- மாண்டாட்டு- -பலூன்
- தம்பூச்சி- அம்மாயி-அம்மாவின் அம்மா
- பெளபெள- டைனோசர்
- அப்பா ஒய்- அப்போய்
- டாப்டாப்- மடிக்கணினி
- மானா-வேண்டாம்
- பாச்சு- பாஸ்(சிவாஜி)
- பியூவ்ன்- போ
- பூவ்-போ
- ச்சுச்சு-சிறுநீர்
- ஆயி-லாரி/ஆயி
- கூக்கு-கோக்
- காயி-கோழிக்கறி
- பூனு-பேசி
- கவுஸ் -கையுறை
- பீனு-1-ஒபன்
- பீனு-2-பேனா
- ஊய்யா-சூர்யா
- ஐயா-இளா
- மிம்மீ-மம்மீ
- டாட்லி-டாடி
- பீயா-பீட்சா
- ட்டாலர்-ஸ்ட்ராலர்
- கோஸு-க்ளோஸ்
- சாக்கு-சாக்ஸ்
- கீய-கீழே
- யாக்-உவாக்
- சூப்ப-சூப்பர்
- ட்ரெக்கு-ஷ்ரெக்
- போயிசு-போலீஸ்
- உன்னிஉன்னி-ஆம்புலன்ஸ்லிருந்து வரும் சத்தம்
- அக்கு -கடி
- ஈபா-ஐ பாட்
- பாட்டா-பாட்டு
- ஈமோ-ரிமோட்
- பீப்ப-பேப்பர்
- புர்ஸூ-பெரிசு
- உய்யி-ஆகாய விமானம்
இன்னும் நிறைய இருக்குங்க, இவ்ளோதான் இப்போ ஞாபகத்துக்கு வருது. பின்னூட்டத்துல சொல்லிடறேன் இல்லைன்னா இதுலையே சேர்த்துடறேன்.
இந்த வார்த்தைக்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியும், உங்களுக்கு தெரியலைன்னா ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளரை பாருங்க.
மேலே இருக்கிற அத்தனை வார்த்தைகளும் எங்க வீட்டு வாரிசு சொல்லுற வார்த்தைங்கதாங்க. ஒவ்வொரு வீட்லையும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் பொதுவா ஒரு மொழி இருக்கும், இது அடுத்த வீட்டு மக்களுக்கு தெரியறது ரொம்ப கஷ்டம். மக்கள் யாராவது எங்க வீட்டுக்கு வந்தா ஏதோ வேற மொழி பேசுற ஊர்ல இருக்கிற மாதிரி ஒரு உணர்வு வந்துரும். இதுவும் ஒரு மொழி திணிப்பு தாங்க, ஆனா சுகமான திணிப்பு. என்ன பண்ண எல்லாம் ஒரு வட்டம்தான். போக போக அந்தக்குழந்தையே பல மொழி கத்துக்கிட்டு நம்மகிட்டயே படம் காட்டுவாங்க. அப்போ அந்த பெரிசான குழந்தைக்கே இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. ஆனா அப்பா, அம்மாவுக்கு மட்டும் காலம் முழுசா இந்த வார்த்தைகள் காதுல கேட்டுகிட்டே இருக்கும். நாம் எடுத்து கொஞ்சுறபோது இருக்கிற ஒரு பாசம் பெரிசானா கம்மியாயிடலாம். அப்போ இந்த வார்த்தைகளும், நெஞ்சில் வாங்கிய மிதிகளும், கையில் துடைத்தெடுத்த எச்சிலும்தாங்க சுகம்..
"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்'' (குறள்-66)"
///ஆனா சுகமான திணிப்பு////
ReplyDeleteசுகமா இருந்தா அது திணிப்பா?? :-)
இனிப்புன்னு வேணும்னா சொல்லலாம் :-)
"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்''
ரிப்பீட்டேய்!!!!
வள்ளுவருக்கே ரிப்பீட்டு வெப்போம்ல!! B-)
உண்மைதாங்க. உங்கள் மழலையின் குரலில் இசையின் இனிமையைக் காண்கின்றீர்கள்.
ReplyDeleteஇதே மாதிரி அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்னும் வள்ளுவர் சொல்லியிருக்காரு. அதுவும் நீங்க அனுபவிச்சிருப்பீங்களே.
ஒய்டாப் மாண்டாட்டு தம்பூச்சி பௌபௌ! :))
ReplyDeleteமக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
ReplyDeleteசொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
--------------
உங்கள் பக்கத்திற்கு வந்தாலும் FM ஓடி செவிக்கு இன்பம் தருகிறதே :))
இதுல கொஞ்சத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியுது..
ReplyDeleteஎன் பொண்ணும் இந்த மாதிரி யாழ் மீட்டுறா..
போச்சுடா...
ReplyDelete:)
மூன்று வயதில் இருந்து நான்கு வரையில் நாளொன்றுக்கு 400 கேள்விகள் கேட்குமாம் குழந்தைகள்.
தயாராக எடுத்து வையுங்க தலவலி மருந்தை !
:)
ReplyDeleteநல்லதொரு பதிவு. இம்மழலைச் சொற்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது.
ReplyDeleteமயக்குறு மக்கள் இல்லலோர்க்கு
பயக்குறை இல்லை தானே !
மகிழ்ச்சி
//குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்மழலைச் சொல் கேளா தவர்//
ReplyDeleteஉண்மை தான். ஜூனியர் ரெண்டாவது பொறந்தநாள் சிறப்பாக் கொண்டாடிருப்பீங்கன்னு நம்பறேன்.
:)
இதுல #11 யுனிவர்சல்ன்னு நெனைக்கிறேன் :)
ReplyDeleteஇப்பத்தான் இதெல்லாம் இனிமை..நல்லா அனுபவிச்சுக்கோங்க.... இன்னும் ஒரு வருஷம் பொறுங்க ;)
- ஒரு அனுபவஸ்தன் ..
ஆமா. இந்த அனுபவம் என்றைக்குமே புதுமையாய் இருக்கும். :)
ReplyDelete/இனிப்புன்னு வேணும்னா சொல்லலாம் :-)//
ReplyDeleteரிப்பீட்டேய் :-)
மழலை மொழி மட்டும் அல்ல அந்த சொல்லே ஒரு அழகுதான்.
கொஞ்ச நாள் கழிச்சு பாத்தா நாமதான் மழலை பேசிட்டு இருப்போம், அவங்க சுதாரிச்சிட்டு 'cut the crap dad!' ன்னுட்டு போயிட்டே இரூப்பாங்க :-))
நன்றி-cvr,G.Raa,koths,boston bala,cheena,kalai,
ReplyDeleteச்ச்சூய்யா சூப்பரா பேசறாரே :)
ReplyDeleteஅர்த்தமும் போட்டாச்சு..
ReplyDeleteசூப்ப அண்ணே ;)
ReplyDelete//இதுல #11 யுனிவர்சல்ன்னு நெனைக்கிறேன் :)//
ReplyDeleteஇது சுத்த போங்கு. என்னமோ அவங்களா யுனிவர்சலா சொல்ற மாதிரி சொல்றீங்க?
நீங்க யுனிவர்சலா சொல்லித் தர்றீங்க...அவங்களும் யுனிவர்சலா சொல்றாங்க
:))
http://angelnila.blogspot.com/2007/10/blog-post_24.html
ReplyDeleteமாமா இந்தபோஸ்ட் படிச்சிருக்கீங்களா?
இளா உண்மையில் இந்த மழலைப்பேச்சு இருக்கே இதைவிட சுகம் உலகில் வெறொன்றுமில்லை
ReplyDeleteகுறுகிய கால இடைவெளியில் சில உச்சரிப்புகள் மாறிகொண்டேவரும். ஒரு வார்த்தை தெளிவாக பேச ஆரம்பித்தால் அட நல்லா பேசுதே என்ற சந்தோசத்தைவிட மழலை பேச்சு மாறுகிறதே என்று வருத்தம் கூட வருகிறது.
குட்டிப்பாப்பாவின் மழலைப்பேச்சை பதிவு செய்து வைத்திருக்கிரீர்களா?
திருவள்ளுவரை இரண்டுஇடங்களிலும் சரியாக மேற்க்கோள் காட்டியுள்ளீர்கள்.அப்படியே எனது பதிவு பக்கம் வந்து போகவும்.நன்றி.
ReplyDeleteஇந்த கக்கா , சுச்சூ , சாச்சு , மூமூ , பன்டி , இப்படி குழந்தைகள் பேசுவது புரியலனாலும் அதும் ஒரு அழகுதான்ல . நல்ல பதிவு என் வீட்டு குட்டீஸ் ஐ ஞாயபக படுத்தியது. அந்த வார்த்தைகளை படிக்கும் போது அந்த குழந்தைகளிடமே பேசுவது போல் இருந்தது நன்றி
ReplyDeleteavanga pesarathoda ile nammalum sila samayam intha varthaigala than ubayogikanom avangaloda pesum bothu ^_^ Kozhanthai kalala namma kathukara modhal mozhi
ReplyDelete