கொஞ்சம் பெரிய பதிவு, வேலையிருந்தா போய் அதைப் பாருங்க.இதைப் படிக்க ரொம்ம்ம்ப நேரம் ஆகலாம்.
2008ல், BlogOGraphy பதிவுகளின் மூலம் சுமாராக 3 மாதம் காலம் கொந்தளித்தது பதிவுலகம். அந்த நிம்மதியைக் கெடுத்தப் பழி என்மீதுதான் இருந்தது. அப்ப செய்த முடிவுதான் இனிமே பதிவுலகம் சார்ந்து எழுதுவது இல்லையென முடிவெடுத்தேன், இதுவரை கடைபிடித்தும் வருகிறேன். சரி, விசயத்துக்கு வருவோம்.
2010-11லியே எழுதவேண்டிய பதிவு ஒன்னு இருந்துச்சு. அதை சுருக்கமா சொல்லிடறேன். பத்திரிக்கைகளில் சில பக்கங்களைப் படித்துவிட்டு சிலரை கண்டிப்பா சந்திக்க வேண்டும் என்று நினைக்கிற சிலரை பட்டியலில் வெச்சிருந்தேன். அது 1) விகடன் - மூங்கில் மூச்சு - சுகா 2) விகடன் - ஓவியர் - இளையராஜா 3) துணுக்கு எழுத்தாளர் சி.பி. செந்தில்குமார்.
முதல் இருக்கிற ரெண்டுபேரைப் பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போம், சி.பி. செந்தில்குமாரை (இனிமே சி.பி) பத்தி மட்டும் இப்போ. பல பத்திரிக்கை நகைச்சுவைத்துணுக்குகள் படிச்சவுடனே சிரிச்சிருக்கேன். யாரு எழுதினதுன்னு பார்த்தா அது சென்னிமலை சி.பி.செந்தில்குமார் என்று இருக்கும். அவரை சந்திக்கனும் முகவரி வேணும் அப்படின்னு சில பத்திரிக்கைகளுக்கு கடுதாசி போட்டுமிருக்கேன். [பதில் வரலைங்கிறது வேற விசயம்]
அப்புறமா பதிவுலகுல அவரைப் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டு பின்னூட்டம் எல்லாம் கூட போட்டேன். அப்போ அவர் அலைபேசி எண்ணை எல்லாம் பதிவுல போடலை. நாமளும் தூரமா இருந்ததால ஊருக்குப் போவும்போது பார்த்து பேசிக்கலாம்னு விட்டுட்டேன். ஆரம்பத்துல இப்படியில்லை, கொஞ்சம் நாகரிகமான படங்களையே ரெண்டு மாசமா போட்டுகிட்டிருந்தாரு. உதாரணத்துக்கு ஒன்னு ரெண்டு இங்கே..
[ 1 ]
[ 2 ]
என்னுடைய (அடுத்த) குறும்படத்துக்கு வசனம் எழுத பேச்சு வந்தபோது பாஸ்டன் ஸ்ரீராமிடம் நான் பரிந்துரைத்த முதல் ஆள் இந்த சி.பி. தான். வ.வா.சங்கத்துல அட்லாஸா கூப்பிடலாமெனவும் சி.பி. செந்திலை ஒரு மரியாதையுடன் வைத்திருந்தேன்.
அப்புறமா அண்ணன் அடிச்சாரு ஒரு U turn. தொப்புளையும், மாரையும் இருக்கிற படங்களை கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து பத்திரிக்கைகள் நிராகரிச்ச அத்தனை துணுக்குகளையும் போட ஆரம்பிச்சாரு. தரம் குறைஞ்சதாலதான் பத்திரிக்கைகள் நிராகரிக்குது, அதை பதிவுல போட்டு ஹிட் கணக்கை ஏத்த ஆரம்பிச்சாரு. அப்புறமா என்னடா மானசீகமா புடிச்சவரு இப்படி பண்றாரேன்னு மனசுக்கு வருத்தமா இருந்துச்சு. அப்புறம் அவருடைய பதிவுகளை படிக்கிறதை நிறுத்திட்டேன். அவரோட வாசகர் வட்டம் வேற பெரிய லெவல்ல இருந்தாங்க. சரி, அவரோட கும்பல் பெரிய இலக்கியவாதிங்க, அப்படின்னு அவர் பதிவுகளை பார்க்கிறதையே விட்டுட்டேன். அதுக்கான ஒரு சின்ன உதாரணம் இது. இவரு பழுத்த மரமாம் அடிக்கிறாங்களாம், இவுங்க வாசகர்கள் கும்முறாங்க. நன்றி, வாசகர்களே, பழுத்த மரம் மட்டுமில்லை புழுத்த மரம்கூட அடிதான் வாங்க செய்யும்.

அதுவுமில்லாம ஈரோடு சங்கமம் குழுவுக்கும் இவருக்கும் ஆகலை. சரி, இவரு எதுக்கு சரிப்பட மாட்டாருன்னு முடிவு அதாவது உண்மையான குழுவா இருக்க இவருக்கு விருப்பமில்லை, புகழ்ச்சிக்கு மயங்குற ஆள்னு அப்பவே தெரிஞ்சிபோச்சு. 2010ல இந்தியாவுக்குப் போனபோதும், 2011ல் போன போதும் நான் அவரை கூப்பிடவுமில்லை, விருப்பமுமில்லை.
டிவிட்டர்ல, சி.பி. யோட நடவடிக்கைகள் வேற மாதிரி, அதாவது கொஞ்சம் நாகரிகமாகவும் இருந்துச்சு. சரின்னு அவரை தொடர ஆரம்பித்தேன். நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. அப்பத்தான் சென்னை TNMegaTweetup ஆரம்பிச்சது, நடந்துச்சு, முடிஞ்சது. அதுவரைக்கும் எனக்கும் அவருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. பிறகு அவர் ஒரு ட்விட்டர் பெண்ணோட படத்தை அவருடைய பதிவுல இணைச்சிக்கிறதுக்காக கேட்டிருக்காரு. அந்தப் பெண் சொன்னது “ஒரு குறிப்பிட்ட”, அதாவது ஒரே ஒரு குறிப்பிட்ட படத்தை மட்டும் எடுத்து உபயோகிக்க அனுமதி கொடுத்திருக்காங்க. அந்தப் பெண் சென்னை ட்விட் சந்திப்புக்கு எல்லாம் வரலை, இதுதான் உண்மை.
சி.பி. செந்தில்குமார், அந்தப் பெண்ணின் படங்களை எடுத்து பதிவு முழுக்க ரொப்பிட்டாரு. சரி, தொடையும், தொப்புளும் இருக்கிற படங்களா இணையத்துல தேடி எடுத்துட்டு வருகிறவருக்கு, ஒரு இடத்துல இருந்து படங்கள் கிடைச்சா சும்மா விடுவாரா? படங்களை எடுத்து தன்னோட பதிவுக்கு இஷ்டம் போல பயன்படுத்திக்கிட்டாரு. இதைப் பார்த்த அந்தப் பெண்ணோட நண்பர்,(நானும் அவுங்க குடும்ப உறுப்பினர் என்கிறது வேற கதை) அவுங்க வீட்டுக்குச் சொல்ல, அது என் காதுக்கு வந்ததும், முதலில் படங்களை அந்தப் பெண்ணை விட்டே எடுக்கச் சொன்னேன், சி.பி. செந்தில்குமாரும், முதல்ல ரெண்டு படங்களை எடுத்தாரு, பிறகு எல்லாப் படங்களையும் எடுத்துட்டாரு. சரி, சொன்னதும் எடுத்துட்டாரேன்னு அவருக்கு நன்றி சொல்லி ஒரு ட்விட் கூட போட்டேன். பதில் மரியாதை செய்யனும்னு கூட அண்ணனுக்குத் தெரியலை. சரி, அவருக்குத் தெரிந்த மரியாதை அவ்வளவுதான்னு நினைச்சிட்டு விட்டுடேன்.
அடுத்த நாள்ல எனக்கும் அந்தப் பொண்ணுக்குமான சண்டை ட்விட்டர்ல நடந்துச்சு. (எங்களுக்கு இடையேயான சண்டையில் இவருடைய பதிவுகளைப் பத்தியதாக மட்டுமே இருந்ததே ஒழிய, இவரை எந்த இடத்திலும் கேள்வி கேட்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை). http://www.adrasaka.com/2012/05/6.html இதுல முதல் 5 , எனக்கும் அந்தப் பெண்ணுக்குமான உரையாடல். நாங்க பேசிக்கிட்டதை எடுத்துப்போட உனக்கு யாருய்யா உரிமை குடுத்தது?(ஒருமைக்கு மன்னிக்கவும்) நான் எடுத்துக்கச் சொன்னேனா?
மேலே இருக்கும் படத்துல, உரையாடலை உங்கப் பதிவுல சேர்த்துக்க நான் ஒப்புதல் தரவே இல்லை.
அதுவுமில்லாம என்னைக் கேள்வி கேட்குறாராம். நீ யாரு எங்களுக்கு நடந்த உரையாடல்ல கேள்வி கேட்குறது? ட்விட்டுல பேசினா அங்கேயே பேசிக்க வேண்டியதுதானே? அது பதிவுக்கு எதுக்கு வருது? உங்களுக்கு பதிவு வேணுமின்னா வேற எதையாவது செஞ்சிக்குங்க. அங்கே நடக்கிறதை, இங்கே சொல்ற பழக்க தரமானதா? உங்க மரியாதை அங்கேயே கெட்டுருச்சு.
789 பதிவுல அவரோட குடும்பத்து படம் போட்டாராம், 1000 பதிவுல அவுங்க அம்மா படம் போட்டாராம், நடுவுல இருந்த 200 பதிவுகள்ல நடிகைங்கதானே மாரையும் தொப்புளையும் காட்டிகிட்டு இருந்தாங்க, சரி, விடுங்க அவரோட பதிவு, கந்தசஷ்டி பதிவுதான் நாம கேள்வி கேட்கக்கூடாது, சாமி கண்ணைக் குத்திருமில்லை?
சி.பி. செந்தில்குமார், எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடந்த உரையாடலைத்தான் தன்னுடைய பதிவுகள்ல போட்டுக்கிட்டாரு. அதுவும் எப்படி இருண்ட பக்கங்களாம்? நீங்க வந்து பார்த்தீங்களா சார்? பொதுவா பேசிக்கிட்டிருக்கிறதை இவர் சொல்றாரு, இருண்ட பக்கங்களாம். இவரு, ட்விட்டர்ல இருக்கிற பெண்களையே ஃபிகருன்னுதான் மருவாதையா சொல்லுவாரு. அப்படிப்பட்டவரு, எங்களோட இருண்ட பக்கங்களை பார்த்தாராம். கேள்வி கேட்கிறாராம். என்ன கொடுமை சார் இது?
அவரு என்னைக் கேள்வி கேட்கிறாரு, அக்கா, தங்கை படங்களைப் போட்டிருந்தா இப்படி கேள்வி கேட்பீங்களான்னு. நான் கேட்கிறேன். உங்களோட குடும்பத்துல இருக்கிறவஙக் படத்தை அப்படி அலங்காரம் பண்ணுவீங்களா? இந்தக் கோவத்தை எல்லாம் மனசுல வெச்சிக்கிட்டுதான் மரியாதையா படத்தை எடுக்கவும் சொன்னேன். எடுத்ததுக்கு நன்றியும் சொன்னேன்.
இவரு பண்ணினதுக்கு போன் பண்ணி பேசனுமாம்? அந்தளவுக்கான மரியாதை எல்லாம் இப்ப இல்லை, என்னிக்கு ட்விட்டர்ல பேசிக்கிட்டதை பதிவா போட்டு 4 பேருக்கு தெரியனும்னு நினைச்சிங்களோ அன்னிக்கே உங்க தரம் தாழ்ந்து போயிடுச்சு. விகடன் பத்திர்க்கையையும் உங்கப் பதிவையும் ஒப்பீடு பண்ணிக்காதீங்க, விகடன் இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அளவுக்கு வரலை.
உரையாடலில் நீங்க சம்பந்தப்பட்டுத்தான் இருக்கீங்க. ஆனா, அதுல வந்த கேள்விகள் எல்லாம் உங்களைக்கேட்டது இல்லை. நம்மூர்ல சொல்ற மாதிரி சம்மன் இல்லாம ஆஜர் ஆகாதீங்க. அப்புறம் பதிவு போட்டு என்னிடத்தில் கேள்வி கேட்குறது , பதில் சொல்றது எல்லாம் இதோட நிறுத்திக்கொள்வது நலம். அந்தக் கட்டத்தை எல்லாம் நான் எப்பவோ கடந்துட்டேன்.
உங்களுக்குன்னு ஒரு தரமிருக்கு செந்தில் சார், அதை இன்னும் கெடுத்துக்காதீங்க....