Thursday, April 19, 2007

போலியும் அழகே!

அழகு-இதைப்பத்தி கல்லுல இருந்து கருகமணி வரைக்கும், பக்கம் பக்கமா எழுதிட்டாங்க, நாம மட்டும் என்னாத்தைங்க எழுதறது?

காதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும். அப்புறம் அதுவே நாசமாப் போயிரும், அது வேற கதை, விடுங்க விஷயத்துக்கு வருவோம். காதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும் அப்போதாங்க "வானம், நிலா, காத்து,மனசு" அப்படின்னெல்லாம் கவிதை எழுத வரும்.

ஒத்த வரியில சொல்றதுன்னா அழகு மனசுலதாங்க இருக்கு.


மனசு சந்தோசமா இருந்தா எல்லாமே
அழகுதாங்க.

இதோட முடிச்சுககிலாந்தான். ஆனா அப்படி முடிச்சுட்டா எப்படின்னு? யாராவது கேள்வி கேட்டுட்டா? நமக்குதான் கேள்வி கேக்குறது புடிக்குமே, கேட்குறது நாமா இருந்தா மட்டும்.

இந்த அழக( பதிவைத்தான் ஆனந்த விகடன்லயா படிக்க போறாங்க, எல்லாம் நம்ம பதிவர்கள்தான். அதனால பதிவுலகில நாங்கண்ட அழகை மட்டுமே சொல்லப் போறேன். மொதல்ல நம்மள இந்த பதிவுக்கு அழகா இழுத்துவிட்ட அனுசுயாக்கிட்டே இருந்தே ஆரம்பிக்கிறேங்க


  1. அனுவின் மலர்கள் அழகு,
  2. ராசாவின் வென்னிலா கேக் அழகு,
  3. வாத்தியாரின் வளர்சிதைமாற்றம் அழகு,
  4. கொறிக்கக் கொடுத்த ஓமப்பொடி அழகு,
  5. மதியின் தமிழ் அழகு,
  6. ஜி.ராவின் சொல்வன்மை அழகு,
  7. ராமின் கைப்புள்ளைத்தனம் அழகு,
  8. கைப்புள்ளையின் குயிஜு அழகு,
  9. தேவ் செதுக்கிய ரஞ்சனா அழகு,
  10. கெளதமின் தடாலடி அழகு,
  11. பினாத்தலாரின் கனவில் வந்த தமிழ்மணம் அழகு,
  12. பிரியனின் அருகில் இல்லா பொழுதுகள் அழகு,
  13. அருட்பெருங்கோவின் கவிதைகள் எல்லாமே அழகு,
  14. நவீன் பிரகாஷின் காதல் மோகம் கொள்ளை அழகு,
  15. சிபியின் கலாய்த்தல் அழகு,
  16. போலியின் தொழில்நுட்பம் அழகு,
  17. பாலாபாரதியின் பதிவர் கூட்டம் அழகு,
  18. இட்லிவடை முந்தித் தந்த, பதிவர் கூட்டம் புகைப்படம் அழகு,
  19. விடாது கருப்பின் பெரியார் அழகு,
  20. பொன்ஸ்'ன் சந்திரா அத்தை அழகு,
  21. லிவிங் ஸ்மைலின் தீரம் அழகு,
  22. இராமநாதன் காட்டிய பூச்சி அழகு,
  23. கொத்ஸின் பின்னூட்டம் அழகு,
  24. கானா பிரபாவின் புன்னகை அழகு,
  25. துளசி அக்காவின் தில்லி அழகு,
  26. பொட்டீ கடையின் டவுசர் அழகு,
  27. லக்கியின் கலைஞர் அழகு,
  28. பங்காளி சந்தோஷின் பார் டான்ஸர் அழகு,
  29. டோண்டுவின் போண்டா அழகு,
  30. பாஸ்டன் பாலாவின் சுட்டிகள் அழகு,
  31. TBR Joseph திரும்பிப் பார்த்தால் அழகு,
  32. கோவியின் காலங்கள் அழகு,
  33. செந்தழலின் வேலை தேடல் அழகு,
  34. வெட்டியின் தூறல் அழகு,
  35. நாகை சிவாவின் கொசு அழகு,
  36. தேசிகனின் அழகே அழகு,
  37. நாட்டாமையின் பிரியாணி அழகு,
  38. சவுண்ட் பார்ட்டியின் சேட்டன் அழகு,
  39. மா.சிவக்குமாரின் நேர்த்தி அழகு,
  40. ஜெசிலாவின் குட்டிக் கவிதைகள் அழகு,
  41. கால்காரி நீமோ அழகு,
  42. உஷாவின் மாயாவும் அழகு,
  43. சர்வேசனின் வெங்காயம், உருளை, தக்காளி அழகு,
  44. எஸ்கேவின் மன்னாரு அழகு,
  45. ஷைலஜாவின் தமிழ் நடை அழகு,
  46. சிறில் கட்டிய தேன் அழகு,
  47. முகமூடியின் முள்ளம் பன்றி அழகு,
  48. நிலாவின் ஆத்தா அழகு,
  49. சின்னக்குட்டியின் ஓடும் படங்கள் அழகு,
  50. செல்லாவின் உணர்ச்சி வேகம் அழகு,
  51. கண்மணியின் அல்வா அழகு,
  52. இம்சை அரசி சமையல் அரசியானது அழகு,
  53. கார்த்திக் பிரபுவின் அத்தை பெண்கள் அழகிகள்,
  54. கப்பி மேய்த்த மாடு அழகு,
  55. நிலவு நண்பன் தூக்கம் தொலைத்த இரவுகள் அழகு,
  56. பாண்டி வடித்த ஜொள் அழகு,
  57. இராம.கியின் செந்தமிழ் அழகு,
  58. மை ஃபிரண்டின் குழந்தை மனசு அழகு,
  59. நிவேதாவின் உடைபட மறுத்த பிம்பங்கள் அழகு,
  60. மயூரேசனின் ஈழத்தமிழரைப் பற்றிய ஒலிப்பதிவு அழகு,
  61. மோஹன் தாஸ் தோற்ற காதல் அழகு,
  62. மு.கார்த்திகேயனின் பிச்சைக்காரர் அழகு,
  63. கீதா சாம்பசிவத்தின் தமிழக சுற்றுலா அழகு,
  64. ஈழ பாரதியின் போராட்டம் அழகு,
  65. பத்ரியின் உண்மை அழகு,
  66. குழலியின் மறுக்கப்பட்ட கதை அழகு,
  67. KVராஜாவின் கொஸப்பேட்டை அழகு,
  68. ஆசிப் மீரான் ஆடிய கிரிக்கெட் அழகு,
  69. தூயா வேண்டிய சிறகுகளும், பெரிய்ய்ய்ய தலைப்புகளும் அழகு,
  70. KRS'ன் கண்ணன் பாட்டுக்கள் அழகு,
  71. சுடுவனம் நித்தியா வருடிய நினைவுகள் அழகு,
  72. வரவனையின் சொந்த செலவில் சூன்யம் அழகு,
  73. நான் தினமும் உழும் முகுந்தனின் இ-கலைப்பை அழகு,
  74. கல்யாண் கட்டிய தேன்கூடு அழகு,
  75. காசி அண்ணன் பரப்பிய தமிழ்மணம் ரொம்ப அழகு,
  76. கடைசியாக என்னுள் நான் அழகு....

மேற்சொன்ன அனைத்து அழகுகளுமே எதையும் தேடாமல் என்னோட மனசுல இருந்ததுங்க. சிலது விடுபட்டு இருந்தா அடுத்த வாட்டி பார்த்துக்கலாம். அந்தந்த பதிவர்கள் சுட்டிகளை பின்னூட்டத்துல குடுத்தீங்கன்னா நல்லா இருப்பீங்க சாமி.

யாரோ 3 பேரை கூப்பிடனுமாமே அந்த 3 பேர் இவுங்கதான். முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.

1. Bill Gates

2. George W Bush

3. Tony Blair

யாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கனும்னு ஐயன் சொன்னதுங்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

39 comments:

  1. தெய்வமே!!!

    இவ்வளவு ஞாபகம் வெச்சிருக்கீங்களா???

    நீங்க சொன்ன எல்லாமே அழகு தான் :-)

    ReplyDelete
  2. //மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும் அப்போதாங்க "வானம், நிலா, காத்து,மனசு" அப்படின்னெல்லாம் கவிதை எழுத வரும்.//

    அப்போ ஏன் நிறையா பேரு அளுவாச்சி கவுஜ எழுதறாங்க?


    //கொத்ஸின் பின்னூட்டம் அழகு//

    அப்போ என் பதிவுகள் அழகா இல்லையா? என்னய்யா சொல்ல வறீரு?

    //1. Bill Gates2. George W Bush3. Tony Blair//

    இவங்களும் தமிழ்மணம் வந்தாச்சா? பார்த்து இவங்களுக்கு ரூல்ஸ் எல்லாம் ஒழுங்கா சொல்லிக் குடுத்துடு. அப்புறம் முத்திரை, ப்ரொபைலிங் எல்லாம் நடக்கப் போவுது. பாவம் பசங்க.

    ReplyDelete
  3. //நாகை சிவாவின் கொசு அழகு,//

    நம்ம பெயர போட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்.... ஆனா உங்களுக்கு இந்த கொசு தான் அழகா தெரிந்த்தா?

    ReplyDelete
  4. என்னோட உப்புமாவை மறந்திட்டீங்களே.

    நாந்தான் பர்ஸ்ட்.

    ReplyDelete
  5. //முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.1. Bill Gates2. George W Bush3. Tony Blair//

    யோவ்வ்வ்வ்வ்வ் உன்னைய எல்லாம். வயசுல பெரியவருனு பாக்குறேன்.... நான் கிளம்புறேன்...

    ReplyDelete
  6. //யாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கனும்னு ஐயன் சொன்னதுங்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை //

    இதுக்கு மட்டும் உங்க ஐயன் ஞாபகம் வரும்... வேணாம்.... விடுங்க...

    ReplyDelete
  7. எல்லாமே அதி சூப்பர் அழகுகள்!!!

    //என்னோட உப்புமாவை மறந்திட்டீங்களே.

    நாந்தான் பர்ஸ்ட்.//

    பெருசு எதுலே பர்ஸ்ட்? உப்புமா துன்றதுலேயா? :-))))

    ReplyDelete
  8. விவசாயி யின் டிராக்டர் அழகு !
    :)

    ReplyDelete
  9. இன்னாப்பா! ஆருமே இதுவரைக்கும் கண்டுக்காத நம்மளைக் கண்டுக்கினு அளகுன்னு வேற சொல்லிட்டே!

    மன்ஸைத் தொட்டுட்டேப்பா!

    நல்லாரு!

    ReplyDelete
  10. //விடாது கருப்பின் பெரியார் அழகு,//

    இதான்யா. இதைத்தான்யா ரொம்ப பிடிக்குது எனக்கு.

    வேற வேற இடத்தில் இருந்தாலும் என்னையும் மறக்காம இருக்கீங்க பாருங்க. அங்கேதாங்க நீங்க நிக்கிறீங்க!!!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //1. Bill Gates

    2. George W Bush

    3. Tony Blair

    //

    ஊர் குசும்பு???

    சேட்டனை நானே மறந்துட்டேன்... முதல்ல அவருக்கு ஒரு கால் பண்ணறேன். ஞாபகப் படுத்தியதற்க்கு நன்றியோ நன்றி!!!

    ReplyDelete
  12. //மை ஃபிரண்டின் குழந்தை மனசு அழகு,//

    விவசாயி ஐயா,

    என்னையும் ஞாபகம் வச்சி உங்க அழகுல சேர்த்திருக்குறீங்க. அதுவும் அழகு. :-)

    ReplyDelete
  13. ஆமா.. இத்தனையும் உங்க ஞாபக சக்தியினால் தோன்றியதா? இல்லை கூகல் ஆண்டவர் உதவியதா???

    இத்தனை விஷயங்களை நீங்கள் எழுதியதை பார்க்கவே வியப்பா இருக்கு! ;-)

    ReplyDelete
  14. waw super alagu. Nalla thoguppu. ana //முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.1. Bill Gates2. George W Bush3. Tony lair//
    unga kurumbu romba romba alagungo :)))

    ReplyDelete
  15. இளா! நம்மளையும் சேத்துக்கோங்க...இப்பத்தான் புதுசா வந்திருக்கேன்......

    ReplyDelete
  16. இளா, என் ப்ளொக் படிப்பிங்களா? :) பெரியதலைப்பிற்கு பின்னர் ஒரு கதை இருக்கு..ஹி ஹி ஹி
    நன்றி...எங்களை இப்படி அழகாக்கிய உங்கள் மனமும் கொள்ளை அழகு

    ReplyDelete
  17. பெருசு: ரொம்ப நாளா உங்க பதிவை படிக்கலைங்க, அதான் மறந்துட்டேன். அடுத்த முறை கீய்ச்சுடலாம் விடுங்க.

    //அப்போ என் பதிவுகள் அழகா இல்லையா? என்னய்யா சொல்ல வறீரு? //
    கொத்ஸ்: பதிவை விட நீங்க போடுற முதல் பின்னூட்டதுல ஒரு செம குத்து/கருத்து இருக்கும்

    விடாது கருப்பு,VSK,கோவி,வெட்டி,உதய்,: நன்றிங்க

    //ஆனா உங்களுக்கு இந்த கொசு தான் அழகா தெரிந்த்தா?//
    புலி: எது அழகோ அதைத்தான் எழுதி இருக்கோம்.

    மை ஃபிரண்ட்: கூகிள் ஆண்டவரெல்லாம் இல்லீங்க. எல்லாம் ஞாபக சக்திதான்.

    ReplyDelete
  18. விவசாயிக்கு பயிரோடு களையும் ஒரு அழகுதான்.
    அது மாதிரி வாலிபக்கூட்டத்தோட நம்மளையும் சேர்த்ததுக்கு நன்றியா அம்புஜம் மாமிகிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு கிலோவும்,வ.வா.ச.க்கு நாலு கிலோவும் அல்வா ரெடி பண்ண சொல்லியிருக்கேன்.

    ReplyDelete
  19. பதிவிற்கு என் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன்..

    ReplyDelete
  20. இந்த அழகுகள படிச்சு முடிக்கறுதுக்கள மூச்சு முட்டிடுச்சு...எப்புடித்தான் இத்தன பேர ஞாபகம் வெச்சு எழுதினீங்களோ..அதுதான் அழகிலும் அழகு :-)

    ReplyDelete
  21. //மனசு சந்தோசமா இருந்தா எல்லாமே அழகுதாங்க //

    அது மேட்டரு :-)

    ReplyDelete
  22. வெவசாயின்னு நிரூபிச்சிட்டீரு. இந்தன வகையான பயிர்களைப் பத்தி விலாவாரியாச் சொல்லி.....தளைச்சத்து...சாம்பல்சத்து...சுண்ணாம்புச்சத்துன்னு பிரிச்சி மேயிறீங்களேய்யா! அழகுதாம் போங்க.

    நம்மளும் அழகு பத்தி பதிவு போட்டிருக்கோம்ல. இங்ஙன பாருங்க.

    ReplyDelete
  23. @கண்மணி said...

    //அது மாதிரி வாலிபக்கூட்டத்தோட நம்மளையும் சேர்த்ததுக்கு நன்றியா அம்புஜம் மாமிகிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு கிலோவும்,வ.வா.ச.க்கு நாலு கிலோவும் அல்வா ரெடி பண்ண சொல்லியிருக்கேன். //

    அக்கா.. வேணும்ன்னா சொல்லுங்க.. உங்களை வாலிப கூட்டத்துல சேர்த்துக்கலாம்.. ஆனா விவாக்கும் சங்கத்துக்கும் அம்புஜம் மாமியோட அல்வா லஞ்சமா கொடுத்து ஆஸ்பத்திரியில சேர்க்க ப்ளான் போடுவது தெரிஞ்சு போச்சுக்கா.. தெரிஞ்சு போச்சு!

    CID அபி அப்பாதான் என் கிட்ட இந்த மேட்டரை பத்தி சொல்லி அனுப்பி வைத்தார். ;-)

    ReplyDelete
  24. ஏ....ய்....அ...ப்...பா....
    கலக்கீட்டீங்க, இளா!

    ReplyDelete
  25. பங்காளியின் ஞாபசக்தி அழகானது. எனக்கே ஒரு சந்தேகம் அதுல இருப்பது நம்ம பேரா அப்படின்னு. கலக்கல் பதிவு இளா.

    //2. George W Bush3. Tony Blair//

    இவங்க வந்தா "war on terroism" ஆரம்பிச்சிடுவாங்களே.

    //மை ஃபிரண்ட்: கூகிள் ஆண்டவரெல்லாம் இல்லீங்க. எல்லாம் ஞாபக சக்திதான்.//
    ஆனாலும் அநியாயத்துக்கு இருக்குப்பா நியாபக சக்தி.

    ReplyDelete
  26. இளா,

    உம்ம அழகை நான் சொல்ல வாய்ப்பு கொடுங்க..

    ஒரு பக்கத்தில் 100 வாழ்க்கைய ரசனையாய் எடுத்துரைத்த "காலதேவனை வேண்டியபடி" அழகோ அழகு! :)

    ReplyDelete
  27. //விவசாயிக்கு பயிரோடு களையும் ஒரு அழகுதான்.
    அது மாதிரி வாலிபக்கூட்டத்தோட நம்மளையும் சேர்த்ததுக்கு நன்றியா அம்புஜம் மாமிகிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு கிலோவும்,வ.வா.ச.க்கு நாலு கிலோவும் அல்வா ரெடி பண்ண சொல்லியிருக்கேன்.//
    கண்மணியக்கா ஏன் பசங்க மேல ஒரு கொலை வெறி. நீங்களும் அந்த அல்வாவை எப்படியாவது காலி பண்ண பாக்குறீங்க முடியலை.

    ReplyDelete
  28. ////முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.1. Bill Gates2. George W Bush3. Tony Blair//

    உங்களுக்கு குசும்பு ஜஸ்தின்னு ஏன் சொல்லுறாங்கன்னு இப்போதான் புரியுது

    ReplyDelete
  29. இளா,

    என் கமெண்ட்டு எங்கய்யா போச்சு?

    சரி... உம்மைப்பற்றிய அழகை சொல்லறதுக்கு எனக்கு வாய்ப்பு கொடுங்க...

    ஒரு பக்க கவிதையில் ஒரு நூற்றாண்டுக்கான வாழ்வை ரசனையோடு சொன்ன "காலதேவனை வேண்டியபடி" அழகோ அழகு!

    ReplyDelete
  30. //பொட்டீ கடையின் டவுசர் அழகு//

    புரியலையே...????:))

    ReplyDelete
  31. பெரிய பட்டியல் தான் ஐயா உம்முடையது. :-)

    ReplyDelete
  32. //மேற்சொன்ன அனைத்து அழகுகளுமே எதையும் தேடாமல் என்னோட மனசுல இருந்ததுங்க.//

    இத்தனையும் ஞாபகம் வைத்து எழுதிய அழகே அழகு!

    //கடைசியாக என்னுள் நான் அழகு//

    இது ரொம்ப அழகுங்க!

    //யாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கனும்னு ஐயன் சொன்னதுங்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை //

    குசும்பு, huh?

    ReplyDelete
  33. ////கொத்ஸின் பின்னூட்டம் அழகு//

    அப்போ என் பதிவுகள் அழகா இல்லையா? என்னய்யா சொல்ல வறீரு? //

    கொத்ஸ்! அவர் என்ன சொல்ல வர்ரார்ன்னா...வேனாம் எதுக்கு வம்பு:-))


    அழகு பதிவு விவசாயி:-))

    ReplyDelete
  34. //உம்ம அழகை நான் சொல்ல வாய்ப்பு கொடுங்க..

    ஒரு பக்கத்தில் 100 வாழ்க்கைய ரசனையாய் எடுத்துரைத்த "காலதேவனை வேண்டியபடி" அழகோ அழகு! :) //

    நன்றி ஆசானே. ஆனா நீங்கதான் எழுதறதையே காணோம். ஏன்? என்னாச்சு?

    ReplyDelete
  35. neengal kuripitta athanaium azhagu
    ungalin neenda pattiyalum azhagu
    yennul nan azhagu
    yendra ungal azhagana thimirum
    azhgu

    ReplyDelete
  36. இன்னைக்குதாம்ப்பா இதப் பாக்குறேன்... :)))

    /யாரோ 3 பேரை கூப்பிடனுமாமே அந்த 3 பேர் இவுங்கதான். முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.

    1. Bill Gates

    2. George W Bush

    3. Tony Blair

    யாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கனும்னு ஐயன் சொன்னதுங்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை/

    ஒங்களோட இந்த குசும்பும் அழகுதேன்... ;)

    ReplyDelete
  37. பதிவிலே மனதை வைத்து
    அதற்காக விடாமல் படித்து
    பதிவினிலே முத்து எடுத்து
    வழங்கும் குணமுடையோன் விவசாயீ

    ReplyDelete

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)