Monday, May 16, 2011

NRI கொசுத்தொல்லைகள்

* 16 வயதினிலே படத்துல இருந்தே வெளியூர்க்காரனோ, வெளிநாட்டுக்காரனோ நமக்கு எப்பவுமே இளப்பம்தான். வெளிநாட்டுல இருந்து வர்ற மாப்பிள்ளைன்னாவே சாம்பார்தான். ரெண்டு சீன்ல மட்டுதான் வருவானுங்க, அப்புறமா கண்டிப்பா அல்வா பொட்டலம் கட்டி குடுத்தனுப்பிருவாங்க.

* வெளிநாட்டுல இருந்து ஊருக்குப் போறேன்னு போன் பண்ணி சொன்னாவே போதும், “மாப்ளே சரக்கோட வந்திருடா”ன்னு கண்டிப்பா சொல்லுவானுங்க. நாமளும் நல்லதா சரக்கு வாங்கிட்டு போய் குடுத்தா “மாப்ள, இது டாஸ்மாக்ல இருக்கிற சரக்க விட மட்டமா இருக்கேடா. இதைப் போய் எப்பிடிறா சப்பி சப்பி குடிக்கிறீங்க”ன்னு கடுப்பாக்குவானுங்க. சரி, வாங்கிட்டு போவலைன்னா “வெளிநாடு போயிட்டாவே எங்களை மதிக்க மாட்டீங்களேடா”ம்பாங்க.

டேய், நாதாரிங்களா நாம எல்லாம் வேலி ஓரத்துல திருட்டுத் தெளுவு குடிச்ச குரூப்டா.

* ”மாப்ள. அங்கதான் லட்சமா லட்சமா சம்பாரிக்கிறியே. ஒரு 10 இருந்தா குடுத்துட்டு போடா அப்புறமா தர்றேன்”ம்பாங்க. நாமளும் சரி பத்தாயிரம்தான்னு நினைச்சு குடுத்தா, “டேய், பத்தாயிரத்துக்கா நான் சிங்கி அடிக்கிறேன்? என்னடா நெனச்சுகிட்ட என்னை? பத்து லட்சம்டா நான் கேட்டது”ம்பாங்க.
டேய், பத்துலட்சத்துக்கு நான் சிங்கி அடிக்கனும்டா.

* வெயில் பட்டைய கிளப்பும், கால தரையில வெக்க முடியாது. ஊர்ல எவனும் மத்தியானத்துல வரமாட்டானுங்க. ஆனா நம்மளால ஒன்னுஞ் சொல்ல முடியாது. . வீட்ல மின்சாரம் கட் ஆவும், வேத்து புளுங்கும், அப்பக்கூட நாம சிரிச்சாப்ல இருக்கனும். மகா மட்டமான சாப்பாடு இருந்தாலும் சிரிச்சிகிட்டே சாப்பிட்டாகனும். இதுல ஒன்னுல நாம கொஞ்சம் முகஞ்சுளிச்சாலும் “வெளிநாட்டுல வேலை பார்க்கிற திமிரு”ம்பாங்க. இல்லைன்னா ரொம்ப மாறிப் போயிட்டடா’ம்பானுங்க
டேய், பீத்த ரப்பர் செருப்புக்கே சிங்கி அடிச்ச கோஷ்டிடா நாம.


* நாம் எதை வேணுமின்னாலும் இங்கே போட்டுகிட்டு திரியலாம். ஆனா நண்பர்களுக்கு துணி வாங்கிட்டு போவும்போது பார்த்து வாங்கிட்டு போவனும். Made in Indiaவோ, பங்களாதேசோ, பாகிஸ்தானோ இருந்திடக் கூடாது. மானம் போயிரும். “ஏண்டா, இதை ஏன் அங்க இருந்து வாங்கிட்டு வர்ற. நம்ம சந்தைக்குப் போனா இதை விட நல்லதாவே கிடைக்குமே. அட நம்ம திருப்பூர் மூர்த்தி கடைக்கு போனா சும்மா குடுப்பான்டா. வாங்கிட்டு வரானாம் அங்கேயிருந்து” அப்படிம்பாங்க தேவையா?
டேய், ஒத்த டீ சர்ட்டுக்காக PD சார்கிட்ட கெஞ்சி கூத்தாடி 16 மைல் மாரத்தான் ஓடினவங்கடா நாம.

* சோமாலியாவுல பிச்சையெடுத்தாலும் அவன் NRIதான்,. ஆட்டோக்காரங்க, ரியல் எஸ்டேட்காரங்கலிருந்து பார்பர் வரைக்கும் டபுள் ரேட் போடுவாங்க.


* வெளிநாட்டுல கஞ்சிக்கே சிங்கியடிச்சாலும் இவுங்கள மட்டும் நடுத்தர ஓட்டலுக்கு கூட கூட்டிட்டு போவ கூடாது. ஸ்டார் லெவல் ஓட்டலுக்குத்தான் சாப்புட கூட்டிட்டு போயாவனும். நறுக்குன்னு சாப்பிட்டு பில்லை நம்ம தலையில கட்டுவானுங்க. அதுவும் பில் வந்தா கண்டுக்காம நம்ம பக்கம் தள்ளிவிட்டுருவானுங்க.

டேய் நாமெல்லாம் இதே ஸ்டார் ஓட்டலுக்கு முன்னாடி இருக்கிற கையேந்தி பவன்லதாண்டா அக்கவுண்ட் வெச்சி சாப்பிட்டோம்.


* வெளிநாட்டுல கிடைக்காத சில விசயங்களை ஊர்ல இருந்து வாங்கிப்போவோம். அப்பவும் அதுக்கு கிண்டல் வரும் “வெளிநாடு போனாலும் நீ திருந்தலையாடா? ”
டேய், பாதானிக்கா அடிக்க சைக்கிள் எடுத்துட்டு அடுத்த ஊருவரைக்கும் ட்ரிபில்ஸ் அடிச்சவங்கடா நாம.


*ஊருக்கு கிளம்பும்போது எல்லாரும் ஒரு லிஸ்ட் வேற குடுத்து அனுப்புவாங்க. எதுக்கு தெரியுங்களா? லிஸ்ட்ல இருக்கிறத எல்லாம் வாங்கி,  யாராவது வந்தா அங்கேயிருந்து இந்தியா வந்தா குடுத்து  அனுப்பனும், காசு கேட்க கூடாது. அதுக்கு நாம எத்தனைப் பேர கெஞ்ச வேண்டியிருக்கனும்னு அவுனுங்களுக்குத் தெரியாது. பொருள் போய் சேர்ந்துச்சான்னும் அவுனுங்க சொல்ல மாட்டானுங்க. நாமதான் போன் போட்டு கேட்டு உறுதிப்படுத்திகனும். அதுவும் என்னமோ கடன்காரன் கடன் குடுக்கிறா மாதிரி "வந்திருச்சு, அதுக்கென்ன அப்படிம்பாங்க"
டேய், எனக்கு குடுத்த 30 ரூபா வாங்க எத்தனை முறை வீட்டுக்கு நடையா நந்திருப்பே?

நாம இங்கே அரும்பாடுபட்டு நாயா பேயா கெஞ்சி 3 வாரம் லீவ் வாங்கிட்டு ஊருக்கு வந்தா "என்னடா வருசத்துக்கு ஒரு முறை வரே, ஒரு மாசமா இருக்கிறா மாதிரி லீப் போட்டு வர வேண்டியதுதான" அப்படிம்பாங்க. 

1/2 நாள் லீவ் போட்டுட்டு வாடா அப்படின்னா, லீவ் கிடைக்காது சொன்னவன்தானேடா நீயு .

இவனோட சொந்தக்காரன் ஒருத்தன் சான்பிரான்ஸிஸ்கோவுல இருப்பான். நியூயார்க்கும் சான் பிரான்ஸிஸ்க்கோவுக்கும் 3000+ மைல்கள்.இவனோட சொந்தக்காரன் ஒருத்தன் அங்கே இருப்பான். நான் நியூயார்க்ல இருப்பேன், அவரைப் போய் பார்த்துட்டு வாடாம்பான். போகலைன்னா, பெரிய பிகு பண்ணிக்கிறான். அமெரிக்காவுலதானே இருக்கான், போயிட்டு வாடான்னா வர மாட்டேங்கிறான், எல்லாம் திமிரும்பானுவ. அதாவது காஷ்மீர் தூரம், எதாச்சும் வாங்கனும்டா 30 கிமீ போடான்னு கேட்டுப்பாருங்க. தூரம், வெயிலு இப்படி சொல்லி சல்லியட்டிப்பானுவ.

அடேய் பதறு, நான் முக்கினாத்தான் வருமா? நீ முக்கினா வராதா?

24 comments:

  1. பாவம்ங்க நீங்க..... இந்த அளவுக்கு "கொசுக்கடி" அவதியா? :-(

    ReplyDelete
  2. உண்மைச் சம்பவங்களின் பாதிப்பு போல தெரியுது... வரிக்கு வரி ரசித்து படித்தேன்... பதிவிற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த படங்கள் அத்தனை பொருத்தம்...

    ReplyDelete
  3. >>
    * ”மாப்ள. அங்கதான் லட்சமா லட்சமா சம்பாரிக்கிறியே. ஒரு 10 இருந்தா குடுத்துட்டு போடா அப்புறமா தர்றேன்”ம்பாங்க. நாமளும் சரி பத்தாயிரம்தான்னு நினைச்சு குடுத்தா, “டேய், பத்தாயிரத்துக்கா நான் சிங்கி அடிக்கிறேன்?

    ஹா ஹா இது தான் செம டாப்பு

    ReplyDelete
  4. இந்த தடவ ரொம்ப நொந்துட்டீங்களோ ;)))

    1996 ல முதன் முறை வண்டியேறி சிங்கப்பூர் போயிட்டு திரும்பி வரும்போது, சொந்த பந்தங்களுக்கு வாங்கிட்டு வந்த அனுபவம்தான் முதலும் கடைசியும் ;)))

    ReplyDelete
  5. ஒவ்வொண்ணும் அப்பட்டமான உண்மை.
    சென்னையில இருக்கறவங்க (நானறிந்த வரையில்) குடிக்கற தண்ணி காசு கொடுத்துத்தான் வாங்கறாங்க. அது அவங்களுக்கு வித்தியாசமாத் தெரியாது.

    நாம போற மூணு வாரத்தில ஜுரமோ, வயித்துப் போக்கோ வந்திடக் கூடாதுன்னு பிஸ்லரி பாட்டில் கையில எடுத்துக்கிட்டு வெளியில போனா அதுக்கு ஒரு வியாக்கியானம் பேசுவாங்க..

    வெயில் பத்தி நீங்க சொன்னது நூத்துல ஒரு வார்த்தை, அவங்க வெயில் பத்தி எவ்வளவு வேணா புலம்பலாம், நாம ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாது

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  6. அடிக்கடி ஊருக்கு வராதீங்க பாஸ்

    ReplyDelete
  7. இளா, என்ன உழவு இன்னைக்கு கொஞ்சம் ஆழமா உழுதிட்டீங்க போல? இது ”NRI நிஜத்தொல்லைகள்”

    ReplyDelete
  8. "உறவெல்லாம் முள்ளாகும்"னு தெரியாதா உங்களுக்கு?

    One can experience a lot esp if you come from lower middle class and "settle" in US and visit "home" in SUMMER!

    The fact is we no longer the same person! We do change! You cant expect them to understand that. We rather UNDERSTAND their feelings and put up with them for few weeks! :))

    ReplyDelete
  9. டீச்சர்--> நன்றி!
    சித்ரா --> நன்றி! எப்படிங்க இத்தனை பின்னூட்டம் போட முடியுது. நாமக்கல் சிபியை மிஞ்சிட்டீங்க போங்க
    பிரபாகரன் - நன்றி
    சி.பி. செந்தில் -- நன்றி
    தஞ்சாவூரான் - நீங்க எல்லாம் எனக்கு சீச்சி சீனியர். சொன்னா சரியாத்தான் இருக்கும்

    ReplyDelete
  10. எல்லாமே உண்மை, படம் எல்லாம் செமபொருத்தம்..:) ரசிச்சு சிரிச்சேன்

    ReplyDelete
  11. இஃகி இஃகி...

    என்னைக் கண்டா மட்டும், மக்க துண்டைக் காணம், துணியக் காணம்னு ஓடுவாய்ங்க....

    இருக்க நாற்காலிய எடுத்தாருவாங்க... அதுக்குள்ள நாம வாசப்படியோ, திண்ணையிலயோ ஒக்காந்திருப்போம்.

    ஆர்லிக்சு, பூசுடுன்னு கலக்கலாமன்னு இருப்பாங்க... அக்கா, அந்த பானக்கம் குடிச்சி நாளாச்சி... கொஞ்சம் கலக்கித் தாறீகளான்னு கேட்போம்...

    சானிவாக்கர், சிவாசு அல்லாம் நமக்கு செரிவராது... கள்ளு எங்க கெடைக்கும்... இட்ல்யுமு சட்னியும் வாங்கிக் கொடுங்கடான்னு நாம முந்திகுடுவம் பாருங்க...

    காலையில வாறம்... சீனிப்புளியங்க பறிக்கப் போலாம்னு சொல்லி வெச்சிருவம் முன்கூட்டியே....

    அல்லாங்காட்டி, காடு கரடு பார்க்கப்போலாம்னு சொல்லி வெப்போம்... எவனும் நாம இருக்குற பக்கமே வரமாட்டாய்ங்க... இது எப்பூடி??

    ReplyDelete
  12. ஒன்னா.. ரெண்டா எம்பூட்டு அடிவாங்கியிருக்கோம் :)

    ReplyDelete
  13. . இதுல ஒன்னுல நாம கொஞ்சம் முகஞ்சுளிச்சாலும் “வெளிநாட்டுல வேலை பார்க்கிற திமிரு”ம்பாங்க. இல்லைன்னா ரொம்ப மாறிப் போயிட்டடா’ம்பானுங்க//
    சூப்பர் ஒவ்வொரு பஞ்சையும் ரசிச்சு படிச்சென்..

    ReplyDelete
  14. @ஷ்ர்புதின் - நன்றி
    @Velu.g - அண்ணே, இது என்ன கொடுமை..
    @அரசூரான் - நன்றி
    @வருண் - நாம மாறித்தான் ஆகனும் இல்லைன்னு சொல்லலை. ஆனா மாறாம இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டாலும் உடமாட்டாங்க. இந்த 6 வருசத்துல நான் மாறினதுன்னா அது weather changeதான். ஊர்ல இருக்கும்போதே நனைய வெச்ச டர்க்கி துணிய வெத்துடம்பு மேல போட்டுக்கிட்டு தூங்குறது பழக்கம். இப்ப அதையே பண்ணினா வேற மாதிரி பேசறாங்க.

    ReplyDelete
  15. ரொம்ப பட்டுடிங்க போல இருக்கே ... :)

    ReplyDelete
  16. அது எல்லாம் விட
    ஒரு கொடுமை இருக்கு
    ஊருக்கு அன்றுதான் போய் இருப்போம்
    அடுத்த நாளே கேப்பாங்க
    மருமகனே எப்போ ஊருக்கு என்று...என்னத்த சொல்ல
    எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க

    ReplyDelete
  17. ரொம்ப அனுபவம் போலேயே

    ReplyDelete
  18. ரொம்ப அனுபவம் போலேயே

    ReplyDelete
  19. மங்களூர் ஏர்போர்ட்ல இறங்கும்போதே சொல்லிப்பாத்துக்கணும்...

    "மாப்ளே... இங்கதான் இதுக்குப் பேரு பஸ்சு... துபாய்ல இதுக்குப்பேரு குப்பலாரி...!!" :)))

    ReplyDelete
  20. அடியேனும் பழமைபேசி- வழியையே பின்பற்றினேன்.

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)