Rosario சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையைத் தாண்டி LAயில் சின்ன சின்ன வேலைகளைச் செஞ்சு, மெக்ஸிகோவுல இருக்கும் தன்னோட மகனுக்கு பணம் அனுப்புறா. மகனோ அம்மாவை 4 வருசமா பார்க்காத பையன். அதுவும் பையனுக்கு 9 வயசுதான் ஆவுது, உடம்பு சரியில்லாத பாட்டியோடதான் வாழ்க்கை. அம்மா பாசத்துக்காக ஏங்க மாட்டானா? அப்பாவும் கிடையாது. அவனும் மெக்ஸிகோவுல சின்ன சின்ன வேலை செஞ்சு கொஞ்சம் காசு வெச்சிட்டு இருக்கிற பொறுப்பான, புத்திசாலித்தனமான, தைரியமான பையன். பாட்டியால வெறுக்கப்படுற சித்தப்பா,சித்தி வழியா அவனோட அப்பாவும் அமெரிக்காவுல Tucson அப்படிங்கிற ஊருல இருக்கிறத தெரிஞ்சிக்கிறான். இதுவரைக்கும் பார்த்தே இல்லாத அப்பா மேல அவனுக்கு பாசம் வரவே இல்லை. எல்லாமே அம்மாவைப் பார்க்கனும், அதுவும் சீக்கிரம் பார்க்கனும்னுதான் அவனுக்கு ஆசை.
அம்மாவும் மகனும் பொது தொலைபேசி வழியா ஒவ்வொரு வாரமும் பேசிக்கிறதுதான் கதையோட மைய ஓட்டமேன்னு சொன்னாலும், ஒரே ஒரு காட்சிதான் வரும். அதுதான் ஒட்டு மொத்த படத்தோட ஒன் லைன், முடிவும்.
அம்மாவும் மகனும் பொது தொலைபேசி வழியா ஒவ்வொரு வாரமும் பேசிக்கிறதுதான் கதையோட மைய ஓட்டமேன்னு சொன்னாலும், ஒரே ஒரு காட்சிதான் வரும். அதுதான் ஒட்டு மொத்த படத்தோட ஒன் லைன், முடிவும்.
தூக்கத்துலேயே பாட்டி இறந்து போனதும், அம்மாகிட்ட போய் சேர்ந்துடலாம்னு முடிவு செய்றான் கார்லிதோஸ்(சிறுவன்). அதுவும் அவுங்க அம்மா அடுத்த முறை தொலைபேசியில பேசும் ஞாயிறுக்குள்ள அவுங்க அம்மாகிட்ட இவன் சேர்ந்தாகனும்ங்கிறதுதான் திட்டமே. இவன் வேலை செஞ்ச இடத்துல அமெரிக்கர்கள் ரெண்டு பேரு ஏதாவது குழந்தை/சிறுவனை எல்லைத்தாண்டி அனுப்பத் தயார்னு சொல்லி இருப்பாங்க. அவுங்க உதவியோட கார்ல எல்லையைத் தாண்டும் போது No parking டிக்கெட்டுக்காக மாட்டிக்குவாங்க. காருக்குள்ள ஒளிஞ்சிட்டு இருப்பான் கார்லிதோஸ், காரோட எடுத்துட்டு போயிருவாங்க காவல்துறை. கூட போவங்க ரெண்டு பேரும் இல்லாம.. அங்கே இருந்து தப்பிச்சு(இந்தக் காட்சி அப்ப எல்லாம் செம டென்சனப்பா) அவன், வேற இடத்துல இவனை மாதிரியே சட்ட விரோதமா தங்கியிருக்கிற மக்களோட LA போக முயற்சி பண்றான். நடுவுல என்ரிக் அப்படிங்கிறவரோட சேர்ந்து பயணப்பட ஆரம்பிச்ச பின்னாடிதான் படமே புது பரிமாணத்துக்கு போவும். அதுவும் என்ரிக்குக்கு கார்லிதோஸோட பயணப்படறதே புடிக்காது. .
ஒரு சமயம் அவுங்க அப்பா இருக்கிறதா சொன்ன Tucsonக்கே வந்தவுடனே என்ரிக்கிட்டே தன்னோட அப்பா அங்கே இருக்கிறதா சொல்லும் போது, என்ரிக்தான் அப்பாவோ நினைக்க வெக்கும் திரைக்கதை. ஆனா அவுங்க அப்பாவையும் கண்டுபுடிச்ச பின்னாடிதான் கார்லிதோஸ்க்கு சோதனையே ஆரம்பிக்கும். ஆமாம், கார்லிதோஸோட அப்பா அவுங்க அம்மாகிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வராமலே போயிருவாரு. என்றிக்கும் அவனோட LA வந்து தேடோ தேடுன்னு தேடுவாங்க. கார்லிதோஸ் தன்னோட அம்மோ எழுதுன கடுதாசில வந்த முகவரி தேடிப்போன பின்னாடிதான் தெரியும், சட்ட விரோதமா தங்கியிருக்கிற மக்கள் எல்லாமே வேற ஏதோ ஒரு முகவரி தந்து கடுதாசி போடுவாங்கன்னு.
அதே சமயம் ரொசாரியோ, அவுங்க வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தரோட காதலும் இல்லாம, ஏதோ ஒரு வேகத்துல ஒருத்தரோட பழக ஆரம்பிக்கிறா. கல்யாணம்கூட முடிவாகிடுது, ஆனா ஏதோ ஒன்னு தடுக்க, மெக்ஸிகோவுல இருந்து அவளுக்குத் தொலைபேசி வருது, அப்பத்தான் அவளுக்கு தன்னோட அம்மா இறந்ததும், பையன் எல்லைத்தாண்டி தன்னைப்பார்க்க வர்றதும் தெரியும்.
முகவரி தப்பா இருந்தாலும் அம்மாகிட்ட பேசும் போது, அந்த பொதுத் தொலைபேசி பக்கத்துல எப்படி இருக்கும் கேட்டதை வெச்சி அதே இடத்தை ரெண்டு பேரும் தேட ஆரம்பிக்கிறாங்க. கஷ்டம்னு என்ரிக்குக்கு தெரிஞ்சாலும் கார்லிதோஸுக்காக பொறுத்துகிட்டு தேடறாங்க. ஒரு சமயம் காவல்துறையில் மாட்டிக்க வேண்டியதாயிருது. என்ரிக் காவலர்களைத் தாக்கி, தான் மாட்டிகிட்டாலும் பையன் தப்பிச்சு போகனும்னு செய்ற இடம் மனசுல அந்தப் பாத்திரம் பச்சக்கு ஒட்டிக்க வெக்கும். காவலர்கள்கிட்ட தப்பிச்ச பையன் ஓடிப்போயி நின்ன இடம், அம்மா எப்பவுமே தொலைப் பேசியில பேசுற இடம், அதே நேரம் பையன் எப்படியும் இந்த இடத்தை கண்டுபுடிச்சு வந்திருவான்னு அம்மாவும் காத்திருக்க... இவன் சாலை இந்தப் பக்கம் , பையன் அந்தப் பக்கம்னு நின்னு.. சுபம்.
அம்மா மகன் பாசத்தை கதையின் கருவா வெச்சி, எல்லைத் தாண்டுறது, பையனோட புத்திசாலித்தனம், வேலை செய்யனும்னு இருக்கிற ஆவல்,வேலை செய்யும் போது ரசிச்சு செய்றதுன்னு நிறைய விசயங்கள் பலிச்சுன்னு சொல்லியிருக்காங்க. படத்துல பல லாஜிக்கான ஓட்டைகள் இருக்கு, உதாரணம், கார்ல இருந்து பையன் தப்பிச்சு வர்ற இடம். அதேமாதிரி அலைபேசி எண் இருந்தும் எடுத்துட்டு வராத பையன். படத்துக்கு ரெண்டு பலம், ஒன்னு இசை, இன்னொன்னு எந்த இடத்திலும் நெருடல் இல்லாத, கண்ணைக் கூசச் செய்யாத ஒளிப்பதிவு. படம் 2007ம் ஆண்டு வெளி வந்தது.
கார்லிதோஸா நடிச்ச பையனோட நடிப்பு அட்டகாசம், ஒவ்வொரு frameலயும் அவனோட உழைப்பு தெரியுது. எப்படித்தான் இயக்குனர் இந்தப் பையன்கிட்ட வேலை வாங்கினாரோ தெரியல. கொஞ்ச நேரமே நடிப்புக்கு வாய்ப்பு இருந்தாலும் என்ரிகாக நடிச்ச Eugenio நடிப்பு, இறுதியில தன்னைக் காட்டி கொடுத்து பையன் காப்பாத்துற இடத்துலயும்.. நச். அதே மாதிரி பையனும், என்ரிக்கும் சேர்ந்து தேடும் போது ரொசாரியோ வேற பக்கம் திரும்பி உக்காந்திருப்பாங்க, அந்தக் காட்சியில் நாமே பையன்கிட்ட கூப்பிட்டு சொல்லத் தோணும். இப்படியாப்பட்ட சின்ன சின்ன விசயங்கள்ல இந்தப் படம் ஜெயிச்சிருது. அதுசரி, திரைக்கதைதானே படத்துக்கு பலம்.
Cast
- Adrian Alonso as Carlos "Carlitos" Reyes
- Kate Del Castillo as Rosario
- Eugenio Derbez as Enrique
- America Ferrera as Martha
- Jesse Garcia as David
- Maya Zapata as Alicia
- Gabriel Porras as Paco
- Sonya Smith as Mrs. Snyder
- Directed by Patricia Riggen
- Produced by Ligiah Villalobos/Gerardo Barrera
- Written by Ligiah Villalobos
- Music by Carlo Sillioto/Los Tigres del Norte
- Cinematography Checco Varese
- Editing by Aleshka Ferrero
- Running time 106 minutes
- Gross revenue $23,311,391
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.
நானும் ஒலக படம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். ஆமா தமிழ்நாடும் ஒலகத்துலதானே இருக்கு. அப்புறம் ஏன் தமிழ் படங்களை ஒலகப் படம்னு சொல்றது இல்லே?
ReplyDeleteஅண்ணாச்சி நோட் பண்ணிக்கிட்டேன்...ஏதாச்சும் லிங்கு இருந்தா போட்டுவுடுங்க புண்ணியமாக போகும் ;)
ReplyDelete.//ஏதாச்சும் லிங்கு இருந்தா போட்டுவுடுங்க //
ReplyDeleteநான் DVDல பார்க்கிறேங்க. Googleல தட்டினா கிடைக்காமலா போயிரும்?
பார்க்கணும்..
ReplyDeleteநானெல்லாம் ஒலக படத்துக்கு விமர்சனம் எழுதினா காத்துதான் வாங்கனும் போல
ReplyDelete||காத்துதான் வாங்கனும் போல||
ReplyDeleteபோட்டாச்சு! போட்டாச்சு!!!!
---
படம் பார்க்கனும்!
நன்றி
katai elutu vadivam super
ReplyDelete