அந்த காதல் அவளை அடிக்கனும்,
பொரட்டி போட்டு சாத்தனும்,
பின் மண்டையில் பொடேர் பொடேர்னு பொளக்கனும்
அப்படி ஒரு காதல் ததும்ப பூவையும், அன்பளிப்பையும் அவளுக்குத் தந்து காதலை ஸ்டாம்படிக்கனும்.
”டேய்! உனக்கு கண்ணாலமாயிருச்சு. பொண்டாட்டிக்கு பூ குடுக்கிறதுக்கு எல்லாம் பில்டப் தராதே. படிக்கிறவங்க இப்பவே Close பண்ணிட்டு போயிருவாங்க” இது மனசாட்சி. அதுக்காக பொண்டாட்டிக்கு பூ தர கூடாதா? அதுவும் காதலர் தினத்தன்னிக்கு.
பூ வாங்க கடைக்குப் போனா அங்கே பூ வெல்லாம் மார்ஃபிங் பண்ணி யானையா வெச்சிருக்காங்க. “சார், என்ன சார் யானை விலை சொல்றீங்க. ஒரு டஜன் பூ $12 ஆ. இந்திய மதிப்புல ரூ540. குறைச்சு குடுங்க சார்”னு நம்ம ஊரா இருந்தா கேட்கலாம். இந்த ஊர்ல அதெல்லாம் முடியுமா? “வாங்குனா வாங்கு. இல்லாட்டி இடத்தைக் காலி பண்ணு”ம்பான். கெரகம், இப்பவும் காதலுக்கு செலவு பண்ண வேண்டியதா இருக்கேன்னு மனசுக்குள்ள காதலை திட்டிக்கிட்டு, பூவை வாங்கிட்டேன். அன்பளிப்பு?
அங்கே போனா சிவாஜி படத்துக்கு மொதோ ஷோ பார்க்க வந்தவங்க மாதிரி கூட்டம். ரெண்டும் சேர்ந்தா மாதிரி இருக்கிற எல்லாத்துக்குமே அடிதடிதான். சோப்பு, சீப்பு, கண்ணாடி ஜாடி.. அட உள்’பாடி’ங்களுக்கு கூட செம கிராக்கிங்க. எப்படியோ தேத்தி, ஒரு கண்ணாடிக்குள்ள ரெண்டு பேரு ஆடிட்டு இருக்கிறாமாதிரி வாங்கிட்டேன். உண்மையைச் சொன்னா அதுதான் விலை கம்மியா இருந்துச்சு. விலையா முக்கியம், காதல்தான் முக்கியம். பூ, அன்பளிப்பு.. ரெடி கிளம்பு.
டிங்.. டாங்..
முகத்துல காதல்.. காதலை முகத்துல வெச்சிக்கோ, அப்படியே காதல் வழியனும், சேர்த்துவெச்ச ஷேம்பெய்ன் மாதிரி, காதல் ச்சும்மா செதறனும். அதைப் பார்த்தவுடனே அம்மணிக்கு, கல்யாணம் நடந்த அன்னிக்கு வெக்கப்பட்டுச்சே, அப்படிப்படனும். ஆனா நடந்ததே வேற. கதவை தெறந்த அம்மணி அலைபேசியில பேசிகிட்டே,கதவை தொறந்து விட்டுட்டும், என்னை ஏறெடுத்தும் பார்க்காம, சமையலறைக்குள்ளார போயிட்டாங்க. விடுவமா நாம. காதல் இளவரசன் ஆச்சே.
“தங்கம்.. என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு”.
“என்ன?” இப்பவும் என் முகம் பார்க்காம சமைச்சுகிட்டு இருந்தாங்க,
“இல்லே...”
“10 நிமிசம் வெயிட் பண்ணுங்க பேசிட்டு இருக்கேன்ல.. நீ சொல்லுடி, கடுகு போட்டதுக்கப்புறம்..” 10 நிமிசம் 2 மணிநேரம் ஆச்சு. பூ வோட சேர்ந்து நானும் வாட ஆரம்பிச்சேன். நான் என்ன ஏர் ஹோஸ்டஸ் வேலைக்கா பயிற்சி எடுத்துட்டு வந்திருக்கேன்,சிரிச்சா மாதிரியே மூஞ்சிய வெச்சுக்க.
எப்படியோ.. அம்மணி சமைக்கிறதை எல்லாம் முடிச்சுட்டு,. ஷோபாவுக்கு வந்தாங்க. வந்தவுடனே ரிமோட்ட எடு...
”இரும்மா, என்னையும் கண்டுக்க” “என்னாங்கிற மாதிரி பார்வைய மட்டும் வீசுனாங்க. மேட்டுக்குடி படத்துல கவுண்டர் குடுத்த மாதிரி ரொமான்ஸோட கையில பூ, அன்பளிப்பை பின்னாடி இருந்து எடுத்துக்குடுத்தேன். நல்லா கவனிங்க, முகம் முழுக்க காதல். அம்மணி ரியாக்சனோ, ரிவர்ஸ்ல போயிருச்சு.
“என்ன இது அதிசயமா இருக்கு?”
”இன்னிக்கு காதலர் தினம் தங்கம். இது கூட இல்லீன்னா எப்படி?”
”போன வருசம் இல்லையே.. அப்ப போன வருசம் காதல் இல்லையா? இந்த வருசம் மட்டும் என்ன முளைச்சு வருது” -இப்பவும் அம்மணி கையில அன்பளிப்பையோ பூவையோ வாங்கலை.
”அது போன வருசம், இது இந்த வருசம்.....”
”ஹ்ம்ம், காமெடி? குடுங்க..எவ்ளோ ஆச்சு இதுக்கு ரெண்டுக்கும்??
”விலையா முக்கியம், அதுல இருக்கிற காதலைப் பாரும்மா”
”என்னாது காதலா..?.”. அன்பளிப்பை பிரிச்ச தோரணையே சரியில்லை. ஏதோ பத்துநாள் சோத்துக்கு இல்லாம இருக்கிறவன் பிரியாணி பொட்டலத்தை பிரிக்கிறவன் மாதிரி பிரிச்சா.
”வருசம் முழுசா இல்லாத காதல் இன்னிக்கு மட்டும் என்ன வேண்டி கிடக்கு. மத்த நாளைக்கு ஒரு பூ வாங்கித்தர துப்பில்லை. இன்னிக்கு மட்டும் வந்துட்டீங்க? ஏதாவது ஆபீஸ்ல தப்பு பண்ணிட்டீங்களா?
அதை மறைக்கத்தான் இதுவா? இல்லே வேற யாரையாவது செட் பண்ணிட்டு மனசு கேட்காம வாங்கிட்டு வந்துட்டீங்களா? சும்மா சொல்லுங்க”
”இல்லடி ராசாத்தி, ஃபெப் 14 அன்னிக்கு காதலை உன்கிட்ட சொல்லாம எங்கன போயி சொல்ல? என் மேல சந்தேகப்படற பார்த்தியா?”
”அதான பார்த்தேன். உங்ககிட்ட ஏமாற மத்தவங்களும் என்னை மாதிரி இளிச்ச வாயா என்ன? அதென்ன கண்ணாடிக்குள்ள ரெண்டு பேரு இருக்கிற மாதிரி? மேலே இத்தனை Scratches. இதை கூட பார்த்து வாங்க மாட்டீங்களா? உங்களுக்கு எல்லாம் எப்படி வாங்குறதுன்னு தெரியாதா? சரி, உங்கம்மா உங்களை நல்லா வளர்த்தியிருந்தாதானே?”
”இப்ப எதுக்கு என்னோட அம்மாவை எல்லாம் இழுக்கிற. அவுங்க பாவம்...”
”அப்ப நான் பாவமில்லை. உங்கம்மான்னாவே உங்களுக்கு உசத்தி, எங்க குடும்பம்னா மட்டம். அப்படித்தானே.. எங்க குடும்பத்தை மட்டம் தட்டி வாங்கிட்டு வந்த இந்த கிப்ஃட் ஒன்னும் எனக்குத் தேவையில்லை” விசும்பல் ஆரம்பிச்சாச்சு.
”நான் எங்கே உங்க குடும்பத்தை இழுத்தேன்? ”
”அப்ப நாந்தான் உங்கம்மாவை இழுத்தேனா? உங்கள கட்டிகிட்டதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஒரு நல்ல நாளு கிழமை ஏதாவது உண்டா? ”
இப்பவும் என் முகத்துல காதல் பொங்கவிட்டுட்டே இருக்கேன். ஆனா மனசுக்குள்ள எரிமைலையா வெடிக்குது..
”தங்கம், இங்கே பாரு. ரெண்டு குடும்பமும் வேண்டாம். இது என்னோட காதல். கிஃப்ட், பூ புடிச்சிருந்தா வாங்கிக்க. உனக்காக ஆசை ஆசையாய் 6 கடை ஏறி இறங்கி வாங்கிட்டு வந்திருக்கேன். அதுக்காவாவது கொஞ்சம் தணிஞ்சு வாயேன்.”
மூக்கை சிந்துறதை நிப்பாட்டிட்டு அம்மணி இப்பத்தான் அந்த கிஃப்ட் உருண்டைய பார்க்க ஆரம்பிச்சாங்க. ”நல்லா இருக்கு. பூ கூட சரிதான். ஆனா, இப்படி வழியிறமாதிரி மூஞ்சி வெச்சிட்டு இருக்கீங்களே? அதான் சகிக்கலை. மூஞ்சிய மாத்திட்டு சாப்பிட வாங்க. அப்புறம் பூவுக்கும் கிஃப்ட்டுக்கும், தாங்க்ஸ். ம்ம் அப்புறம்?”
”என்ன அப்புறம்..?”
ஐ லவ் யூன்னு சொல்லனும்.. என்ன வளர்ப்போ.. அப்படின்னு சொல்லிட்டு டைனிங் ரூம் போயிட்டாங்க
தலைய குனிஞ்சிகிட்டேன். சாப்பாட்டுத் தட்டை ’டொம்’னு வெக்கிற கேட்டுச்சு. எவண்டீ உன்னை பெத்தான் ..பெத்தான் ..பெத்தான் . கையில கெடச்சான் செத்தான்.. செத்தான்..செத்தான்..
“அங்கே என்ன சத்தம்.?”
சே மனசுக்குள்ள கூட பாட விடமாட்டேங்குறாளே. எவண்டீ கண்டுபுடிச்சான் காதலர் தினத்தை தினத்தை .. கையில கெடச்சான் செத்தான்.. செத்தான்..செத்தான்..
(பி-கு: குடும்பஸ்தனுங்க வோட்டுப் போடாமையோ, பின்னூட்டம் போடாமையோ போனாக்கா, வீட்ல அடுத்த வேளை சோறு கெடைக்காதுன்னு சாபம் விடறேன். கல்யாணம் ஆவாதவங்க வோட்டுப் போடாமையோ, பின்னூட்டம் போடாமையோ போனாக்கா, கல்யாணம் ஆகி நீங்களும் இப்படி கஷ்டப்படுவீங்கன்னு சாபம் விடறேன்)
(பி-கு: குடும்பஸ்தனுங்க வோட்டுப் போடாமையோ, பின்னூட்டம் போடாமையோ போனாக்கா, வீட்ல அடுத்த வேளை சோறு கெடைக்காதுன்னு சாபம் விடறேன். கல்யாணம் ஆவாதவங்க வோட்டுப் போடாமையோ, பின்னூட்டம் போடாமையோ போனாக்கா, கல்யாணம் ஆகி நீங்களும் இப்படி கஷ்டப்படுவீங்கன்னு சாபம் விடறேன்)
//குடும்பஸ்தனுங்க வோட்டுப் போடாமையோ, பின்னூட்டம் போடாமையோ போனாக்கா// ஆசைபட்டுட்டீங்க.. சரி கேப்புல ஒரு பழைய போஸ்ட்டர ஓட்டிக்கறேன் ;) http://raasaa.blogspot.com/2007/02/blog-post.html
ReplyDeleteஉங்க சாபத்திற்கு பயந்து ஒரு ஓட்டும் போட்டாச்சு இந்தா இந்த பின்னூட்டமும் போட்டாச்சு. ஆனா நீங்க போட்ட சாபம் முன்னாடிய பழிச்சிருச்சி. http://unmaivirumpi.blogspot.com/2011/02/blog-post.html
ReplyDelete:)))))))
ReplyDeleteரெண்டு ஓட்டு
ReplyDeleteகாதலர் தினத்தை கண்டுபிடிக்கலைனா இப்படி ஒரு கதை கிட்டாமல் போயிருக்குமே?
ReplyDeleteஉங்க படைப்புத் திறனை அள்ளிவிடத்தான் காதலர் தினத்தை கண்டுபிடிச்சி இருக்காங்க போல! :)
அதென்ன சிவாஜி கூட்டம்? எந்திரனுக்கு கூட்டம் கம்மியா என்ன? :)
>>>>>(பி-கு: குடும்பஸ்தனுங்க வோட்டுப் போடாமையோ, பின்னூட்டம் போடாமையோ போனாக்கா, வீட்ல அடுத்த வேளை சோறு கெடைக்காதுன்னு சாபம் விடறேன். கல்யாணம் ஆவாதவங்க வோட்டுப் போடாமையோ, பின்னூட்டம் போடாமையோ போனாக்கா, கல்யாணம் ஆகி நீங்களும் இப்படி கஷ்டப்படுவீங்கன்னு சாபம் விடறேன்)
ReplyDeleteஅய்யய்யோ.. ஓட்டு போட்டாச்சு... நோ சாபம்.. மீ பாவம்
Yov unga ammaniya pathi theriyum
ReplyDeleteNeenga poo bathil tacobell la grande chalupa vangi kuduthu irupeenga. Athan kadupadichu irukanga
//அப்ப போன வருசம் காதல் இல்லையா? \\
ReplyDeleteஅப்படிப்போடு அருவாள!
BJs லேயே ஒரு டஜன் பூ 14$, உமக்கு எங்கய்யா 12$ க்கு கெடச்சுது?
ReplyDeleteஅப்போ, இந்த வருசம் சூர்யாவுக்கு தங்கச்சி கன்ஃப்ர்ம்டுன்னு சொல்லுங்க?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அண்ணே... உண்மையைச் சொன்னீங்க :)
ReplyDeleteadhagalam.....:)))
ReplyDeleteLoL
.
.
.
.
.
.
still laughing.... :)))
we'd love to hear more stories like this...
@TVR ஐயா நன்றி!
ReplyDelete@ராசா .. நீங்க பின்னூட்டமெல்லாம் கூட போடுறீங்களா? எனக்கே நீங்க மூத்தப்பதிவர் :)
@UVMP என்னங்க இது. இந்தச் சாபம் காலங்காலம் வரும்போல இருக்கே
@MyFriend நன்றி!
@நசரேயன் நன்றி!
Good one Ila.. 12$ on vday is cheap...
ReplyDelete//அதென்ன சிவாஜி கூட்டம்?//
ReplyDeleteவருண், சிவாஜிக்குத்தான் கூட்டம் ஜாஸ்தியா இருந்துச்சு. எந்திரனோட டிக்கெட் விலைதான் ஜாஸ்தியோ ஒழிய.. சிவாஜி சிவாஜிதான். ஆனா ரெண்டும் housefull showதான். நான் பார்த்தது ரெண்டுமே FDFS
@சிபி செந்தில்- நன்றி!
ReplyDelete//Neenga poo bathil tacobell la grande chalupa //
இது அவனா? இவனா? இதெல்லாம் போங்காட்டம்
@ஈரோடு கதிர் - நன்றி!
@சிநேகிதன் அக்பர் - நன்றி!
அட, அண்ணிகிட்ட நான் டியூஷன் எடுக்கணும்போல!! :-)))))
ReplyDeleteஉங்க பீலிங்க்ஸ் புரியுது தல...
ReplyDeleteஈரோடு கதிர் மற்றும் அக்பரின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லிட்டு நடுவுல இருக்கும் என்னோட பின்னூட்டத்தை குறைந்த பட்சம் acknowledge கூட பண்ணாத அராஜகத்தை / மேட்டிமைத் தனத்தை கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்.
ReplyDeleteஇன்று கடுப்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ayyo sabam ellam vendam
ReplyDeletepayanthitte comment pottachu
superrrrrrrrrrrrrrrr
//பூ வெல்லாம் மார்ஃபிங் பண்ணி யானையா வெச்சிருக்காங்க.சார், என்ன சார் யானை விலை சொல்றீங்க. ஒரு டஜன் பூ $12 ஆ//
ReplyDeleteஅப்ப உங்க ஊர்ல யானை 540 ரூபாய் தானா? ஹா ஹா...
//உண்மையைச் சொன்னா அதுதான் விலை கம்மியா இருந்துச்சு.//
என்னைக்காச்சும் ஒரு நாள் அவங்க இந்த ப்ளாக் பக்கம் வராமயா போவாங்க...அன்னிக்கி இருக்கு தீவாளி...:)))
//பூ வோட சேர்ந்து நானும் வாட ஆரம்பிச்சேன்//
கவித கவித....:)
//போன வருசம் இல்லையே.. அப்ப போன வருசம் காதல் இல்லையா? இந்த வருசம் மட்டும் என்ன முளைச்சு வருது//
இது பாயிண்ட்...அப்ப ஏதோ தப்பு இருக்கு... அம்மணி இன்னும் நல்லா விசாரிங்க...:)))
//அதை மறைக்கத்தான் இதுவா?//
ஹா ஹா ஹா...இதான் ஸ்மார்ட்ங்கறது ...புடிசாங்கல்ல பாயிண்ட்... :))))
//விசும்பல் ஆரம்பிச்சாச்சு//
ஜூப்பர்...:)
//எவண்டீ உன்னை பெத்தான் ..பெத்தான் ..பெத்தான் . கையில கெடச்சான் செத்தான்..///
இந்த பாட்ட எவன் எழுதினான்...என் கைல கெடச்சான் செத்தான் செத்தான் செத்தான்...
SriRam -->
ReplyDelete//உமக்கு எங்கய்யா 12$ க்கு கெடச்சுது?//
அலுவலகத்துக்கு கீழே,ப்ளாட்ஃபாரத்துல.
Peppin- its the price I found.
@ஹுஸைனம்மா- நன்றி!
Thanks Mr.TVR continue your thinking and I am ready to read them
ReplyDeleteபாருங்க.. இதுல எந்த சாபத்துக்கும் எனக்கு க்ரைடீரியா செட் ஆகல.. ஆனாலும், பின்னூட்டம் போட்டுட்டேன் :-))
ReplyDeleteGood Blog. Keep rocking !