழ் சசி, சொந்தக்கார சுகந்தி, வயசானாலும் இளமையா இருக்கிற லாஸ் ஏஞ்சல்ஸ் ‘ராம்’,Udhaykumar.

ஈழத்து பகீ, கானா பிரபா(கானாவை சந்திக்கும் நாளை எதிர்பார்த்து இருக்கேன். சந்திச்சதும் பாட்டெல்லாம் சுட்டுட்டு வரனும்)

இவுங்ககிட்ட எல்லாம் வாங்கப் பழகலாம்னு கூப்பிட்டு பேசலாம்னு நினைப்பேன், ஏதோ காரணத்தினால முடியல, இனிமே முடியாமலும் போகலாம் - செல்வராஜ், லக்கி, அதிசா, முரளிகண்ணன், நர்சிம், பரிசல்காரன், வெயிலான், ஜாக்கி சேகர், தாமிரா(ஆதி),ஈரோடு கதிர்(இவரை இங்கே வெச்சிருக்கிறது சரியான்னு தெரியல, ஆனாலும் சந்திச்சக்கனும்),சஞ்சய் காந்தி, அண்ணாச்சி ஆசிஃப்,குசும்பன்,செல்வேந்திரன், Badri, காசி.

இசையை பத்தி போட்ட பதிவுக்கு திரையிசை நண்பர்கள் கிட்ட வாங்கி கட்டினது(ஸ்பெசல்)

000000000000000000000000000000000

எதுக்கு இத்தனைப் பேர் இங்கே?
அட, இவுங்க ஒவ்வொருத்தரும் ஒரு பின்னூட்டமாவதா போடமாட்டாங்களான்னு ஒரு நப்பாசைதான்.

000000000000000000000000000000000

பெண் நட்புகள் நிறைய இருக்குன்னு சொல்றாங்களே, உண்மையா?
பொய். கவிதாயினி காயத்திரி, மை ஃபிரண்டு, அனுசுயா, இம்சை அரசி இப்படி வெகுசிலர் கிட்ட மட்டுமே பேசி இருக்கேன். மீதி எல்லாம் அரட்டையோட சரி. மேல சொன்ன நாலு பேருமே, என் குடும்பத்துல பொறக்கலையேன்னு கோவப்படுற அளவுக்கு பாசம் அதிகம். இவுங்க எல்லாம் உடன் பிறவா சகோதரிகள் கேட்டகரியில வந்துருவாங்க(செலவு மட்டும் நிறைய வெக்க மாட்டாங்க, ரொம்ப நல்ல புள்ளைங்க. ஆமா இவுங்க எல்லாம் எங்கே இருக்காங்க?). மத்தபடி பெண்களுக்கு பதிவுலகம் கஷ்டத்தைதான் தருது, பசங்கதான் குரூப்பா சேர்ந்து சுத்தறதுன்னு நல்லா இருக்காங்க. துளசி டீச்சர், கண்மணி அக்கா, பத்மா, பொன்ஸ், விக்னேஷ்வரி, சந்திரவதனா,சின்ன அம்மிணி, ramachandranusha(உஷா), இவுங்க மேல எல்லாம் நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு.


000000000000000000000000000000000

நேரம் எப்படி கிடைக்குது?
அலுவலகத்துல ஜல்லியடிச்சா பரவாயில்லைங்க, அதுவே வீட்டுக்குப் போவுதும்தான் சிக்கலே. அடி, உதை, கிள்ளு, மிதி இப்படி நிறைய வாங்கியிருக்கேன். அதனால வீட்டுல இப்போவெல்லாம் பதிவு படிக்கிறதே இல்லே.ஒன்லி ஆபிஸ், அங்கே அதுதானே வேலை.

000000000000000000000000000000000

மூக்குடைப்பட்டது?

வேற என்ன ஒரு முறை அவார்ட் தரேன்னு சொல்லப்போயி, தருமத்துக்கு வாங்கி கட்டினேன். மோகன் தாஸ்கிட்ட அதே சமயத்துல வேற காரணத்துக்காக பொதுவுல மன்னிப்பும் கேட்டேன், அது ஒன்னுதான்னு நினைக்கிறேன். சில நேரங்கள்ல நாட்டாமை பண்ணப்போயி சொம்பு நசுங்கனதும் உண்டு, வெளியே நம்ம பேரு வர்றதில்லங்கிறதால அது எல்லாம் மூக்குடைஞ்சதுல வராதே. அப்புறம் BlogOGraphy ரெண்டே ரெண்டு பதிவுகள்தாங்க போட்டேன் ஒவ்வொரு பதிவும் பதிவுலகத்தை நாறடிச்சுருச்சு. தமிழ்மணத்துல சூடான இடுகையெல்லாம் தூக்க வெச்சிருச்சு, அப்படி ஒரு பவர் அதுக்கு.

000000000000000000000000000000000

காசு சம்பாரிச்சது உண்டா?

ஹே ஹே, நிறைய செலவு பண்ணினது உண்டு. சம்பாரிச்சதும் உண்டு, இன்னும் வந்துட்டே இருக்கு அது பதிவுலகம் சார்ந்த தொழில்முறை. பதிவுலகத்தாலும் சம்பாரிக்க முடியும் :)

000000000000000000000000000000000

டிஸ்கி: சிலர் பேரை எழுதாம விட்டுருப்பேன், அவுஙக எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க, ஏன்னா நீங்க இப்போ தொடர்பு எல்லைக்கு அப்பால இருக்கீங்க, நெஜமாலுமே சிலரை மறந்திருப்பேன், அவுங்க என்னை மன்னிச்சிருங்க, பின்னூட்டத்துல என்னை திட்டிருங்க(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

உதவி செஞ்ச எல்லாருக்கும் நன்றி, ஏன்னா அத்தனை உதவிகள் பதிவுலகத்தால கிடைச்சிருக்கு

000000000000000000000000000000000

கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதையிது பதிவுலகத்துக்கு டேப்பரா ஒத்துவரும்.

உருமாற்றம்
கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.
பிற்சேர்க்கை:
//வகிமா வகிமா-னு சொல்லிட்டு, ரொம்பக் கவனமா பெயரேப் போடாம தவிர்த்திட்டீஙக்ளே. அவ்ளோ பயங்கரமான மாஃபியா கும்பலா அது //
இப்படி ஒரு வகிமா கேட்க, பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கே. பேரைச் சொல்லி நான் எதாவது விட்டுட்டேனா போட்டு வாங்கலாம்ல அதுக்கான எண்ணம்தான். வகிமா’ன்னா- வடகிழக்கு அமெரிக்கா மாஃபியா, இது ட்விட்டர் கும்பல். @dynobuoy @orupakkam @elavasam @ivansivan @snapjudge @njganesh @padmaa இன்னும் இது வளர்ந்துட்டே இருக்குங்க.

முதல் பாராவுக்கு பதில்:தமிழ்ப் பதிவுலத்துல நான் தடுக்கி வுழுந்த நாள் ஆகஸ்டு- 24-2005, அதாவது ஆறாவது வருசமாம் இது. இனிமேலாவது நல்ல, நல்ல பதிவா எழுதலாம்னு ஆசைப்படறேன் (வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்).

Monday, August 23, 2010

சிபஎபா- என்னாச்சு மகசூல் 08/23/10

ண்ணன் வீரபாகு மாதிரி படிச்சுக்குங்க. மொதல்லை கொஞ்சம் தொண்டை வறட்சிதாங்க இருந்துச்சு. சரி, இத்தோட போயிரும்னு பார்த்தா, இந்த இருமல் யாருக்கோ போனைப் போட்டு, மச்சான் இங்கே வசமா ஒருத்தன் சிக்கி இருக்கான், மாத்திரை திங்கமாட்டேன்னு திமிர் பேசுறான். அனுப்பி விட்டுருமான்னு கேட்டு ஒரு மீன்பாடி வண்டில போட்டு சளி, காய்ச்சல் ஆபிசுக்கு அனுப்ப, அவுங்க ஒரு 10 நாளைக்குங்க, சும்மா திமிர திமிர நோவடிச்சாங்க. சரி, அடிச்சுட்டு போங்கடா, நானெல்லாம் ரொம்ப நல்லவன்னு சொல்லி விட்டுட்டேன். விட்டாங்களா அவுங்க? அப்புறம் ஆசுபத்திரி சந்து, எமர்ஜென்ஸி, குலுக்கோசு, ஊசி, செக்கப்பு, மேக்கப்புன்னு சும்மா கதற கதற அடிச்சுதான் விட்டாங்க. இந்த நிலைமையில எங்கேன்னு பதிவ படிக்க? அதான் மக்களே கொஞ்சம் மன்னிச்சுக்குங்க, அடுத்த வாரத்துல இருந்து சிபஎபா’வை கலக்கிரலாம்.

ஆஹா எஃப்.எம்மில மத்தியானம் 2-4 மணிக்கு வர்ற அப்படிப்போடு ரோகினிக்கு பெரிய ரசிகரா ஃபார்ம் ஆகிட்டேன். நாமதான் அப்படின்னா வகிமாவும்(ட்விட்டர் வடகிழக்கு மாஃபியா) பெரிய ரசிகர்களா மாறிட்டாங்க. 2 மணியாச்சுன்னா போதும் எல்லாரும் நிகழ்ச்சிய கேட்குறது அப்புறமா அதைப் பத்தி பேசறதுமாவே பொழுது போவுது. கூடிய சீக்கிரம், எழுத்தாளர்கள் அமெரிக்கா வர்ற மாதிரி ரோகினி வட அமெரிக்கா வந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை. சென்னையில ரோகினிக்கு ரசிகர்கள் எப்படி? அதிகமோ?

ஆபிசுல கணினி இல்லாம, தொலைபேசி இல்லாம ஒரு நாள் இருந்து பாருங்க? ச்சும்மா இருக்கிறது ரொம்ப கஷ்டம்னு வடிவேல் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு. எவ்ளோ கஷ்டம்? ஒரு ரெண்டு நாள் இருந்துப் பாருங்க புரியும்.

ரெண்டு வாரமாவே நான் மகான் அல்ல இறகைப் போல பாட்டு அலைபேசியில பாடிட்டே இருக்கு. ரயில், வீடு, வண்டி, அலுவலகம்னு எங்கேயும் இதேப்பாட்டுதான், என்னமோ இந்தப் பாட்டுக்கு இவ்வளவு காந்தமான்னு தெரியல. அதுவும் யுவனுக்கு ஏற்கனவே காந்தக் குரல், இதுல இசையும் கம்மிவேற. இந்த வருசம் இசையில யுவன் சங்கர் ராஜாங்கம் தான். தொடர்ச்சியா பின்றாரு. இதுக்கு முன்னாடி களவாணி “ஒரு முறை இருமுறை” பாட்டுதான் பாடிட்டு இருந்துச்சு. நடுவால ஒரு 3 நாளைக்கு மட்டும் எந்திரன் வந்துட்டுப் போச்சுங்கிறது இந்தப் பதிவுக்கு தேவை இல்லாதது.

எந்திரன் பாடல்கள்,தொழில் நுட்பத்துல ரகுமானுக்கு அடுத்தப் படின்னே சொல்ற அளவுக்கு வேலை செஞ்சிருக்காரு. மதன் கார்க்கியின் சில வரிகள் மனசுல செம நச் (உதா- “ஒருவனின் காதலில் பிறந்தவனோ?, கூகிள்கள் காணாத தேடல்கள் என்னோடு”) வைரமுத்துவைப் பத்தி சொல்லவே வேணாம்- ‘தந்தை மொழி தமிழல்லவா’. technoல ரெக்கார்ட் பண்ணி, குரல் சேர்த்த விதம், தலை சுத்துது.

கெளதம் மேனன் போன வாரம் ஒரு பேட்டி குடுத்தாலும் குடுத்தாரு அஜித் ரசிகர்கள் துள்ளோ துள்ளோன்னு துள்றாங்க. கெளதம் ஆங்கிலப் படத்தைக் காப்பியடிச்சுதான் படம் எடுக்கிறாராம். மங்காத்தா Bookies தமிழாக்கம்தானே? இப்ப எங்கே போயி மூஞ்ச வெச்சிக்குவாங்க? சும்மா குதிக்க வேண்டியது.

கல்லூரியில என்கூட படிச்ச பொண்ணு எப்படியோ என் அலைபேசி எண்ணைக் கணடுபுடிச்சு ‘நீ என்னைக் காதலிச்சிருக்கலாம்டா’ அப்படின்னு சொல்லிட்டு வெச்சிட்டா. என்ன கரும்மனே புரியல. என்ன சொல்ல, ’இப்ப நான் என்ன பண்ண?’னு தம்பி மாதவன் மாதிரி நானே பாத்ரூம்ல என்ன பார்த்தே கேட்டுகிட்டேன்.

முத்தம் குடுத்துக்கொண்டே இருந்தேன்
உனக்கு சலிக்கவே இல்லையாடா? என்றாள்
வாங்கி கட்டிக் கொண்டவள்,
சலிச்சு சலிச்சுதானே நல்ல
முத்தங்கள் தர்றேன் என்றபடியே அடுத்த
இச்....இச்....இச்....

Wednesday, August 18, 2010

ரிங்க ரிங்கா தமிழில்

விஜயும் விட்டுட்டாரு, சூர்யாவும் விட்டுட்டாரு, தெலுங்குல போன வருசம் பட்டை லவங்கம் எல்லாத்தையும் சேர்த்து கலக்கினப் பாட்டு, இப்போ நீங்க தமிழில் கேளுங்க.



அசல்(தல இல்லீங்க) பாட்டு ஆட்டத்துடன், எப்பத்தான் தமிழ்ல இதுக்கு குத்தாட்டம் போடப்போறாங்களே தெரியல

Sunday, August 15, 2010

ஐயோ ’அதைக்’ காணோமே

அந்தப் பெண்ணின் மீது அவனுக்கு ஒரு வருடமாக காதல். அவகிட்ட காதலைச் சொல்லலாம்னு முடிவு பண்ணினான். சரி எத்தனை வருசம்தான் காத்துட்டு இருப்பான் அவனும். சரியா ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தான், இடம், ஒரு அழகிய கடற்கரை, அதுவும் பசும்புல் போர்த்திய ஒரு இடத்துக்கு அப்புறம் உள்ள கடற்கரை. கற்பனை பண்ணிப்பாருங்க, ரெண்டு மைலுக்கு அடர்ந்த காட்டுல வண்டியோட்டிட்டுப் போறோம், மனிதர்களின் நடமாட்டமே அங்கே இல்லை. காட்டோட முடிவுல சின்ன மேடு, அப்புறம் அரை மையிலுக்கு பச்சைப் பசும் புல்வெளி, அப்புறம் கடல். அதுவும், அலை கொஞ்சம் கூட இல்லே,தண்ணியோ தெள்ளத் தெளிவா கண்ணாடி மாதிரி இருக்கு. மக்கள் நடமாட்டமோ, ரொம்ப ரொம்ப கம்மி. இந்த மாதிரி இடத்தைத்தான் அவன் முடிவு பண்ணி கூட்டிட்டு வந்தான்.

அந்தப் பெண்ணுக்கோ அந்தக் கடற்கரையை பார்த்தவுடனே சந்தோசம்னா சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம். ”டேய், இப்படி ஒரு இடத்தை நான் பார்த்ததே இல்லே. இயற்கைதான் எவ்வளவு அழகு. எனக்கு இயற்கை புடிக்கும்னு தெரிஞ்சே என்னை சரியான இடத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கேடா.நன்றிடா!” என்றபடியே அவன் நெத்தியில முத்தம் குடுத்துட்டு கடலை நோக்கிப் போனாள். வழக்கம் போல கடல்ல குளிக்கிறதும், பின்னாடி வந்து சூரிய வெளிச்சத்துல காயுறதுமாவே பகல் நேரத்தை செலவு பண்ணினாங்க, சாயங்காலம் ஆச்சு. இருட்டினா கடற்கரைய பூட்டிருவாங்க. அதனால காதலை சட்டுபுட்டுன்னு சொல்லிடலாம்னு நினைக்கும் போதே அவ எந்திரிச்சு கடற்கரையில நடக்க ஆரம்பிச்சா. இவனும் அவளுக்குத் தெரியாம மோதிரத்தை பொட்டியில இருந்து எடுத்தான். அவளுக்காகவே ஆசை ஆசையா அவனும் அவனோட அம்மாவும் கடை, கடையா ஏறி இறங்கி வாங்கின மோதிரமது. 18 கேரட் தங்கம், உச்சியில விலை உசத்தியான வைரம். சூரிய வெளிச்சத்துல பளிர்னு மின்னுச்சு. ஆமாங்க, அதனோட வெலை .... பின்குறிப்புல இருக்கும், ஹல்லோ அப்புறமா பாருங்க. மோதிரத்தை பத்திரமா கையில எடுத்துகிட்டு அவ பின்னாடியே நடந்தான், கையை இருக்கமா மூடிகிட்டான்.ஒரு ஆச்சர்யத்தை குடுக்குனமில்லை, அதான்.

ரெண்டு பேரு தோளுக்குத் தோளா கொஞ்சம் தூரம் நடந்தாங்க. சடார்னு அவளுக்கு முன்னாடி முட்டிப்போட்டு உக்காந்து ”நான் உன்னைக் காதலிக்கிறேன், என்னைக் கண்ணாலம் பண்ணிப்பியா?”ன்னு கேட்டு மோதிரத்.. ஆ மோதிரத்தைக் காணோம். அவளுக்கோ அவன் காதலைச் சொன்னவுடன் என்ன பதில் சொல்றதுன்னு யோசிக்கிறா, ஆனா அவன் மோதிரத்தை தேடுறான். சரின்னு அவன் மோதிரத்தை தேடுறதை பார்த்துட்டு இவளும் தேட ஆரம்பிச்சா. சுமார் ரெண்டு மணி நேரமா தேடுறாங்க, கிடைக்கவே இல்லை, இதைக் கேள்விப்பட்ட மத்த மக்களும் அவங்களோட சேர்ந்து தேட ஆரம்பிச்சுட்டாங்க. அங்கே இருந்த காவலர்களும் சேர்ந்து தேட.. ஒரு கூட்டமாவே, தேடோ தேடுன்னு தேடுறாங்க. ஹ்ம்ம்ஹ்ம்ம் கிடைக்கவேயில்ல. இருட்ட ஆரம்பிச்சதும், மக்கள் மன்னிச்சுக்குங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. இருட்ட ஆரம்பிக்க, இனிமே தேடுறதுல புண்ணியமில்லைன்னு, அவனும் அவளும் கிளம்பிட்டாங்க.

பின் குறிப்பு:
1. வீட்டுக்குப் போற வழியில அவனோட காதலை ஏத்துக்கிட்டு கண்ணாலத்துக்கு சரி சொல்லிருச்சு அம்மணி
2. மோதிரத்துக்கு காப்பீடு பண்ணிருந்தாங்க அவனோட அம்மா.
3. அந்த மோதிரம் இன்னும் அந்தக் கடற்கரையில இருக்கலாம்.
4. அந்த மோதிரத்தோட விலை ரொம்ப கம்மிங்க. $9000 அமெரிக்க டாலர்கள், இந்திய ரூபாய் மதிப்புல 4லட்சத்துக்கு பக்கம்.

நல்லா சொல்றாங்கடா காதலை!

செய்தித்தாள்ல வந்த சேதி, நம்மளுக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கேன்.
மூலம்:http://www.thebostonchannel.com/news/24597272/detail.html

Saturday, August 14, 2010

ஆன்சைட்டும் ஆகஸ்டு 15ம்

விமான நிலையம்
கடக்கும் போதும்,
வானத்தில சப்தம்
எழுப்பிய படி
விமான செல்லும் போதும்,

நண்பனை வெளிநாட்டுக்கு

வழியனுப்ப அதே நிலையம்
வரும்பொழுதும்,

நண்பனிடம் நெட் சாட்டிங்கில்
பேசியபடி என்
ரெசியும்மை அவனிடம் நைசாக
தட்டிவிட்ட போதும்

டாலரும், பவுண்டும்,
ஏன் ஒரு ஆன் சைட் கூட
கிடைக்காதா என்ற ஏக்கத்தில்,
ஆதங்கத்தில், வருத்தத்தில்.....


சொல்கிறேன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

*அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எழுதி, பதிஞ்சதுங்க. ஒரு மீள்பதிவு

Monday, July 26, 2010

சிபஎபா July 26

அப்பா நன்றாக யோசியுங்கள் by ujiladevi
என்னான்னு சொல்றதுங்க, இதுதான் நியாயம்னு மகன்கள் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கு, ஒரு குடும்பத்தோட கெளரவம், எதிர்காலம் மருமகள் கையில்தானே இருக்கு. பசங்க பாவமில்லையா?


00000000000000000000


கணவர்களைத் திருடும் நடிகைகள்..! பாலிவுட் சர்வே..! by உண்மைத் தமிழன் (15270788164745573644)

அப்பா மலைக்க வைக்குது இந்தத் தொகுப்பு, உண்மையாவே உதா அண்ணாச்சியின் ஒரு வரி கூட விடாம படிச்ச பதிவு, இதெல்லாம் தேவையான்னு கேட்க கூடாது ஆமா..

00000000000000000000


போன வாரம் ஒரே கும்மாங்குத்து வாரம். ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க. நான் அவுங்களை குத்துவேன், இவுஙகளை குத்துவேன்னு ஒரே வன்முறை. சே ஒரு விவஸ்தை இல்லாம குத்துனாங்க, குத்து வாங்கினாங்க. பரிசல்காரன், கார்க்கி எதிர்வினையாம், அதுவும் அவருக்கு கண்ணாலம் ஆவலன்னு ஒவ்வொரு தடவையும் சொல்லும்போது, பாவம், ”கார்க்கி அம்மாகிட்ட இந்த வருத்தத்தையும் சொல்லுங்கப்பா” ,விக்னேஷ்வரி அம்மணியும் கோதாவுல இறங்கிட்டாங்க... கேபிள், நாஞ்சில், அக்பர்
வடகரை வேலன், அபிஅப்பா.

00000000000000000000


எது தந்தாய் என் வாழ்வே by செல்வநாயகி

ஜாதி, கடல்கடந்தும் ஒரு தலைமுறை கடந்தும் மறக்க முடியாம போனதுதான், இன்னொரு காத்திருப்போம், தொலயுமா இந்தச் சனி? நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடறது மாதிரிநட்டா சாதி அழிய வழி இருக்கும் போல.

00000000000000000000


வானமே எல்லை? Starjan ( ஸ்டார்ஜன் )

விவசாயம் பட்டுப்போச்சு, மழை இல்லை, வேலை இல்லை.. என்ன பண்ண? நகரமயமாக்கல்னால என்னென்ன கொடுமையோ.. இப்படி எல்லாருமே போயிட்டா கிராமமும்?சோத்துக்கு என்ன வழி?

00000000000000000000



சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை by கலையரசன்
கலையரசனின் அருமையான ஆரம்பம், வழக்கம்போல அமெரிக்க அதிகாரம்,, சிவப்பு ட்விஸ்ட்னு ஆரம்பிச்சுடாதீங்க. இப்படியே இருந்தா இது ஒரு பெரிய தொடருக்கும் வரலாற்றுப்பதிவுக்குமான விதைன்னே சொல்லலாம்.

00000000000000000000


மூளைக்கு வேலை டாப் 10+6.5 by IdlyVadai
மூளையை கழட்டுவாங்களாம், ஸ்கேன் பண்ணுவாங்களாம், என்ன முடிவுன்னு பார்ப்பாங்களாம், இந்த வாரத்து சிறந்த நகைச்சுவைப் பதிவு இதுதானுங்க.

00000000000000000000


செழியனின் விகடன் சிறுகதை by சுரேஷ் கண்ணன்

ஆனந்தவிகடனில் இந்தக் கதையப் படித்த பின் ஒரு 4 மணிநேரம் எதுவுமே செய்யவோ, பேசவோ தோணவில்லை. காரணம் இந்த மார்க் மாதிரி ஒரு 100 பேரை பார்த்திருப்பேன், அவர்களோடு வாழ்ந்திருப்பேன். அவர்களின் கஷ்டமும், அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் .. சொல்லி மாளாது. சுரேஸ்கண்ணன்- இது இரண்டாவது முறையாக நான்நினைத்த கருத்தைச் சொல்லியிருக்கிறார். என்னமோ இதைப் படிச்ச பின்னாடி இன்னமும் மனசு கனத்துப் போவுது.

சிபஎபா’ன்னா?
இந்த வாரம் சங்கமம்- அழியாத கோலங்கள்ல இருந்து ஒரு பதிவு-

காசி- வலையுரையாடல் மறைந்த அண்ணல் சிந்தாநதி எழுதியது

Monday, July 19, 2010

சிபஎபா Jul-19-201

நம்பியவர்கள் ஏமாற்றப்படுவார்கள்! By மருதன்
இதுவும் ஒரு மாதிரியான போலி பிரச்சினைதான், ஆனால் நல்லதுக்காக. போபால் பிரச்சினைக்காக செஞ்ச தில்லாங்கடிதான், செம கலக்கல் பதிவு.




----------------------------------------

கமலா தாஸின் கவிதை by Deepa

நல்லதொரு பிரதி. ஒரு பெண்ணின் சுதந்திரத்தை சொல்லும் இதுவும் ஒரு முறை. அழகு!



----------------------------------------

தவளைக்கல் by விக்னேஷ்வரி
எப்பவாவது இந்த மாதிரி உணர்வுபூர்வமான கதை படிக்கிறதுண்டு. ஆச்சர்யமான விசயம், விக்னேஷ்வரிக்கு இது முதல் கதையாம். நம்பவே முடியல, கதையப் படிச்ச பின்னாடி மனசு மேல ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டு அமுக்கிற மாதிரி உணர்வு. போனவராம் அம்மணி பொஸ்தகத்துல வேற வந்திருக்காங்க.
----------------------------------------

யூஸ் அண்ட் த்ரோ by ஈரோடு கதிர்
வாழ்க்கையே குப்பைமேடாகிட்டு இருக்கு, இதைச் சொன்னவரு அமெரிக்காகாரரு. ஈரோட்டுல இருந்து இது வேற பார்வை. உண்மையாவே மனுச ஜென்மங்கள் எல்லாம் உருப்படாமதான் போறோமா? அதனாலதான் முதியோர் இல்லங்கள் நம்மூர்ல பெருகுதா?
----------------------------------------.
வண்டியை விற்கும்போது கவனிக்க வேண்டியவை by VJR
சின்னதா கருத்து/சமூக பார்வை, அசத்தலான நடை.புதுசா வந்தாலும் புல்லட் மாதிரி பாயுராரப்பா!(lateஆ வந்தாலும் latest -பழசு ஆயிருச்சு)

----------------------------------------
கொஞ்சம் சலிப்பு வருதுன்னுநினைக்கும் போது சகாவரம்- செம நச். அடுத்த வரம் நோக்கி..
----------------------------------------
இது டிவிட்களின் தொகுப்பு. யார் தமிளன்(நல்லா கவனிங்க தமி’ள’ன்). இப்படி வாரத்துக்கு மூனு இல்லே நாலாவது போகும். மிஸ் பண்ணாதிங்க, ட்விட்டர் ஜோதியில ஐக்கியமாகிருங்க.
----------------------------------------
எவ்வளவு அலட்சியமா இருக்கோம். சுஜாதா சொன்ன 5 காசு கணக்கு இன்னிக்கு 29பைசாவாகிருச்சு. ஒரு நல்ல விதை, அடுத்த முறை கடைக்கு போயிட்டு வர்றப்ப கண்டிப்பா ரசீத நல்லா பாருங்க. கேபிள் போட்டது ஒரு சின்னவிதைதான், வளருமா?
----------------------------------------
ஆண்டி மடமும் தமிழக காங்கிரசும் by கோவி.கண்ணன்
கோவிகண்ணன் சாட்டையடிப் பதிவு, வழக்கம்போலதான்னாலும் பிடிச்சது, வழவழன்னு எழுதாம 140 எழுத்துக்குள்ள சுருக்கி அடிங்க கோவி..
----------------------------------------
பதிவுலகத்துல டார்டாய்ஸ் சுத்துறது ரெண்டு பேர், அதுல ஒன்னு கானா, இன்னொருத்தர் யார்னு விளக்கத்துக்கு அப்புறம் சொல்றேன்.

ஆடி1 அன்னிக்குனாலே நம்ம ஊர்ல எப்படியாப்பட்ட விசேசம் இருக்கும் தெரியுங்களா, தேங்காய் சுடறது என்ன? பக்கத்து வீட்டு அக்கா அவுங்க அம்மா வீட்டுக்கு போறதென்ன, மாமா அப்படியே சோகமாகுறது என்ன? பொண்டாட்டி ஊருக்குபோயிட்டான்னு எல்லாம் யாரும் கத்தறது இல்லே, ஆனா கண்டிப்பா ராத்திரியில மாமா வீட்டுக்குள்ளேயே தகிரியமா சரக்கடிச்சுட்டு இருப்பார், நாம போன சில்லி சிக்கனும், சோடாவும் உண்டு.
* அந்த இன்னொருத்தர் யாரு? வேற யாரு, நாந்தான்.

----------------------------------------

சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு by மருதன்
மருதனின் வரலாற்று பதிவுகள் எல்லாமே சுடும், இது வேற மாதிரி சுட்டிருக்கு. போனவாரம் சாருவுக்கு நேரம் சரியில்லை போல, ஏதோ வாசகர் ஆதங்கத்துல ஏதோ கேட்க போய் அவரைத் “தெருநாய்” ஆக்கிட்டார், ஆ.விகடன் மனம் கொத்திப்பறவையில் 'Nude' நந்துவை சுந்தர ராமசாமியின் பேரன்னு சொன்னாரு, அதுவும் உண்மையில்லை.கொஞ்சமாவது விசாரிக்க மாட்டாரா?

இந்த வாரம் முதல் சங்கமம்- அழியாத கோலங்கள்ல இருந்து ஒரு பதிவு-கொசுறுன்னு வெச்சுக்குங்களேன், இந்த வாரம் வாத்தி இளவஞ்சி எழுதிய வென்றுவாடி என் மகளே

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)