Wednesday, April 4, 2007

சிவாஜி-பல்லே லக்கா-Lyrics

பாடல்: நா. முத்துகுமார்
பாடியது: பாடும் நிலா பாலு, ரைஹானா, பின்னி

பல்லே லக்கா பல்லே லக்கா

Female Chorus:
சூரியனோ...சந்திரனோ...யாரிவனோ..
சட்டுன்னு சொல்லு...
சேர பாண்டிய சூரனும் இவனோ...
சொல்லு சொல்லு...சட்டுன்னு சொல்லு..
(சூரியனோ... )

பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ.....

Male Chorus :
ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..
மெட்ராசுக்கா...திருச்சிக்கா..திருத்தணிக்கா..
ஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா...
ஒட்டு மொத்த மக்களுக்கா...
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா...

Male:
காவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
ஒஹோ...தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா? நம்ம களத்து மேடு...
கம்மாகரை கரிசகாடு..
செம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு....

ஏய்...சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி...
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி...
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி...
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி...
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி...
கடகட கடவென கடக்கிற காவிரி...
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை...
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்...
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ..)

சரணம் 1:

Male:
எலேய்...
கிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்...
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்...
கூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,
கொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்...
வெறும் காலில் செருப்பின்றி நடந்து ,
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்...
மழலைகள் ஆவோம் !

Female:
ஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்...

Male :
ஊர் ஓரம்...அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்...
( ஏய்...பல்லே லக்கா )

சரணம் 2:

Male:
ஏலேய்..லேய்..
அஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்...
அம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...

ஏலெய்..
ஆடு மாடு மேல உள்ள பாசம்..
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்...
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்..
மண்ணு எங்கும் வீசும்...

Female:
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்!

Male:
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்..
( ஏய்...பல்லே லக்கா )

10 comments:

  1. ஆழ்ந்த கருத்து, அற்புதமான வரிகள்
    :-)

    ReplyDelete
  2. இறுதியில் வரும் "cool"
    விட்டுடீங்களே !! :)

    ReplyDelete
  3. எல்லாம் முத்துகுமாரைத்தான் சேரவேணும் நாட்டாமை.

    ReplyDelete
  4. நம்ம ஊர் ரொம்ப சூடா இருக்குன்னு Cool விட்டுட்டேங்க. மறந்து போயிருச்சுங்க அனானி

    ReplyDelete
  5. நன்றி இளா..தொடரட்டும் சேவைகள்

    ReplyDelete
  6. என்ன கொடுமை சரவணன் இது! இன்னொரு கதாநாயகனப் புகழ்ச்சிப் பாட்டா! இதற்குத் திறந்தது கவிதையின் பூட்டா! :-( அய்யனாரிடம் கத்தி வாங்கிப் பென்சில் சீவனுமாக்கும்! வைரமுத்துத் தனமான வரிகள். பாட்டைப் படிக்கையில் ஒன்றும் சிறப்பாக இல்லை. ரகுமானின் இசையும் பாடகரின் குரலும் ஏதேனும் மாயம் செய்திருந்தால் பாட்டைக் கேட்கலாம்.

    ReplyDelete
  7. பாட்ட கேளுங்க ஜி.ரா அப்புறம் சொல்லுவீங்க. SPBயின் காந்த குரலும், ரகுமானின் கிராமத்து நடையும் சூப்பரு. ரஜினி வந்தா இந்தப்பாட்டுக்கு சூப்பரோ சூப்பரு. சிவாஜியில நமக்கு புடிச்ச பாட்டு இதுதாங்க.

    ReplyDelete
  8. kosu thollai thangalai pa..ivaru arasialla en poi tholaya mateindraru

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)