Monday, May 16, 2011

நான் அன்னிக்கே சொன்னேன்ல


* ராம்ஜெத்மலானி கனிமொழியின் ஜாமீனுக்காக போராடுகிறார்.
ராம்ஜெத்மலானி ஒரு பிஜேபி ஆசாமிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விசயம். இது என்னய்யா திமுக காங்கிரஸோட கூட்டு வெச்சிட்டு இருக்கிற நேரத்துல பிஜேபிகாரர் திமுகவுக்காக வாதாடுறாரான்னு கேட்டா, தொழில் வேற கட்சி வேறைங்கிறாங்க. பெரிய மனுசனுங்கன்னா இப்படி ஒரு பக்காவா ஒரு கொள்கை வெச்சிக்கனும்.   தேர்தல் முடிஞ்சு விளைவுகள் நல்லா இல்லைன்னா இவுங்க, அவுங்களோட கூட்டு வெக்க இந்தத் தொழில்முறையே முன்னெடுப்பா இருக்கும். அப்ப கொள்கையும் தொழிலும் ஒன்னாகிரும்.  டேய்ய் நாங்காட்டி டென்சன் ஆனேன்

* கனிமொழியின் ஜாமீன் மனு மே14 க்கு ஒத்தி வெச்சிருக்காங்களாம். ஏன்? மே13 தேர்தல் முடிவுகள் வந்துரும். திமுக வெற்றியடைஞ்சுட்டா ஆட்சியில் பங்கு கேட்கலாம். பங்கு தராட்டா உள்ளே போட்டுருவேன்னு பூச்சாண்டி காட்டலாம். அட, எல்லாமே நீங்களேதானே முடிவு பண்றீங்கன்னு மக்கள் கேட்டா, “நீதி மன்ற முடிவுகள்ல நாங்க தலையிடுறது இல்லை”ன்னு சப்பைக் கட்டு வேற. நீங்களேதாண்டா முடிவுகளை அனுப்புறீங்க அப்புறம் என்ன?

* அப்ப திமுக தோத்துட்டா, காங்கிரஸ் அதிமுக கூட சேரலாம், கேப்டனுக்கு லம்பா அல்வா கிடைக்கலாம். அப்ப கனிமொழி, ராசா விவகாரம்? மெதுவா வழக்கு நடக்கும். எப்படியும் நாம சாவறதுக்குள்ள கோப்புகளை தொலைச்சுருவாங்க.

* தன் கையே தனக்குதவிங்கிறது பழசு. தன் கைதே தனக்குதவி இது புதுசு. இவரு ஒரு போராட்டாம் நடத்துவாராம், அதுல இவரே கைது ஆகி, டில்லி வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு போவாங்களாம். இதுல ”ஓ காட் ஐ அம் நாட் பிரைவ்ட் ஓஃப் பார்ன் இன் இண்டியா”ன்னு புலம்புவாராம். ராகுல் ராசா இதெல்லாம் எங்க ஊர்ல 1970களிலேயே பண்ணியாச்சு. பனியாராம் வேவாது. வளருய்யா.

* வைகோ திமுகவோடு கை கோர்ப்பார். வழக்கம் போல இதயம் இனித்தது, கண்கள் பனித்ததுதான்.



* அம்மா ஜெயிச்சா- நீதி நிலை நாட்டப்பட்டது, மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி கொடைநாட்டுக்கே ரெஸ்ட் விட்டுருவாங்க. வழக்கம் போல சினிமா எடுப்பாங்க பேரப்புள்ளைங்க, வழக்கம் போல புலம்புவாரு விஜய், டாஸ்மார்க்ல இவுங்க சரக்கு இன்னும் அதிகமா வரும்.





*தாத்தா ஜெயிச்சா- நீதி நிலை நாட்டப்பட்டது, மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்கி அம்மா கொடைநாட்டுக்கு ஓய்வு எடுக்கப் போயிருவாங்க, அஞ்சு வருசத்துக்கும். வழக்கம் போல சினிமா எடுப்பாங்க பேரப்புள்ளைங்க, வழக்கம் போல புலம்புவாரு விஜய், டாஸ்மார்க்ல அவுங்க சரக்கு இன்னும் அதிகமா வரும். மல்லையா புலம்புவாரு.

 
 
நாளன்னிக்கு பதிவு போடும் போது என்னோட பதிவுக்கு நாலுபேராவது ‘லிங்க்’ குடுக்க மாட்டாங்க? ”ஆமா, அவன் அன்னிக்கே சொன்னான்லே” அப்படின்னு?

6 comments:

  1. //நாளன்னிக்கு பதிவு போடும் போது என்னோட பதிவுக்கு நாலுபேராவது ‘லிங்க்’ குடுக்க மாட்டாங்க? ”ஆமா, அவன் அன்னிக்கே சொன்னான்லே” அப்படின்னு?//

    ஆமா இப்படி யுனிவர்சலா எல்லா Possibility ஐயும் கவர் பண்ணி எழுதினா கண்டிப்பா கோட் பண்ணித்தானே ஆகணும்.

    நானும் சொல்றேன், நாளைக்கு வெயில் அடிக்கும் இல்லை மேக மூட்டமாக இருக்கும் அதுவும் இல்லைனா மழை பெய்யும். கண்டிப்பா நான் சொல்றது நடக்குதா இல்லையான்னு பாருங்க

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  2. //எல்லா Possibility ஐயும் கவர் பண்ணி எழுதினா //
    எழுதிட்டேனா? அப்பாடா, இப்பத்தான் நிம்மதி

    ReplyDelete
  3. பொறந்தா பையன் இல்ல பொண்ணு
    கரைட்டா சொல்லிப்புட்டீங்க தல :-)))

    ReplyDelete
  4. அண்ணன் வாழ்க//
    அட நமக்குமா?

    நீங்க மானாவாரியா வெவசாயம் பண்றீங்கண்ணே.

    ReplyDelete
  5. blogger பிரச்சினையில பழைய பின்னூட்டங்கள் எல்லாம் காணாம போயிருச்சு போல :(

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)