Thursday, March 22, 2012

பன்னாடை பன்னாடை @vivaji 03-22-2012

பன்னாடை என்றால் என்ன?
இந்த வார்த்தை பலருக்குத் தெரிஞ்சாலும் அது எப்படி இருக்கும்னு தெரியாதில்லையா? இதுதாங்க அது
  • அடுத்து ஒலிபரப்பாகும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் கோச்சடையான்.   இசை: AR Rahman, பேசியிருப்பவர்: ரஜினிகாந்த்

  • இணையத்துல காங்கிரஸ் கட்சி இருந்தா எப்படி இருக்கும்? 150 Admins and 2 Users
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடித்தால் தீக்குளிப்பேன்: கருணாநிதி எச்சரிக்கை #டேய் பசுபதி, எட்றா அந்தக் கடப்பாரையை..
  • ”சினிமாக்காரன் ஆதரவு தரலையா, அவன் படத்தைப் பார்க்காதே” என அவனைத் தள்ளி வெச்சிருந்தா அவந்தாண்டா தமிழன். நாம? ஹிஹி
  • 2025ல் பேசிக்குவாங்க “2012ல் வெட்டிக்கும்பல் ஒன்னு Twitter, facebookன்னு வெட்டியாப் பொழுதைக் கழிச்சிட்டு இருந்தாங்களாம்”
  • தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதில் தாய் முதலிடத்திலும், ராஜா இரண்டாம் இடத்திலும் #துள்ளி எழுந்தது காற்று
  • விகடன் வலைபாயுதே படித்த பின் என் நண்பன் “நீயும் தத்துவம் எல்லாம் எழுதுவியா?” என்று கேட்டு கதிகலங்க வைத்துவிட்டான். ”சத்தியமா இல்லடா” . ட்விட்டர்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை “தத்துவம்”தான்
 
  • ஆக மொத்தம் கேப்டனிடம் இல்லாத ஒன்று, அம்மாவிடம் இருப்பது #திராணி.
  • "அண்ணா" என்பது பெண்களின் கூர்மையான ஆயுதம்! இன்னொரு நல்ல காதலன் கிடைத்துவிடும் போது
 
  • லாபம் "ஈட்டி"த் தந்ததுங்கிறாங்களே, கோடாரி, அம்பு-வில் எல்லாம் எப்போ தரும்?


  • நல்லவர்களுக்குக் காலமில்லை. நிகழ்கால உதாரணம் : வைகோ
  • காதல் ஒரு எழவைப் போல, சிலருக்கு பத்து முடிஞ்சிதான் அது புரியவே ஆரம்பிக்கும்
----------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

8 comments:

  1. இளா,
    ஆனாலும் உனக்கு ரொம்ப்ப லொள்லு தாம்பா அங்கே மொக்கைப்போட்டதுக்கு அத்தனை பேர் மொத்துன பிறகும் அசராம பதிவுலயும் அதை திருப்பி போடுற அட்றா சக்க ..அப்படியே மயின்டைன் பண்ணு ! அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஆயிடலாம் :-)) (கவுண்ட பெல் பாணியில் சும்மா தமாசு)

    ----
    பன்னாடை தென்னம்பாலைக்கு தேவையான ஒன்றே , ஒரு வேளை தேங்காயாக மாறிய பிறகும் ஒட்டிக்கொண்டு இருப்பதால் , காரியம் முடிஞ்சதும் கழண்டுக்காம ஒட்டிக்கொண்டு கழுத்தறுப்பவர்களை பன்னாடைனு திட்ட ஆரம்பிச்சாங்களோ?

    //ஆக மொத்தம் கேப்டனிடம் இல்லாத ஒன்று, அம்மாவிடம் இருப்பது #திராணி. //

    திராணி= தி குயீன் அஹ் ?

    ReplyDelete
  2. பன்னாடையும் விஜய்காந்தும் இப்போ ஒன்னுங்கிறதுதான் இந்தப் பதிவில் இருக்கும் உள்குத்து :)

    ReplyDelete
  3. //திராணி= தி குயீன் அஹ் ?//
    இதை Karki தி ராணி’ன்னு சொல்லிட்டாருங்க.

    ReplyDelete
  4. //காரியம் முடிஞ்சதும் கழண்டுக்காம ஒட்டிக்கொண்டு கழுத்தறுப்பவர்களை பன்னாடைனு திட்ட ஆரம்பிச்சாங்களோ?//
    பதநீரை வடிகட்ட பன்னாடை உபயோகிப்பார்கள். நல்லதை விட்டுவிட்டு குப்பையை மட்டும் எடுத்துக்கொள்வதால் தான் பன்னாடை என்று சிலரை திட்டுகிறோம்!

    ReplyDelete
  5. இளா,

    நான் இரண்டையும் ஒப்பு நோக்கவில்லை ஆனால் காரியம் முடிந்ததும் கழட்டிவிடுதல் என்ற கருத்துக்கு பக்கமா வந்துட்டேன் போல :-))

    நீங்க வச்ச உள்குத்தை உள்குத்துனே தெரியாம அனுகிட்டேன் :-))

    கார்க்கி யாருன்னு எனக்கு தெரியாதாகையால் திராணியை தி குயீன் என நான் எடுத்துக்கொண்டது எனக்கே சொந்தம் :-))

    ----

    பந்து ,

    நீங்க சொன்ன அடிப்படையில் எப்படி பன்னாடைனு சொல்ல முடியும், டீ வடிக்கட்டி,சல்லடை எல்லாம் பன்னாடையா?

    தென்னை மரத்துக்கு தாவரவியல் ரீதியாக அமைந்த அமைப்பு அது பெயர் காரணம் எனக்கு சரியாக நினைவில் இல்லை . அந்த வலை போன்ற அமைப்பு ஒரு பார்சல் கட்ட பயன்படும் ராப்பிங் போல ,பாலை (தென்னம் பூக்கள்= இன்புளோரசென்ஸ் அடங்கிய தொகுதி) முன் கூட்டியே திறக்காமல் கட்டி வைக்கும் ஒரு அமைப்பு , அது காயவும் பாலை திறக்கும் , எல்லாம் இயற்கையின் அமைப்பு.

    தென்னை மரம் ஒரு தன் மகரந்த சேர்க்கை மரம் (பெரும்பாலும் , சூல் கொள்ளாத மலர்கள் இருப்பின் அயல் மரகந்த சேர்க்கை நடைப்பெறும்), எனவே பாலையில் பூக்கள் முதிர்ந்து கருவுற்ற பின் திறக்கும் வரை கட்டி வைத்திருப்பது பன்னாடை. பந்தம் = பிணைப்பது, பனுவல் என்றால் தொகுப்பது என்றும் சொல்வார்கள்(இது சரியா நினைவில் இல்லை)வலைப்போல இருப்பதால் ஆடை , பன்னாடை , அதனை வடிக்கட்டவும் பயன்படுத்துவது மற்றொரு பயன்ப்பாடு அவ்வளவே.

    தாவரவியல் ரீதியாக பன்னாடை செய்வது பாலை திறக்கும் நேரத்தை கட்டுப்படுத்துவது. பாலை திறந்த பின் அதற்கு அங்கே வேலை இல்லை கழிவாகி விடுகிறது.மக்கா சோளத்திலும் இப்படி இழை போன்ற வலைக்காணலாம்.

    ReplyDelete
  6. அட இதுக்கு பேருதான் பன்னாடையா? இத்தனை நாளா தெரியாம போச்சே..



    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  7. படித்தேன் என்பதை பதிவுசெய்கிறேன்

    ReplyDelete
  8. //அடுத்து ஒலிபரப்பாகும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் கோச்சடையான். இசை: AR Rahman, பேசியிருப்பவர்: ரஜினிகாந்த்//
    ரொம்பத்தான் லொள்ளு

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)