Wednesday, August 25, 2010

பதிவுலகில் நான் : 6 ம் ஆண்டு

என்னாத்துக்கு இந்தப் பதிவு போடறேன்னு கேட்காதீங்க. இந்தத் தொடர்ல என்னை யாருமே எழுத கூப்பிடலை அப்படின்னு ஒரு பெரிய வருத்தம் எனக்கு. (நீயெல்லாம் பதிவு எழுதறேங்கிறதே நீ சொல்லித்தானேடா தெரியும் வெண்ணை’ன்னு யார்பா கொரலு உடறது). கூப்பிடலைன்னா விட்டுருவோமா? நாங்க எல்லாம் ரெளடின்னு சொல்லிகிட்டே ஜீப்புல ஏறுன ஆளுங்க ஆச்சே. ஏன்னா??? அதுக்கான பதில் கடைசி பாராவுல..

000000000000000000000000000000000
இந்தப் பதிவுலகத்துல என்னாத்த கண்ட?

ஒன்னுமே இல்லீங்க. வேலை வெட்டி இல்லாம நெறைய நேரம் இருக்கோம், எத்தையாவது படிக்கலைன்னா மண்டை வெடிச்சுரும் அப்படிங்கிற ஆளு நான். அதான் எழுதறது, எப்பவாவது.

000000000000000000000000000000000

கிடைத்தது:
நண்பர்கள்: நெறைய. நெறையன்னா நெறயவேதான். இப்போ இருக்கிற எடத்துல இருக்கிற எல்லாம் நண்பர்களுமே(90%) பதிவு/ட்விட்டர்கள் வட்டம் சேர்ந்தவங்கதான். ஒலகத்துல கால எங்கே வெச்சாலும் முதல்ல அந்த ஊர் பதிவர்ங்கதான் ஞாபகத்துக்கு வருவாங்கன்னா பார்த்துக்குங்களேன்.
000000000000000000000000000000000

எந்த அளவுக்கு இந்த நட்புகளை நம்பறீங்க?
எல்லாருமே நண்பர்கள்தான். ஆனா என்னோட நெருங்கிய வட்டத்துக்குள்ள வந்தவங்க ரொம்பச் சிலரே, மத்தவங்க எல்லாம் மூக்கு வரைக்கும்தான். சுருங்கச் சொல்லனும்னா நேருல பார்க்கிற வரைக்கும் யாரையுமே நான் நம்பறது இல்லே. பதிவுகள்ல நான் பின்னூட்டம் போடறதை விட அலைபேசியில பேசினது நிறைய இருக்கும். அதனாலயே பதிவுக்கு அப்பால அந்தப் பதிவர்களின் நெருக்கம் ரொம்ப ஆகிருச்சு. இதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா நம்ம ’கருப்புத் தளபதி’ நசரேயனைச் சொல்லலாம், அப்புறமா ட்விட்டர் வகிமாவைச் சொல்லலாம். அட சொல்ல மறந்துட்டேன், இப்போ நான் வேலையே பதிவுலகத்தால கிடைச்சதுதான். அப்புறம் நட்புகளைத் தாண்டி சங்கம் மக்கள், அதெல்லாம் நெருக்கம், நெருக்கம் ரொம்ப, குடும்ப பிரச்சினைகூட பேசுற அளவுக்கு. சங்கம் மக்கள் நட்பு வளையத்துல வர மாட்டாங்க, அவுங்க அதுக்கு மேல.

இந்தியா/சிங்கை சிலர்கிட்ட நல்ல நண்பனா இருக்கேன், சிலர் எனக்கு நல்ல நண்பர்களா இருக்காங்க. அதுல குறிப்பிட்டுச் சொல்லனும்னா மாம்ஸ் பாலபாரதி, ’தடாலடி’கெளதம், எம் எம் அப்துல்லா, ’பொதிகைச் சாரல்’ ஜே கே, தேவ், கைப்பு, சிபி, கப்பி, தஞ்சாவூரான், கார்க்கி, ஜிரா, இளவஞ்சி, கொங்கு ராசா, சந்தோஷ், நந்து அப்பா(இந்த மனுசன் இந்த லிஸ்டலையே வரக்கூடாது, இருந்தாலும் 4 பதிவு போட்டிருக்காரேன்னு சேர்த்திருக்கேன்),வால்பையன்,T.V.ராதாகிருஷ்ணன் ஐயா, கோவி, குழலி, செல்லா, செந்தழல் ரவி(இவன்(ர்) எந்த ஊர்ல இருக்கா(ர்)ன்னே தெரியல, அப்படி பறக்கிறான்(ர்)), ஜீவ்ஸ், ஜி,RaamCM

ஐரோப்பாவுல ’ஓமப்பொடி’சுதர்சன், டுபுக்கு, வினையூக்கி
அமீரகத்துல ஆயில்யன், பினாத்தல், புலி(சூடான்),அபி அப்பா,சென்ஷி.
புதரகத்துல பாஸ்டன் ஸ்ரீராம்/பாலா,வகிமா கேங்(வட கிழக்கு மாஃபியா), KRS, வெட்டிப்பயல், என்னைக்குமே மதிக்கும் சத்யராஜ்குமார், பழமைப்பேசி, வழிப்போக்கன் - யோகேஷ், நசரேயன், மருதநாயகம், ச்சின்னப்பையன், சீமாச்சு, மோகன் கந்தசாமி, சங்கரபாண்டி, தமிழ் சசி, சொந்தக்கார சுகந்தி, வயசானாலும் இளமையா இருக்கிற லாஸ் ஏஞ்சல்ஸ் ‘ராம்’,Udhaykumar.

ஈழத்து பகீ, கானா பிரபா(கானாவை சந்திக்கும் நாளை எதிர்பார்த்து இருக்கேன். சந்திச்சதும் பாட்டெல்லாம் சுட்டுட்டு வரனும்)

இவுங்ககிட்ட எல்லாம் வாங்கப் பழகலாம்னு கூப்பிட்டு பேசலாம்னு நினைப்பேன், ஏதோ காரணத்தினால முடியல, இனிமே முடியாமலும் போகலாம் - செல்வராஜ், லக்கி, அதிசா, முரளிகண்ணன், நர்சிம், பரிசல்காரன், வெயிலான், ஜாக்கி சேகர், தாமிரா(ஆதி),ஈரோடு கதிர்(இவரை இங்கே வெச்சிருக்கிறது சரியான்னு தெரியல, ஆனாலும் சந்திச்சக்கனும்),சஞ்சய் காந்தி, அண்ணாச்சி ஆசிஃப்,குசும்பன்,செல்வேந்திரன், Badri, காசி.

இசையை பத்தி போட்ட பதிவுக்கு திரையிசை நண்பர்கள் கிட்ட வாங்கி கட்டினது(ஸ்பெசல்)

000000000000000000000000000000000

எதுக்கு இத்தனைப் பேர் இங்கே?
அட, இவுங்க ஒவ்வொருத்தரும் ஒரு பின்னூட்டமாவதா போடமாட்டாங்களான்னு ஒரு நப்பாசைதான்.

000000000000000000000000000000000

பெண் நட்புகள் நிறைய இருக்குன்னு சொல்றாங்களே, உண்மையா?
பொய். கவிதாயினி காயத்திரி, மை ஃபிரண்டு, அனுசுயா, இம்சை அரசி இப்படி வெகுசிலர் கிட்ட மட்டுமே பேசி இருக்கேன். மீதி எல்லாம் அரட்டையோட சரி. மேல சொன்ன நாலு பேருமே, என் குடும்பத்துல பொறக்கலையேன்னு கோவப்படுற அளவுக்கு பாசம் அதிகம். இவுங்க எல்லாம் உடன் பிறவா சகோதரிகள் கேட்டகரியில வந்துருவாங்க(செலவு மட்டும் நிறைய வெக்க மாட்டாங்க, ரொம்ப நல்ல புள்ளைங்க. ஆமா இவுங்க எல்லாம் எங்கே இருக்காங்க?). மத்தபடி பெண்களுக்கு பதிவுலகம் கஷ்டத்தைதான் தருது, பசங்கதான் குரூப்பா சேர்ந்து சுத்தறதுன்னு நல்லா இருக்காங்க. துளசி டீச்சர், கண்மணி அக்கா, பத்மா, பொன்ஸ், விக்னேஷ்வரி, சந்திரவதனா,சின்ன அம்மிணி, ramachandranusha(உஷா), இவுங்க மேல எல்லாம் நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு.


000000000000000000000000000000000

நேரம் எப்படி கிடைக்குது?
அலுவலகத்துல ஜல்லியடிச்சா பரவாயில்லைங்க, அதுவே வீட்டுக்குப் போவுதும்தான் சிக்கலே. அடி, உதை, கிள்ளு, மிதி இப்படி நிறைய வாங்கியிருக்கேன். அதனால வீட்டுல இப்போவெல்லாம் பதிவு படிக்கிறதே இல்லே.ஒன்லி ஆபிஸ், அங்கே அதுதானே வேலை.

000000000000000000000000000000000

மூக்குடைப்பட்டது?

வேற என்ன ஒரு முறை அவார்ட் தரேன்னு சொல்லப்போயி, தருமத்துக்கு வாங்கி கட்டினேன். மோகன் தாஸ்கிட்ட அதே சமயத்துல வேற காரணத்துக்காக பொதுவுல மன்னிப்பும் கேட்டேன், அது ஒன்னுதான்னு நினைக்கிறேன். சில நேரங்கள்ல நாட்டாமை பண்ணப்போயி சொம்பு நசுங்கனதும் உண்டு, வெளியே நம்ம பேரு வர்றதில்லங்கிறதால அது எல்லாம் மூக்குடைஞ்சதுல வராதே. அப்புறம் BlogOGraphy ரெண்டே ரெண்டு பதிவுகள்தாங்க போட்டேன் ஒவ்வொரு பதிவும் பதிவுலகத்தை நாறடிச்சுருச்சு. தமிழ்மணத்துல சூடான இடுகையெல்லாம் தூக்க வெச்சிருச்சு, அப்படி ஒரு பவர் அதுக்கு.

000000000000000000000000000000000

காசு சம்பாரிச்சது உண்டா?

ஹே ஹே, நிறைய செலவு பண்ணினது உண்டு. சம்பாரிச்சதும் உண்டு, இன்னும் வந்துட்டே இருக்கு அது பதிவுலகம் சார்ந்த தொழில்முறை. பதிவுலகத்தாலும் சம்பாரிக்க முடியும் :)

000000000000000000000000000000000

டிஸ்கி: சிலர் பேரை எழுதாம விட்டுருப்பேன், அவுஙக எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க, ஏன்னா நீங்க இப்போ தொடர்பு எல்லைக்கு அப்பால இருக்கீங்க, நெஜமாலுமே சிலரை மறந்திருப்பேன், அவுங்க என்னை மன்னிச்சிருங்க, பின்னூட்டத்துல என்னை திட்டிருங்க(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

உதவி செஞ்ச எல்லாருக்கும் நன்றி, ஏன்னா அத்தனை உதவிகள் பதிவுலகத்தால கிடைச்சிருக்கு

000000000000000000000000000000000

கவிஞர் எம். யுவன் எழுதிய கவிதையிது பதிவுலகத்துக்கு டேப்பரா ஒத்துவரும்.

உருமாற்றம்
கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ.
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.
அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின்
கதியில் தெரிந்து கொண்டது.
வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும் போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.
அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.
பிற்சேர்க்கை:
//வகிமா வகிமா-னு சொல்லிட்டு, ரொம்பக் கவனமா பெயரேப் போடாம தவிர்த்திட்டீஙக்ளே. அவ்ளோ பயங்கரமான மாஃபியா கும்பலா அது //
இப்படி ஒரு வகிமா கேட்க, பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கே. பேரைச் சொல்லி நான் எதாவது விட்டுட்டேனா போட்டு வாங்கலாம்ல அதுக்கான எண்ணம்தான். வகிமா’ன்னா- வடகிழக்கு அமெரிக்கா மாஃபியா, இது ட்விட்டர் கும்பல். @dynobuoy @orupakkam @elavasam @ivansivan @snapjudge @njganesh @padmaa இன்னும் இது வளர்ந்துட்டே இருக்குங்க.

முதல் பாராவுக்கு பதில்:தமிழ்ப் பதிவுலத்துல நான் தடுக்கி வுழுந்த நாள் ஆகஸ்டு- 24-2005, அதாவது ஆறாவது வருசமாம் இது. இனிமேலாவது நல்ல, நல்ல பதிவா எழுதலாம்னு ஆசைப்படறேன் (வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்).

59 comments:

 1. நானே எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன்:-))

  ஓ இப்படி சொன்னா வேற அர்த்தம் வருதோ! இருங்க ஓட்டு போட்டுட்டு வந்து மீதிய கும்முறேன்!

  ReplyDelete
 2. மீ த ஃபஸ்ட்

  இப்படிக்கு
  மைஃபிரண்ட்

  ReplyDelete
 3. 1
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 4. இளா இதிலே நீங்க எழுதியிருப்பது எல்லாம் 100 சதம் சரியே!

  அதே போல நீங்க குறிப்பிடும் பல பதிவர்கள் முன்பு போல ஆக்டிவா இல்லை எனினும் அவங்க யாரையும் மறக்க முடியாது. ஏன்னா அப்ப எழுதினது வெறும் 200 பதிவர்கள் தான். சண்டைன்னா கூட அதிகபட்சம் ஆரிய, திராவிட தான் வரும். ஆனாலும் ரொம்ப ஆரோக்கியமா இருந்ததா நினைவு. அது போல பெண் பதிவர்களில் நீங்க சொன்ன இம்சைஅரசி ஜெயந்தி, காயத்ரி, மைபிரண்ட் அனு எல்லாம் கூடப்பிறக்காத தங்கச்சியா(துர்காவை விட்டுடீங்க) தான் இருந்தாங்க. ஒரு பதிவு போட்டா மீ தி பஸ்ட் போடவே ஓடிவருவா மைபிரண்ட் தங்கச்சி என்பதுக்காகவே பீ தி பஸ்ட் போட்டு இப்படிக்கு மைபிரண்ட் என அவ மனசு கஷ்டப்படக்கூடாதேன்னு போடுவோம். அது போல அனு சிங்கை டூர் (பதிவு மூலமாக தான்) பதிவர்களை அழைத்து போன நகைச்சுவை பதிவு வவாச நகைச்சுவை போட்டில நகைச்சுவை அரசி பரிசை தட்டி சென்றதும் மறக்க முடியாது! ..... தொடரும்

  ReplyDelete
 5. ஒண்ணுக்கு ரெண்டாவே பின்னூட்டம் போட்டுட்டேன், போதுமா??

  ஒரு விசயம் கவனிச்சீங்களா? - இப்போதெல்லாம் நாம் பேசாம இருக்கும் நாட்கள் மிகக்குறைவு (ஒரிரு நிமிடங்களாவது)

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 6. அது போல இம்சைஅரசி, காயத்ரி இவர்கள் எழுதும் ஸ்டைல் வேறயாக இருந்தா கூட நம்ம கும்மில இவங்க வந்துட்டா ஒரு களை கட்டுமே அதல்லாம் இப்ப ஏதுங்க!

  சங்கத்து சிங்கங்கள் ராம், வெட்டி, ஜொள்ளுபாண்டி, கைப்புள்ளை, மாநக்கல் சிபி, நாகைசிவா(புலி)....வாவ் அந்த காம்பினேஷன் இனி வருமா? என்ன காலம் அதல்லாம்.

  தொடரும்........

  ReplyDelete
 7. சிவாஜியை விவாஜியாக்கிய சிங்கம் தேவ் அடிச்ச கூத்து மறக்க முடியுமா? அதும் விவசாயி நீங்க (விவாஜி) ட்ராக்டரில் கிளைமாக்ஸ்ல போவது கண்ணுக்குள்ளயே இருக்கு அதல்லாம் மறக்க முடியுமா?

  பதிவுலக ஆழ்வார் கேயாரெஸ் அடிக்கும் கூத்து மறக்க முடியுமா? வல்லிம்மா, கீதாம்மா, நுனிப்புல் உஷான்னு என்னா ஒரு பட்டாளம் அது.

  இத்தனை பழைய பதிவர்கள் பெயரையும் இங்க பார்த்த பின்னே இதல்லாம் நியாபகம் வருது இளா!!!!

  முடிஞ்சா தொடர்கிறேன்!

  ReplyDelete
 8. என்னோட பின்னூட்டம் வருகையைப் பதிவு செய்து .. வாழ்த்துகளை சொல்லிகிறேன்

  ReplyDelete
 9. //வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்//

  சட்டியிலே இருந்தா தானே ஆப்பையிலே வரும் ?

  ReplyDelete
 10. நான் பதிவுலகில் நுழைந்தது ஆகஸ்ட் 24, 2008. ஆறு வருடங்கள் என்பது இமாலய சாதனை. வாழ்த்துக்கள்!

  ஸ்ரீ....

  ReplyDelete
 11. ஹிஹிஹி

  நீங்க பதிவரா பாஸ்?????


  என் பெயரையும் நண்பர்கள் லிஸ்டுல சேர்த்தற்கு நன்றி :)

  ReplyDelete
 12. [[[சங்கத்து சிங்கங்கள் ராம், வெட்டி, ஜொள்ளுபாண்டி, கைப்புள்ளை, மாநக்கல் சிபி, நாகை சிவா(புலி) வாவ் அந்த காம்பினேஷன் இனி வருமா? என்ன காலம் அதல்லாம். ]]]

  வரவே வராது.. அதெல்லாம் ஒரு பொற்காலம்ண்ணே..!

  ReplyDelete
 13. என் பெயர் எந்த லிஸ்ட்டுலேயும் இல்லைனனாலும் பரவாயில்லைன்னு நினைச்சு பின்னூட்டமும், ஓட்டும் போட்டிருக்கேன்..!

  வாழ்க வளமுடன்..!

  ReplyDelete
 14. யோவ் டுபுக்கு மாமா, எங்கப்பா எங்கய்யா ப்ளாக் எழுதறாரு? நந்து அப்பாவாம். நிலா அப்பான்னு சரியா எழுத வக்கில்ல 6 வருசம் ஆச்சாம்.

  அந்த புள்ள ஏன் லவ் பண்னலன்னு போன் பண்ணதிலிருந்து நீ சரியா இல்ல. ஆமா சொல்லிபுட்டேன்

  (அபிஅப்பா ரொம்ப ஃபீல் ஆகி கொசுவத்தி சுத்தறார். எனக்கும் ஃபீல் ஆகுது )

  ReplyDelete
 15. உங்களை நான் சந்திச்சது ரெண்டு இடத்துல - ரெண்டையும் விட்டுட்டு அமீரகத்துல சேத்துருக்கீங்க பேரை!

  ReplyDelete
 16. // உண்மைத் தமிழன் said...
  என் பெயர் எந்த லிஸ்ட்டுலேயும் இல்லைனனாலும் பரவாயில்லை//

  // நந்து f/o நிலா said...
  யோவ் டுபுக்கு மாமா, எங்கப்பா எங்கய்யா ப்ளாக் எழுதறாரு? நந்து அப்பாவாம். நிலா அப்பான்னு சரியா எழுத வக்கில்ல//

  //ராம்சுரேஷ் said...
  உங்களை நான் சந்திச்சது ரெண்டு இடத்துல - ரெண்டையும் விட்டுட்டு அமீரகத்துல சேத்துருக்கீங்க பேரை//

  இன்னிக்கு உங்களுக்கு நேரமே சரியில்லை...

  ஒரு கொசுவத்திப் பதிவு கூட ஒழுங்கா எழுதத் தெரியலன்னா இப்படித்தான் வாங்கிக் கட்டிக்கணும்

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் விவாசாயி :)))

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்... பணி தொடரட்டும்!
  - ஏஜண்ட் NJ

  ReplyDelete
 19. அபிஅப்பா/ஸ்ரீராம்- கல்லா கட்டுனதுக்கு நன்றி!
  --------------
  //நாம் பேசாம இருக்கும் நாட்கள் மிகக்குறைவு //
  உண்மைதான், நாமதான் பதிவுலகத்துலிருந்து அடுத்த கட்டத்துக்கு போயாச்சே.
  ---------------
  உதா- அண்ணாச்சி, மன்னிச்சுக்குங்க.
  ----------
  துர்காவை எப்படி மறந்தேன்னே தெரியல. சே.. அப்படியே ஜி3யையும் மறந்துட்டேன் :(மன்னாப்பு ஜிஸ்டர்ஸ்..
  --------------
  எங்க பக்கத்துவீட்டுல எல்லாம் அவுங்க பேர் சொல்லிட்டு மரியாதைக்கு அப்பா’ சேர்த்துக்குவாங்க. (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு) அப்படித்தான் மாம்ஸ். யோவ், அடுத்த தபா ஒரு ரவுண்ட் சேர்த்துக்குவோம். கண்டுக்காத மாம்ஸ்.
  -----------------
  //உங்களை நான் சந்திச்சது ரெண்டு இடத்துல - ரெண்டையும் விட்டுட்டு அமீரகத்துல சேத்துருக்கீங்க பேரை!//
  நாராயணா, இந்த எழுத்தாளங்க தொல்லை தாங்கலடா. அடிச்சு விரட்டுங்கடா. வினையூக்கிய கூட சென்னையிலதான் பார்த்தேன் அதுக்காக ?
  ------------------------
  ஏஜெண்டு - எங்கேயா இருக்கீங்க? அட இருக்கீங்களா? சிபி அடிக்’கடி’ உங்களை கேட்டு தொல்லை பண்ணுவாரு

  ReplyDelete
 20. வாழ்த்துகள் மற்றும் நன்றி..:-))

  உம்ம வீட்டுக்கு வர்ற நிகழ்ச்சி மட்டும் தடங்கலாவே இருக்கு. மறுபடி முயற்சி செய்யறேன். :-))

  ReplyDelete
 21. //உம்ம வீட்டுக்கு வர்ற நிகழ்ச்சி மட்டும் தடங்கலாவே இருக்கு. மறுபடி முயற்சி செய்யறேன். :-))//

  சின்னப் பையன் சார், நானும் இளா வீட்டுக்குப் பகக்திலதான் இருக்கேன், எங்க வீட்டுக்கும் வந்தா சந்தோஷப் படுவேன்..

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் ராஜா.. ரொம்ப சந்தோஷம்.. இன்னும் நிறைய்ய எழுதுங்க..

  நம்ம ‘மருதநாயகத்தை’ மறந்துட்டீயள் போலருக்கே :)

  ReplyDelete
 23. நண்பா : ஆறு வருட அனுபவங்கள் அருமை.... ஏழாம் வருடத்திலும் ஏழரை தொடர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 24. நாம கணக்குல கொஞ்சம் வீக்குங்குறது சரிதான்..........

  அஞ்சு வருசம் முடிஞ்சு ஆறாவது ஆரம்பிக்கிறீங்க.... நான் ஏழாவது வருசம் ஆரம்பிக்கிறீங்கன்னு
  கமெண்ட் போட்டிருக்கேன்... பரவாயில்ல, அந்த கமெண்ட்ட அடுத்த வருசத்துக்கு யூஸ் பண்ணீக்கலாம்...

  அப்ப இந்த வருசத்துக்கு? இந்தாருக்குல்ல...........\

  """""
  நண்பா : ஐந்து வருட அனுபவங்கள் அருமை.... ஆறாம் வருடத்திலும் ஆளுமயை தொடர
  வாழ்த்துக்கள்..........
  """""

  ReplyDelete
 25. ||இவரை இங்கே வெச்சிருக்கிறது சரியான்னு தெரியல,||

  சரியேயில்ல...

  பேசாமா, வீரப்பன் காட்டுக்குள்ளே கொண்டு போய் விட்டுடுங்க.....

  ReplyDelete
 26. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
  அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள். - வாழ்க்கை மாற்றம் நிறைந்ததடா
  கண்ணா, இப்ப என்ன புது செட்டுங்க வந்துடுச்சு. நாம ஒதுங்கிட்டோம், குரூப்பாய் கலாய்க்கும்பொழுது
  இருந்த சுகம் இப்ப வருவதில்லை.
  இளா, கோவையில் நம்ம நாமக்கல் சிபியின் செல்லில் நீங்கள் பேசியது நினைவுக்கு வருது. வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள். பின்னுட்டம் போடவில்லை என்றால் நீங்க எழுதுவதை எல்லாம்
  படித்துவிடுவேன்.
  இது உ.த அவர்களுக்கு, ஐயா நீங்க எங்க செட்டு இல்லை :-) அப்பால தான் வந்தீங்க :-))

  ReplyDelete
 27. அருமை..நிறைய எழுதுங்க

  ReplyDelete
 28. //ஒவ்வொருத்தரும் ஒரு பின்னூட்டமாவதா // இதென்னயா அராஜகம்.. இப்படி கழுத்துல துண்டு போட்டெல்லாம் பின்னூட்டம் கேக்கறீங்க :)

  ம்ம்.. 6 வருசம் ஆயிருச்சா... :)

  ReplyDelete
 29. ப்ளீஸ் இக்நோர், திஸ் ஈஸ் ஃபார் பாலோயிங் கமென்ட்ஸ்

  ReplyDelete
 30. ஆறு ஆண்டு ஓடிப் போச்சா........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் போனதே தெரியல.....!

  என்றென்றும் தொடருவோம்.

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள். வளர்க உங்கள் பணி. நன்றி.

  ReplyDelete
 32. ஏன்டாப்பா நாங்க என்ன செவ்வாய் கிரகத்துலயா இருக்கோம்...இனிமே பேசசவாய்ப்பே இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்னு தெரியலை.... இருந்தாலும் குறிப்பிடதக்க இடத்தில் எனமு பெயரும் நன்றிகள்..

  பார்மாலிட்டிடன்...

  ReplyDelete
 33. விவாஜி,

  என்னையும் ஞாபகம் வச்சு குறிப்பிட்டதுக்கு நன்றி ;)

  நியூயார்க் ஏர்போர்ட்டில் முதன்முறையாக சந்திச்சு, 'ஜூஸ்' சாப்புட்டுகிட்டே வண்டிக்கு நேரமாச்சுங்குற நெனப்பே இல்லாம என்ன விட நீங்க டெஞ்சனா இருந்தது... உங்க வீட்டு விசேசத்துல குடும்பத்தோட கலந்துகிட்டது....இப்பல்லாம் முன்ன மாதிரி எல்லோரையும் டச்சுல வைக்க முடியல ;(

  நான் இப்ப ரொம்பப் பெரிய தொழிலதிபர் ஆயிட்டதாலே, பழசெல்லாம் மறந்துடலாம்னு இருக்கேன் ;)

  ஆறுக்கு வாழ்த்துக்கள், ஆயிரத்துக்குத் தொடருங்கள்!

  இப்பல்லாம், பதிவுகள நேரம் கெடைக்கும்போது மேயுறதோட சரி.

  விரைவில் நம்ம ஏழரையும், எழுத்தேறும் என்ற நம்பிக்கையில்...

  ReplyDelete
 34. ஆகா, பாஸ் கலக்கல் தொகுப்பு
  வாழ்த்துக்கள்

  6 வருஷ உங்க வலையுலக வாழ்வில் 5 வருசமா இணைந்து வருகிறேன். தொடருங்கள் பாஸ்

  ReplyDelete
 35. ஆத்திய்ய்ய்ய்ய் மீ த 40

  ReplyDelete
 36. //கானா பிரபா said...

  ஆகா, பாஸ் கலக்கல் தொகுப்பு
  வாழ்த்துக்கள்

  6 வருஷ உங்க வலையுலக வாழ்வில் 5 வருசமா இணைந்து வருகிறேன். தொடருங்கள் பாஸ்///


  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

  5 வருசமா கூடவே வராரு ஒரு சின்ன சைகையில சொல்லியிருக்கலாம்,போய்யா போய் பொழப்ப பாருன்னு ப்ச் போங்க பாஸ் எங்க பெரிய பாண்டி பாவம் :))

  ReplyDelete
 37. ஆயிலு

  இருடி வைக்கிறேன் ஆப்பு

  ReplyDelete
 38. வகிமா வகிமா உன் போல குரூப் வருமா வருமான்னு ஒரே வகிமா புகழ் பாடும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதே! :))

  //இது ட்விட்டர் கும்பல். @dynobuoy @orupakkam @elavasam @ivansivan @snapjudge @njganesh @padmaa இன்னும் இது வளர்ந்துட்டே இருக்குங்க.//

  ஆயில்யன்
  வகிமா ரசிகர் மன்றம் -தோஹா
  [நாள பின்ன நானும் அங்கே வந்தா நல்ல்லாஆஆஆ கவனிப்பாய்ங்கள்ல]
  :)

  ReplyDelete
 39. //கானா பிரபா said...

  ஆயிலு

  இருடி வைக்கிறேன் ஆப்பு//


  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  [இதுக்கு எதுக்கு ரிப்பிட்டேய்ய்ய்ய்ன்னு யாரும் கேக்கப்பிடாது இது ச்சும்மா பெ.பா கூல் செய்ய]

  ReplyDelete
 40. பாஸ் இன்னும் டிரை செஞ்சா இங்கே நல்லா கும்மி செட் ஆகும்போல :) 100க்கு கொண்டு போய்டலாமே?! #டவுட்

  ReplyDelete
 41. யோவ்

  விவசாயி 6 வருஷம் கொண்டாடுறார் நீர் வந்து கும்மி அடிச்சிக்கிட்டு

  ReplyDelete
 42. வாழ்த்துக்கள்!!! 4 வருடங்களாக நானும் உங்களோடு வலையுலகில். எப்போ வேண்டுமானாலும் பேசலாம் இளா!

  ReplyDelete
 43. :)))

  அப்புட்டு கெழவனா நீயு...

  ReplyDelete
 44. சூப்பரு அண்ணே..மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

  ReplyDelete
 45. தனக்குத் தானே biography நல்லா வந்திருக்கு. உங்க நேர்மையும் பிடிச்சுஇருக்கு

  ReplyDelete
 46. ச்சின்னப் பையன், மணிகண்டன், முத்துலெட்சுமி, ஈரோடு கதிர், ramachandranusha(உஷா), Gayathri,அதிஷா, கொங்கு - ராசா, திகழ், கோவி, நித்திலம்-சிப்பிக்குள் முத்து, செந்தழல் ரவி,ஜாக்கி , தஞ்சாவூரான், கானா, ஆயில்ஸ், வெயிலான், மாம்ஸ், கோபி, Mahi_Granny, பழமைபேசி, வினையூக்கி--> நன்றிகள் பல.

  Seemachu --> //நம்ம ‘மருதநாயகத்தை’ மறந்துட்டீயள் போலருக்கே :)// இல்லீங்கண்ணே, பேரு இருக்குங்களே, அவரை எல்லாம் எப்படி மறக்க?
  வழிப்போக்கன் - யோகேஷ்--> விடு நண்பா, நாம் எல்லாம் பேசும் போதே எழுத்துப்பிழையோட பேசுற ஆளுங்க. :)

  ReplyDelete
 47. எப்படி எல்லாம் பதிவு போட்டு ரீடரை தாண்டி வந்து பின்னூட்டம் போட வைக்குறாங்கப்பா ;)

  உங்க ரேஞ்சுக்கு 6 எல்லாம் ஜுஜுப்பிண்ணே... 60... 600 வரைக்கும் போவீங்க பாருங்களேன் ;)

  ReplyDelete
 48. @ அபிஅப்பா & உனா.தனா..

  ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.... ;)

  ReplyDelete
 49. ஆறாம் ஆண்டு வாழ்த்துகள் ஐய்யா..

  ReplyDelete
 50. //இப்போவெல்லாம் பதிவு படிக்கிறதே இல்லே.ஒன்லி ஆபிஸ், அங்கே அதுதானே வேலை.//
  super

  ReplyDelete
 51. ஆஆஆறு வருசம் ஆஆஆஆஆஆயிருச்சா!!!!!!!

  இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete

WhatsApp DP - சிறுகதை

கா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (3) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (30) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (3) காதல் (14) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)