பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட WebOS செம மொக்கையாகி, கடைசியில் ஈச்சம்பழம் விலைக்கு விற்று தீர்த்தார்கள்.
2.Google Android Mobile Security
மொத்தத்தையும் சுருட்டிட்டுப் போகுற அளவுக்கு கூகிளோட Appsஏ, நூத்துக்கு மேற்பட்ட Appsகளை தன்னோட கடையிலிருந்து ஓரங்கட்டியது. இந்த வருடத்தின் மிகப்பெரிய malwareகள் இன்னும் Androidல் தான் இருக்காம்,. சாக்கிரதையா இருந்துக்குங்க மக்களே.
3.BlackBerry's Three-Day Outage
ஐபோனும் ஆண்ட்ராய்டும் போட்டிப்போட்டுக்கொண்டிருக்க, பெரும்பாலான Corporate businessகளில் உபயோகப்படுத்தும் BlackBerry 3நாள் பல்லிளித்ததும் கடுப்பானார்கள். பலர் ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்த கதையும் உண்டு, சிலர் அலுவலக தொடர்பே இல்லாமல் நிம்மதியாகவும் இருக்க முடிந்தது
4.Windows Phone 7.5 "Mango" Update
நானும் போட்டியில இருக்கேன்ன் சொல்ற மைக்ரோ சாப்ட் தன்னோட MobOSல் 7.5 அல்லது மாங்காய்(Mango) வெளியிட அது பெரிய மொக்கையானது. கொஞ்சம் நஞ்சம் இருந்தப் பேரும் இந்த மாங்கா வாரிச் சுருட்டிக்கொண்டு போயிற்று
5.Android Tablets
Samsung Galaxy Tab, Motorola Xoom, Kindle Fire and the Barnes and Noble Nook இப்படி பல Tablet PC வந்தும் iPadஐ கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. ஆண்ட்ராய்ட் டேப்லெட்டுகளை தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் iPadக்கே மாறினதை கண்ணாரக் காண முடிந்தது.
விளம்பர இடைவேளை:
6. FTC Order Against Facebook
Facebook அண்ணாச்சிய நீ உன்னோட பயனாளர்களின் சொந்த விசயத்துல கை வெக்கிறேன்னு சொல்லி Facebookக் கையை கொஞ்சம் மடக்கி வெச்சது Federal Trade Commission. இல்லாட்டி நம்ம மூஞ்சியை விளையாண்டிருப்பாங்க. Facebookம் தணிக்கைக்கு கீழே அதுவும் 20 வருசத்து வரனும்னு கட்டளை யிட்டது, மார்க்குக்கு கொஞ்சம் சவால்தான்.
7.Google+ and Google Music
கூகுளுக்கு மூடுன பல விசயங்கள்ல தமிழ் மற்றும் மலையாளத்து பதிவர்கள்தான் ரொம்ப அடிவாங்குனாங்கன்னு நினைக்கிறேன். காரணம் மூடப்பட்ட Buzz. அது ஒரு இத்துப்போன Productனு யாருமே சீண்டாத போது ஒரு நல்ல பின்னூட்டப் பொட்டியா வேலை செஞ்சது. ஆனா இதனால ஒரு காசும் பேராதுன்னு மூடினாங்க. அதை மட்டுமா ஏகப்பட்டத்தை கழட்டி விட்டு Google+ லயே பெருசா பண்ண நினைச்சாங்க. என்ன அதுவும் படுத்துக்குச்சு. Google Music க்கும் செல்ஃப் எடுக்கவே இல்லை.
8.The BlackBerry PlayBook
iPad பார்த்து சூடுபோட்டுகிட்ட பூனையில இதுவும் ஒன்னு. உபயோகப்படுத்துர ஒருத்தரைக்கூட பார்த்தது இல்லை.
9. Yahoo
விடுங்க, ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. வெந்த புண்ணுல ஏன் வேலைப் பாய்ச்சுவானேன்.
10. Cisco Cius
கேள்விப்பட்டதே இல்லை இல்லீங்க. அப்படித்தான், இதுவும் இன்னொரு பூனை.
மார்கட்டு அப்படிங்கிற வார்த்தையே நம்ம மார்கட்டுக்குத்தாங்க பாஸூ(மாப்பு)
மார்கட்டு அப்படிங்கிற வார்த்தையே நம்ம மார்கட்டுக்குத்தாங்க பாஸூ(மாப்பு)
Thanks : http://www.infoworld.com/slideshow/23658/10-biggest-tech-letdowns-2011-182472?source=rss_
ReplyDeleteநிறைய தெரிஞ்சுக்கிட்டோம். நன்றி
ReplyDeleteமார்கெட் இழந்தவர்கள் பட்டியில் மத்தியில் உங்க மார்கெட்டிங்... ம்ம்ம்ம்... ரைட்டு. :)
ReplyDelete//9. Yahoo
ReplyDeleteவிடுங்க, ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. வெந்த புண்ணுல ஏன் வேலைப் பாய்ச்சுவானேன்.//
lol:))))))))))
ரொம்ப வருஷமா இப்படித்தானே!
வெவசாயிங்க இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதியிருக்கலாமுங்க...
ReplyDelete//வெவசாயிங்க இன்னும் கொஞ்சம் விலாவாரியா எழுதியிருக்கலாமுங்க...//
ReplyDeleteஇவரு ஒன்னத்தையும் எழுதமாட்டாராம்... ஊர்ல இருக்கிறவங்கள நீ கொஞ்சம் ஜாஸ்தி எழுதேன்னு பாடாப்படுத்துவாராம்!!!
வர வர யானை மதம் பிடிச்சுத் திரியுது :)))
எதோ ‘மார்கட்டு’ன்னு சொன்னீங்களே??
ReplyDeleteநன்றி முக.
ReplyDeleteகவிதா--> எல்லாரு இருக்கிறதுதானுங்களே
ஆயிஸ், நன்றி
இப்படியும் மார்கெட்டிங் பண்ணலாமோ? :-)
ReplyDelete