

ஷங்கர் தன் வாழ்நாள் சாதனைப் படமாக சொன்னது எந்திரனைத்தான். அதற்காக அவர் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை. இயக்குனரின் கற்பனையை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். மூன்றே கதாப்பாத்திரங்கள், 2 1/2 மணிநேரத்துக்கும் மேலான படம், ஆனாலும் விறுவிறுப்பில் பஞ்சமில்லை. அதுவும் இறுதிக்காட்சிகள், கண்டிப்பாக ஹாலிவுட்டிற்கு நிகரேதான். முதல் பாதி காதல், அறிவியல் என்று செல்கையில் இரண்டாம் பாதி அதிரடிக்காட்சிகள், ஒரு கட்டிடம் முழுக்க ரஜினி, ஆம் அத்துனையும் ரஜினிகள். பிரமிக்க வைக்கும் காட்சிகள் அவை, அதிலும் வில்லனாக ரஜினியே வர திரையரங்கள் விசில்கள் பறக்கின்றன.

இரும்பிலே ஒரு இதயம் காட்சியினூடாகவே செல்கிறது, பூம் பூம் ரோபாடா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,அதிலும் மைக்கேல் ஜாக்சன் போன்றே ரஜினி ஆடும் காட்சிகள் வாவ். கிளிமஞ்சாரோ பாடலில்தான் இயல்பாக நாம் பார்த்த ரஜினியை பார்க்க முடிகிறது, மீதியெல்லாம் இயக்குனரின் நடிகராகவே வந்து போகிறார். காதல் அணுக்கள் பாடலில் வரும் இடம், புதிது, ஐந்து மணிநேரம் பயணம் செய்தே அந்த இடத்தை அடைந்தார்களாம். அழகு அழகு அழகு. அரிமா அரிமா மைக்கேல்/ஜேனட் ஜாக்சன் இருவரும் இணைந்த Screamஐ ஞாபகத்தில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை: ஐஸ்வர்வாவை படம் பிடித்திருக்கும் அழகும், அவரின் நடனப் பாங்கும், ரஜினியும் ஒத்துழைத்திருக்கிறார், ஆனாலும் ஐஸ்வர்யாவின் அழகு ரஜினியின் ஆட்டத்தை குறைவாகவே காட்டுகிறது. fashion Show பூனை நடை, நடனங்களில் நளினம், அவர் பிறந்தநாள் காட்சிகள் எல்லாம் இருவர் ஐஸ்வர்யா போலவே இருக்கிறார்.
படத்திற்கு ஒரு தூண் ஒளிப்பதிவென்றால், ஆஸ்கார் நாயகன் மற்றுமொரு மிகப் பெரிய தூண். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். வசனம்: சுஜாதா, ஷங்கர், கார்க்கி.
இதுவரை ஷங்கரின் எண்ணத்தை பேச வைத்தவர் சுஜாதா. இந்தப் படத்தில் சுஜாதாவின் இழப்பு தெரியாத வகையில் ஈடு செய்திருக்கிறார்கள். அதிவும் அத்துனை அறிவியல் வார்த்தைகளையும் தமிழாக்கி, புரியும்படி செய்திருப்பதற்கும் அறிவியலை நடைமொழிக்கு மொழி பெயர்த்திருப்பதற்கும் ஒரு பெரிய சல்யூட். நக்கலா- இல்லை நிக்கல், காதலிச்சா நட்டு எல்லாம் கழண்டுருமாம், என்றபடியே நட்டை கழட்டும் இடம், சீன் போடாத சீதாபிராட்டி, Dot; இப்படி சின்னச் சின்ன வசனஙகளுக்காக திரையரங்கத்தில் விசில் பறக்கிறது.

படத்தின் நாயகன் ரஜினி, வில்லனும் ரஜினியே. ரஜினியை வில்லனாக பார்க்க ஆசைப் பட்ட மக்களுக்கு இந்தப் படம் செம தீனி. ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், மூன்று முகம் வரிசையில் ரஜினிக்கு நடிப்பில் எல்லைத் தொட்ட படம். எந்திரன் ரஜினிக்கு ஒப்பனை செய்ததை விஞ்ஞானி ரஜினிக்கும் செய்திருக்கலாம்.அழுதால்தான் நடிப்பு என்று நம்பியிருக்கும் நம் மக்களுக்கு ரஜினியின் உழைப்பு தெரியுமா என்பதுதான் சந்தேகமே.நான் இப்படி நடித்தால்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கழுத்தருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் எப்படி நடித்தாலும் சூப்பர் ஸ்டார்தான் என்று நிரூபித்து சாட்டையால் விளாசியிருக்கிறார் ரஜினி.
படத்திற்கான செலவு அதிகம், மீண்டும் இப்படி ஒரு முயற்சி தமிழில் வர இன்னும் சிலகாலம் ஆகலாம். குறைந்த பட்சம் இந்த மாதிரியான முயற்சிகள் இந்தியாவை தாண்டிச் செல்லும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.குடும்பத்தோடு தாராளமாக பார்க்கலாம், இது அனைவருக்குமான படம். எப்படியோ சன் பிக்ஸர்ஸ் தயாரித்த முதல் படமே மாபெரும் வெற்றி.ரஜினிக்காகவே ஷங்கர் எடுத்தப் படம் சிவாஜி, இந்தப் படம் ஷங்கருக்காக ரஜினி நடித்துக் கொடுத்திருக்கிறார், அதுவும் ஒரு இயக்குனரின் நடிகராகவே. முதல்வன் பார்த்த போது ‘சே ரஜினி இந்தப் படத்தில நடிக்காம விட்டுட்டாரே’ன்னு கவலைப்பட்டேன். ஆனால் இதுல எல்லாத்தையும் சேர்த்து புடிச்சுட்டாரு. Shankar, Rajni, Randy, ARR, Sujatha/Karki- Made a history in Indian Film Industry.
இறுதியாக, கமல் ஷாருக்கான் தவற விட்ட படங்களின் பட்டியலில் எந்திரன் முதல் இடத்தைப் பிடிப்பான்.
எந்திரன், ரஜினியின் ஷங்கரன்.
தமிழோவியத்துக்காக எழுதியதில் இருந்து கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது
Thanks for the such a quick post. arumai :)
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteExcellent review, ILA! I will watch only tonight! :)
ReplyDeleteநல்லாயிருந்தது விமர்சனம்.
ReplyDelete/தீப்பொறிக்கும் வசங்கள்/ தீப்பொறி பறக்கும் வசனங்கள்னு எழுதறதுக்குள்ள என்ன அவசரம்.? :-))
Going tomorrow! Let's see!!!
ReplyDeleteநன்றிங்க; நாளை நானும்.....
ReplyDeleteஆதி, நானும் பார்த்துதான் தட்டச்சினேன், அப்பவும் 2 தப்பு இருந்துச்சு, நீங்க சொன்னதும் ஒன்னு. மாத்திட்டேங்க
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeletehttp://denimmohan.blogspot.com/
//"இந்தப் படத்தில் சுஜாதாவின் இழப்பு தெரியாத வகையில் ஈடு செய்திருக்கிறார்கள்"//
ReplyDeleteஅப்படிச் சொல்ல முடியவில்லை. அவர் இருந்திருந்தால் இன்னும் மெருகேற்றியிருப்பார்.
very nice review. DOT.
ReplyDelete