அவாளோட ராவுகள் -3 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (a) LA Ram எழுதும் நவராத்திரி கொலு பத்தின தொடர், ச்சும்மா கலக்கலோ கலக்கல். மிஸ் பண்ணாதீங்க.. சொல்லிட்டேன் ஆமா..
பட உதவி ரிவிட் ஆயில்ஸ்,, சே சே ரீட்வீட் புகழ் ஆயில்ஸ்
----00oo00----
கொத்தனார் எழுதும் கோனார், கண்டிப்பா படிங்க.. தொடர் அருமையா வருதுங்க. எங்கெங்கே தப்பு பண்றோம்னு புரியும், கண்டிப்பா பதிவுலகத்துக்கு இது தேவை.http://www.tamilpaper.net/?p=580
----00oo00----
என்ன இது ரெண்டும் தொடரா தொடர்ந்து குடுத்துட்டு வர்றேன்னு கோச்சுக்காதீங்க.
கடும் பகை by பழமைபேசி
இதெல்லாம் கிராமத்தானுங்க பாசைங், சிலருக்கு புரியும், சிலருக்கு புரியாதுங்.
----00oo00----
சுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள் by Sai Ram
சாய் ராமின் இந்தப் பதிவு, ஒரு கதைபோல, சினிமாபோல நம்ம கண்ணு முன்னாலயே அந்தக் காட்சிகள் வருது. இதைவிட அருமையான பதிவு சிலி-சுரங்கத்தைப் பத்திவரலீங்க.
----00oo00----
ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் by Deepa
தன்னோட குழந்தையோட முதல் நாள் பள்ளி அனுபவத்தை யாரும் மறக்க மாட்டாங்க.(அதுவும் குறிப்பா அம்மாக்கள், ஏன்னா அவுங்கதன் கிட்டக்க இருந்து பார்த்துப்பாங்க. அப்பாக்கள் வழக்கம் போல பப்பரக்காதான்). உண்மையாவே இந்தப் பதிவை படிச்ச போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க. ஏன்னா சில பேர் தொலைபேசியிலேயே பள்ளியில் இடம் வாங்கி, அப்புறமா மனைவிகிட்டே சொல்லிருவாங்க. அவுங்க மனைவியே விண்ணப்பங்கள் பணம் எல்லாம், நேரம் எல்லாம் முடிச்சுருவாங்க. ரெண்டு மாசம் ஆச்சு இதுவரைக்கும் பள்ளியிலேயே கொண்டுபோய் விட்டதும் இல்லீங்க. யார்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா பின்னூட்டத்துல)
----00oo00----
போஸ்ட் பாக்ஸ் by என். சொக்கன்

சொக்கனோட பதிவுகள் எல்லாமே எனக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கும். 90% பதிவுகள் அழியாத கோலங்களுக்குப் போயிருக்கு, இதுவும் அப்படியாப்பட்ட பதிவுதான். இவரோட பதிவுகள் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லியே சலிச்சுருச்சுங்க. வேற எப்படிச் சொல்லலாம்?
----00oo00----
சூ மந்திரத் தக்காளி by சேட்டைக்காரன்
மொக்கைப் போடறதுக்கு கூட மருத்துவர் ஆலோசனை புடிக்கிறாங்கப்பா. தக்காளி! என்னமா திங்க் பண்ணிருக்கான் இந்தப் பயபுள்ளை
----00oo00----
கிஷோர் குமார் - சல்தே சல்தே by கருந்தேள் கண்ணாயிரம்
இந்தி பாடகர் கிஷோர்குமார் பத்தின அருமையான பதிவுங்க. பாஸ், அப்படியே கொஞ்சமா மாத்தி விக்கியில போட்டுருங்களேன்?
இதேமாதிரியான பதிவு ஒன்னு.. தமிழோவியத்துல கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வந்துச்சுங்க. அதுவும் இங்கே
----00oo00----
சிலம்பம் by Gowtham
நமக்கு சிலம்பம்னா பாக்யராஜ், பொறுமையா கண்ணாடி, கடிகாரம் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு போடுற சண்டைதான் தெரியும்ங்கிறதால, பதிவு முழுசாவுமே ஏதோ புதுசா படிக்கிறாப்லதான் படிச்சேன்(அப்பாடி, எவ்ளோ பெரிய வாக்கியம்). விக்கில யாராவது இந்தப் பதிவை சேர்த்திருங்கப்பா
----00oo00----
சென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை by உண்மைத் தமிழன்(15270788164745573644)
ஒரு மனுசனை இப்படியா அலைய விடுவாங்க. சித்தப்பூ, இந்தப் படம் எந்தளவுக்கு விமர்சனம் வந்திச்சுன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். தலையிலடிச்சுக்கிட்டேன்.
----00oo00----
பெரிய மனுஷன் ஆயிட்டேனே by கார்க்கி
ஒரு சைட் டிஷே இப்படி எழுதினா மெயின் டிஷ் எவ்ளோ எழுதுவாங்க?
----00oo00----
அழியாத கோலங்களில் இருந்து இந்த வாரம் :
அரைபிளேடு எழுதிய .

எந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு. கண்டிப்பாக இது வழக்கமான ரஜினி படமில்லை, ஆறிமுகப் பாடல் இல்லை, தீப்பொறிக்கும் வசனங்கள் இல்லை, நாயகன் அடிக்க 20 பேர் பறந்து போய் விழவில்லை, அம்மா, தங்கை பாசப் போராட்டமில்லை, கவர்ச்சியில்லை, கிளப் டான்ஸ் இல்லை, இல்லை இல்லை. எதுவுமே இல்லாம இது எல்லாம் தமிழ் சினிமாவான்னு துப்பாதீங்க, ஆனா இதெல்லாமல் வந்தததுதான் இந்தத் தமிழ்ப் படம். ஆச்சர்யமில்லையா?
விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ (AndroHumanoid Robot) தயாரிக்கிறார். அதே சமயம் அவருடைய குரு Danny Denzongpaவும் இதைனைப் போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு(சிட்டி) அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கையில், ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்துவிடுகிறார்.மீண்டும் முயன்று வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். ஆனால் உணர்வு பெற்ற எந்திரனோ ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி தவறான மென்பொருளை உள்ளீடு செய்ய, அது டேனியையும் அழித்து மேலும் ரஜினி போன்ற சிட்டி ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், பிருமாண்ட இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே.
படத்தின் குறைகளாக சிலவற்றைச் சொல்லலாம், கொசு பிடிக்கும் காட்சி, வில்லன் தயாரித்த ரோபோவை வெளிநாட்டு மக்களுக்கு விற்க முனைவது, விஞ்ஞானி என்றால், காதல் மறந்த, சோப்ளாங்கியாகவே காட்டுவது, சந்தானம், கருணாஸ் கதாபாத்திரங்கள். இப்படி வெகு சில மட்டுமே.