Thursday, June 21, 2012

'மாம்ஸ்' பாலபாரதி-1

கார்ட்டூனிஸ்ட் பாலா அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்திருந்தது. அவருடைய அனுமதியுடன், பா. க.ச மக்களுக்காக இங்கே பகிர்கிறேன். 


`பாலபாரதி’ என்ற அந்த மனிதனை நான் சந்தித்த அந்த தினம் என் வாழ்வை இப்படி திசை திருப்பிவிடும் என்று நான் அப்போது நினைத்திருக்க வில்லை.

அப்போது மும்பையில் `சார்ட்டர்ட் அக்கவுண்டனிடம்’ உதவியாளனாக வேலைப்பார்த்துக்கொண்டிருந்தேன். மும்பையிலிருந்து வெளிவந்த `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் கதைகள், கட்டுரைகள், அவற்றிற்கு நானே ஓவியங்கள் என்ற பெயரில் நான் செய்து கொண்டிருந்த காமெடிகளைப் பார்த்து பாலபாரதி கடுப்பாகியிருக்க வேண்டும். ஒரு நாள் எனது அலுவலக எண்ணை கண்டுபிடித்து பேசி ஒரு ஞாயிறன்று `பஞ்சாயத்துக்கு’ ஏற்பாடு செய்யப்பட்டது.

மாட்டுங்காவில் இருக்கும் மகேஸ்வரி பூங்கா தான் மீட்டிங்க் ஸ்பாட். அப்போதெல்லாம் எந்த அரசியல் பார்வையும் எனக்கு கிடையாது (இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. :)) . சுபா-வின் `நரேன் - வைஜெயந்தி’யிடமும், ராஜேஸ்குமாரின் `விவேக் - ரூபாலா’விடமும் கிறங்கிப்போய் கிடந்தேன். அந்த பாதிப்பில் இந்தியாவின் முப்படைகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து உயிரைக்கொடுத்தாவது இந்த தேசத்தை காப்பாற்றியாக( :)) வேண்டும் என்று படு கோயிந்தாக சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் அவை.



மகேஸ்வரி பூங்கா வாசலில் காத்துக்கொண்டிருந்தேன். பாலபாரதி வந்தார். உடன் மதியழகன் சுப்பையா, நாசர் அலி, ராஜா முகமது, ராஜாசாமி என்று ஒரு படையும் வந்தது. . என்னை அடையாளம் கண்டவுடன் நீண்ட நாள் பழகிய நண்பனிடம் பேசுவது போல் தோள் மீது கை போட்டு ஒரு அணைப்புடன் பேச ஆரம்பித்தார்.
உயரமும், தாடியும் பார்க்க ஒரு நக்சலைட் ( எல்லாம் தமிழ் சினிமா பண்ற வேலை தான் ) போலிருந்தார். கூட ஒரு குருப்பு வேறயா.. எனக்கு கொஞ்சம் சந்தேகமும் கூட.. `ஒருவேள தீவிரவாத குருப்பா இருப்பானுவலோ..’ என்று முப்படை மூளை யோசித்தது.

``எல்லாரும் பாக்க தீவிரவாதிங்க மாதிரியே இருக்கீங்க” என்று அதை நேராக அவரிடம் சொல்லியும் விட்டேன்.. பூங்கா அதிர சிரித்தவர் அதன் பிறகு பேசப்பேச பிடித்துப்போனது. `உங்கள் ஜூனியர்’ மாதிரி நாவல்கள் படித்தவனுக்கு அப்போது அவர் பேசும் சித்தாந்த கருத்துகள் பெரிய புரட்சியாக தெரிந்தது.

ஓவியங்கள் என்ற பெயரில் நான் கிறுக்கியிருந்த நோட்டுப்புத்தகம் ஒன்றை கொண்டுப் போயிருந்தேன். பார்த்துவிட்டு ``உனக்கு ஓவியமே வரையத்தெரியலையே’’ என்றவரை குழப்பத்துடன் பார்த்தேன். ``நீ பேசாம கார்ட்டூனிஸ்ட் ஆகிரு. உன் கோடு அதுக்கு தான் செட் ஆகுது. அரசியல் கார்ட்டூன் போடுற ஆளுக இன்னைக்கு இந்தியால ரொம்ப குறைவு. நீ முயற்சி செஞ்சேனா கார்ட்டூனிஸ்ட் ஆகிரலாம்’’ என்று பாலபாரதி சொல்ல சொல்ல நான் கார்ட்டூனிஸ்ட் ஆகிக்கொண்டிருந்தேன்.
அன்று இரவு தூங்குவதற்கு முன் முடிவு செய்தேன் ``நாம கார்ட்டூனிஸ்ட் ஆகுறோம்டா..” என்று.

அதன் பிறகு எல்லோருமே என் கண்ணுக்கு கார்ட்டூன்களாகவே தெரிய ஆரம்பித்தார்கள். விசுவின் `அரட்டை அரங்கம்’ பார்க்கும் கோயிந்தாக இருந்தவன் எப்போதும் செய்தி சேனல் பார்க்க ஆரம்பித்தேன். வரைய வரைய கோடுகள் கொஞ்சம் வசப்படுவது போலிருந்தது. ஆனால் பாலபாரதியும் மதியழகன் சுப்பையாவும் எப்போதும் எனது கார்ட்டூனை விமர்சித்துக்கொண்டே இருப்பார்கள். அப்போது கடுப்பாகத்தான் இருக்கும். அந்த கோபத்தில் வீட்டுக்குப்போய் கோடுகளிடம் சண்டைப் போடுவேன்.. ( இன்னும் கோடுகளை வசப்படுத்த சண்டைப்போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். )


சென்னைக்கு நான் முதலில் வந்தேன். பின்னாடியே அவரும் வந்தார். எனது குடும்பத்தின் நல்லது கெட்டது எல்லாம் அறிந்தவர். என் திருமணம் வரை சென்னையில் இருவரும் ஒரே வீட்டில் தான் இருந்தோம். இயல்பாக யாருடனும் உடனடியாக நண்பராகும் திறமை கொண்டவர். அதிகமாக பேசுவார். சிபிஎம் கட்சி ஆதரவு நிலையில் இயங்கியவர் என்பதால் அந்த கட்சிக்கேயுரிய சித்தாந்த காமெடி குழப்பங்களும் இருந்ததுண்டு. பிற்பாடு இருவரது வாசிப்புத்தளமும் மாற ஆரம்பித்தப் பிறகு முன்பு இருவரும் எவ்வளவு கோயிந்தாக இருந்திருக்கிறோம் என்பதை பேசி வயிறுவலிக்க சிரித்திருக்கிறோம்.

இருவருக்குமிடையில் கருத்தியல் ரீதியான மோதல்கள் வருவதுண்டு. ஆனாலும் எங்கள் நட்பு தொடரும்.. இந்த கோடுகளை எனக்கு சொந்தமாக்கி கொடுத்ததற்கு நன்றி சொல்லி முடிக்க மாட்டேன் பாலபாரதி.. :)



மூலம்/நன்றி : 'கார்ட்டூனிஸ்ட்' பாலா https://www.facebook.com/#!/photo.php?fbid=3330670231910&set=p.3330670231910&type=1

Wednesday, June 20, 2012

நிஜக்காதலன் என்றால் என்ன செய்யனும்? @vivaji

  • நல்ல காலங்களில் கவனிப்பாரற்று கிடக்கும், கஷ்டம் காலம் வந்தவுடனே தூசி தட்டி எடுத்துவிடுகிறோம் - ஜாதங்களை

  • நீங்க பிடிக்கும் சிகரெட், உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு #சுட்டது

  • Twitterல எப்பவுமே இருக்கிறவங்க ரொம்ப நேரமா இல்லைன்னா, காரணம் 1) Chat 2) Phone 3) DM  4) பூரிக்கட்டையால் அடி வாங்கியிருப்பாங்க

  • விலையில்லா’வுக்கும், இலவசத்துக்கு என்ன வித்தியாசம் தெரியுமா? ஆட்சிதான்


அடுத்தவர்களின் உணர்வுகளை எப்படி விற்பதென நன்றாக அறிந்து வைத்திருக்கிறது விஜய் டிவி, ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக.



  • நித்தியானந்தாவின் ஆண்டு சம்பாத்தியம் ரூ.90 கோடி #நான் அப்பவே சொன்னேன், எங்கப்பாதான் கேட்காம எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு

  • என்ன விலையேத்தினாலும் போராடத் திராணியில்லாத ஒரே கூட்டம், குடிகார கூட்டம்தான் #பீர் விலை சுமார் பத்து ரூபாய் வரை உயர்வு

  • மன்மதன் கடவுளாக போற்றப்படவேயில்லை. அதனால அவர் விட்ட சாபம்தாண்டா நீங்க எல்லாம் இப்படி அலையறீங்க.

  • பெண்களைப் போல, ஆண்களால் காதலிக்க முடியாது. அதே போல ஆண்களைப் போல, பெண்களால் நட்பு பாராட்டமுடியாது

  • புகையை விடமாட்டேன் என பிடிவா- ’தம்’ பிடிக்காதீர்கள் - இரண்டு வாக்கியங்கள் - ஒரே அர்த்தம்

  • காதல், கல்யாணத்துக்கு முன் அது கவிதை, பிறகு கட்டுரை. சிலருக்கோ, முடிவுரை.

  • தன் தந்தையை, கணவனிடம் எதிர்பார்ப்பது அறிவிலி மனைவிகள் செய்யும் முதல் வேலை

100வது முறையாக காதலி சொல்லும் சம்பவத்தை, முதன்முறை கேட்பது போல் ஆச்சர்யத்துடன் கண்களின் விரித்து கேட்பவனே நிஜக்காதலன்

[தலைப்புக்கு வந்துட்டோமா?]

  • Cinema இண்டஸ்ரியில் “சார்” என்று அழைக்கும் மரபு மாறி வருகிறது. இப்பவெல்லாம் ”Bro” :)

  • கோழி என்னதான் பெரிய படிப்பாளியாய் இருந்தாலும், முட்டைதான் போடும். (100/100) எல்லாம் போடாது


மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க, இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்

Monday, June 4, 2012

தரம் கெட்ட சி.பி. செந்தில்குமார்

கொஞ்சம் பெரிய பதிவு, வேலையிருந்தா போய் அதைப் பாருங்க.இதைப் படிக்க ரொம்ம்ம்ப நேரம் ஆகலாம். 

2008ல், BlogOGraphy பதிவுகளின் மூலம் சுமாராக 3 மாதம் காலம் கொந்தளித்தது பதிவுலகம். அந்த நிம்மதியைக் கெடுத்தப் பழி என்மீதுதான் இருந்தது. அப்ப செய்த முடிவுதான் இனிமே பதிவுலகம் சார்ந்து எழுதுவது இல்லையென முடிவெடுத்தேன், இதுவரை கடைபிடித்தும் வருகிறேன். சரி, விசயத்துக்கு வருவோம்.

2010-11லியே எழுதவேண்டிய பதிவு ஒன்னு இருந்துச்சு. அதை சுருக்கமா  சொல்லிடறேன். பத்திரிக்கைகளில் சில பக்கங்களைப் படித்துவிட்டு சிலரை கண்டிப்பா சந்திக்க வேண்டும் என்று நினைக்கிற சிலரை பட்டியலில் வெச்சிருந்தேன். அது 1) விகடன் - மூங்கில் மூச்சு - சுகா 2) விகடன் - ஓவியர் - இளையராஜா 3) துணுக்கு எழுத்தாளர் சி.பி. செந்தில்குமார்.

முதல் இருக்கிற ரெண்டுபேரைப் பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போம், சி.பி. செந்தில்குமாரை (இனிமே சி.பி) பத்தி மட்டும் இப்போ. பல பத்திரிக்கை நகைச்சுவைத்துணுக்குகள் படிச்சவுடனே சிரிச்சிருக்கேன். யாரு எழுதினதுன்னு பார்த்தா அது சென்னிமலை சி.பி.செந்தில்குமார் என்று இருக்கும். அவரை சந்திக்கனும் முகவரி வேணும் அப்படின்னு சில பத்திரிக்கைகளுக்கு கடுதாசி போட்டுமிருக்கேன். [பதில் வரலைங்கிறது வேற விசயம்]

அப்புறமா பதிவுலகுல அவரைப் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டு பின்னூட்டம் எல்லாம் கூட போட்டேன். அப்போ அவர் அலைபேசி எண்ணை எல்லாம் பதிவுல போடலை. நாமளும் தூரமா இருந்ததால ஊருக்குப் போவும்போது பார்த்து பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.  ஆரம்பத்துல இப்படியில்லை,  கொஞ்சம் நாகரிகமான படங்களையே ரெண்டு மாசமா போட்டுகிட்டிருந்தாரு. உதாரணத்துக்கு ஒன்னு ரெண்டு இங்கே..

[ 1 ]

[ 2 ]

என்னுடைய (அடுத்த) குறும்படத்துக்கு வசனம் எழுத பேச்சு வந்தபோது பாஸ்டன் ஸ்ரீராமிடம் நான் பரிந்துரைத்த முதல் ஆள் இந்த சி.பி. தான். வ.வா.சங்கத்துல அட்லாஸா கூப்பிடலாமெனவும் சி.பி. செந்திலை ஒரு மரியாதையுடன் வைத்திருந்தேன்.

அப்புறமா அண்ணன் அடிச்சாரு ஒரு U turn. தொப்புளையும், மாரையும் இருக்கிற படங்களை கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து பத்திரிக்கைகள் நிராகரிச்ச அத்தனை துணுக்குகளையும் போட ஆரம்பிச்சாரு. தரம் குறைஞ்சதாலதான் பத்திரிக்கைகள் நிராகரிக்குது, அதை பதிவுல போட்டு ஹிட் கணக்கை ஏத்த ஆரம்பிச்சாரு. அப்புறமா என்னடா மானசீகமா புடிச்சவரு இப்படி பண்றாரேன்னு மனசுக்கு வருத்தமா இருந்துச்சு. அப்புறம் அவருடைய பதிவுகளை படிக்கிறதை நிறுத்திட்டேன். அவரோட வாசகர் வட்டம் வேற பெரிய லெவல்ல இருந்தாங்க. சரி, அவரோட கும்பல் பெரிய இலக்கியவாதிங்க, அப்படின்னு அவர் பதிவுகளை பார்க்கிறதையே விட்டுட்டேன். அதுக்கான ஒரு சின்ன உதாரணம் இது. இவரு பழுத்த மரமாம் அடிக்கிறாங்களாம், இவுங்க வாசகர்கள் கும்முறாங்க. நன்றி, வாசகர்களே, பழுத்த மரம் மட்டுமில்லை புழுத்த மரம்கூட அடிதான் வாங்க செய்யும்.

அதுவுமில்லாம ஈரோடு சங்கமம் குழுவுக்கும் இவருக்கும் ஆகலை. சரி, இவரு எதுக்கு சரிப்பட மாட்டாருன்னு முடிவு அதாவது உண்மையான குழுவா இருக்க இவருக்கு விருப்பமில்லை, புகழ்ச்சிக்கு மயங்குற ஆள்னு அப்பவே தெரிஞ்சிபோச்சு. 2010ல இந்தியாவுக்குப் போனபோதும், 2011ல் போன போதும் நான் அவரை கூப்பிடவுமில்லை, விருப்பமுமில்லை.

டிவிட்டர்ல, சி.பி. யோட நடவடிக்கைகள் வேற மாதிரி, அதாவது  கொஞ்சம் நாகரிகமாகவும் இருந்துச்சு. சரின்னு அவரை தொடர ஆரம்பித்தேன். நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. அப்பத்தான் சென்னை TNMegaTweetup ஆரம்பிச்சது, நடந்துச்சு, முடிஞ்சது. அதுவரைக்கும் எனக்கும் அவருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. பிறகு அவர் ஒரு ட்விட்டர் பெண்ணோட படத்தை அவருடைய பதிவுல இணைச்சிக்கிறதுக்காக கேட்டிருக்காரு. அந்தப் பெண் சொன்னது “ஒரு குறிப்பிட்ட”, அதாவது ஒரே ஒரு குறிப்பிட்ட படத்தை மட்டும் எடுத்து உபயோகிக்க அனுமதி கொடுத்திருக்காங்க. அந்தப் பெண் சென்னை ட்விட் சந்திப்புக்கு எல்லாம் வரலை, இதுதான் உண்மை.

சி.பி. செந்தில்குமார், அந்தப் பெண்ணின் படங்களை எடுத்து பதிவு முழுக்க ரொப்பிட்டாரு. சரி, தொடையும், தொப்புளும் இருக்கிற படங்களா இணையத்துல தேடி எடுத்துட்டு வருகிறவருக்கு, ஒரு இடத்துல இருந்து படங்கள் கிடைச்சா சும்மா விடுவாரா? படங்களை எடுத்து தன்னோட பதிவுக்கு இஷ்டம் போல பயன்படுத்திக்கிட்டாரு. இதைப் பார்த்த அந்தப் பெண்ணோட நண்பர்,(நானும் அவுங்க குடும்ப உறுப்பினர் என்கிறது வேற கதை)  அவுங்க வீட்டுக்குச் சொல்ல, அது என் காதுக்கு வந்ததும், முதலில் படங்களை அந்தப் பெண்ணை விட்டே எடுக்கச் சொன்னேன், சி.பி. செந்தில்குமாரும், முதல்ல ரெண்டு படங்களை எடுத்தாரு, பிறகு எல்லாப் படங்களையும் எடுத்துட்டாரு. சரி, சொன்னதும் எடுத்துட்டாரேன்னு அவருக்கு நன்றி சொல்லி ஒரு ட்விட் கூட போட்டேன். பதில் மரியாதை செய்யனும்னு கூட அண்ணனுக்குத் தெரியலை. சரி, அவருக்குத் தெரிந்த மரியாதை அவ்வளவுதான்னு நினைச்சிட்டு விட்டுடேன்.

அடுத்த நாள்ல எனக்கும் அந்தப் பொண்ணுக்குமான சண்டை ட்விட்டர்ல நடந்துச்சு. (எங்களுக்கு இடையேயான சண்டையில் இவருடைய பதிவுகளைப் பத்தியதாக மட்டுமே இருந்ததே ஒழிய, இவரை எந்த இடத்திலும் கேள்வி கேட்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை). http://www.adrasaka.com/2012/05/6.html இதுல முதல் 5 , எனக்கும் அந்தப் பெண்ணுக்குமான உரையாடல். நாங்க பேசிக்கிட்டதை எடுத்துப்போட உனக்கு யாருய்யா உரிமை குடுத்தது?(ஒருமைக்கு மன்னிக்கவும்) நான் எடுத்துக்கச் சொன்னேனா?


மேலே இருக்கும் படத்துல, உரையாடலை உங்கப் பதிவுல சேர்த்துக்க நான் ஒப்புதல் தரவே இல்லை. 


அதுவுமில்லாம என்னைக் கேள்வி கேட்குறாராம். நீ யாரு எங்களுக்கு நடந்த உரையாடல்ல கேள்வி கேட்குறது? ட்விட்டுல பேசினா அங்கேயே பேசிக்க வேண்டியதுதானே? அது பதிவுக்கு எதுக்கு வருது? உங்களுக்கு பதிவு வேணுமின்னா வேற எதையாவது செஞ்சிக்குங்க. அங்கே நடக்கிறதை, இங்கே சொல்ற பழக்க தரமானதா? உங்க மரியாதை அங்கேயே கெட்டுருச்சு.

789 பதிவுல அவரோட குடும்பத்து படம் போட்டாராம், 1000 பதிவுல அவுங்க அம்மா படம் போட்டாராம், நடுவுல இருந்த 200 பதிவுகள்ல நடிகைங்கதானே மாரையும் தொப்புளையும் காட்டிகிட்டு இருந்தாங்க, சரி, விடுங்க அவரோட பதிவு, கந்தசஷ்டி பதிவுதான் நாம கேள்வி கேட்கக்கூடாது, சாமி கண்ணைக் குத்திருமில்லை? 

சி.பி. செந்தில்குமார், எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடந்த உரையாடலைத்தான் தன்னுடைய பதிவுகள்ல போட்டுக்கிட்டாரு. அதுவும் எப்படி இருண்ட பக்கங்களாம்? நீங்க வந்து பார்த்தீங்களா சார்? பொதுவா பேசிக்கிட்டிருக்கிறதை இவர் சொல்றாரு, இருண்ட பக்கங்களாம். இவரு, ட்விட்டர்ல இருக்கிற பெண்களையே ஃபிகருன்னுதான் மருவாதையா சொல்லுவாரு. அப்படிப்பட்டவரு, எங்களோட இருண்ட பக்கங்களை பார்த்தாராம். கேள்வி கேட்கிறாராம். என்ன கொடுமை சார் இது?

அவரு என்னைக் கேள்வி கேட்கிறாரு, அக்கா, தங்கை படங்களைப் போட்டிருந்தா இப்படி கேள்வி கேட்பீங்களான்னு. நான் கேட்கிறேன். உங்களோட குடும்பத்துல இருக்கிறவஙக் படத்தை அப்படி அலங்காரம் பண்ணுவீங்களா? இந்தக் கோவத்தை எல்லாம் மனசுல வெச்சிக்கிட்டுதான் மரியாதையா படத்தை எடுக்கவும் சொன்னேன். எடுத்ததுக்கு நன்றியும் சொன்னேன்.

இவரு பண்ணினதுக்கு போன் பண்ணி பேசனுமாம்? அந்தளவுக்கான மரியாதை எல்லாம் இப்ப இல்லை, என்னிக்கு ட்விட்டர்ல பேசிக்கிட்டதை பதிவா போட்டு 4 பேருக்கு தெரியனும்னு நினைச்சிங்களோ அன்னிக்கே உங்க தரம் தாழ்ந்து போயிடுச்சு. விகடன் பத்திர்க்கையையும் உங்கப் பதிவையும்  ஒப்பீடு பண்ணிக்காதீங்க, விகடன் இன்னும் மஞ்சப் பத்திரிக்கை அளவுக்கு வரலை.

உரையாடலில் நீங்க சம்பந்தப்பட்டுத்தான் இருக்கீங்க. ஆனா, அதுல வந்த கேள்விகள் எல்லாம் உங்களைக்கேட்டது இல்லை. நம்மூர்ல சொல்ற மாதிரி சம்மன் இல்லாம ஆஜர் ஆகாதீங்க. அப்புறம் பதிவு போட்டு என்னிடத்தில் கேள்வி கேட்குறது , பதில் சொல்றது எல்லாம் இதோட நிறுத்திக்கொள்வது நலம். அந்தக் கட்டத்தை எல்லாம் நான் எப்பவோ கடந்துட்டேன்.

உங்களுக்குன்னு ஒரு தரமிருக்கு செந்தில் சார், அதை இன்னும் கெடுத்துக்காதீங்க....

Tuesday, May 29, 2012

ஆண்கள் - நாய்கள் - கல் @vivaji

  • தம்மு, தண்ணி அடிக்கிற பெண்களை சுலபமா மடக்கிடலாம் என்பதுதான் ஆண்களின் உயர்ந்தபட்ச முட்டாள்தனம்.
  • போலி கெளரவம் பத்தி பேசுற விஜய் டிவி கோபிநாத் முதல்ல தன்னோட கோட்டை கழட்டிட்டு பேசவும்
  • அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துப்பார்த்தால் நான் சுத்த சைவம்
  • என்னதான் பவர்ஃபுல்லான புல்லட், யமாஹா, பல்சர்னு வாங்கினாலும் அது ஸ்கூட்டிக்குப் பின்னாடிதான் போகும்.
  • "நான் அழகாய் இருக்கேனா?" என பெண்கள் கேட்பது போல ஆண்கள் யாரும் "நான் அழகாய் இருக்கேனா?" எனக் கேட்பது கிடையாது #அவதானிப்பு
    பெண்கள் அழகாயிருக்காங்கன்னு கேட்கிறதுல பல விசயங்கள் அடங்கியிருக்கு. கல்யாணம் ஆன முதல் ரெண்டு வருசம் அழகாயிருக்குன்னு கணவன் சொன்னா அதுல உண்மையிருக்கும். அப்புறமா மனைவி கேட்டு கணவன் அழகாயிருக்காங்கன்னு சொன்னா அதுல 50% பொய் கண்டிப்பா இருக்கும். மனைவி அழகாயிருந்தா கணவன் சொல்ல மாட்டான், வேற விதமா ஏதாவது செயல்ல காட்டுவான். அதாவது முகத்துல ஒரு பிரகாசம் தெரியும்னு சொல்ல வந்தேன்.


  • நாம கும்புடுற சாமியவே உண்டியலைத் தாண்டினபின்தான் பார்க்க முடியுதாம்

  • எத்தனாயிரம் உயரத்திலிருந்து குதித்தாலும், வலி என்பது கடைசியில் தரையில் மோதும்போதுதான் தெரிகிறது. அதுபோலதான் அப்ரைசலும் #சே
  • ”என்ன சமைக்கிறதுன்னு தெரியலை” என்று மனைவி சொல்வதில் ஆரம்பித்து “மெனு கார்ட் ப்ளீஸ்” என்று கணவர் சர்வரிடம் கேட்பதில் முடிகிறது.
  • பெண் விபச்சாரிகள் எண்ணிக்கை இருக்குமளவுக்கு ஆண் விபச்சாரிகள் இல்லை #அப்புறம் என்ன எழவுக்குடா சம உரிமைப் பத்தி பேசறீங்க?
  • SJசூர்யாவின் அடுத்தப் படம் இசை. அவரே இசையமைக்கிறாராம். ஒரு வார்த்தை விமர்சனம் தயாராகிடுச்சு #இம்சை
  • கள்ளத் தொடர்பு வைத்தால் மாரடைப்பு வரும்: ஆய்வு #எயிட்ஸ் வருதுன்னே சொல்லியாச்சு, எவன் கேட்கிறான்?
  • இனிமே பெட்ரோல் பங்க் ஓனர் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போறவன்தான் புத்திசாலி இளைஞன்
  • வேலையைவிட்டுப் போற நாள் தெரிஞ்சிட்டா வேலை செய்யுற நாள் நரகமாகிடும் #நான் எழுதினதுதான், அனுபவிச்சுட்டு இருக்கேன் (சிவாஜி ட்ரையிலர் வந்த போது நான் பதிவுல  போட்டதுதான் இது- அதனால, இது பழைய மேட்டர்தான்)
  • ”உங்களை மாதிரி நல்ல மேனேஜரை இதுவரைக்கும் பார்த்ததேயில்லை” அப்படின்னு ஒவ்வொரு முறையும் வேலை மாறும்போது சொல்லவேண்டியதா இருக்கு
  • பெண்கள் நாய்களை நேசிக்கிறார்கள், ஆண்கள் அதே நாய்களை கல்லெடுத்து அடிக்கிறார்கள். அப்புறம் எப்படிடா உங்களுக்கு லவ் செட் ஆவும்? #யோசிங்க
 --------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் ட்வீட்டியது ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா சோத்தாங் கை பக்கம் X இருக்கும் பாருங்க, அதைத் தட்டுங்க. இல்லாட்டி Twitterல் தொடர்ந்தும் நீங்க மகிழலாம்

Pic Thanks : Cityofoviedo.net

Monday, May 28, 2012

விவாஜி Updates- May 28 2012

நாம டைப்புறதை எல்லாம் ப"டைப்பு"ன்னு சொல்லிக்கிடக் கூடாது.

#அப்படி சொல்லிக்கிட்டு திரியுற மக்கள் எல்லாரும், தன்னை ஒரு படைப்பாளின்னோ , எழுத்தாளருன்னோ சொல்லிக்கிறதுதான் கொடுமை. கவுண்டமணியை செந்தில் சொல்ற மாதிரி ஸ்குரூ டிரைவர் புடிச்சவனெல்லாம் மெக்கானிக் சொல்றாப்ல இது.

----00----

மதன் விகடனை விட்டுப் போனதற்கு ஒரு படம் மட்டுமே காரணமாய் இருக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன். கண்டிப்பாய் மேலிடம் மாறியிருக்கனும், அது இவருக்கு சாதகமாகவோ இல்லை, புடிக்காமையோ போயிருக்கனும். எப்படி இருந்தாலும் இழப்பு வாசகர்களுக்குத்தான். ராஜா-வைரமுத்து, கௌதம்-ஹாரிஸ் வரிசையில்தான் இதை நான் பார்க்கிறேன்.

#மதன் இல்லாத ஆனந்த விகடன், சாம்பார் இல்லாத கல்யாண விருந்தைப் போன்று இருக்கிறது #ப்ச், சீக்கிரமே பழகிடும


----00----

IPL5, CSKக்குவுக்கு அமையவில்லை. சரி விடுங்க. என்ன பண்ண? என்னதான் நாம குறுக்கு வழியில வந்தாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்.  இறுதிப்போட்டியில் நானிட்ட ட்விட்டுகள்


  • இறுதியில் சீனு மாமா கள்ளங்கபட மற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • கடின உழைப்பே வெற்றியைத்தரும், அதிர்ஷடம் இறுதிவரை வெல்லாது - Moral of IPL5
  • அப்படி டெக்கான் பிச்சைப் போட்ட இந்த ஆட்டம் நமக்குத் தேவையில்லை என்று தூக்கியெறிந்த தோனியே வாழ்க!
  • சிங்கத்தோட குகையில் வந்து சிங்கங்களையே ஜெயித்த KKRக்கு வாழ்த்துகள்! (Fu** You Fixing blabbers)
  • பிக்ஸிங்னு எல்லாருக்கும் தெரிஞ்சிட்டதால, கொல்கத்தாவை ஜெயிக்க வைக்கனும்னு பிக்ஸிங் பண்ணிடாங்களாம்பா
  •  குதித்தாடும் சியர் லீடர் பெண்களுக்கு கண்டிப்பாய் கிரிக்கெட் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களும் காசுக்காக ஆடுபவர்களே
  • இன்னிக்கு KKR ஜெயிச்சா அது கொல்கத்தாவின் திறமை, CSK ஜெயிச்சா அது Match Fixing #IPL5
 --------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Thursday, April 19, 2012

விவாஜியிஸம் - 01

கடவுள் என்முன் தோன்றி ”ஏன் என்னைப் பார்க்க வரவில்லை” என்று கேட்டார். ”முயன்றேன் இன்னும் முடியவில்லை” என்று கூறி அனுப்பிவைத்தேன்

என்னுடைய கவிதைகளைப் படித்தபடியே உறங்கிப் போய்விடுகிறது என் காதல். அது விழிக்குமுன் இன்னொரு கவிதை எழுதிவிட வேண்டும்.


காதலுக்கும் எனக்கு ஒரே சண்டை, தோற்றுக்கொண்டேயிருந்தேன். பஞ்சாயத்திற்காக என் காதலியை அழைத்துவிட்டு, அவளுக்காக காத்திருக்கிறேன்.

ஒவ்வொரு பதிவுலும் மொக்கை வருமாறு முயற்சிக்கிறேன். ஆனால் அதை வரவிடாமல் ஏதோ ஒரு மொக்கை வந்து அதை வென்று விடுகிறது.

தனிமை என்னைக் கொன்றுக்கொண்டிருந்தது, தனியாய் இருக்கேன் என்றேன்.”இல்லையே! கூடவே நானும் இருக்கேனே” என்றது தனிமை.

மனைவிக்கும் எனக்கும் சண்டை. தோற்றுப் போய்விட்டேன் என்று சொன்னாலும் ஒப்புக்கொள்வதில்லை மனைவி.

Babysitting செய்கிறேன் ”குழந்தையுடன் என்னையும்” என்று வந்தமர்ந்து விளையாடும் மனைவியை என்ன செய்ய?

நான் அவசரமாய் பயணித்துக்கொண்டிருந்தேன். பாவம் அவைகளுக்கு என்ன அவசரமோ? அதே வேகத்தில பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன மரங்கள்.

நான் வேகமாக உண்டு முடித்தபின் பசியோடு அமர்ந்திருந்தன, தட்டில் சில பருக்கைகள்

கோவிலுக்குப் போகும்போதெல்லாம் அடம்பிடித்து கூடவே வந்துவிடும் பக்தி.போகும் வழியில் அதை எங்காவது தொலைத்துவிடுவது என் வாடிக்கையாகிவிட்டது

பிற்காலத்துக்கு உதவுமென ஒரு இடம் வாங்கிப் போட்டேன். பிற்காலத்துக்கு தேவைப்படுமென எனக்காக 6*4 இடத்தை ஒதுக்கி வைத்திருந்தது, இடம்.

சாமியைக் கும்பிட கோவிலுக்குப் போனேன். சாமியோ, அவர் சாமியைக் கும்பிடப் போயிருப்பார் போல.

கவிதைகளை விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுத்துக்கள் எல்லாம் சோர்வடைந்துவிட்டன, பாவம்.


புத்தர் ஆசையே படவேண்டாமென ஆசைப்பட்டாராம். நானோ, எனக்கு நிறைய ஆசைகள் வேண்டும் என ஆசைப்படாமல் இருக்கிறேன்.

இணையத்தில் புதுசா என்னமோ சண்டை போடுக்கொண்டிருக்கிறார்களாம். என் கொள்ளுத்தாத்தாவிடம், எள்ளுத்தாத்தா சொன்ன அதே காரணமாகத்தான் இருக்கும்

Thursday, April 12, 2012

மகசூல் - 04-12-2012

RCB Vs CSK
பொண்ணையும் குடுத்துட்டு, விக்கெட்டையும் உன்கிட்டையே குடுக்கிறோமே முரளி, இப்பவாவது புரிஞ்சிக்கோ எங்களோட தாராள மனசை..
--0o0--




பிஸ்னெஸ்மேனில் சின்ன வயது மஹேஷ் பாபுவா நடிச்ச பையன்தான்(Akash Puri)  தோனியில நடிச்ச பையன். அவரோட அப்பா PuriJagganth. .

பூரி ஜெகன்னாத், தெலுங்குல நம்ம ஊர் ஷங்கர் மாதிரி

--0o0--

  • கடவுள் பல ரூபத்தில் இருக்கிறார். 10நம்பர் டீசர்ட் போட்டும் விளையாடலாம், தோனிக்கும் இசையமைக்கலாம்

  • நாத்திகம் இருவகைப்படும் 1.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது 2.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது #தற்காலம்
  • அகிலேஷ் பதவியேற்ற 24 நாளில் ஆயிரம் அதிகாரிகள் மாற்றம் #முதல்வன் படத்தைப் பார்த்திருப்பாரோ?
  • ரஜினி போல் அலட்டலில்லாத பேச்சை ஸ்ருதியும், கமலினைப் போல் அல்டாப் பேச்சினை ஐஸ்வர்யா, செளந்தர்யாவும் தொடர்வது விநோதம்
  • இவுங்க பதில் சொல்லலைன்னா காசு குடுக்க மாட்டாங்க. அவுங்களோ, குடுத்த காசைப் புடுங்கிக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது #நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி/கையில் ஒரு கோடி
  • உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற உங்க படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா அவுங்களே உங்களை ரிஜக்ட் பண்ணிடுவாங்க
 
  •  நாம் ஒரு அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்பதை நமக்கே உணர்த்துவதுதான் வேலைக்கான Interviewக்கள்
  • சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? முக #டேய் தம்பி, அவர்கிட்ட இருந்து மைக்செட்டைக் கழட்டு, தேய்ஞ்சு போன ரெக்கார்டாட்டம் ....
  • உலக அழகிப்பட்டம் வாங்கிட்டா எல்லாரும் சொல்ற வாக்கியம் “Oh My God”. இரவில் எல்லாப் பெண்களும் உலக அழகிகள்தாம் (18+)
 
  • நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க அப்படிங்கிறதுக்கு ஒரு சமகால உதாரணம் இந்த வசனம் “டி.வி வால்யூம் கம்மி பண்ணிட்டு பேசுங்க”"

  • எப்பவுமே வெள்ளிக்கிழமை வந்து விடுமுறை வாங்கித் தருவதாலேயே இதுக்கு GoodFridayன்னு பேர் வெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்

----------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Monday, April 9, 2012

வரலாற்றுப் பதிவு

இந்தப் பதிவுக்கு உண்மையாவே என்ன வரலாறு இருக்கும்னு நினைக்கிறீங்க?

http://www.navan.name/blog/?p=15

Thursday, March 22, 2012

பன்னாடை பன்னாடை @vivaji 03-22-2012

பன்னாடை என்றால் என்ன?
இந்த வார்த்தை பலருக்குத் தெரிஞ்சாலும் அது எப்படி இருக்கும்னு தெரியாதில்லையா? இதுதாங்க அது
  • அடுத்து ஒலிபரப்பாகும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் கோச்சடையான்.   இசை: AR Rahman, பேசியிருப்பவர்: ரஜினிகாந்த்

  • இணையத்துல காங்கிரஸ் கட்சி இருந்தா எப்படி இருக்கும்? 150 Admins and 2 Users
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடித்தால் தீக்குளிப்பேன்: கருணாநிதி எச்சரிக்கை #டேய் பசுபதி, எட்றா அந்தக் கடப்பாரையை..
  • ”சினிமாக்காரன் ஆதரவு தரலையா, அவன் படத்தைப் பார்க்காதே” என அவனைத் தள்ளி வெச்சிருந்தா அவந்தாண்டா தமிழன். நாம? ஹிஹி
  • 2025ல் பேசிக்குவாங்க “2012ல் வெட்டிக்கும்பல் ஒன்னு Twitter, facebookன்னு வெட்டியாப் பொழுதைக் கழிச்சிட்டு இருந்தாங்களாம்”
  • தாலாட்டுப் பாடி தூங்க வைப்பதில் தாய் முதலிடத்திலும், ராஜா இரண்டாம் இடத்திலும் #துள்ளி எழுந்தது காற்று
  • விகடன் வலைபாயுதே படித்த பின் என் நண்பன் “நீயும் தத்துவம் எல்லாம் எழுதுவியா?” என்று கேட்டு கதிகலங்க வைத்துவிட்டான். ”சத்தியமா இல்லடா” . ட்விட்டர்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை “தத்துவம்”தான்
 
  • ஆக மொத்தம் கேப்டனிடம் இல்லாத ஒன்று, அம்மாவிடம் இருப்பது #திராணி.
  • "அண்ணா" என்பது பெண்களின் கூர்மையான ஆயுதம்! இன்னொரு நல்ல காதலன் கிடைத்துவிடும் போது
 
  • லாபம் "ஈட்டி"த் தந்ததுங்கிறாங்களே, கோடாரி, அம்பு-வில் எல்லாம் எப்போ தரும்?


  • நல்லவர்களுக்குக் காலமில்லை. நிகழ்கால உதாரணம் : வைகோ
  • காதல் ஒரு எழவைப் போல, சிலருக்கு பத்து முடிஞ்சிதான் அது புரியவே ஆரம்பிக்கும்
----------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Monday, March 12, 2012

இனிமேலாவது வீட்டுல சாப்பிடுங்க ராகுல்ஜி @Vivaji Updates

  • இணையத்தில் ஒரு ஸ்மைலி போட்டுட்டாப் போதும், சண்டை முடிஞ்சிருச்சின்னோ இல்லை நான் சண்டைக்கு வரத் தயாரில்லைன்னோ அர்த்தம்

  • காதலனாக இருக்கையில் சில கணங்களில் வருத்தப்படனும், கல்யாணம் ஆன பிறகு அதுவே பல கணங்களில் என மாறும்

  • வாழ்க்கைங்கிற படத்துல இடைவேளை கிடையாதாம். ஆனா பல கிளைமாக்ஸ் வந்துட்டுப் போயிருது

  • தமிழ் மட்டும் ஏன் இவ்வளவு சிதைந்து உருமாறி வந்திருக்கு, இந்தளவுக்கு ஆங்கிலம் இல்லையே. ஏன்?

  • 38 வயசுலேயே அகிலேஷை முதலமைச்சர் ஆக்கிட்டாரு முலாயம். இன்னுமா ஸ்டாலினை இளைஞர் அணிச்செயலாளரா வெச்சிருக்கப்போறீங்க கலைஞர்ஜி?
 
  • விஜய் ராணுவ அதிகாரி. மும்பை போகும்போது ஆகும் பிரச்சினைதான் துப்பாக்கியின் மூலக்கதை. ரொம்ப புதுசா இருக்குல்ல? 

  •  ராஜா எத்தனையோ இசைக்கருவிகள் வாசிச்சாலும் அவருடைய ரசிகர்கள் வாசிக்கிறது என்னமோ “ஜிங்-ஜக்”மட்டும்தான்

  • மகளிர் தினமென அறிவித்ததும் கூட ஒரு ஆணாகத்தான் இருக்கும்

  • காதல் விஜய் படம் மாதிரி. பார்க்காதவன் பார்க்கத்துடிப்பான், பார்த்தவன் சாகத்துடிப்பான்.


  • உ.பி., தேர்தல் முடிவுகள் நல்ல பாடம்: ராகுல் #இனிமேலாவது உங்க வீட்டுல சாப்பிடுங்க ராகுல்ஜி
------------------------------------------------------------------------
மேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.

Thursday, March 1, 2012

அப்பாடக்கர் உருவானவிதம் - 2

அப்பாடக்கர் உருவானவிதம் - முதல் பாகம் படிக்க

ஸ்ரீராம் மற்றும் ஜெயவேலன் ஆகியோரைக் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். முதல் நாள் வெளிப்புற படப்பிடிப்பில் மூவருமே பேந்த பேந்த முழித்தோம். மூவருக்குமே ஒன்றும் தெரியவில்லை.(இப்ப மட்டும் தெரிஞ்சிருச்சாக்கும்). ஆனால் அடுத்த நாளில்

ரெண்டு பேருமே சீக்கிரமே நடிப்புக்கலையை கற்றுக்கொண்டது நான் செய்த புண்ணியம். அவர்களை நான் படுத்திய பாடு எல்லாம் Editingல் தெளிவாகத்தெரிந்தது. சில இடங்களில் “உன் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே” என்றவாறு முக பாவனை எல்லாம் துள்ளியமாக புரிஞ்சிக்க முடிஞ்சது.


சில பெரிய காட்சிகள் எல்லாம் ஒரே takeல் முடிந்தது. ஸ்ரீராம் - சரக்கு காட்சி எல்லாம் ஒரே takeல் எடுத்ததுதான். ”Voiceover(dub) பண்ணிடலாம் வாங்க ஸ்ரீராம்” என்ற போது, ”இல்லீங்க இனிமே அதை செய்ய முடியாது” என்று சொல்ல Live Recordingஐ அப்படியே வைத்துக்கொண்டோம்.


சரக்கு சீனில் ஒவ்வொரு ரவுண்டுக்கும் இப்படி வைப்பதாகதான் இருந்தது. மங்காத்தாவில் பிரேம்- அஜித் காட்சியிலும் இப்படியே வர ஸ்ரீராம் கடைசி நேரத்துல ஒரு யோசனை சொன்னாரு, “ரவுண்ட்(வட்டம்) மட்டும் போட்டுக்கலாமே” என்று. குத்துச்சண்டையில் ரவுண்டுக்கும் வரும் சப்தம் ஞாபகத்துக்கு வர அப்படியே அமைத்தேன். ஆனா அது யாருக்கும் புரியல (Epic Fail) சரியா, தகவல் போய் சேரலை. Stop Clock சப்தத்தையும் சேர்த்திருந்தேன், அதை பாஸ்டன் பாலா சரியா கண்டுபுடிச்சிருந்தாரு.

என்னதான் படத்தை தெளிவா எடுத்துட்டாலும் Editing என்று வந்த பிறகுதான் தெரிந்தது, 35 GB இருந்தது raw files. அதுவரைக்கும் சுலமாக தெரிந்தது எல்லாமே கஷ்டமாக தெரிந்தது. வடிவேலு சொல்வது போல, ஒரு நாள் எல்லாமே தேவை இல்லாத ஆணிகளாகவே தெரிந்தது.அடுத்த நாள் எல்லாமே தேவையான ஆணிகளாகத் தெரிந்தது. ஜெயவேலன் இல்லாத நேரத்தில் டப்பிங் செய்யவேண்டும். இந்தியாவிலிருந்தே செய்ய முடியுமா என்று முயற்சித்தேன். அவருக்கு கல்யாண வேலை.

ஆமாம், ஜெயவேலைனுக்குத்தான் திருமணம். அதிக அழுத்தம் வேறு தரமுடியாத நிலை. ஆனால் அவரே பேசினால் நல்லது என நினைத்தேன். வேறு வழியில்லாமல் அவருக்குப் பதிலாக வேறொருத்தர் செய்துவிடலாம் என முடிவு செய்தேன்.வேறு யார் செய்ய, நானேதான். படம் ஆரம்பத்தில் திருநெல்வேலி களத்துடன் ஆரம்பித்தது, படத்தையும் திருநெல்வேலி பாசையிலேயே எடுத்துட்டு பிறகு கோவை வட்டார மொழிக்கு மாற்றினேன், காரணம் நமக்கு என்ன வருமோ அதைத் தானே செய்யனும்/பேசனும். சரியாகப் பொருந்திப்போக(போவல), சும்மா எடுத்த சில காட்சிகளை வைத்து ஒப்பேற்றினேன்.

இது எல்லாம் எழுதப்படவே இல்லை. எடிட்டிங் முடிந்த பிறகே ஸ்ரீராமிற்கே தெரிந்தது. இடையிடையே ஸ்ரீராமும் நானும், பல விதமாக காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தோம். எப்படி காட்சிகளை அமைத்தாலும்
வேறு வேறுவிதமான பரிமாணங்கள் வருவதைக்கண்டு நாங்களே ஆச்சர்யப்பட்டுக்கொண்டோம். அதிசயித்தோம்.

எடிட்டிங் என்பது பெரும் கலை.உண்மையைச் சொன்னால் கத்திரி வைப்பதில் தான் படத்தின் ஓட்டம் அமைந்திருக்கிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகில் இருப்பவர்களுக்கு தெரிவதேயில்லை.

இசைக் கோப்பிறகாக ஒரு வார காலமானது. அப்படி இப்படியென 4 மாத காலமானது. பல இரவுகள் 2 மணி வரைக்கும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். கண்டிப்பாக 80-100 மணிநேரமாவது

உழைத்திருப்பேன் என நினைக்கிறேன். ஒரு வாராக 6 நிமிடத்திற்கு ஜெயவேலன் இல்லாமலேயே படம் முடிந்தது. வெளியிடும் நேரத்தில் எனக்கு ஒரு தயக்கம். காரணம், படம் எனக்குப் பிடிக்கவில்லை, அடுத்தது negative thought  உருவாக்கம். IT பத்தின இந்த விசயங்கள் பெரிதாக பேசப்படவில்லை எனினும் இந்தப் படம் தெளிவாகவே அதைச் சொன்னது. ஸ்ரீராம் கோபத்தின் உச்சநிலையை அடைந்திருந்தார், ருத்ரதாண்டவம் ஆடாதது ஒன்றுதான் குறை. படம் வந்தே ஆகவேண்டும் என்று அவரே கடைசியாக ஒரு நாள் குறித்தார். அதற்கு முன்னரே படம் முடிவடைந்திருந்தது. சொன்னதேதியில் ஸ்ரீராமிம் கையால் படம் வெளியிடப்பட்டது. ஆனால தமிழோய்வியம்தான் படம் வெளியிடுவதாக இருந்தது. எங்களுக்குள் இருந்த குழப்பத்தால், இரு பக்கமும் படம் ஒரே நாளில் வெளியானது.

இதற்காக சில குரல்களை மட்டும் வெளியிடத்தில் வாங்க வேண்டியிருந்தது, நாட்டாமையாக கணேஷ் சந்திராவும், நாயராக நிஜமாகவே ஒரு மலையாள் நண்பரும் உதவினார்கள். பதிவர்கள் மட்டுமே முதல் நாளில் அதிகம் பார்த்தார்கள் என நினைக்கிறேன், தெரிந்தவர்கள் ஆதலால் யாரும் பெரிதாக குறை சொல்லவில்லை. நல்ல நண்பர்கள். Gregopaul எனும் twitter நண்பர்கள் படத்தை அங்குலம் அங்குலமாக விமர்சித்தார், திரைப்பட்த்தில் ஒளிப்பதிவாளராக இருக்கும் அவர் படத்தினைப்பார்த்த கோணம் வித்தியாசமாக இருந்தது.

இந்தப் படத்திற்காக செலவு என்பது செய்யப்படவே இல்லை. ஆமாம், படம் பிடிக்கத்தேவைப்படும் சில கருவிகள் வாங்கியதைத்தவிர படத்தில் செலவு என்பதே இல்லை. படம் பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் iPhoneலயே பிடிக்கப்பட்டது. ஒரு படம் எடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதும் எவ்வாறாக படம் எடுக்கவேண்டும் என்பதற்கான முதல் புள்ளியையும் கற்றுக்கொடுத்தது இந்தப் படம்.

உண்மையைச் சொன்னால், போனமாதம்தான் நானே அந்தப் படத்தை முழுதாக பார்த்தேன். இவ்வளவுநாள் கழிச்சு பார்க்கும்போது நான் செய்த தவறுகள் நிறையத் தெரிந்தன. Editingல் செம சொதப்பல், நீளம், ஏகப்பட்ட தேவையில்லாத காட்சிகள். ஹ்ம்ம், கத்துக்கிட்டா இதையெல்லாம் செய்யறோம். ஆனா மனசுக்குத் திருப்தியா நாம நெனச்சது வரும்போது ஒரு சந்தோசம் வரும்பாருங்க...

ஆனா ஒன்னு சொல்றேங்க, படம் எடுக்கிறது ரொம்பக் கஷ்டங்க.

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி - தமிழ்மணம் காசி

  தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி வாழ்க்கை  -பகுதியில் நவம்பர் 2004-17ஆம் நாள் புதன் கிழமை  காசி  எழுதியது தமிழோவியத்துக்காக  பாஸ்டன் பாலாஜி  க...

Labels

18+ (1) 365-12 (33) Adverstisement (1) aggregator (1) BlogOgraphy (2) book review (1) Buzz (1) cinema (6) Comedy (6) Computing (1) Controversial (1) cooking (1) Copy-Paste (10) corruption (1) cricket (1) Doctor (1) Drama (1) experience (4) GVM (1) Indli (1) Information (3) Interview (2) IR (1) Job Interview (1) Jokes (1) KB (3) kerala (2) kids (1) Language (1) manoj paramahamsa (2) Movie Review (15) Movies (39) music (6) Music Review (1) News (8) NJ (2) nri (1) NYC (2) Oscars (1) Personal (31) Photo (5) Photos (4) Politics (7) Quiz (10) rumour (1) Sevai Magik (1) Short Film (8) Social (46) song (4) Songs review (2) songs. (1) Story in blogging world. (3) sujatha (1) tamil (2) Tamil Blog awards (1) Tamil Kid (2) TamilmaNam Star (16) TeaKadaiBench (13) technology (5) train (2) twitter (28) USA (13) Video Post (11) Vivaji Updates (9) webs (4) Wish (1) WorldFilm (1) Xmas (1) அப்பா (1) அப்பாட்டக்கர் (1) அரசியல் (6) அலுவலகம் (2) அனுபவம் (11) இசை (2) இயற்கை (3) இளையராஜா (4) ஈழம் (9) எதிர்கவிதை (1) ஏரும் ஊரும் (8) கடிஜோக்ஸ் (1) கதை (9) கலவரம் (1) கலைஞர் (1) கவிதை (42) கற்பனை (4) காதல் (15) கிராமம் (20) குத்துப் பாட்டு (1) குறள் (1) சங்கிலி (5) சமுதாயம் (12) சமூகம் (21) சிபஎபா (11) சிறுகதை (7) சினிமா (1) சுட்டது (1) சுயம் (1) தமிழ் (4) திரைத்துறை (1) திரைப்படம் (2) துணுக்ஸ் (17) தொடர்கதை (6) நகைச்சுவை (7) நட்பு (1) நாகேஷ் (1) நிகழ்வுகள் (12) நினைவுகள் (4) படிச்சது (1) பண்ணையம் (7) பதிவர் வட்டம் (35) பதிவுலகம் (11) பத்திரிக்கைகள் (2) பயணம் (1) பாரதி (1) புலம்பல் (10) புனைவு (8) பெற்றோர் (5) பொங்கல் (2) மீட்டரு/பீட்டரு (1) மீள்பதிவு (8) மொக்கை (2) ரஜினி (3) வாலி (1) விமானம் (1) வியாபாரம் (3) விவசாயம் (4) விவாஜியிஸம் (1) ஜல்லி (8)