Thursday, July 26, 2012

பண்ணையம் 07-25-2012

தாம்பரம் Zion பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ருதி சேது மாதவன்.  இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர். 25 ஜூலை 2012 பள்ளிப் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது  பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து இறந்து போனார்.  

ற்கனவே இருந்த ஓட்டையின் மேல ஒரு சின்ன பலகையைப் போட்டு வெச்சிருக்காங்க. பேருந்து சாலையிலிருந்த ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கும்போது பலகை விலகிட, குழந்தை அந்த ஓட்டையின் வழியே தவறி கீழே விழுந்துடுச்சு. இதுல  என்ன கொடுமைன்னா, "இது ஒப்பந்ததாரர் வண்டி,  அதனால எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை" அப்படின்னு சொல்லி தப்பிச்சிக்கிடுச்சு பள்ளி நிர்வாகம்.

இதுக்கும் 6 மாசத்துக்கு முன்னாடிதான் வண்டிக்கு FC நடந்துச்சாம். இந்த நாட்டுல அலட்சியம், லஞ்சம் இதுக எல்லாம் தலைவிரிச்சி ஆடுது.

அதுசரி, 2004-Jul-16ல் நடந்த கும்பகோணம்  பள்ளி தீவிபத்துக்கே இன்னும் விசாரணதானே நடத்திட்டு இருக்கோம்.


=================================================================

"விளையாடி முடிச்சி 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடனும்" -அப்படின்னு என்னோட தலைமுறையில சொன்னாங்க.

ஆனா நாம நம்ம புள்ளைங்களுக்கு என்ன சொல்றோம்? "விளையாடி முடிச்சி 6 மணிக்கு வீடியோ கேம்ஸை அணைச்சிட்டு படிக்க உட்காந்திடனும்".

எவ்ளோ வித்தியாசம் பாருங்க? ஏன் இப்ப குழந்தைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து விளையாடுறது இல்லை. அந்த சூழல் மாறினதுக்கு சாலையில பெருகின போக்குவரத்து நெரிசல்தான் காரணமா? இல்லை திண்ணைகள் ஒழிஞ்சதா?

இது எங்கே போய் முடியுமோ தெரியல

=================================================================ந்த வாரம் கார்டூனிஸ்ட் பாலாவின் படம் சொல்லும் விசயம்தான் நிறைய யோசிக்க வைக்குது. தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு கட்சிகளும் நம் மக்களோட குடிப்பழக்கத்துக்கு தூண்டுகோலாகாவே இருக்காங்க. லாட்டரியை  ஒழிச்சா மாதிரி இதையும் ஒரு நாள் ஒழிப்பாங்கன்னு நம்புவோம். இப்பவெல்லாம் "நான் குடிக்கிறதில்லைங்க" அப்படின்னு சொல்ற ஒருத்தரை ஆச்சர்யமாத்தான் பார்க்க வேண்டிய நிலைமைக்கு வந்துட்டோம்.


நன்றி பாலா. அவரது Facebook முகவரி

=================================================================


ட்டிடம் கட்டும்போது சாரம்னு ஒன்னு கட்டுவாங்களே தெரியுங்களா? அதுக்கான இணையான ஆங்கில வார்த்தை என்னான்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிடேன்.Scaffolding சாரம் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் Scaffolding.
=================================================================
ங்கே பார்த்தாலும் இளையராஜா ரகுமான் சண்டைதான். அவுங்களுக்காகதான் இந்தப் படம்.

=================================================================
பின்குறிப்பு: 
படம் உதவி: விக்கி, கூகிள், இந்தியன் எக்ஸ்பிரஸ், கார்ட்டூனிஸ்ட் பாலா, நன்றி!

7 comments:

 1. இளா,

  தனியார் பள்ளிகளின் பணத்தாசையும்,மக்களின் கல்வியாசையும் இந்நிலைக்கு காரணம்.

  அப்பேருந்து பள்ளி வாகனம் போல மஞ்சள் நிறத்தில் தான் இருக்கு, பெயர் கூட எழுதி இருக்கு,அப்படியானால் அவர்கள் தான் பொறுப்பு. தப்பிக்க அப்படி சொல்கிறார்கள்.

  அரசுப்பள்ளி என்றால் கேவலம் என்ற நிலை, அரசும் சரியான நடவடிக்கை எடுக்காமல் தனியார் பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவி வருவதாகவேப்படுகிறது.

  இப்போதெல்லாம் கையில கொஞ்சம் காசு இருக்கு என்ன பிசினெஸ் செய்யலாம்னு கேட்டால் பள்ளியோ ,பொறியியல் கல்லூரியோ ஆரம்பிக்கலாம்னு சொல்லும் நிலையில் இருக்கு.

  ReplyDelete
 2. சூப்பர்..குழந்தைங்க விளையாட்டு பாயிண்ட்டு ட்விட்டர்லருந்து உடனே இங்க வந்துடுச்சா :)

  ReplyDelete
 3. /எவ்ளோ வித்தியாசம் பாருங்க? ஏன் இப்ப குழந்தைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து விளையாடுறது இல்லை. அந்த சூழல் மாறினதுக்கு சாலையில பெருகின போக்குவரத்து நெரிசல்தான் காரணமா? இல்லை திண்ணைகள் ஒழிஞ்சதா?//

  டெக்னாலஜி, பெற்றோரின் பொறுமையின்மை, படிப்பைத்தவிர மற்ற ஆக்டிவிட்டீஸ், அடுக்குமாடி குடியிருப்பு அதன் வசதிகள் & கட்டுப்பாடு, வெளியில் குழந்தைகளை அதிகநேரம் தனியாக விட்டுவைக்க முடியாத சமுதாயச்சூழல், பயம்...

  ReplyDelete
 4. வவ்வால் = எங்க கிராமம் வணிகமயமானதுக்கு காரணமே இரண்டு கல்லூரிகள்தான்

  நட்டு.. அது ஆரம்பப்புள்ளி, 140ல ஒன்னும் பெருசா பேசிட முடியலை

  ReplyDelete
 5. வெளிநாடுகளில் scaffolding inspector என்ற course உண்டு நண்பரே..

  ReplyDelete
 6. கவிதா-->100% உண்மை.

  Doha Talkies--> அட, அப்படிங்களா. நேத்து கூட வடபழனியில சாரம் சரிந்திருச்சாம். நம்மூர்ல மேஸ்திரியேதானே சாரத்துக்கும் மேஸ்திரி..

  ReplyDelete
 7. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

அவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே

மதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)