#அப்படி சொல்லிக்கிட்டு திரியுற மக்கள் எல்லாரும், தன்னை ஒரு படைப்பாளின்னோ , எழுத்தாளருன்னோ சொல்லிக்கிறதுதான் கொடுமை. கவுண்டமணியை செந்தில் சொல்ற மாதிரி ஸ்குரூ டிரைவர் புடிச்சவனெல்லாம் மெக்கானிக் சொல்றாப்ல இது.
----00----
மதன் விகடனை விட்டுப் போனதற்கு ஒரு படம் மட்டுமே காரணமாய் இருக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன். கண்டிப்பாய் மேலிடம் மாறியிருக்கனும், அது இவருக்கு சாதகமாகவோ இல்லை, புடிக்காமையோ போயிருக்கனும். எப்படி இருந்தாலும் இழப்பு வாசகர்களுக்குத்தான். ராஜா-வைரமுத்து, கௌதம்-ஹாரிஸ் வரிசையில்தான் இதை நான் பார்க்கிறேன்.
#மதன் இல்லாத ஆனந்த விகடன், சாம்பார் இல்லாத கல்யாண விருந்தைப் போன்று இருக்கிறது #ப்ச், சீக்கிரமே பழகிடும
----00----
IPL5, CSKக்குவுக்கு அமையவில்லை. சரி விடுங்க. என்ன பண்ண? என்னதான் நாம குறுக்கு வழியில வந்தாலும் ஒட்டுறதுதான் ஒட்டும். இறுதிப்போட்டியில் நானிட்ட ட்விட்டுகள்
- இறுதியில் சீனு மாமா கள்ளங்கபட மற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
- கடின உழைப்பே வெற்றியைத்தரும், அதிர்ஷடம் இறுதிவரை வெல்லாது - Moral of IPL5
- அப்படி டெக்கான் பிச்சைப் போட்ட இந்த ஆட்டம் நமக்குத் தேவையில்லை என்று தூக்கியெறிந்த தோனியே வாழ்க!
- சிங்கத்தோட குகையில் வந்து சிங்கங்களையே ஜெயித்த KKRக்கு வாழ்த்துகள்! (Fu** You Fixing blabbers)
- பிக்ஸிங்னு எல்லாருக்கும் தெரிஞ்சிட்டதால, கொல்கத்தாவை ஜெயிக்க வைக்கனும்னு பிக்ஸிங் பண்ணிடாங்களாம்பா
- குதித்தாடும் சியர் லீடர் பெண்களுக்கு கண்டிப்பாய் கிரிக்கெட் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களும் காசுக்காக ஆடுபவர்களே
- இன்னிக்கு KKR ஜெயிச்சா அது கொல்கத்தாவின் திறமை, CSK ஜெயிச்சா அது Match Fixing #IPL5
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.
இந்த மைக்ரோ அப்டேட் டைப் கான்சப்ட் நல்லாருக்கே..
ReplyDelete//#மதன் இல்லாத ஆனந்த விகடன், சாம்பார் இல்லாத கல்யாண விருந்தைப் போன்று இருக்கிறது #ப்ச், சீக்கிரமே பழகிடும
ReplyDelete//
ம்கூம் பெருங்காயம் இல்லாத சாம்பார்னு சொல்லலாம்
இளா,
ReplyDeleteடைப்பு,படைப்பு,புடைப்புனு துவித்தர்ல லடாய் ஓடுதாமே ..என்னமோ காரியம் சித்தியானால் சரி..சுத்தியாகி கையை நசுக்காம :-))
கல்கி போன்ற ஜாம்பவான்களே விகடன் விட்டுப்போய் தனிக்கடைப்போட்டாங்க, இப்போவும் விகடன் முன்னணில இருக்கு கல்கி சிறுபத்திரிக்கை அளவுல தான் இப்போ இருக்கு.
விகடன் என்பதே பிராண்ட் நேம் போல, எனவே தனி மனித பிராண்ட் அம்பாசிடர்கள் மாறினாலும் நிற்கும்.
மதனுக்கு வெகு சீக்கிறம் அடையாள இழப்பு தான் ஏற்படும், ஏன் எனில் அவர் கல்கி அளவுக்கு ஒரு ஆளுமையல்ல.
நட்டு - நன்றி!
ReplyDeleteகோவி - எல்லாம் கொஞ்ச நாள்தான். ஆனா பழகிடும். இன்னொரு பத்தி வரலாம்
வவ்வால் டைப்பு- மேட்டர் எதேச்சையாய் நானும் செல்வேந்திரனும் ட்விட்டிக்கொண்ட போது தோணினது . மதன் விசயத்துல நான் உங்க கட்சி, மதன் அடையாளம் போகாம இருக்க போராடியே ஆவனும். விகடன், புதுசா ஒன்றைக் கொண்டுவந்தா முடிஞ்சது. சுலபம்
***#மதன் இல்லாத ஆனந்த விகடன், சாம்பார் இல்லாத கல்யாண விருந்தைப் போன்று இருக்கிறது #ப்ச், சீக்கிரமே பழகிடும***
ReplyDeleteஎப்படியோ ஒரூ வழியாத் தொலைஞ்சான் இந்த மேதாவி, விடுங்கோ! இப்போலாம் எங்க சொந்த பந்த கல்யாணாங்களில் பிரியாணி போட ஆரம்ம்பிச்சுட்டா! சாம்பாராவது மதன் என்னும் வெங்காயமாவது! :)