- கடைசி நேரத்துல நியூ படத்தில் நடிக்க முடியாதென ஜகா அஜித் வாங்கியதால் SJ Surya நடித்தார்.
மேலே இருக்கும் படத்தைப் பாருங்க. இதுதான் பட பூஜை அன்னிக்கு சென்னையில ஒட்டப்பட்ட சுவரொட்டி. தெலுங்குல மகேஷ் பாபு நடிக்கிறதாகவும் ஒப்பந்தமாகிட்டாரு. அஜித், என்ன நினைச்சாரே தெரியல, படத்தை விட்டு விலக ஜோதிகாவும் விலகிட்டாங்க. இப்போ தமிழ்ல ஒரு பெரிய ஆள் பலம் தேவைங்கிறதுக்காக ரகுமானை ஒப்பந்தம் பண்ணினார் SJ சூர்யா. அதுவும் ரகுமான், அப்போ ரொம்ப மும்முரமா இருந்த சமயம். அவரை SJ சூர்யாவினால பார்க்கவே முடியவில்லை. அதனால ரகுமான், விமானத்துல போற நேரத்துல சூர்யா பக்கத்து இருக்கைக்காரரை, கெஞ்சி கூத்தாடி இடம் புடிச்சி, கதை சொல்லி, ஒப்புக்க வெச்சிட்டாரு.
நடிகர்கள் பலரையும் கேட்டு முடியாதுன்னு சொல்லிட்டதால, தானே நடிப்பதா முடிவு பண்ணி, உடற்பயிற்சி (?!) எல்லாம் செஞ்சு கதாநாயகனா தானே உருவானார் SJ சூர்யா.
2001ல் ஆரம்பிச்ச வேலை, படம் முடியும் போது 2004 ஆகிடுச்சி.
தமிழில் படம் சுமாரா போச்சு, ஆந்திராவுலையோ செம மட்டை :(. மகேஷ் பாவுக்கு செம அடி விழுந்த படம் அது.
பின் குறிப்பு: நியூவில் நடிக்க மறுத்த அஜித், அதே கால்ஷீட்டுல நடிச்சு வெளிவந்த படம் "ரெட்".
ஒரே ட்விட்தான் போட்டேன். அதை விளக்க ஆரம்பிச்சு ஒரு தனிப் பதிவாவே வந்துருச்சு
ReplyDeleteஇளா,
ReplyDeleteவருங்கால வரலாறு போற்றும் :-))
வாலிக்கு அப்புறம் விஜய் வைத்து குஷி பண்ணிட்டு ஒரு பேட்டியில் அஜித் ஐ உசுப்பி விடுவது போல விஜயை சிலாகித்து பேசியதால் அஜித் கூட முட்டிக்கிச்சுன்னு அப்போ படிச்சேன்.
new வேலை 2003க்கு அப்புறமே ஸ்டார்ட் ஆச்சு இடையில் குஷி தெலுகு,இந்தி என போயிட்டார் எஸ்.ஜே.சூர்யா.
அப்புறம் தமிழில் நியு ஹிட்டான படம், அதனால் தான் அடுத்து அன்பே ஆரூயிரேக்கும் ரெஹ்மான் இசை அமைத்தார்.
Indha maathiri vishayamellam engirunthuthaan kidaikutho ungalukku?
ReplyDeleteவவ்வால், நான் அப்போ பொட்டி போடுற வேலையில சாலிகிராமத்துல இருந்தேன். அங்கே நிறைய இது மாதிரி விசயங்கள் கிடைக்கும். அதுல ஒன்னு ரெண்டு இதுங்க
ReplyDeleteஇளா,
ReplyDeleteஓ அப்படியா அந்த ஏரியாவில இருந்து இருக்கீங்களா.ஆனால் பொட்டி போடுற வேலைனா சரியா இன்னுமா தெரியலை :-))
பொட்டி தட்டுறன்னு சொல்லுங்க ,அங்கே வடபழனில hcl(அ),tcs ஆஹ்.
ஹி ...ஹி எனக்கு இதை விட கில்மாவா மேட்டர்லாம் புதுக்கோட்டை ஒயின்ஸ்ல கிடைக்கும் , சமயத்தில சரக்கை விட கிக்கா இருக்கும் :-))
ஆனால் ஒன்னு மக்கள் பேசிக்கிட்டே நம்ம சரக்கு,சைட் டிஷை காலி செய்துடுங்க:-))
------
பதிவுக்கு தொடர்பில்லை,ஆனாலும் கேட்கிறேன், சங்கமம் திரட்டியில் எனது பதிவுகள் திரட்டப்படவில்லை ,சமீபகாலமா,ஆனால் லாக்கின் ஆகுது எனது ஐடி.
ஹி..ஹி என்ப்பதிவு வில்லங்கமா இருக்குன்னு தடை கிடை செய்யலையே :-))
வவ்வால், பொட்டி தட்டுறதுன்னா மீஜிக் போடுற கும்பல் :)
ReplyDeleteசங்கமம், தானா வேலை செய்யுதுங்க, தடை கிடை எதுவும் கிடையாது.
நல்ல பதிவு
ReplyDeleteநன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)